Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

நான் வாசித்த பதிவுகள் - நேற்றும் இன்றும்

பாடசாலைக்காலத்தை பற்றி ஒரு பதிவு வந்திருந்தது. பதிவின் கடைசியில் தனக்கு காதலி இல்லை என்பதை குறிப்பால் உணர்த்தியிருந்தார். காதலி தேவையென்றால் அதுக்கேத்தமாதிரி ஏழுதுறதுதானே..

Liked My Posts? BUY ME A COFFEE என்று பதிவிற்கு பக்கத்தில் இருந்தது. என்ன இது என்று click பண்ணி பார்த்தால், காசு அனுப்பட்டாம்..

சாருவுக்கு பிறகு இவர்தான்போல.. அரசியல்வாதியின் பிள்ளையப்பா நீ..இலங்கையில் பயம் இல்லாமல் காத்திரமாக எழுதிய ஒரு பதிவர் நீர்த்துப்போய்விட்டார் என்று தெரிகிறது. எப்போது அவர் பதிவர் சந்திப்புக்கு போனாரோ, அன்று அவரை ஜனநாயக ரீதியில் காயடித்திருப்பது தெளிவாக தெரிகிறது. அந்நியனில் கடைசியில் அம்பியை பார்த்து விவேக் சொல்வது ஞாபகம் வருகிறது.

குரங்கின் மீது பலருக்கு திடீர் பாசம். ஒரு சிலரின் பதிவில் அது வியாபித்து இருப்பதில் வியப்பு ஏதும் இல்லை. மெனக்கெட்டு video ஐ பார்த்தால் இவங்க build up கொடுக்கிற அளவுக்கு பெருசா ஒண்டும் நடக்கல எண்டு தெரியுது. சின்ன சின்ன சந்தோஷங்கள்


பதிவுலகத்தினால் சில சில்லறைப்பத்திரிகைகள் பயன்பெறுவது தெளிவாக தெரிகிறது. பதிவர்கள் தேடித்தெரிந்து எழுதுவதை அப்படியே copy பண்ணி போட்டு காசு பார்க்கும் இவர்கள் பதிவின் பெயரைப்போடுவதுமில்லை. பதிவருக்கு சன்மானம் கொடுப்பதுமில்லை. தரம்கெட்ட வியாபாரிகள்.


பிடித்த சொற்பொழிவாளர் "சுகி சிவம்" என ஒரு பதிவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ம்.. துரோகி பட்டம் தந்துடுவாங்க. பாத்து..


பதிவர்களே.. உங்க பதிவு பிடிச்சிருந்தா ஒரு ஓட்டு நிச்சயம் போடுவேன். ஆனா உங்க பதிவில ஓட்டு போடுறதுக்க இல்லாட்டா நான் என்ன செய்றது?நகைச்சுவையோடுதான் சிலர் ஓட்டுப்பட்டையும் இணைத்துள்ளார்கள்.


சுறா படத்துக்கு ஒரு சிலருக்கு ticket கிடைச்சிருக்காம். போகாட்டி வேற யாருக்காவது கொடுக்கலாமே.இலவச ticketல படம் பார்த்துட்டு படத்தை பத்தி ஆஹா ஓஹோ என எழுதும் சில பதிவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு இலவச ticket கொடுப்பது இதுக்குத்தான் என்றாலும் ஒரு நியாயம் இருக்கவேண்டும். இலவசமா பாக்குற உங்களுக்கு எல்லாம் நல்லாத்தான் இருக்கும். 300 குடுக்கிறவனுக்கு அப்படி இருக்குமா? இலவசமா படம் பாக்குறவங்க எல்லாம் விமர்சனம் எழுதக்கூடாது என்று சுய கட்டுப்பாட்டை விதித்துக்கொள்வார்களா? அல்லது இப்படத்தை இலவசமா பார்த்தேன் என்றும் சேர்த்து எழுதமாட்டார்களா? (இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் என்று வருவதுபோல)


சைந்தவி கடிதம் கொஞ்சகாலம் hot topic ஆக இருந்துச்சு. இருந்தாலும் எதையும் வாசிக்கல. நேத்துதான் சைந்தவி பத்தி ஒருமாசம் 2 வாரத்துக்கு முந்தைய பதிவ வாசிச்சேன். ரொம்ப பிடிச்சுது. இத்தனை நாள் வாசிக்கலையே என்று கவலையும் வந்தது.

ஆனா இந்த பதிவ எழுதின பதிவர் சிங்கப்பூருக்கு பக்கத்து நாட்டுல LOVE பண்றாராமே..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

தமிழிஷ் பற்றிய கருத்துக்கணிப்பு

பதிவர்களாக, வாசகர்களாக நாம் அனைவரும் தமிழிஷ் உடன் இணைந்திருக்கிறோம். அண்மைக்காலமாக தமிழிஷ் தொடர்பாக சில முணுமுணுப்புகள் கேட்கத்தொடங்கியிருக்கின்றன. குழுக்களாக பலர் இயங்கத்தொடங்கியிருப்பது, 18+ என்று அடையாளம்காட்டுவது, பதிவுக்கு சம்பந்தமற்ற தலைப்பு, படம் என்பவற்றை பயன்படுத்தி சில தரமற்ற பதிவுகள் அதிக வோட்டுக்கள் வாங்குவது தொடர்பாக விமர்சனங்கள் இருக்கின்றன.

இது தொடர்பான தமிழிஷ் பயனர்கள் அனைவரும் கருத்துக்களை பெறுவதும், அதை தமிழிஷ் இற்கு அனுப்புவதும் இக்கருத்துக்கணிப்பின் நோக்கமாகும்.

கருத்துக்கணிப்பில் பங்குபற்றுவோர், தனிப்பட்ட நோக்கங்களை தவிர்த்து மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் கருத்து தெரிவிப்பதன்மூலம் நல்லதொரு மாற்றத்திற்கான அழுத்தத்தை கொடுக்கலாம்.

* அடையாளமிடப்பட்டவை கட்டாயமற்றவை
உங்களைப்பற்றி


வயது

நீங்கள் பதிவரா?நீங்கள் பயன்படுத்தும் திரட்டிகளில் தமிழிஷ்
முதன்மையானதா?நீங்கள் வதிவதுநீங்கள் தமிழிஷ் திரட்டியை உபயோகிக்கும் நேரம்

தமிழிஷ் பார்வையிடுவது

தமிழிஷ் இல் நீங்கள் அடிக்கடி பார்வையிடும்
பக்கம்நீங்கள் பதிவுகளுக்கு வாக்களிப்பதில் ஆர்வம்
காட்டுகிறீர்களா?தொடரும் இடுகைகள் பகுதியில் வாக்களிப்பவரா?தொடரும் இடுகைகள் பகுதியில் எத்தனை பக்கங்களை
பார்வையிடுகிறீர்கள்?
வாக்களிக்கும்போது கவனத்தில்கொள்வது

நீங்கள் தமிழிஷ் இல் தரமற்ற பதிவுகளை Bury
செய்யமுடியும் என்று அறிந்திருக்கிறீர்களா?நீங்கள் தரமற்ற பதிவுகளை Bury செய்கிறீர்களா?

தரமற்ற பதிவுகள் பிரபல இடுகைகள் பகுதியில் வருவது
குறித்து தங்கள் கருத்து
இடுகைகளை பிரபலமாக்குவதில் இறுக்கமான தர
நிர்ணயங்களை தமிழிஷ் உறுதி செய்யவேண்டுமா?தமிழிஷ் இல் இடுகைகளின் தலைப்புகள் பதிவின்
உள்ளடக்கத்தை பிரதிபலிப்பதாக கருதுகிறீர்களா?

இடுகைகளை பதிவர்கள் சரியாக தலைப்பின்கீழ் வகைப்படுத்துகிறார்களா?ஆர்வம் உள்ள பதிவு வகை


செய்தி தொடர்பான பதிவுகளில் அதிகம் வாசிப்பது

வீடியோ / படங்கள் தொடர்பான பதிவுகளில் அதிகம்
பார்ப்பது
படைப்புகள் தொடர்பான பதிவுகளில் அதிகம்
பார்ப்பது


தமிழிஷ் அல்லாத வேறெந்த திரட்டிகளை நீங்கள்
பாவிக்கிறீர்கள்? *

நல்ல பதிவுகள் பிரபல பகுதியில் இடம்பெறாமைக்கு
காரணமாக நீங்கள் நினைப்பது*


பதிவுகள் வாக்குகளின் அடிப்படையில்
பிரபலப்படுத்தும் முறையை நீங்கள்
ஆதரிக்கிறீர்களா?
சகல பதிவர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும்
திரட்டியாக எதை கருதுகிறீர்கள்*


மின்னஞ்சல்

மேலதிகமாக நீங்கள் சொல்லவிரும்புவது*EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

நன்றி

உங்கள் கருத்துக்கள் எங்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
உங்கள் கருத்துக்கள் நல்லதொரு மாற்றம் ஒன்றை கொண்டுவரலாம்..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

காண்டீபனின் கடப்படித்தனம், சக்தியின் சமர், கெட்டிக்கார அமைச்சர்கள். சார்க்

கெட்டிக்கார அமைச்சர்கள்

இலங்கையின் அமைச்சர்வை கடந்தவாரம் பதவியேற்றது. அதன்பின் ஊடகங்களில் அவ்வமைச்சர்கள் கூறிய கருத்துக்கள்தான் அதிசயிக்கவைத்தன. பதவியேற்பு வைபவம் முடிந்த கையோடு, அமைச்சின் எதிர்கால திட்டங்கள் பற்றி பேசினார்கள். அட.. சரியான சுட்டி.. இவ்வளவு கெட்டிக்காரர்களா?

சார்க்

சார்க் மாநாடு நாளை ஆரம்பமாகும். பாடசாலைக்காலத்தில் இருந்து சார்க் ஒரு ரோதனையாகவே இருக்கிறது. பரீட்சைகளில் அதைபற்றிய கேள்விகளை எதிர்கொண்டதை தவிர வேறு எந்த ஒரு இடத்திலும் நன்மைகளை சாதாரண பொதுமக்கள் அடைந்ததாக தெரியவில்லை. (சில பொருளாதார ஒப்பந்தங்கள் சார்க் என்ற அமைப்பு ரீதியான தோற்றமளிக்காமல் இருதரப்பு ஒப்பந்தங்களாகவே தெரிகின்றன்). கூடி கூடி என்ன செய்கிறார்கள்?

சக்தியின் சமர்

இலங்கையில் தமிழ் தொலைக்காட்சி என்று பேசும்போது சக்தியை தவிர்க்க முடியவில்லை. பல தமிழ் தொலைக்காட்சிகள் பார்வையாளர் இன்றி இயங்குகின்றன.

சக்தியில் மின்னல் நிகழ்ச்சி இல்லாமல் போனது மிக்க மகிழ்ச்சி. ஆனால் ரங்கா ஒருவரின் தனிப்பட்ட அரசியல் விருப்பு வெறுப்புகளை கழித்து பார்த்தால் அது நல்ல நிகழ்ச்சி. தமிழ் பேசும் மக்களிடையே புரிந்துணர்வையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்பவும், விமர்சனம் ஊடாக அரசியல்வாதிகளுக்கு கடிவாளம் போடவும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி அவசியம். துரதிஷ்டவசமாக அதை தர யாரும் தயாரில்லை.

சிரசவின் சட்டன நிகழ்ச்சியின் theme இல் சமர் நிகழ்ச்சி கடந்தவாரம் பார்க்கக்கிடைத்தது. 3 மணித்தியாலங்கள் நடக்கும் நிகழ்ச்சியை ஒரு மணித்தியாலத்திற்குள் சுருக்க முயற்சிக்கிறார்கள். ஏதாவது ஒரு குப்பை நிகழ்ச்சியை விட்டுவிட்டு இன்னொரு மணித்தியாலம் சேர்க்கலாம். அல்லது சட்டணவில் இருந்த சில (தமிழில் வெற்றிகரமாக செய்யமுடியாத) அம்சங்களை விட்டுவிடலாம்.

காண்டீபனின் கேள்வி

புத்தளத்தில் இருக்கும் முஸ்லிம் அகதிகள் வசதியாக இருப்பதாக காண்டீபன் சொன்னார். கேள்வியில் இடம்பெற்ற ஒரு விஷயமென்றாலும் முதன்மைப்படுத்தப்பட்டிருந்தது இந்த எரிச்சலே. 

ஊடகத்தில் இருக்கும் ஒருவர் (எல்லாரையும் ஊடகவியலாளர் என்று புனிதப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை). ஆண்டுகளாக மக்கள் அகதிமுகாமில் இருந்துகொண்டு பிச்சை எடுக்கவேண்டும் என்று இவர் நினைக்கிறாரா? சொந்த இடங்களில் இருந்திருந்தால் இதைவிட வசதியாக இருக்கமாட்டார்களா?

இவ்வாறு கேள்விகேட்பவர்கள் ஏன் "புலம்பெயர்ந்தவர்கள்" வசதியாக இருப்பது பற்றி பேசுவதில்லை? அவ்ர்களை வைத்துக்கொண்டு இங்கு இருப்பவர்கள் KFCஇலும் Pizza Hutஇலும் தின்று திரிவதை பற்றி பேசுவதில்லை? எல்லோரும் உப்பு புளிக்கு அரசின் கைகளையா எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்? மைக்கும் குரலும் மட்டும் இருந்தால் போதாது. மண்டையிலும் வேணும்.

அல்லது இவர்களின் நிகழ்ச்சி இதுவரை துரத்தப்பட்ட முஸ்லிம்கள் பற்றி ஒரு நிகழ்ச்சி செய்யவில்லை?
இன்னும் இந்நிகழ்ச்சி முழுவதும் முகா அரசுடன் சேரக்கூடாது, இம்முறை வாய்ப்பு ததேகூக்கு தான் என்ற தொனி விரவியிருந்தது. இந்த பிச்சைக்காரப்புத்தி எப்போது போகுமோ?

சரியான வார்த்தை "கடப்படித்தனம்" (நன்றி ஆனந்த சங்கரி அவர்கள்)

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

ஆழம் பார்க்காமல் காலை விட்ட மனோ கணேசன்

தேர்தல் முடிந்த நாள்முதல் மனோகணேசனின் ஒப்பாரிச்சத்தம் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

வழமையாக கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வந்த மனோ கணேசன் இம்முறை அரசியல் சூதாட்டம் ஒன்றை நடத்தினார். வெற்றிவாய்ப்பு அதிகமாக உள்ள கொழும்பை தனது தம்பிக்கு விட்டுக்கொடுத்து கண்டி மாவட்டத்தில் அவர்போட்டியிட்டார்.

கண்டி மாவட்டத்தில் ஐதேக தனது பலத்தை சரியாகவே கணித்திருந்தது என்று தெரிகிறது. 4 பேருக்கு மேல் வெற்றிபெற முடியாது என்பதை உணர்ந்த ஐதேக அங்கு போட்டியிட இருந்த திஸ்ஸ அத்தநாயக்கவை தேசியப்பட்டியலில் உள்ளடக்கியது. இது தெரியாமல் அடம்பிடித்து கண்டியை பெற்றுக்கொண்ட மனோ ஆப்பை தேடிச்சென்று சொருகிக்கொண்டார்.

ஒரு கட்சியின் தலைவராக இருப்பவருக்கு ஆகக்குறைந்தது தனது பதவியையேனும் தக்கவைக்க தெரிந்திருக்கவேண்டும். திடிரென தொகுதி மாற்றமுன் குறைந்தது தனக்குள்ள ஆதரவையாவது கணித்திருக்க வேண்டும். கம்பஹாவில் வந்து போட்டியிட்ட பசிலும் அம்பாறையில் வந்து போட்டியிட்ட வீரசேகரவும் தமது பதவிகளினூடாக பாரிய சேவைகளை செய்தே தமது வெற்றியை உறுதிசெய்தனர். ஆனால் மனோவோ எப்போதும்போல எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கண்டிக்கு சென்றுவிட்டார்.

தேர்தலில் தோல்வி உறுதியான பின்னராவது அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவி பற்றி நெருக்குதல்களை கொடுத்திருக்கவேண்டும்.. ஆனால் தனக்கு ஆசனம் கிடைக்கும் என உறுதியாக நம்பிய அவர் கொழும்பில் தோல்வியுற்ற குருபரனுக்கு அவர் யாழ் தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்கிறார் என தேசியப்பட்டியல் ஆசனம் கோரிக்கொண்டிருந்தார். அந்தோ பரிதாபம்.. அப்போதும் கூட தன்து நிலை என்ன என்பதை அறியாதவராகவே இருந்திருக்கிறார்.

இப்படி மனோ நடந்துகொண்டதால்தான் ஐதேகவும் இழக்காரமாக நினைத்திருக்கும். அவர் கொழும்பில் வெற்றிபெற்ரிருந்தால் அதைக்கொண்டு தனது தம்பிக்கு ஆசனமொன்றை பெற்றுக்கொடுத்திருக்க முடியும். ஆனால் அவர் தோற்றதால் அவர் கட்சியையே கணக்கெடுக்காமல் விட்டுவிட்டார்கள்.

அவர் கண்டியில் தோற்றாலும் தோற்றவர்களில் முதல் இடத்திலாவது இருக்கவில்லை. அதுகூட அவரை சொல்வாக்கற்றவராக ஆக்கியிருக்கலாம்.

இன்னும் கொழும்பு மாவட்டத்தில் வெற்றி பெற்றவர்களில் எல்லா கட்சிகளிலும் ஆகக்குறைய விருப்பு வாக்கு பிரபா கணேசனுக்கு கிடைத்திருந்தது. இந்த லட்சணத்தில் எப்படி ஐதேகவை நெருக்கமுடியும்?

மனோகணேசன் கொழும்பில் தனித்துப்போட்டியிட்டிருந்தால் இந்த 43,000 ஆயிரம் வாக்குகளை பெற்றீருந்தால் ஒரு ஆசனத்தையெனும் பெற்றிருக்க முடியாது. ஐதேக ஆதரவாளர்களான தமிழர்களின் வாக்குகளை கழித்தால் இந்த என்ணிக்கையையே அடைந்திருக்கமுடியாது என்பதையும் கவனத்தில்கொள்ளவேண்டும்.

இதுபோதாதென்று நுவரெலியாவில் போட்டியிட்ட இவர்களது கட்சியச்சேர்ந்த ரங்காவும் அங்கும் வெற்றிபெற்றவார்களில் ஆகக்குறைந்த வாக்குகளையே பெற்றிருந்தார் என்பதும் இங்கு கவனிக்கவேண்டியது.

இன்றும் மனோ தன்து வழமையான எடுத்தேன் கவிழ்த்தேன் பாணியில் ரணில் இருக்கும் வரை ஐதேகவோடு கூட்டு இல்லை என்றும், ஐதேகவில் இருக்கும் 5 பேரை துரத்தப்போவதாகவும் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்.

கூரையேறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானா? தனது பதவியையே காப்பாற்றத்தெரியாதவர் எப்படி அரசியல் நரியான ரணிலை வீட்டுக்கு அனுப்பப்போகிறார்?

இதுபோதாதென்று ஜனாதிபதி மஹிந்த தொலைபேசியில் துக்கம் விசாரித்ததைவேறு பகிரங்கப்படுத்தியுள்ளார். (நக்கலுக்கு கேட்டாரோ யாருக்கு தெரியும்?). இவ்வழைப்பு மூலமாக ரணில் துரோகியாக மாற ராஜபக்ச நண்பர் ஆகியுள்ளார். ஆனால் இதுவரை இவர்செய்தது ராஜபக்ச எதிர்ப்பு அரசியலே..

முதலில் மனோ அரசியலில் சில பால பாடங்களை படிக்கவேண்டும். (மனோவும் ரங்காவும் தெளிவாக பேச பழகவேண்டும். தமிழைக்குதப்பிக்கொண்டு வாக்குகேட்டால் உங்கள் நியாயமாவது மக்களுக்கு புரியுமா?)

அத்துடன் இனியாவது ஆழம் பார்க்க தெரியணும்

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

100ஐ நோக்கி பயணிக்கும் அமைச்சர்களின் எண்ணிக்கை - கவுன்டிங் ஸ்டாட்கண்டி, திருகோணமலை மாவட்ட மீள்தேர்தல்கள் முடிவுவரும்வரை பிற்போடப்பட்டிருந்த அமைச்சரவை பதவியேற்பு வைபவம் நேற்று பிற்பகல் சுபவேளையில் நடந்து முடிந்தது.

இதன்மூலம் பாராளுமன்றத்தேர்தல் நடந்த நாள் முதல் இன்று வரை ஆளும்கட்சியின் அமோக வெற்றி பற்றி தலைப்புச்செய்தி வெளியிட்டு வந்த அரசஊடகங்கள் இனி அமைச்சரவை பட்டியலை வாசித்தும் பிரசுரித்தும் அதன் பின் அமைச்சர்கள் அலுவலகங்களுக்கு சென்று பதவியேற்றது தொடர்பான செய்திகளையும் அவர்களை சகல மத பிரமுகர்கள் வாழ்த்துவதையும் அவர்தம் பிரதேசங்களில் நடைபெறபோகும் வரவேற்புக்கள், கொண்டாட்டங்கள் ஆகியவற்றை தலைப்புச்செய்திகளாக்கியும் காலம் தள்ளுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்று பதவியேற்ற அமைச்சரவையில் 37 அமைச்சர்களும் (ஜனாதிபதியைச்சேர்த்து 38) 39 பிரதி அமைச்சர்களும் அங்கம் வகிக்கிறார்கள்.

நேற்று 37பேரை மாத்திரம் அமைச்சர்களாக பதவியேற்கச்செய்ததன் மூலம் ஜனாதிபதி;  தான் வாக்களித்த 35 பேர் கொண்ட அமைச்சர்வையை செய்து காட்டியுள்ளதாக அவரது தீவிர ஆதரவாளர்களை நம்பவைக்க முயற்சித்திருப்பது தெளிவு.

இங்கு 
 • பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு 1 அமைச்சரும் 3 பிரதியமைச்சர்களும்
 • துறைமுக விமானசேவைகள் அமைச்சுக்கு 2 பிரதியமைச்சர்களும்
நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பது கவனிக்கப்படல்வேண்டும்

நாவலப்பிட்டிய சம்பவம் தொடர்பாக கட்சிக்குள் விசாரணைகள் நடைபெறுவதால் அதன் முடிவு வரும் வரையில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப்பொறுப்புகள் வழங்கப்படவில்லை. எனவே இவ்வமைச்சரவை இன்னும் வளரும் என்பது தெளிவு.

பட்டியலை பெரிதாக பார்க்க படத்தின்மீது click செய்யவும்எப்போதும் ஜனாதிபதி வசம் இருக்கும் 
 • பாதுகாப்பு மற்றும் 
 • நிதி அமைச்சுகளை 
தவிர்த்து, 
 • துறைமுகம் , விமானசேவை, 
 • பெருந்தெரு 
ஆகிய அமைச்சுக்களை ஜனாதிபதி வைத்திருப்பதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதை தவிர
 • ஊடகம், தகவல்கள்
 • கால்நடை அபிவிருத்தி
 • உயர் கல்வி
 • தொழிநுட்பம், ஆராய்ச்சி
ஆகிய 4 அமைச்சுக்கள் இன்னமும் ஜனாதிபதி வசம் இருக்கின்றன / யாருக்கும் வழங்கப்படவில்லை. எனவே கட்சி தாவுவர்களுக்காகவும் கண்டி மாவட்டத்துக்காகவும் 6 அமைச்சுக்கள் காத்திருக்கின்றன என்று தெரிகிறது.

அத்துடன்
 • இளைஞர் அலுவல்கள்
 • விளையாட்டு 
 • சுற்றாடல்
 • தொழில் உறவு, உற்பத்தி மேம்பாடு 
 • தேசிய மொழி, சமூக நல்லிணக்கம்
 • பௌத்த, மத விவகாரம்
 • பொது முகாமை, மறுசீரமைப்பு
பாராளுமன்ற அலுவல்கள்
ஆகிய 8 அமைச்சுக்களுக்கு பிரதியமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை. இவையும் கட்சி தாவுவர்களுக்காகவும் கண்டி மாவட்டத்துக்காகவும் காத்திருப்பதாகவே கருத தோன்றுகின்றது.

2/3 பெரும்பான்மையைப்பெற வெறும் 6 பாராளுமன்ற உறுப்பினர்களே தேவையாக இருக்கையில் மொத்தமாக 14 பதவிகளை ஆசைகாட்டுவதற்காக வைத்திருப்பதுபோல் தெரிகிறது. இந்த 14 பதவிகளில் 4; எஸ்.பி., கெஹலிய, அமுனுகம, பைசர் முஸ்தபா ஆகியோருக்கு கிடைக்கக்கூடும்.

சுற்றுலாத்துறைக்கு அமைச்சர்களோ பிரதியமைச்சர்களோ நியமிக்கப்படவில்லை. இவ்வமைச்சு வேறு அமைச்சுக்களின் கீழ் உள்ளடக்கப்பட்டிருக்காவிட்டால் இன்னும் 2 பதவிகளும் இருக்கின்றன.

இவையாவும் நிரப்பப்பட்டபின்
அமைச்சர்கள் 37 + 6 + 1 = 44 ஆகவும்
பிரதியமைச்சர்கள் 39 + 8 + 1 = 48 ஆகவும்
அமையக்கூடும். ஈற்றில் அமைச்சரவை 100ஐத்தொடும். இது ஆளும் தரப்பில் 2/3 பங்காகும்.

அமைச்சரவை பதவியேற்பு தொடர்பான சுவையான சம்பவங்களை அடுத்த பதிவில் தர முயற்சிக்கிறேன்

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

இலங்கை பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகளின் பட்டியல்

இலங்கை பாராளுமன்றத்தேர்தலின் சகல முடிவுகளும் நேற்று நள்ளிரவு வெளியானதை தொடர்ந்து, சற்றுமுன் சகல கட்சிகளும் தத்தமது தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை அறிவித்துள்ளன.

இலங்கையின் 14ஆவது பாராளுமன்றத்தில்; மொத்த உறுப்பினர்களில் 27 தமிழர்களும் 18 முஸ்லிம்களும் அடங்குகின்றனர்.

திகாமடுல்ல மாவட்டத்தில் இ.த.க.வின் சார்பாக தெரிவுசெய்யப்பட்டவரின் பெயர் பியசேன என்பதாகும்.

2010 பாராளுமன்றத்தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகளின் பெயர்பட்டியல் வருமாறு


List of Tamil, Muslim MPs
14th Sri Lankan parliamentary election

நிறக்குறியீடு
ஐதேமு
ஐமசுமு
ததேகூ
மாவட்டம்
நுவரெலியா ஆறுமுகம் தொண்டமான்
ராதாகிருஷ்ணன்
பெருமாள் ராஜதுரை

பழனி திகாம்பரம்
சிறீரங்கா ஜயரட்ணம்

X
வன்னி

செல்வம் அடைகலநாதன்
N.லிங்கம்
சிவசக்தி ஆனந்தன்

ரிஷாட் பதியுதீன்
உனைஸ் பாரூக்

நூர்தீன் மஷூர்
கேகாலை X கபீர் ஹாஷிம்
யாழ்ப்பாணம் மாவை சேனாதிராஜா
சுரேஷ் பிரேமசந்திரன்
வினாயகமூர்த்தி
சரவணபவன்
சிவஞானம் சிறீதரன்

டக்ளஸ் தேவானந்தா
உதயன்
சந்திரகுமார்

மகேஸ்வரன் விஜயகலா
X
திருகோணமலை சம்பந்தன்
தௌபீக்
அம்பாறை (திகாமடுல்ல) X அதாவுல்லா
ஹரீஸ்
பைசல் காசிம்
கொழும்பு பிரபா கணேசன் பௌசி
கண்டி X காதர்
ஹக்கீம்
ஹலீம்

பைசர்
மட்டக்களப்பு யோகேஸ்வரன்
பொன்னம்பலம் செல்வரா
அரியநேத்திரன்
பஷீர் சேகுதாவூத்
ஹிஸ்புல்லா
தேசியப்பட்டியல் முத்து சிவலிங்கம்
கருணா

சுவாமிநாதன்
யோகராஜன்

சுமந்திரன்
அஸ்வர்
ஹசன் அலி
முஹமட் சாலிம்
மொத்தம் 27
18

தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாத மாவட்டங்கள்
ஹம்பாந்தோட்டை,
மொனராகலை,
மாத்தறை,
பொலன்னறுவ,
பதுளை,
மாத்தளை,
இரத்தினபுரி,
காலி,
அனுராதபுர,
புத்தள்ம்,
குருணாகல

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

வெற்றிபெற்ற தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளின் பட்டியல்

தேசியப்பட்டியல் தவிர்ந்த கண்டி திருகோணமலை உள்ளடங்கலான முடிவுகளின்படி விருப்பு வாக்குமுறைமூலமாக தேர்வுசெய்யப்பட்டவர்களில் 22 தமிழர்களும் 15 முஸ்லிம்களும் அடங்குகின்றனர்.

திகாமடுல்ல மாவட்டத்தில் இ.த.க.வின் சார்பாக தெரிவுசெய்யப்பட்டவரின் பெயர் பியசேன என்பதாகும்.

2010 பாராளுமன்றத்தேர்தலில் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகளின் பெயர்பட்டியல் வருமாறு

.. >> தேசியப்பட்டியல் விரைவில் update பண்ணப்படும்

மாவட்டம்
நுவரெலியா ஆறுமுகம் தொண்டமான்
ராதாகிருஷ்ணன்
பெருமாள் ராஜதுரை

பழனி திகாம்பரம்
சிறீரங்கா ஜயரட்ணம்

X
வன்னி

செல்வம் அடைகலநாதன்
N.லிங்கம்
சிவசக்தி ஆனந்தன்

ரிஷாட் பதியுதீன்
உனைஸ் பாரூக்

நூர்தீன் மஷூர்
கேகாலை X கபீர் ஹாஷிம்
யாழ்ப்பாணம் மாவை சேனாதிராஜா
சுரேஷ் பிரேமசந்திரன்
வினாயகமூர்த்தி
சரவணபவன்
சிவஞானம் சிறீதரன்

டக்ளஸ் தேவானந்தா
உதயன்
சந்திரகுமார்

மகேஸ்வரன் விஜயகலா
X
திருகோணமலை சம்பந்தன்
தௌபீக்
அம்பாறை (திகாமடுல்ல) X அதாவுல்லா
ஹரீஸ்
பைசல் காசிம்
கொழும்பு பிரபா கணேசன் பௌசி
கண்டி X காதர்
ஹக்கீம்
ஹலீம்

பைசர்
மட்டக்களப்பு யோகேஸ்வரன்
பொன்னம்பலம் செல்வரா
அரியநேத்திரன்
பஷீர் சேகுதாவூத்
ஹிஸ்புல்லா
தேசியப்பட்டியல் .. ..
மொத்தம் 22*
15*

தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் இல்லாத மாவட்டங்கள்
ஹம்பாந்தோட்டை,
மொனராகலை,
மாத்தறை,
பொலன்னறுவ,
பதுளை,
மாத்தளை,
இரத்தினபுரி,
காலி,
அனுராதபுர,
புத்தள்ம்,
குருணாகல

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

அரசியல் புதுவருடப்போட்டிகள்

சுவர்ணவாஹினியில் சனிக்கிழமை 7.30க்கு ஒளிபரப்பாகும் அரசியல் நிகழ்ச்சி And Company. சமகால இலங்கை அரசியலை கிண்டல் செய்யும் நிகழ்ச்சி. தேர்தல் காலங்களில் அரசுக்கு சாதகமாக செயற்பட்டாலும் மற்றைய நாட்களில் இது சிறந்த நிகழ்ச்சியே.

கடந்த 10ஆம் திகதி ஒளிபரபான நிகழ்ச்சியில் புதுவருடப்போட்டிகளையும் அரசியலையும் கலந்து சிறப்பாக செய்திருந்தார்கள். அதன் videoஐ உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

இந்நிகச்சியில்

பணிஸ் சாப்பிடும் போட்டியில் ரணில் பணிஸ் சாப்பிட தெரியாமல் தடவிக்கொண்டிருப்பார். அவருக்கு உதவ மங்கள சென்றாலும் அவரையும் விடமாட்டார். ஆனால் விமல் வீரவன்ச சம்பிக்க, மேர்வின் என எல்லோருடைய பணிஸையும் சாப்பிடுவார்.

கயிறிழுத்தல் போட்டியில் கயிறிழுக்கும்போது சோமவன்ச, தனக்கும் வாய்ப்பு வழங்குமாறும் ஆனால் ரணிலின் தலைமையின் கீழ் கயிறிழுக்க முடியாது எனவும் கூறுவார்.

இன்னும்

 • யானைக்கு கண்வைத்தல் போட்டியில் கண்ணைத்திறந்துகொண்டாவது யானைக்கு கண் வைக்க தடுமாறும் ரணில்
 • பொய்சொல்லும்போட்டியில் ஒரே விடயத்தையே கூறும் வீரவன்ச, சம்பிக்க
 • ரணில் மஹிந்த இடையே தலையணை சண்டை
 • முட்டியுடைக்க முயற்சிக்கும் ரணில் மற்றவரின் மண்டையை உடைப்பது
 • விநோத உடைப்போட்டியில் வெற்றி பெற்ற பொதுஜனம்
என சிரித்து சிரித்து வயிறு வலிக்கவைக்கும் பல அம்சங்கள் உண்டு.


EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

முகா - ததேகூ பேச்சுவார்த்தை , அசாத் சாலியின் ஒப்பாரி

முகாவுடன் இணைந்து செயற்பட ததேகூ விருப்பம் தெரிவித்துள்ளது. ஒருபுறத்தில் நாங்கள் இருக்கிறோம், ஒரு சமிக்ஞை மட்டும் காட்டுங்கள், சரணாகதி ஆக ஓடிவருகிறோம் என்பதுபோல் அடிக்கடி அரசுக்கு ஊடகங்களினூடாகவும் செய்தி அனுப்பிக்கொண்டிருக்கும் ததேகூ இன்னொரு புறத்தில் இப்படியான செய்திகளையும் தருகிறது.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன் இப்படியான பேச்சுவார்த்தை நடந்தபோது கடைசிதருணத்தில் "வட கிழக்கு" இணைப்பு பற்றி பேசி அதை முடிவுக்கு கொண்டுவந்தார்கள். ஏதோ முஸ்லிம்களுடன் இணைந்து செயற்படாமல் இருப்பதன் மூலம் வட கிழக்கை இணைத்து விடப்போகிறமாதிரி..

இனி பேச்சுவார்த்தை நடத்தினால்கூட இதே பிரச்சினையை கடைதருணத்தில் பேசமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? அப்படி இருக்கையில் எந்தூத்தரவாதத்தில் பேசப்போவது?

அரசாங்கத்திற்கு வெறும் 6 உறுப்பினர்களைமாத்திரம் எதிர்த்தரப்பில் இருந்து பிடுங்கவேண்டிய நிலையில் அந்த 6 பேருக்குள் இடம்பிடிக்க ததேகூ இடம்பிடிக்க முண்டியடிப்பது தெரிகின்றது. அதற்கிடையில் முகா இணைந்துவிடுமோ என்ற பயத்தில்தான் இந்த இணைந்து செயற்படுதல் பற்றி பேசப்படுகிறது. அதுவும் அமைச்சரவை அமைக்கப்பட முன் ஓடவேண்டும் என்ற அவசரம் தெளிவாகவே தெரிகிறது.

தேர்தல் முடிவு வெளிவந்த நாள் முதல் அசாத் சாலி ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்கிறார். இந்த தேர்தலில் முஸ்லிம்வாக்குகள் ஐதேமுக்கு சென்றுவிடாமல் இருப்பதற்காக ஜனாதிபதி அவர்கள் தனக்கு முழு ஆதரவு தந்ததாகவும், தனது தீவிர பிரச்சாரம் காரணமாக ஐதேமு இல் போட்டியிட்ட 3 பேரும் தோல்வியடைந்ததாகவும் மார்தட்டிகொள்ளும் அவர்; ஐதேமு இன் வாக்கு வங்கியில் இருந்து தனக்கு கிடைத்த வாக்குகளில் 30ஆயிரம் கொள்ளையிடப்ப்ட்டுள்ளதாக பத்திரிகைகளில் ஒப்பாரி வைக்கிறார்.

இது உங்களுக்கு நடக்கும் என்பது எப்போதோ எங்களுக்கு தெரியும்.. திருடனுக்கு தேள் கொட்டினா வாய்திறக்க கூடாது ராசா..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

நாவலப்பிட்டிய மீள் வாக்கெடுப்பு - ஒரு பார்வை

கடந்த 10 நாட்களாக அமைச்சரவை இன்றி இலங்கை அரசாங்கம் இயங்கிவருகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் புது வருடத்திற்கு முதல் புதிய அமைச்சரவையை நியமித்தபின் தனது சொந்த ஊருக்கு போக இருந்தார். ஆனால் அவரது கட்சியைச்சேர்ந்த அமைச்சரவை அந்தஸ்த்தற்ற அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நாவலப்பிட்டியவில் இருந்த 34 தொகுதிகளில் எதிர்கட்சியினரை துரத்தியதாக குற்றஞ்சாட்டப்பட திட்டத்தில் மாற்றம் ஏற்படவேண்டியதாகிவிட்டது.

கடந்த மார்ச் 19 ஆம் திகதி கண்டியில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கான முதல் பிரச்சார கூட்டத்தில் அளுத்கமகே ஜனாதிபதியின் கோபத்தை சம்பாதித்துக்கொண்டார். இக்கூட்டத்தில் ஜனாதிபதி அப்போது அமைச்சரவை அமைச்சராக இருந்த சரத் அமுனுகம பற்றி பேசும்போது அளுத்கமவின் ஆதரவாளர்கள் கூச்சலிட்டிருந்தினர். இதனால் கோபமுற்ற ஜனாதிபதி ''நாவலப்பிட்டியவுக்கு போய் கூச்சலிடுங்கள்'' என்று கூறியிருந்தார். நாவலப்பிட்டிய அளுத்கமகேயின் தொகுதியாகும்.

நாவலப்பிட்டிய சம்பவம் தொடர்பான அதிருப்தியையும் கண்டனத்தையும் கெஹலிய ரம்புக்வெல பத்திரிகையாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார். இவர் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பேச்சாளராகவும் இருப்பதால் இது அரசாங்கத்தின் கருத்தாகவும் இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

இதேவேளை அமுனுகம தனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தினார் என கூறும் அளுத்கமகே 500 மில்லியன் நஷ்டைஈடு கோரி கடிதம் அனுப்பியுள்ளார். சாத்தியமே இல்லாத 500 மில்லியனை பெற்றால்கூட இது அளுத்கமகேயின் அரசியல் வாழ்க்கைக்கு ஏற்படுத்திய களங்கத்துக்கு போதாது. அமைச்சரவையில் இவர் இடம்பிடிப்பது சந்தேகமே. பாராளுமன்றத்தில்கூட இவருக்கு கடைசி வரி ஆசனமே ஒதுக்கப்படும் என தெரிகிறது.

ஜானாதிபதி நாவலப்பிட்டிய நிகழ்வுகள் தொடர்பாக கோபத்தில் இருப்பது வெளிப்படையாக தெரிகின்றது. அதனால்தான் பாதுகாப்பு அமைச்சு அந்நிகழ்வுகளை தடுக்காத அப்பிரதேச பொலிஸ் மீது கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இது அளுத்கமகேயை திகைப்படையச்செய்துள்ளது. இதுவரை நாவலப்பிட்டிய பொலிஸ் அளுத்கமகேயின் அரசியல் குழுவாகவே செயல்பட்டு வந்துள்ளது. இதன்காரணமாக ஐதேமு இன் வேட்பாளர் அப்துல் காதரின் வாகனம் தாக்கப்பட்டபோது அளுத்கமகே நேரடியாக அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ''அங்கிள் கவலைப்படாதீங்க. நான் அதை சரி செய்து தருகிறேன்'' என்று கூறியிருந்தார்.

நாவலப்பிட்டிய உள்ளடங்கும் கம்பளை பிரதேச SSPக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு வேறொருவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டியவில் 50,948 வாக்குகள் இருக்கின்றன. 12 உறுப்பினர்கள் தெரிவாகும் கண்டியின் ஏனைய 5 தொகுதி முடிவுகளின் அடிப்படையில் ஆளும் ஐமசுமுவின் சார்பாக கெஹலிய ரம்புக்வெல, அளுத்கமகே, டிலும் அமுனுகம, லொஹான் ரத்வத்த, எரிக் வீரவர்தன, எஸ் பி திசாநாயக, பைசர் முஸ்தபா என 7 பேருக்கு வாய்ப்பு கிட்டும். 8ஆவது இடத்தில் மஹிந்த அபயகோன் இருக்கிறார். ஐதேமு இல் ரவூப் ஹக்கீம், லக்ஸ்மன் கிரியல்ல, அப்துல் காதர், ஹலீம், மயந்த திசாநாயக்க ஆகியோருக்கு வாய்ப்பு கிட்டும். 4 பேர் தெரிவானால் மயந்த வாய்ப்பை இழப்பார்.

கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டோரில் ஐமசுமு இல் அமுனுகமவும், ஐதேமு இல் மனோ கணேசனும் தோல்வியடவர்.

திருகோணமலை மாவட்டத்தில் வெறும் 977 வாக்குகளுக்கான தேர்தலே நடைபெற இருப்பதால், அங்கு சம்பந்தன், தௌபீக், சுசந்த புஞ்சி நிலமே, குணவர்தன ஆகியோர் தெரிவு செய்யப்படுவர்.
(பத்திரிகை செய்திகளின் தொகுப்பு)

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

தாலிபான் இஸ்லாமா?

ஊடகமொன்றில் தாலிபான் பற்றி அண்மையில் ஒரு நிகச்சி நடந்தது. இஸ்லாம் பற்றிய தவறான புரிதல்கள் இதில் வெளிப்படையாகவே புலப்பட்டதனால் சில முக்கிய விடயங்களை தெளிவுபடுத்தலாம் என நினைக்கிறேன்.

தாலிபான் என்று சொல்லப்படும்போதே கடும்போக்கு இஸ்லாமியர் என்றும் ஒட்டிக்கொள்கிறது. மாற்றுமதத்தவரிடையே காணப்படும் மிகப்பிழையான கருத்து இதுவாகும்.

இஸ்லாத்தில் கூட்டல் குறைத்தல்களுக்கு இடமில்லை. இஸ்லாம் என்பது குர் ஆனையும் அதனடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் உதாரணமாக வாழ்ந்து காட்டிய நடைமுறைகளுமாகும். இவற்றில் பலவற்றை வசதிக்கேற்ப விட்டுவிட்டு வாழ்வோரை சிலர் moderate முஸ்லிம்கள் என்று கருதுகிறார்கள். இவர்கள் முஸ்லிம் பெயர்களை கொண்டிருப்பதனால் இவர்கள் இஸ்லாத்தின் வழியில் வாழ்பவர்கள் என்று கொள்ளப்பட முடியாது.

இன்னும் சில முஸ்லிம்கள் தங்கள் அறியாமையின் காரணமாக இஸ்லாத்தின் பெயரால் செய்யும் விடயங்கள் அவர்களை முஸ்லிம் அடிப்படைவாதிகள் என்று கருதச்செய்திருக்கிறது.

இஸ்லாத்தில் இவ்வாறான இரண்டு பிரிவுகளும் இல்லை என்பதை முஸ்லிம் அல்லாதோர் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆப்கானிஸ்த்தான் மீது மேற்கத்தைய நாடுகள் போர்தொடுக்கும்போதெல்லாம் ஏனைய முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்வது எல்லாம்,
அங்கு கொல்லப்படுவது முஸ்லிம் என்பதலாகும் எனபதையும்
அதன்காரணமாக இவர்களும் தாலிபான் ஆட்சியை ஆதரிக்கிறார்கள் என்று கருதுவது தவறு
என்பதையும் பல முஸ்லிம் அல்லாதவர்கள் புரிந்துகொள்வதேயில்லை.

அடுத்தது ஆயுதமேந்திய முஸ்லிம்களையெல்லாம் ஜிஹாத் என்று வரைவிலக்கணப்படுத்திக்கொள்வது முஸ்லிம் அல்லாதோரின் பரவலான நடைமுறை. ஜிஹாத் என்பது அடிப்படை உரிமைக்கான போராட்டமே. ஒரு மனிதனின் அடிப்படை உரிமைகளாக வதியும் உரிமை, தான் விரும்பும் சமயத்தை பின்பற்றும் உரிமை என்பன வருகின்றன.

தனது வீட்டில் இருந்து துரத்தப்படல், மதரீதியாக ஒடுக்கப்படல் என்பன இடம்பெறும்போது அது போராடவேண்டியது கடமையாகும். அது ஜிஹாதில் வரும். உம் பலஸ்தீன மக்கள் போராட்டம். ஆனால் வெறுமனே பதவிக்கான போராட்டங்கள் எல்லாம் ஜிஹாதில் அடங்காது. அதேபோல் முஸ்லிம் பிரதேசங்களில் இருக்கும் ரவுடிக்கும்பல்களையெல்லாம் ஜிஹாத் என்று வகைப்படுத்துவது இலங்கை இந்திய ஊடகங்களில் நடைபெற்றாலும் அது இஸ்லாமிய அடிப்படையில் ஜிஹாத் ஆகாது.

இன்னும் ஒரு போராட்டம் செய்யும்போது கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்க கோவையொன்றுகூட இஸ்லாத்தில் இருக்கிறது. நியாயமான போராட்டத்தில்கூட ஒழுக்கமாக நடந்துகொள்வது இஸ்லாத்தில் அவசியமாகும். இவ்வாறான ஒழுக்கங்களை மீறுவது மீறியவர்களை இஸ்லாத்தில் நின்றும் தூரமாக்கக்கூடிய அளவுக்கு பாரதூரமானதாகும்.

இன்னும் பல மாற்று மதத்தவர்கள் கருதுவதுபோல ஜிஹாத் என்பது இஸ்லாத்தை திணிப்பதல்ல. ஒருவர் முஸ்லிமாக மாறுவதற்கு மிக அடிப்படையான நிபந்தனை அவர் முழுமனதோடு இறைவன் மீது நம்பிக்கைவைப்பதாகும்.

இன்னும் சிலர் முஜாஹித், ஷரீஅத் சட்டம் என்பன பற்றிப்போசப்படும்போதெல்லாம் தாலிபானிஸம் என்றே கருதுகிறார்கள். முஜாஹித் என்றால் போராளி. ஷரீஅத் சட்டம் என்பது பலர் நினைப்பதுபோல் தலையை வெட்டுவதல்ல. இஸ்லாமிய சட்டத்தில் பொய் சாட்சியம் சொல்பவருக்கு தண்டனையுண்டு என்பதும் அவ்வாறு பொய்சாட்சியம் சொல்பவர் அதன்பின் சட்சியம் சொல்லும் தகுதியையே இழந்துவிடுவார் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

இன்னும் "மத்ரசா" (கல்விக்கூடங்கள்) இஸ்லாமிய தீவிரவாதத்தின் ஒருவடிவம் என்றும் பலர் கருதுகிறார்கள். இவர்கள் நினைப்பதுபோல் யுத்தத்திற்கு பயிற்றுவிக்கும் இடமல்ல இக்கல்விக்கூடங்கள். இஸ்லாத்தை பற்றி அறியும் பாடசாலையே. இஸ்லாத்தை முழுமையாக அறிந்துகொண்டவர் ஜிஹாத் என்ற பெயரில் இஸ்லாமிய ஒழுக்கங்களை மீறமாட்டார் என்பதும் கவனத்தில்கொள்ளப்படவேண்டியதாகும்.

எனவே பொறுப்பான ஊடக பதவிகளில் இருப்பவர்கள் தாலிபான் இஸ்லாத்தின் அடிப்படை வடிவம் என்ற வகையில் கருத்துக்களை தெரிவிப்பது, அல்லது அவ்வாறு பொதுமக்கள் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் தெளிவற்ற ரீதியில் அல்லது மறைமுகமாக கருத்துக்களை கூறுவது என்பவற்றை தவிர்ந்து கொள்ளவேண்டும்.

தொடரலாம்..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

இணையப்பாவனையில் வேற்றுக்கிரகவாசிகள்?!


பொது ஊடகங்களான வானொலி தொலைக்காட்சி பத்திரிகை இணையம் போன்றவற்றில் அவ்வப்போது கருத்துக்கணிப்புகள் நடப்பதுண்டு.

முதலில் அண்மைக்காலத்தில் நடந்த சில கணிப்புகளை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றிபெறுவார் என்று இல் கருத்துக்கணிப்பு நடந்தது. ஆனால் கடைசியில் வந்த முடிவும் கருத்துக்கணிப்பும் எதிரெதிரானவை. அதேபோல் தனியார் ஊடகங்களில் நடந்த கணிப்புகளின் நிலையும் இதுதான்.

பூச்சரம் இணையத்தளம் நடாத்திய ஊடகங்கள் பற்றிய கருத்துக்கணிப்பில் உண்மையை கூறுவதற்கு பதிலாக குழு மனப்பான்மையின் காரணமாக நியாயமான முடிவு கிடைப்பதை தடுத்து விட்டார்கள் என்றே கருதுகிறேன். இதன் காரணமாக இக்குழுவினருக்கு தம்மைப்பற்றிய விமர்சனத்தையும் மீள்பார்வையையும் செய்வதற்கு இருந்த வாய்ப்பை இல்லாமல் செய்துவிட்டார்கள்.

வெற்றி வானொலியில் நீங்கள் எதற்கு இணையத்தை பாவிக்கின்றீர்கள் என்றொரு கருத்துக்கணிப்பு. எல்லோரும் தம்மை saint ஆக காட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் எந்த நேரத்திலும் 500க்கும் அதிகமானோர் online இல் இருக்கும் தமிழ் இணையத்தளங்களை யாரும் சொல்லவில்லை. மிகப்பிரபலமான தமிழ் வலைப்பூவில் 50க்கும் அதிகமானோர் online இருப்பதையாவது கண்டிருக்கிறீர்களா?எல்லோரும் மின்னஞ்சலுக்கும் செய்திக்கும் பயன்படுத்தினால் இந்த இணையங்களில் இருக்கும் 500 க்கும் அதிகமானோர் வேற்றுக்கிரகவாசிகளா?

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

விருப்பு வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் - 2

இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த ஐமசுமு அபேட்சகர் கீதா குமாரசிங்ஹ குறிப்பிட்ட விடயம் மக்களிடம் தனக்கு ஆதரவு இருந்தபோதும் தான் தோற்றமைக்கு காரணம் எல்லா பொதுமக்களுக்கும் தெரிந்ததே என்பதாகும்.

இவர் மட்டுமல்ல, இவரைப்போல் பல அபேட்சகர்கள் தனது கட்சியைச்சேர்ந்த (ஆளும் ஐமசுமு) வேறுசில அபேட்சகர்கள் மக்களால் தமக்கு அளிக்கப்பட்டிருந்த விருப்பு வாக்குகளை தாண்டியும் தோற்கடித்துவிட்டார்கள் என்பதே. ஏற்கெனவே இவ்வாறான பல குற்றச்சாட்டுக்கள் வெளிவந்த நிலையில், இன்னும் பலர் பல ரகசியங்களை போட்டு உடைக்க வாய்ப்பிருக்கிறது.

கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த அசாத் சாலியின் பிரத்யேக அலுவலர் கூட இவ்வாறான ஒரு கருத்தையே பத்திரிகைகளுக்கு தெரிவித்துள்ளார். இன்று வெற்றி பெற்றிருக்கும் சிலர் முதல் தடவை விருப்பு வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட நிலையில் தன்னை விட பின்தங்கி இருந்ததாகும் மீள கணக்கிடப்படும்போது அவர்கள் தன்னை தாண்டி சென்றதாகவும் அவர் கூறுகிறார்.


அதேவேளை நாகரீகமான அரசியலைப்பற்றி பேசிவந்த மிலிந்த மொறகொட அவர்கள் வாக்கு கணக்கப்படும் நிலையத்திற்கு சமூகமளித்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் அவ்விடத்திற்கு வந்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்றும் கருத இடமுண்டு.

இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் ஆடத்தெரியாதவன் கூடம் கோணலென்ற கதைபோல தோன்றினாலும் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதும் கூட அரசியல் ரீதியாக தற்கொலைக்கு சமமானதும் கூட. குற்றச்சாட்டுக்களை சுமத்துபவர்கள்மீது கட்சியின் தலைமைத்தும் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றிந்தாலும் அதையும் மீறு குற்றச்சாட்டுக்கள் வருவது இதில் ஏதோ இருக்கிறது என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது. அப்படியான சந்தர்ப்பத்தில் இவ்வாறான நிகழ்வுகள் இதற்கு முந்தைய தேர்தலில் நடந்திருக்காது என்று எப்படி நம்புவது என்ற கேள்வியும் எழுகிறது.

விருப்பு வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள் - 1

நெருப்பின்றி புகையாது என்பதே ஞாபகம் வருகிறது.

இவ்வாறான பிரச்சினைகளை குறைப்பதற்கு நவீன தொழிநுட்பம் உதவும் என்று நம்புகிறீர்களா? அப்படியாயின் இந்த பக்கத்தில் இணையுங்கள்.
http://www.facebook.com/pages/We-want-e-voting-in-Sri-Lanka/116489728363703

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

விருப்பு வாக்கு எண்ணிக்கையில் குளறுபடிகள்

கொழும்பு மாவட்டத்தில் விருப்பு வாக்குகளின் எண்ணிவதில் பல குழறுபடிகள் இடம்பெற்றதாக இலங்கையில் வெளிவரும் ஆங்கில பத்திரிகையான The Sunday Times இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வாக்குஎண்ணும் நிலையத்தில் ஆளும் ஐமசுமு இன் வேட்பாளர்களிடையேயே சூடான வார்த்தப்பிரயோகங்களும் கைகலப்பும் இடம்பெற்றுள்ளது. நிலமையை கட்டுக்குள் கொண்டுவந்து அமைதியைப்பேண பொலிஸ் படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

விருப்பு வாக்குகளை மீண்டும் எண்ணுமாறு ஐமசுமு இன் பொதுச்செயலாளர் சுசில் பிரேமஜயந்த முதலில் கோரியிருக்கிறார். இச்சந்தர்ப்பத்தில் அவர் வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் இல்லாமல், அல்லது கடை இடத்துக்கான போட்டியில் இருந்ததாக தெரிகிறது.

வேட்பாளர் கத்திரியாராச்சி, முதல் முறையாக வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தான் 6 ஆவது இடத்தில் இருந்ததாகவும் சில முன்னாள் அமைச்சர்கள் தொடர்ந்து மீள மீள எண்ணிக்கொண்டிருக்க, கடைசியில் தான் 11 ஆம் இடத்தில் முடிந்ததாக கூறுகிறார். ஒவ்வொருமுறையும் எண்ணும்போதும் புது புது எண்ணிக்கைகள் வந்தது என்று முன்னாள் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன உறுதிப்படுத்துகிறார். இறுதி முடிவு எட்டப்படுவதற்கு அதிகாரிகளுக்கு 5 மணித்தியாலங்கள் தேவைப்பட்டதாகவும் இவர் கூறுகிறார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம சில வாக்கெடுப்பு நிலையங்களின் வாக்குகளை மீள எண்ணுமாறு கேட்டபோதும் அதே கட்சியைச்சேர்ந்த துமிந்த சில்வா அதற்கு எதிர்ப்புத்தெரிவித்திருந்தார்.

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட குழறுபடிகளில் முன்னாள் அமைச்சர்கள் சரத் அமுனுகம, அளுத்கமகே ஆகியோர் முறுகலில் உள்ளனர்.

திகாமடுல்லயில் ஆரம்பத்தில் பேரியல் அஷ்ரப் முன்னிலை வகித்ததாக கூறப்பட்டபோதிலும் கடையில் அவர் தோல்வியடந்தார். இவருக்கு தேசியப்பட்டியல் ஆசனம் கிடைக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐதேக இலிருந்து கட்சி மாறிய பலர் தோல்வியடைந்திருந்தபோதிலும் கடைசியாக கட்சிமாறிய ஜோன்ஸ்டன் பெனான்டோ, மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை பெற்றிருந்தார், இவர் சரத் பொன்சேக்காவுக்கு எதிரான வழக்கில் முக்கிய சாட்சியாவார்.

வேட்புமனுவில் குழறுபடிகள் செய்ததற்காக ஐதேக வினால் ஓரம்கட்டப்பட்ட, மத்தும பண்டார கூடுதல் வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். இவருக்கு வாக்களிக்கவேண்டாம் என்று ஐதேக தனது இறுதி பிரசார கூட்டத்தில் கூறியிருந்தது.

தொடரும்..

நீங்கள் இலங்கையில் வாக்களிப்பில் நவீன தொழிநுட்பம் பயன்படுத்தப்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? facebook இல் இதற்கென ஆரம்பிக்கப்பட்டுள்ள பக்கத்தில் இணைந்துகொள்ளுங்கள். உங்கள் நன்பர்களுக்கும் அறிவுறுத்துங்கள்.  நல்லதொரு மாற்றத்திற்காக ஒன்றுசேர்வோம்.
http://www.facebook.com/pages/We-want-e-voting-in-Sri-Lanka/116489728363703

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

தேர்தல் முடிவுகள் தொடர்பாக பிரபல் ஆய்வாளர்களின் கருத்து


இலங்கையின் தேர்தல் முடிவுகள் தொடர்பாக நேற்று (10.04.2010) BBC தமிழோசை சில ஆய்வாளர்களிடம் பேட்டிகண்டது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு


தமிழ், முஸ்லிம்கள் இணைந்து செயற்படல்

BBC
தமிழ்தேசிய கூட்டமைப்பு கிழக்கிலங்கையில் முஸ்லிம் சமுதாயம் அல்லது முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டிருக்கவேண்டும். அப்படி போட்டியிட்டிருந்தால் இரு சிறுபான்மை சமூகங்களும் ஒன்றாக வந்திருக்ககூடிய நிலையில் இருவருக்கும் அது அனுகூலமாக அமைந்திருக்கும் என்றும் சில கருத்துக்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த விமர்சனங்கள் கருத்துக்கள் எந்த அளவுக்கு ஏற்புடையது? யதார்த்த்மானது என்று நீங்க் நினைக்கிறீங்க?

DBS ஜெயராஜ்
இரு தரப்புமே கிழக்கு மாகாணத்தில் தங்களுக்கு சில பொதுபிரச்சினைகள் இருப்பதையும் தங்களுடைய இருப்புக்கே ஒரு ஆபத்து ஏற்பட்டு கொண்டிருப்பதையும் உணர்ந்து இதைப்பற்றி சொல்கிறார்கள். ஆனால் இதிலே ஒரு பிரச்சினை வரப்போகிறது என்னவென்றால் வடக்கு கிழக்கு இணைப்பு என்பதை எவ்வளவுதூரம் தமிழர் தேசியக்கூட்டமைப்பு வலியுறுத்துகின்றதோ அது கணிசமான் அளவு முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் ஒருங்கிணைவதை கொஞசம் தடுத்துகொண்டுதான் இருக்கும்.


ரங்காவின் வெற்றி எதை காட்டுகிறது

BBC
மலையக பகுதியை சாராத ஒருத்தர், அதுவும் ஒரு ஊடகவியலாளர், அங்கு வெற்றி பெற்றிருக்கின்றார். இதற்கு என்ன காரணம்?

பே. முத்துலிங்கம்
இதற்கு குறிப்பாக ஒரு வகையிலே வேதனைக்குரிய விடயம். அதாவது ஒரு ஊடகவியலாளர் மலையகத்தின் அரசியல் தலைவர்கள் என்று கூறப்படுகின்றவர்களை கொண்டுவந்து ஊடக ரீதியில் அவர்கள் மத்தியில் கேள்வியெழுப்புவதனூடாக அவர்கள் இயலாமையை வெளிப்படுத்துவதின் மூலமாக, அவர் ஒரு மீட்பராக அந்த மக்களுக்கு தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார். மலையகத்தை சார்ந்த பாமர மக்கள் என்ன நினைக்கின்றார்கள்? அவர்கள் கடந்த பலவருடங்களாக நலிந்து வருகின்ற நிலையிலிருந்து மீட்பதற்கு யாராவது ஒருவர் வந்தால் போதும் என்ற நிலையில் இருக்கின்ற நேரத்திலே இவ்வாறு ஊடகவியல்மூலம் பிரச்சினைகளை எழுப்புவதன்மூலம் தன்னை பிரபல்யப்படுத்திக்கொள்ளும்பொழுது அந்த மக்கள் அவரை மீட்பராகத்தான் கவனிக்கிறார்கள். அது மிகவும் வருந்ததக்க தன்மைதான். அவர் யார் என்று பிரச்சினை அல்ல. ஏதோ ஒரு ஊடகவியலாளராக இருந்தாலும் எங்கிருந்து வந்திருந்தாலும்கூட அந்த மக்கள் மத்தியிலே வந்து வேலைசெய்து அவர்கள் வந்திருந்தால் அது பாராட்டத்தக்க கூடியதாக இருக்கும். மலையகத்தில் இவர் மட்டுமல்ல அதேபோல்தான் அவர்கள் தங்களுடைய பிரதிநிதித்துவத்தை பற்றி அக்கறை செலுத்தாது பெரும்பான்மை இன வாக்களார்களுக்கு கூட வாக்களிக்கின்ற ஒரு தன்மையை காணக்கூடியதாக இருக்கின்றது. இந்தவகையிலே கூறுவதென்றால் இது மலையகத்தில் காணப்படுகின்ற ஒரு வறுமை. சிந்தனாரீதியான வறுமையைத்தான் இது வெளிப்படுத்தி நிற்கின்றதே ஒழிய இது பெரிய ஒரு மாற்றத்தை வெளிப்படுத்தும் என்பதாக நாங்கள் கருதுவது தவறு என்றுதான் நான் நினைக்கின்றேன்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

இலங்கையின் ஜனநாயக சாயம் வெளுக்கிறது

இலங்கை ஜனநாயக சமத்துவ குடியரசின் 7ஆவது பாராளுமன்றத்தேர்தலில் இப்போது முடிவடைந்துள்ளது. வாக்குகளை எண்ணும் பணிகள் இன்னும் சில மணித்தியாலங்களில் ஆரம்பிக்க இருக்கின்றன. தென்னாசியப்பிராந்த்தியத்தில் அதுகூடிய எழுத்தறிவு மிக்க நாடு இலங்கை என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயம். இதன் காரணமாக மக்கள் இத்தேர்தல் தொடர்பான தெளிவுடன் இருப்பார்கள் என்றே கருதவேண்டும்.

அதிகளவான வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிட்டமை ஜனநாயகத்தின் ஒரு அம்சமாக கருதப்படக்கூடியதென்றபோதும்; பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களில் 50% க்கும் குறைவானவர்களே வாக்களித்துள்ளமை இங்கு நிச்சயம் கவனிக்கப்பட வேண்டியது.

வாக்களிக்க வந்தோர் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் இதுவரை வெளிவராத நிலையில் களத்தகவல்கள் இது பெரும்பாலும் 40%க்கும் 50%க்கும் இடையிலேதான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. உச்சபட்சம் 50% என்று கொண்டால்கூட; ஆட்சியமைக்கும் குழுவுக்கு 2/3 பெரும்பானமை கிடைத்தாலும், இது மொத்த பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களின் தொகையில் வெறும் 33% ஆக இருக்கும். அதாவது 2/3 பெரும்பான்மை கிடைக்கும் கட்சி மொத்த வாக்காளர்களில் 1/3 பங்கு ஆதரவைத்தான் கொண்டிருக்கும். ஏனையோர் இக்கட்சிதான் சிறந்த தெரிவு என்று கருதவில்லை என்பதை இது தெளிவாக்குகிறது.

இனி வரப்போகும் 6 வருட காலப்பகுதியில் இலங்கையின் தீர்மானம் எடுக்கக்கூடிய மக்க்ளில் 2/3 பங்கினர் ஆதரிக்காத அணி, ஆட்சியில் இருக்கப்போகிறது. இது எவ்வகையில் சனநாயகமாகும் என்பது தவிர்க்க முடியாத கேள்வியாகும்.

அத்துடன் இன்று இலங்கையில் பிரயோகிக்கப்படும் அரசியல் முறையில் 50% ஆன இலங்கை மக்கள் அதாவ்து 7 மில்லியனுக்கும் அதிகமானோர் நம்பிக்கையற்று இருக்கிறார்கள் என்றும் கருதப்படமுடிய்ம் என்பது மிக முக்கியமான அம்சம்.

இதை தவிர்த்து பார்த்தால்கூட இத்தேர்தலில் ஏதேனும் ஜனநாயக பண்புகள் இருந்தனவா என்ற கேள்விகள் இருக்கின்றன. இவற்றில் முதலாவது கவனிக்க வேண்டிய அம்சம், ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்று 2 ,மாதங்கள் மாத்திரம் கடந்துள்ள நிலமையில் இத்தேர்தல் நடைபெற்றமையாகும்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற காலப்பகுதிக்காக இன்னும் ஜனாதி அவர்கள் சத்தியப்பிரமாணம் செய்யாத நிலமையில் இன்னொரு தேர்தலை இலங்கை மக்கள் முகம்கொடுத்தனர். கடந்த தேர்தலில் தாம் எடுத்த முடிவு தொடர்பு தொடர்பாக சீர்தூக்கி பார்க்கவேனும் மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்காத அளவுக்கு இது மிக குறுகிய காலமாகும்.

எனவே இத்தேர்தலில் வெற்றி தோல்வி என்பவற்றை ஊகிக்க எவருக்கும் பெரிய அரசியல் ஞானம் தேவையில்லை. அப்படியாயின் மக்களின் பணத்தில் இவ்வளவு பாரிய செலவுசெய்து தேர்தலை வைப்பதன் அவசியம் என்ன என்ற கேள்விக்கு ஜனநாயக பொறுப்புள்ள பதில் இல்லை என்பது தெளிவு. அப்படியாயின் இத்தேர்தலை எவ்வாறு நாம் ஜனநாயகத்தின் அளவுகோலாக கொள்ளமுடியும்?

அதேவேளை இத்தேர்தல் தொடர்பான பிரசாரங்களின் போது இத்தேர்தலுக்குப்பின் இன்னும் 6 வருட காலங்களுக்கு தேர்தல்கள் இல்லை எனவும், இது இலங்கையை அபிவிருத்தி செய்ய உதவும் என்றும் சில அரச பிரதானிகள் முழங்கியுமிருக்கின்றனர். அப்படியாயின்

இந்நாட்டில் தேர்தல்களே இடம்பெறாவிட்டால் நாடு அபிவிருத்தியடையும் என்றோ

அல்லது

இந்நாட்டின் அபிவிருத்தியை தடுப்பது பொதுமக்கள் என்றோ

அல்லது

இனிவரும் 6 வருட காலப்பகுதியில் பொதுமக்களின் விருப்பத்திற்கு மாறான நிகழ்வுகளே இடம்பெறும் என்றோதான்

அர்த்தப்படுத்திக்கொள்ளமுடியும். இல்லாவிட்டால் மக்களில் ஆணையைப்பெற்ற ஒரு கட்சி ஏன் தேர்தலை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பயப்பட வேண்டும் என்ற நியாயமான கேள்வியெழுகிறது.

இது தொடர்பான உங்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. எனது இப்பதிவின் கருத்துக்களோடு நீங்களும் உடன்படுவீர்களாயின் இக்கருத்து உங்களைப்போன்ற இன்னும் பலரை சென்றடைய உங்கள் வாக்குகளை இப்பதிவுக்கு அளிக்க மறக்கவேண்டாம்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

சுனில் பெரேரா


இலங்கையின் பைலா இசை வடிவத்தில் மிகப்பிரபலமான கலைஞர் சுனில் பெரேரா. இவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக பல விமரிசனங்கள் இருந்தாலும், உண்மையை உண்மை என்று ஏற்றுக்கொள்ளக்கூடிய மனிதர். இவரது பாடல்கள் இலங்கையில் பல அரசியல்வாதிகளை எவ்வித சமரசமும் இன்றி விமர்சனம் செய்தவை. கலைஞன் சமூக பிரக்ஞையை எவ்வாறு வெளிப்படுத்தவேண்டும் என்பதற்கு சமகால உதாரணம் இவர்.

இலங்கையை பற்றி விமர்சிக்கும் இந்தப்பாடலை பாருங்கள்.


EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

ராஜபக்சவின் கனவு மெய்ப்பட இன்னும் 3 தினங்கள் (பாராளுமன்றத்தேர்தல் 2010 - 5)

தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றன. சட்ட விரோத சுவரொட்டிகளையும் தேர்தல் அலுவலகங்களையும் அகற்றுமாறு தேர்தல் ஆணையாளர் சொல்வதையெல்லாம் சூடான செய்திகளுக்கு பஞ்சம் இருக்கும் ஊடகங்கள் தலைப்புச்செய்தியில் சொல்கின்றன.

இந்த சட்ட விரோத என்ற சொற்றொடரைத்தான் சட்டவிரோதமாக்கவேண்டும். இதெல்லாம் part and parcel of lifeஎன்பதுபோல் மக்களாலும் அவர்தம் பிரதிநிதிகளாகப்போகப்போகும் அரசியல்வாதிகளாலும் கருதப்படும் சந்தர்ப்பத்தில் சட்டவிரோதம் என்ற சொல்லுக்கு ஏதாவது அர்த்தம் இருக்க முடியுமா?தெமட்டகொட குற்றத்தடுப்பு பிரிவிற்கு முன் (அருகருகே இரண்டு சோதனை சாவடி நிலையங்கள் வேறு) மக்களுக்கான நடைபாதையில் ஆளும் கட்சி வேட்பாளர் திலங்க சுமதிப்பாலவின் அலுவலகம் கற்களால் கட்டப்பட்டு நிரந்தர அலுவலகமாக காட்சி தருகிறது. மக்கள் நடைபாதையை விட்டு பாதையில் நடக்கிறார்கள். இந்த லட்சணத்தில் தூர இடங்களில் இருப்பவற்றையா அகற்றப்போகிறார்கள்?

(அந்த அலுவலகத்தை புகைப்படம் எடுத்து உங்களுக்கு காட்ட ஆசைதான். ஆனால் தேசதுரோக குற்றச்சாட்டில் கைதுசெய்து அல்கைதா தொடர்பிருக்கிறதா என்றெல்லாம் தேடவேண்டிய கஷ்டத்தை மிரிஹான பொலிஸுக்கு கொடுக்கும் விருப்பம் இல்லை.)

வெற்றிக்காக பலர் அடிபிடிப்படும் வேளையில், இந்த தேர்தலில் நிஜமான வெற்றி மஹிந்தவின் ராஜதந்திரத்திற்காக இருக்கும்.

இத்தேர்தலை ஜனாதிபதி அவர்கள் தன்து அரசுக்கு ஆதரவுவழங்கிக்கொண்டிருக்கும்;
 • த்னக்கு தலையிடியாக இருந்துகொண்டிருக்கும் சில பாராளுமன்ற உறுப்பினர்களையும்
 • தனிப்பட்ட ஆளுமைகளாக வளர்ந்து வரும் உறுப்பினர்களையும்
நசுக்குவதற்கான களமாக பயன்படுத்தபோகிறார்.

ஹெஜ்ஜிங் ஊழல் தொடர்பான விமரிசனங்கள் வந்தபோது ஜனாதிபதியின் கட்டளைகளையே தான் பின்பற்றியதாக உண்மைகளை போட்டுடைத்தவரும், முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசியல் லாபங்களுக்காக பிளவுபடும்போதெல்லாம் சேர்த்து வைப்பவருமாக இருக்கும் பௌசி இத்தேர்தலில் பெருமளவு மௌனமாக்கப்பட்டுள்மையும்

அர்ஜுனவுடன் பிரச்சினைப்பட்டுக்கொண்டிருந்த லொக்கு பண்டாரவையும், விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்றோரையும் விருப்பு வாக்குகளுக்காக சண்டையிடவேண்டிய நிலைக்கு தள்ளியிருப்பதும்

பைசர் முஸ்தபாவை ரவூப் ஹக்கீமுடன் மோதவிட்டிருப்பதும்
சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக சவூதி அரசாங்கத்தின் நிதியுதவில் தொடர்மாடித்தொகுதியை அமைத்த பேரியலை (இத்தொகுதி அரசின் பௌத்த தீவிரவாத கரமாக இயங்கும் சிஹல உறுமயவினால் மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது) வீரசேகரவுடன் மோதவிட்டிருப்பதும்

முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையான திகாமடுல்லயில் முஸ்லிம் காங்கிரஸ் தெளிவான 3 தெரிவுகளோடு இருக்கும்போது, அரசு சார்பாக பல முஸ்லிம்களை (முக்கியமாக அமைச்சர்களை) சண்டையிடச்செய்திருப்பதும்

கிழக்கு மாகாண சபைத்தேர்தலின்பின் முதலமைச்சர் பதவி கேட்டு குழப்படி செய்த ஹிஸ்புல்லாவை வெல்லமுடியாத மட்டக்களப்பு களத்தில் இறக்கியிருப்பதும்

என்பன இத்தந்திரத்தை தெளிவாக்குகின்றது.

இன்னும் ராஜபக்ச 2/3 பெரும்பான்மை பலத்தை பெறுவதற்கு ஆர்வம் காட்டுவதாக சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனால் இது வெறும் ஏமாற்றுத்தந்திரமே. 2/3 பெரும்பான்மையை பெறுவாரானால் தீர்வுத்திட்டமொன்றை முன்வைக்குமாறும், 2/3 பெரும்பான்மை இருக்கும் அரசாங்கத்திற்கு பாரியளவு சிறுபான்மையினருக்கு உரிமைகளை வழங்கமுடியும் என சர்வதேச நாடுகளால் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவார்.

எனவே வேறொரு கட்சியிலிருந்துகொண்டு தனக்கு தேவையானபோது மாத்திரம் 2/3 பெரும்பான்மையை வழங்கக்கூடிய ஒரு குழுவே அவருக்கு தேவை. இவ்விலக்கும் இத்தேர்தலில் இலகுவாக நிறைவேறும்.

இன்னும் 2/3 பெரும்பான்மைக்காக முயல்வதாக காட்டிக்கொள்வதன்மூலம் பிரதான எதிர்க்கட்சி பலமற்றது என்றும், கடந்த தேர்தலில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் பற்றிய கூப்பாடுகள்; கட்டுக்கதை என்றும் இலகுவாக மக்களை நம்பவைக்க முடிகிறது. அத்துடன் எதிர்க்கட்சிகளை Attacking mode இலிருந்து defense modeக்கும் இது மாறச்செய்துள்ளது.

விருப்பு வாக்கு முறைமையின் கீழ் நடைபெறும் கடைசிதேர்தல் இதுவென்றும் கூறுகிறார். ஆனால் தொகுதிவாரி முறையை அமுல்படுத்துவதன்மூலம் தொகுதிப்பங்கீடு தலையிடியை ஏற்படுத்திக்கொள்ள அவர் முயல மாட்டார் என்றே தோன்றுகிறது.

உங்கள் பிள்ளைகளுக்காக இத்தேர்தலில் வாக்களியுங்கள் என எல்லாமேடையிலும் கூறிவரும் மஹிந்தவின் இன்னொரு கனவான, தனது மகனான நாமல் ராஜபக்சவுக்கு பலமான அடித்தளத்தையும் வெற்றிகரமான் ஆரம்பத்தையும் தரும் திட்டமும் மிக இலகுவாக நிறைவேறப்போகிறது.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

இலங்கை விமானப்படையின் பொதுமக்கள் பயண சேவை

கடந்த பதிவில் யுத்தத்தின் பின்னான காலப்பகுதியில் உல்லாசப்பிரயாணிகள் பயன்படுத்தக்கூடிய கடற்படை கப்பல் சேவை பற்றி பார்த்தோம். இப்பதிவில் சாதாரண பொதுமக்களால் பயன்படுத்தப்படக்கூடிய விமானப்படையின் விமான சேவைகள் பற்றி பார்ப்போம்.


விமானப்படை
விமானப்படை திருகோணமலையின் சீனன்குடா பிரதேசத்திற்கும், யாழ்ப்பாணத்தின் பலாலிக்கும் விமான சேவையினை ஞாயிறு தவிர்ந்த அனைத்து நாட்களிலும் வழங்குகின்றது.

பலாலிக்கான சேவை காலை 8 மணிக்கு கொழும்பு - ரத்மலானை விமான நிலையத்தில் ஆரம்பிக்கிறது. பலாலியிலிருந்து கொழும்புக்கு பி.ப. 4 மணிக்கு திரும்பும். இதற்கு ஒரு வழி கட்டணமாக 9,550/- அறவிடப்படுகிறது.

திருகோணமலைகான சேவை மு.ப.8 மணிக்கும் திருகோணமலையிலிருந்து கொழும்புக்கான சேவை பி.ப. 2 மணிக்கும் இருக்கிறது. இச்சேவைக்கு நீங்கள் செலுத்த வேண்டியது 4,100/- மட்டுமேயாகும்

திருகோணமலைக்கான சேவையை யார்வேண்டுமானாலும் பயன்படுத்த முடியுமாக இருக்கின்றபோதும், பலாலிக்கு பயணிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் கிளியரன்ஸ் அவசியமாகும்.

விமானத்தில் விமானப்படை அதிகார்களுடன் பயணிப்பது ஒரு வித்தியாசமான அனுபவமாகும்.

திருகோணமைக்கான பயணம் 40 நிமிடம் எடுக்கிறது. விமானம் அதிக உயரத்தில் பறக்காமல் இருப்பது இலங்கையின் இயற்கை அழகினை ரசிப்பதற்கு சிறந்ததாக அமைகிறது.

இவ்விமான சேவைக்கான பயணச்சீட்டுக்களை சின்னமன் லேக்சைட் ஹோட்டலுக்கு முன் அமைந்துள்ள விமானப்படை தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். வெறும் அரை மணி நேரத்தில் பயணச்சீட்டு உங்கள் கைக்கு கிடைக்கும்.
படங்கள் http://indi.ca/2010/04/flying-to-trinco-with-the-air-force/

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

இலங்கை கடற்படையின் உல்லாசப்பிரயாணிகள் சேவை

யுத்தத்தின் பின்னான தற்போதைய காலப்பகுதியில், இலங்கை இராணுவமும் யுத்தமற்ற சூழலில் சில பொதுமக்கள் சேவைகளை ஆரம்பித்துள்ளன.

உலகின் மிக சில நாடுகளே இவ்வாறான பொதுமக்கள் சேவையினை தனது இராணுவத்தை பயன்படுத்தி வழங்குகின்றது என்பதால் இச்சேவைகளை பயன்படுத்துவது வித்தியாசமான அனுபவமாகும்.
இலங்கை இராணுவத்தின் கடற்படையும் விமானப்படையும் உல்லாச பிரயாணிகளை நோக்காக கொண்ட பயணிகள் சேவையினை வழங்கிவருகின்றன.

கடற்படை
What better way to start your evening than with a sunset cruise aboard the Jetliner which is Sri Lanka Navy’s largest passenger craft. Those who live here will attest to the magnificent sunsets in Sri Lanka with colors that would dazzle an artist and scenery that will leave you speechless. Arguably the best way to view these sunsets is on a Sri Lankan cruise. The Sri Lankan Cruise experience aboard the luxurious Jetliner is well equipped with a huge variety of options for you to take in the wonders of a Sri Lankan Sunset Cruise.

இலங்கை கடற்படையின் படகுகள் வாகன நெரிசல் மிக்க கொழும்பின் நகர்ப்பகுதியில் இலவசமான அலுவலக நேர சேவைகளை கொழும்பின் கால்வாய்களினூடாக வழங்கிவருகின்றது.
யுத்த காலப்பகுதியில் பொதுமக்களையும் துருப்பினரையும் காவுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஜெட்லைனர் கப்பல், இப்போது உல்லாசபிரயாண சேவையிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இச்சேவை ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டது. மாதமொன்றுக்கு நான்கு சேவைகளுக்கான தேவை இருக்குமென கணிப்பிடபட்ட போதிலும், இம்மாதம் மட்டும் 11 நிகழ்வுகள் பதிவுசெய்யப்பட்டிருப்பது இச்சேவைக்கு கிடைத்த வரவேற்பை காட்டுகிறது.
இந்த பல அடுக்கு கப்பல் இப்போது கொழும்பின் பெட்டா (Pettah)மணிக்கூட்டு கோபுரத்தை அண்டிய துறைமுகப்பகுதியிலிருந்து பொதுமக்கள் சேவையினை ஆரம்பிக்கிறது.

கடற்படையின் Band வாத்தியக்குழுவின் இசையும் கலாச்சார நிகழ்வுகளும் அருமையான மாலைநேரத்தை அனுபவிக்க உதவிடும். இன்னும் உணவு வசதியும் மதுபானச்சாலைவும் உண்டு.

இது கடற்படை கப்பலாக இருப்பதால் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களிலிருந்து கிளியரன்ஸ் clearance பெறும் தொல்லை எதுவுமில்லை.

3 1/2 மணித்தியாலம் துறைமுகத்திலும் 90 நிமிடம் கடலிலுமாக அமையும் இப்பயணத்திற்கு இக்கப்பலை வாடகைக்கு அமர்த்த 404,726.50 தேவை. இதனடிப்படையில் 350 பேர் கொண்ட உல்லாசப்பயணிகள் குழுவுக்கு தலைக்கு 1,156.37 செலவாகும்.

இலங்கையின் பெரிய வர்த்தக நிறுவனங்களும் வெளிநாட்டு நிறுவனங்களும் இச்சேவையினை தற்போது பயன்படுத்தி வருகின்றன.

இலங்கை விமானப்படையின் சேவைகள் அடுத்த பதிவில்


EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

சிதறல்களின் விஷமப்பதிவு


சிதறல்கள் வலைப்பூவில் அண்மையில் எமது ஊரை கொச்சைப்படுத்தாதீர்கள் என்ற தலைப்பில் ஒரு பதிவு வந்திருந்தது. தேற்றாத்தீவு பிரதேச அரசியலில் முஸ்லிம் அரசியல்வாதிகளை ஓரம்கட்டும் நோக்கத்துடன் இப்பதிவு எழுதப்பட்டிருந்தது.

இனவாரியாகத்தான் தங்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யவேண்டும் என்ற வாதம் இப்பதிவு முழுவதும் விரவி நிற்கின்றது. சமகாலத்தில் சில பிரச்சினைகளை வேற்று மதத்தவர்கள் அணுகும் விதம் பிரச்சினையை முகம்கொடுப்பவர்கள் பிரச்சினையை நோக்கும் விதத்திலும் பாரியளவு வித்தியாசப்பட்டிருப்பதால் (உ-ம் வணக்கம்), இவ்வாறான கோரிக்கை நியாயமற்றதாக கொள்ளப்படமுடியாது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்துகள் இல்லை.

இருந்தபோதும் எந்தவொரு தேர்தலிலும் நம்மால் எமது "உதாரண புருஷ" பிரதிநிதிக்கு வாக்களிக்க முடிவதில்லை. எம்முன்னே இருக்கும் தெரிவுகளில் சாத்தியமான யதார்த்தமான தெரிவையே மேற்கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம். வெற்றி பெற வாய்ப்பே இல்லாத ஒரு சுயேட்சை "அப்பளுக்கற்ற அரசியலுக்காக" களம் இறங்கியிருக்கலாம். தலை சிறந்த பண்புகளை கொண்டவர்களாக அவர்களின் வேட்பாளர்கள் இருக்கலாம். இருந்தாலும் "சாத்தியமான" என்ற அம்சத்தை கருத்தில் கொண்டு நாம் வெல்லக்கூடிய ஒருவருக்கே வாக்களிக்க வேண்டும். வெல்லக்கூடியவர்களில் ஒப்பீட்டுரீதியில் அவ்வளவு கெட்டவன் இல்லாத ஒருவரே யதார்த்த தெரிவாகும்.
இவையெல்லாம் தாண்டி நான் குறிப்பிட்ட வலைப்பதிவில் தடித்த எழுத்துக்களில் ஒரு விடயம் இருக்கிறது.

கவனம் உறவுகளே! கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயம் "அல்லாவினால் கட்டப்படும்் கோயில் எண்டு பின்னர் வரலாறு எழுத்தப்படுமோ தெரியல்ல...

என்பதே அது. இதில் அல்லாவினால் என்ற சொற்பிரயோகம் முன்னர் ரசூலுல்லா என்றிருந்தது! இது தொடர்பாக எனது கண்டனத்தை பதிவு செய்தபின் அது அல்லாவினால் என்ற சொல்லினால் பிரதியீடு செய்யப்பட்டுள்ளது.

சொல் மாறியபோதும், அதன் தொனி மாறவில்லை என்பதே இதற்காக ஒரு பதிவு எழுதும் நிலைக்கு என்னை தள்ளியது. இன்னும் அவ்வசனம் தடித்த எழுத்துக்களில் இருப்பது பதிவரின் உண்மையான நோக்கத்தையும் வெட்ட வெளிச்சமாக்குகிறது.

முஸ்லிம்கள் அல்லாஹ் என்றே பிரயோகிப்பர் என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளக்கூடிய் விடயம். அல்லாஹ் என்ற சொல் கூட தெரியாத ஒரு நிலையில் இப்பதிவர் முஸ்லிம்களை பற்றி அறியாது ஒரு விஷம கருத்தை பதிவிட்டுள்ளார் என்பது இங்கு தெள்ளத்தெளிவாக நிரூபணம் ஆகிறது.

முஸ்லிம்கள் இந்துக்கோயில்களுக்கு உரிமை கூறியதாக ஆதாரம் எதுவுமில்லை. வேண்டுமானால் பாபரி மஸ்ஜித் போன்ற முஸ்லிம் பள்ளிவாசல் இடித்து கோவிலாக மாற்றப்பட்டிருக்கலாம். (பாபரி மஸ்ஜித் கோவிலை இடித்து கட்டப்பட்டது என்ற இந்துத்துவா வாதம் எவ்வித அடிப்படையும் அற்றது என்பதும் நிரூபணம் அற்றது என்பதும் முஸ்லிம் அல்லாதவர்களாலேயே தெளிவாக்கப்பட்டிருக்கிறது)

மட்டக்களப்பு பிரதேசத்தில் இன முறுகல்கள் புதிய விடயம் இல்லாவிடினும் (காண்க ) இரு சமூகங்களும் ஒருவரை ஒருவர் பகைத்து வாழமுடியாது என்ற யதார்த்தம் பொதுமக்களால் நன்கு உணரப்பட்டுள்ளதால் பல பிரச்சினைகள் மத அமைப்புகளினூடாக பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில் இவ்வலைப்பதிவு இப்பிரச்சினைகளுக்கெல்லாம் இதுவரை இருந்திராத புது பரிமாணம் கொடுக்க கூடும்.

அதேவேளை இவ்வாறான விஷயங்களில் சக பதிவர்கள் தலையிட்டு (குறிப்பாக முஸ்லிம் அல்லாதவர்கள்) இவ்வாறான விஷமத்தனங்களை தடுக்காது இருப்பது மிகுந்த வேதனையையும் நம்பிக்கையீனத்தையும் சந்தேகத்தையும் தருகிறது.

நீங்கள் எல்லாம் சிதறல்கள் பதிவருக்கு சொல்ல வேண்டிய ஒரு விடயம்

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் அவசியமெனில், அதைபற்றி மட்டும் எழுதுங்கள். "அல்லாவினால் கட்டப்படும்் கோயில் எண்டு" என்றெல்லாம் விஷம பிரச்சாரம் வேண்டாம் என்பதே.

(ஒரு சிலர் என்னுடைய பதிவில் இடம்பெற்ற இனமுறுகல்களை சுட்டிக்காட்டிய பதிவுகளை காட்டி எதிர்வாதம் செய்யலாம். அவர்களுக்கு சொல்ல இருப்பது "நான் எழுதியிருப்பதெல்லாம் ஆதாரபூர்வமான, சமகால, ஆவணப்படுத்தப்பட்ட விடயங்கள் என்பதே)

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்