Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

கந்துல - இராணுவ யானையின் கதை

நீங்கள் இலங்கையின் சுதந்திர தின அணிவகுப்பை பார்த்திருக்கிறீர்களா? பார்த்திருந்தால் நிச்சயமாக ஒரு இராணுவ யானை மேள சத்தத்துக்கேற்ப கம்பீரமாக அணிவகுத்துவருவதையும் தன் தும்பிக்கையை உயர்த்தி தளபதிகளுக்கு மரியாதை செய்வதையும் மறந்திருக்க மாட்டீர்கள்.


கடந்த ஜூன் 3ஆம் திகதி நடைபெற்ற "இராணுவ வெற்றி" அணிவகுப்பில் இந்த யானை கலந்து கொள்ளவில்லை! காரணம் இந்த இராணுவ யானை எல்லா இராணுவ வீரனையும் போல் ஓய்வுபெற்றமையே! ஆனால் வித்தியாசம் அது முதிர்ச்சியால் ஓய்வு பெறவில்லை. பருவ வயதை தன் 12 வயதில் அடைந்தமையே!


யானை பருவ வயதை அடைந்ததும் அதை கட்டுப்படுத்துவது கஷ்டமாகலாம். அதுவும் இதற்கான யானை எப்போதும் ஆணாகவே இருக்கவேண்டுமென்பதால் குறிப்பிட்ட காலப்பகுதியில் அது அபாயமானதாகவும் மாறக்கூடும். எனவேதான் எப்போதும் குறிப்பிட்ட வயதை அடைந்ததும் பழைய யானைக்கு ஓய்வு வழங்கப்பட்டு புதிய யானை குட்டி பயிற்றுவிக்கப்படுகிறது.


இராணுவ யானை Light Infantry Regimentஇன் mascot ஆக 1961 முதல் இருந்து வருகிறது. இதற்காக தேர்வுசெய்யப்படும் யானை எப்போதும் கந்துல என்றே பெயரிடப்படும். கந்துல என்பது துட்டகெமுனு மன்னனின் அரச யானையாகும். இந்த யானை இலங்கையின் இறைமையை பாதுகாக்க மன்னனுடன் பல போர்களில் பங்குபற்றியிருதது. இந்த யானையை நினைபடுத்தும் விதமாகவும் கௌரவிக்குமுகமாகவுமே கந்துல என்று பெயரிடப்படுகிறது.


கந்துலVI அதன் 7 வருட சேவையை பூர்த்தி செய்ததாக பானாகொடை இராணுவ தளத்தில் கடந்த மே 20 இல் நடைபெற்ற விசேட ராணுவ மரியாதை அணிவகுப்புடன் ஓய்வு பெற்றது. இவ்வைபவத்தில் 100 இராணுவ வீரர்கள் பங்கு பெற்றார்கள். இந்த யானையை ஒரு இராணுவ வீரனாகவே பார்ப்பதாக அதன் பொறுப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல் ஜகத் கொடித்துவக்கு தெரிவித்தார்.


தன் 7 வருட சேவைக்காலத்தில் பல அணிவகுப்புகளில் பங்குபெற்றிய கந்துலIV 2006 இல் இலங்கையில் நடைபெற்ற SAF போட்டிகளுக்கான சுடரை ஏந்தும் பாக்கியத்தை பெற்றமை சிறப்பம்சமே.


தன் ஓய்வு பெறும் நாளில் கந்துலIV சக இராணுவ வீரர்களுடன் அணிவகுத்துச்சென்றது. லெப்டினன்ட் கேர்ணல் ஜகத் கொடித்துவக்கு ஓய்வு பெறும் பிரியாவிடை அறிவித்தலை வாசித்தார். இது அதிகார பூர்வமாக இராணுவ கடமையில் இருந்து விலகுவதை குறிக்கிறது. இதன் பின் இராணுவ மரியாதையை ஏற்றுக்கொள்ளும் விதமாக தான் பழக்கப்பட்டது போலவே மெதுவாக நடந்தவாறு சீருடை அணிந்த இராணுவ வீரர்களை கடைசித்தடவையாக பார்வையிட்டது.


இதன் அடுத்த அங்கமாக தன் இடத்திற்கு வந்திருக்கும் புதிய யானையிடம் தும்பிக்கை மூலமாக தன் கடமைகளை கையளித்து தன் இடத்தில் இருந்து விலக கந்துலVII அதன் இடத்தில் வந்து நின்று கொண்டது.

கந்துலVI பிளிறியது கந்துலVII க்கு GOOD LUCK சொன்னது போல் இருந்தது.


இதன் பின் கந்துலIV அதன் வீடான பின்னவல யானைகள் சரணாலயத்துக்கு கொண்டுசெல்வதற்காக் lorry இல் ஏற்றுவது இலகுவான காரியமாக இருக்கவில்லை. என்ன இருந்தாலும் 7 வருடங்களாக தான் வாழ்ந்த இடத்தில் இருந்து பிரிய யாருக்குத்தான் மனம் வரும்? இருந்தாலும் பின்னவல யானைகள் சரணாலயத்தில் மிகப்பெரிய வரவேற்புடன் தன் தாய் தந்தையான சுகுமாலி - நீலா தம்பதிகளுடன் சேர்ந்துகொண்டது.


புதிய யானைக்குட்டி கெமுனு இனி கந்துலVII ஆக அழைக்கப்படும்.


கந்துல தேர்ந்தெடுத்தல்

இந்த தேர்வு நிறைய சட்ட திட்டங்களையும் ஆவணப்படுத்தலையும் கொண்டது. தேசிய மிருக காட்ட்சியகத்துக்கும் ராணுவத்டுக்கும் இடையில் நடைபெறும் பரிமாற்றத்தில் அமைச்சரவை அங்கீகாரம் மிக முக்கியமானதாகும்.

இதன் பின் பால்குடி மறந்த தேகாரோக்கியம் உள்ள ஆண் யானைக்குட்டி தேர்ந்தெடுக்கப்படும். இந்த யானையின் உரிமை எப்போதும் தேசிய மிருக காட்சியகத்துக்கு உரியதாகும். அதன் மிருக வைத்தியர்கள் கந்துலவை சீரான இடைவெளிகளில் பரிசோதித்து இராணுவத்திற்கு ஆலோசனை வழங்குவார்கள். இதன் பின் பின்னவலவிலேயே பயிற்சி ஆரம்பமாகிவிடும். கெமுனு இராணுவ ஒழுக்கத்தையும் அணிவகுத்தலையும் இதன் போதே கற்றுக்கொண்டது. இதற்கு பானாகொடை இராணுவ தளத்தில் எல்லா இராணுவ வீரனையும் போல நேர சூசிக்கு இயங்க பழக்கப்படுகிறது. வெயிலில் அதிக சத்தம் மிக்க வைபவங்களில் அணிவகுப்பது ஒன்றும் இலகுவான காரியம் இல்லை.


பண்டைய காலத்தில் இருந்து யானைகள் இலங்கையின் இராணுவத்தில் முக்கிய அங்கமாக இருந்து வந்திருக்கிறது. கந்துல மூலம் இந்த பாரம்பரியம் நினைவூட்டப்படுகிறது.


இது The Sunday Times இல் 21.06.2009 ஆம் திகதி வெளிவந்த மாலக் ரொட்ரிகோ எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவமாகும் .

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

சார்கோசியின் மனைவியின் புகைப்படம்


இன்று காலையில் "பிரான்ஸ் இல முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் ஆடை தொடர்பாக ஆராய பிரான்ஸ் ஜனாதிபதி சர்கோசி ஒரு குழுவை நியமித்திருப்பதாக " செய்தி ஒன்றை கேட்டேன்.

அவ்வளவு தூரம் பெண்கள் விடுதி பற்றி சிந்திக்கும் சார்கோசியின் குடும்ப புகைப்படங்களை தேடிப்பார்த்தால் கிடைத்த படங்கள் இவை.. மேலதிக படங்களுக்கு Google இல் தேடிப்பார்க்கவும்.

சார்கோசி யின் மனைவியின் நிர்வாண புகைப்படம் 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் இல் எதிர்பார்ப்பை விட 60 மடங்கு விலைக்கு ஏலத்தில் விற்கப்பட்டது .

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

காலத்தை வென்ற Cartoonகள்

நேற்று இரவு யதேச்சையாக என் pen driveஇல் சேமிக்கபட்டிருந்த படங்களை பார்த்த்போது 2007இல் நான் save பண்ணி வைத்திருந்த 8 cartoonகளை காண நேரிட்டது. 2009இல் இவை புது அவதாரம் கருத்து ரீதியாக எடுத்திருப்பதாக நான் உணர்ந்ததால்உங்களுடன் பகிர்கிறேன். இந்த cartoonகள் ஜெfப்ரி, கிஹான் டி சிக்கேரா, அவந்த ஆட்டிகல ஆகியோரால் வரையப்பட்டவை.c
EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

வித்தியாசமான நிகழ்வுகளின் Photoக்கள்

இந்த வாரம் நான் சந்தித்த சில வித்தியாசமான நிகழ்வுகளின் Photoக்கள்

கடந்த செவ்வாய் கிழைமை திகதியை பார்த்தால் இப்படி ஒரு அதிர்ச்சிஅன்றிரவு Cricinfoஇல் score பார்த்தால் New Zealand இன் எல்லா wicketகளும் வீழ்ந்த பின்னும் வெற்றி பெற இன்னும் 49 runகள் தேவை என்றது
BIG or small, Ceylinco protects them all என்பது Ceylinco இன் பிரபலமான விளம்பர வாசகம். அதன் குழும நிறுவனம் ஒன்றில் நடந்த மோசடி காரணமாக கைது செய்யப்பட்ட நிறுவன தலைவர் கொத்தலாவல நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது ..


EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

தேன் தமிழின் வித்தியாசமான சட்டங்கள் : என் கேள்விகளும் comments உம்


தேன் தமிழ் இல் வித்தியாசமான சட்டங்கள் ; விபரீதமான சம்பிரதாயங்கள்...! என்ற பெயரில் ஒரு பதிவு வந்திருந்தது.. அதுக்கு comments போடுவதைவிட பதிவாகவே போடலாம் என்று இந்த முயற்சி..

தேன் தமிழ் அந்த சட்டங்களுக்கு காரணத்தையும் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.. அவர் சொன்னதில் ஏதாவது புருடா இருந்தால் அவரிடம் கேட்டுக்கொள்ளவும்.

//பால்டிங் நகரில் குரைக்கும்நாயை அடக்க சட்டப்படிபோலிஸ்காரர் நாயைஅடிக்கலாம்.//
அடிச்சா நிறுத்துமா?

//கோர்ர்ன் ஐஸ்கிரிமை சட்டைப் பையில் கொண்டு செல்வது தடை செய்யப்படடுள்ளது.//
முதலில் அதை எப்படி சட்டை பையில் கொண்டுசெல்வது என்று சொல்லுங்கப்பா

//கன்னிப் பெண்கள் ஞாயிற்று கிழமைகளில் பரசூடிலிருந்து குதிப்பது சட்ட விரோதமானது//
எப்படி தெரியுமாம்?

//ஒரு பெண் ஆணின் படத்துக்குஎதிரே ஆடைகளை களைவது சட்டவிரோய்தமானது .//
ஆணுக்கு முன் முடியுமா?

//பெண் மேலாடை இல்லாமல்இருப்பது சட்ட விரோதமானதாகும். ஆனால் மீன் அங்காடியில் உள்ளபெண்களுக்கு மட்டும் விதிவிலக்கு.//
மீனுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்? liver pool fish market என்று google இல் தேடினால் அப்படி ஒரு படமும் வரவில்லையே? புருடாவா இருக்குமோ?

//இரயில் பாதையில் இரண்டு இரயில்கள் சந்தித்தால்இரண்டும் நின்று, பிறகு புறப்பட்டு செல்லும் .//
எங்க நாட்டுலையும் அப்படிதான்.. நிற்கும் accident ஆகி

//இங்கிலாந்தில் பாராளுமன்றத்தில் இறப்பது சட்ட விரோதமானது.//
மரணத்துக்கு சட்டம் போட்ட புத்திசாலி யாருங்க?

இஸ்ரேல் சட்டங்களை (மூக்கை குடைவது , முட்டையிடுவது) கேட்கும் போது ஐன்ஸ்டீன் இருந்த தேசத்திலையா என்று கேட்க தோணுது..

//மக்கள் உள்ளாடை இல்லாமல் வெளியே செல்வது சட்டவிரோதமானதாகும்.//
எப்படி check பண்ணுவாங்க?

மீண்டும் சொல்கிறேன் தேன் தமிழ் சொன்னதில் ஏதாவது புருடா இருந்தால் அவரிடம் கேட்டுக்கொள்ளவும்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

லோசனுடன் ஒரு shopping அனுபவம்


கடந்த புதன் கிழமை அர்த்த ராத்திரி 1மணிக்கு என் phone, ring ஆனது . யார்ரா இது இந்த நேரத்தில் call எடுக்கிறது என்று அலுத்துக்கொண்டு phoneஐ எடுத்து பார்த்தால் அட நம்ம லோசன்! என்னடா இது இந்த நேரத்தில் இந்த மனுஷன் call எடுக்குது? ஏதாவது breaking news கிடைத்து அதை எனக்கு சொல்ல போகிறாரோ என்று ஆர்வத்துடன் எடுத்தேன்

ஹலோ... லோசன் பேசுறேன். Good Evening

Good Morning சொல்லுங்க. என்ன விஷயம் சொல்லுங்க அண்ணா

இல்ல்ல்ல தூக்கமா?
(தெரிஞ்சிகிட்டு கேக்கிறாரா தெரியாம கேக்கிறாரா)

இல்ல அண்ணா தூக்கம் இல்ல. சொல்லுங்க

நாளைக்கு என்ன Plan
(அடப்பாவி plan கேக்கிற நேரமா இது )

இதுவரைக்கும் ஒண்ணும் இல்ல. என்ன விஷயம்

நாளைக்கு பின்னேரம் shopping போகணும் நீங்களும் வாறீங்களா?

பிரச்சினை இல்ல அண்ணா வாரேன். எங்க வர?

Town Hall க்கு பக்கத்தில இருக்கிற Odelக்கு

எத்தன மணிக்கு

சரியா 5.30க்கு

சரிண்ணா.

அப்ப சரி நளைக்கு பேசுவம். இப்ப தூங்குங்க. Good night

இப்பவும் Good Morning தான் சொல்லணும்.

நான் கடைசி வசனத்தை முடிப்பதற்குள் call ஆகி விட்டிருந்தது

அதுக்கப்புறம்

1.30 வரைக்கும் ஏன் இந்த நேரம் இந்த மனுஷனுக்கு shopping idea வந்தது என்று யோசித்த்தேன்

அதுக்கப்புரறம் 2.00 மணி வரைக்கும் எதுக்கு என்ன கூப்பிடுது என்று யோசித்த்தேன்

2.30 மணி வரைக்கும் என்ன வாங்கவா இருக்கும் என்று யோசித்த்தேன்

3.00 மணி வரைக்கும் எனக்கும் ஏதாவது வாங்கி தந்து birthday க்கு கொடுக்காத குறையை தீர்ப்பாரா என்று யோசித்த்தேன்

அதுக்கப்புறம் தூங்கினேன் என்று நம்புகிறேன்

அடுத்த நாள் 5 முறை லோசன் call எடுத்தார்.
எல்லாவற்றின் சாராம்சமும் வாரீங்கதானே என்றுதான் இருந்தது

5.20 க்கு நான் Odel ஐ அடைந்த போது லோசன் வந்திருந்தார்.

என்ன late?

?!?!?!?!

என்ன வாங்க அண்ணா?

T shirt வாங்க

யாருக்க்கு?

எனக்குத்தான்

என்ன விஷேஷம்? திடீரென்று?

ஒண்ணும் இல்ல சும்மா தான்

பிறகு நேரே ஆண்களுக்கான் ஆடைகள் இருக்கும் இடம் சென்றோம். ஏதோ ஒரு Brand இன் பெயரை சொல்லி கேட்டார். Sales staff காட்டிய பக்கம் சென்று மும்முரமாக t shirt தேடினார். அது ஆண்கள் பிரிவாக இருந்தாலும் அதிகளவு குட்டீஸ். அவங்க Boy friendக்கு ஏதாவது வாங்க வந்திருப்பாங்க போல. நான் நிம்மதியா குதிரைகளை நேட்டம் விட்டு கொண்டிருந்தேன். லோசனும் குட்டிகளை பார்த்து குறும்பாக சிரித்ததும் தெரிந்தது.

*1
5 நிமிடத்தில் ஒரு t shirtஐ தேர்ந்தெடுத்த லோஷன் புன்னகையுடன் fit on roomக்கு சென்றார். வெளியில் வரும்போது வெற்றிப்புன்ன்கையுடன் நிமிர்ந்த தோளும் ஏறு நடையுமாக வந்தார்.

எப்படி இருக்கு

கொஞ்சம் சத்தமாகவே கேட்டார் சத்தத்தில் disturb ஆன குட்டிகள் எங்கள் பக்கம் பார்த்து விட்டு ஓரிரு வினாடிகளில் மீண்டும் தங்கள் வேலையில் மும்முரமானார்கள்.

நல்லா இருக்கு


லோசனின் முகம் வாடியிருந்தது. அவர் குட்டிகளையே பார்த்து கொண்டிருந்தது அவர் உண்மயில் என் கருத்தை கேட்கவில்லை என்று புரிந்தது.


குட்டிகள் யாரும் கவனிக்காததால் t shirt இல் திருப்தி அடையாமல்


*போட்டு தடித்த எழுத்தில் இருப்பதை 3 முறை வாசிக்கவும்.

மூன்றாவது முறையும் குட்டீஸ் கவனிக்காததால் கடுப்பாகி போன லோஷன் Sales Boyஐ அழைத்தார்.

இது originalஆ?

ஆமா சார். Original தான் நல்லா பாவிக்கும்.

இல்ல.. பொய் சொல்ல வேணாம். நான் யார் என்று தெரியும்தானே? நுகர்வோர் அதிகார சபைக்கு complain பண்ண வேண்டி வரும்

இல்ல சார் original தான்

இப்ப TVல advertismentபோற Rebornஇதா?

ஆமா சார்

Advertismentல இந்த T shirtட போட்ட்தும் பொண்ணுங்க எல்லாம் ஓடி வந்து கட்டி பிடிப்பாங்க

அதுக்கு?

அப்படி ஒண்ணையும் காணல்லியே

Sales Boy முறைத்தவனாக லோசனை பார்க்கும் சமயம்

என் கால்கள் Odel ஐ விட்டு வெளியே வந்திருந்தன..

குறிப்பு: அதுக்கப்புறம் என்ன ஆனது என்று எனக்கு தெரியவில்லை. அதற்காக என்ன யாரும் சக்கரக்கட்டி இல் சொல்வது போல் நண்பத்துரோகி என்று சொல்ல வேண்டாம். அவருக்கு என்ன ஆகியது என்று அறியவே இந்த பதிவு. லோசன் அண்ணாவாவது வந்து பின்னூட்டத்துல மிச்சத்த சொல்லிட்டு போங்க

நீதி : முந்த நாள் செய்தது இன்று விளையும்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

BBC RADIO விற்பனைக்குஉலகெங்கும் வாழும் தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் தெரிந்த வானொலி எது? சந்தேகம் இல்லாமல் BBC தான்.

நாம் அனைவரும் கொஞ்சம் கொஞ்சம் ஆக உலக நடப்புகளின் மீது ஈடுபாடு காட்ட ஆரம்பிக்கும் போது எம்மை அறியாமலே நம் வாழ்க்கையில் BBC இடம்பிடிக்கிறது. எந்த ஒரு செய்தியையும் நிகழ்வையும் இலகு தமிழில் எழிதாய் புரியும்படி தேவையற்ற இழுவைகள் இல்லாமல் தருவதில் முன்னணி எப்போதும் BBCக்கே.

எந்த நாட்டவரை விடவும் இலங்கையருக்கும் BBCக்குமான உறவு மிக வலிது. பின்னிப்பிணைந்தது. யுத்த நாடொன்றில் பிறந்த எமக்கு உண்மை செய்தி சொல்ல எங்கோ ஒரு கோடியில் இருக்கும் BBC தான் துணை.

BBC பிடிப்பது (அதுதாங்க TUNE பண்ணுதல்) ஒரு விஷேட திறமையாகவும் கருதப்பட்ட காலமும் இருந்தது. யுத்த சூழலில் அடிக்கடி TRANSFORMERகள் மின் கம்பங்கள் தகர்க்கப்பட்ட இருண்ட யுகத்தில் BATTERRY போட்டு கேட்டு ஊருக்கே செய்தி சொல்லி பிரபலமான மனிதர்களும் உண்டு.
அத்துடன் எப்போதும் தெளிவில்லாமலும் தெரியாத ஒலிகளுடன் சேர்ந்ததாகவே BBC வரும். அதில் வரும் செய்தியை மாத்திரம் கவனித்து கிரகிப்பது கூட கஷ்டமானதாக இருந்த போதும் ஒருபோது BBC எம் வாழ்க்கையை விட்டு விலகிவிடவில்லை.

சில வருடங்களுக்கு முன் இலங்கை வானொலியின் தமிழ் தேசிய சேவை (SLBC) FM அலைவரிசையில் BBC ஐ ஒலிபரப்பும் வாய்ய்ப்பை பெற்றது. இது தெள்ளத்தெளிவாக BBC கேட்கும் வாய்ப்பை / சுகானுபவத்தை இலங்கை மக்களுக்கு வழங்கியது.

இருந்தும் இவ்வருடம் SLBCக்கு இருந்த மீழ் ஒலிபரப்பும் உரிமையை BBC ரத்துசெய்தது. சில நாட்கள் சோகமாக கழிந்தது. கடந்த சில வருடங்களில் நம்மில் பலர் வீட்டில் இருந்த பழைய RADIOக்கள் VRS வாங்க; அந்த இடத்தை MOBILE PHONEகள் பிடித்துகொண்டன. என்னதான் வசதிகள் இருந்தாலும் இந்த MOBILE PHONEகளில் BBC பிடிக்க வசதி இல்லை. எனவே நான், BBC கேட்பதற்காக முதலாம் இரண்டாம் குறுக்கு தெரு முழுக்க தேடி ஒரு RADIO வாங்கினேன். வீட்டுக்கு RADIOஐ கொண்டுபோனதும் வீடெங்கும் வெகுநாளுக்கு பின் நெருங்கிய உறவினரை கண்டது போல் சந்தோஷம். மீண்டும் இரைச்சலுடனும் விநோத சத்தங்களுடனும் எங்கள் வாழ்க்கையில் BBC இணைந்துகொண்டது. இந்த புதிய RADIO எங்கள் வீட்டில் BBC RADIO என்று அழைக்கப்படலாயிற்று.

இப்போது சில நாட்களாக BBC கேட்டுத்தான் தெரிந்து கொள்ளவேண்டிய செய்தி எதுவுமில்லை என்பதில் மாற்றுக்கருத்துக்கு ஒருவரும் இல்லை. உலக நடப்புகளை, தொலைந்த விமானம் பற்றிய செய்திகளை கேட்டு அறிய ஆர்வம் இருந்தாலும் இதுவரை சகித்து வந்த இரைச்சல்கள் எல்லாம் இனியும் சகிக்குமளவுக்கு பொறுமை இல்லை.

இனி இந்த BBC RADIOஐ என்ன செய்வது என்று யோசித்த போதுதான்......

இப்போது மீண்டும் ஒரு தடவை தலைப்பை வாசிக்கவும்.

இதையும் வாசிங்க
காலை நேர வானொலி நிகழ்ச்சி செய்வது எப்படி?

EXTRA
என் MOBILE PHONE இல் தமிழ் எழுத்துக்கள் எல்லாம் சதுரம் சதுரமாக மாறுகிறது. தயவு செய்து யாராவது NOKIA MOBILE PHONEஇல் தமிழ் WEB SITE களை வாசிக்க என்ன செய்யலாம் என்று சொல்லி தரவும்


EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

“காலை நேர FM நிகழ்ச்சி” JUICEசெய்வது எப்படி?


தேவையான பொருட்கள்

இன்றைய பத்திரிகை – 4

இந்த நாளில் – 10

Jingles – 25

விளம்பரம் – 25

தலைப்பு – 1

பாடல்கள் - 30

நட்ஷத்திர பலன் - விரும்பினால்


இனி ஒவ்வொரு பொருளையும் தயார் செய்யும் விதத்தை பார்ப்போம்.


இன்றைய பத்திரிகை தலைப்பு செய்திகள் மட்டும் போதுமானது. முற்றுப்புள்ளி, ஆச்சரியக்குறி எல்லாம் சேர்த்து வாசிக்கவும். Comments என்ற பெயரில் உங்கள் இஷ்ட அரசியலை செய்யலாம். அல்லது காற்று வாக்கில் கேட்ட செய்திகளை கூட சொல்ல முடியும்.. பேப்பர் வாசிக்க வேறு ஒருவரை arrange பண்ணுவது நல்லது. அவர்கள் வழமையாக பேசும் குரலில் அல்லது கொஞ்சம் குரலை மாற்றி செய்யவும். Fax வருது, வேண்டுமானால் வெள்ளை வேன் follow பண்ணுது என்று சொல்லி எதோ பெரிய அரசியல் செய்தது போல் buildup கொடுத்து இன்னும் கொஞ்சம் காரம் கூட்டலாம்


இந்த நாளில் - இன்றைய தேதியில், லக வரலாற்றில் முக்கிய சம்பவங்களை தேடி எடுக்கவும். உதாரணமாக விமானம் முதல் பரிசோதனை செய்த நாள், 2ம், 3ம்.. பரிசோதனை நாட்கள், முதல் வர்த்தக பயணி பயணித்த நாள், முதல் ராணுவ பயன்பாட்டு நாள், முதல் விபத்து நடந்த நாள் என்று உங்கள் இஷ்டத்துக்கு வருடம் 365 நாளும் வருவது மாதிரி செய்வதில் தான் உங்கள் திறமை இருக்கிறது.. ஒன்றும் இல்லாவிட்டால் உங்கள் நண்பர்களின் பிறந்த நாள் கூட சொல்லலாம். யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். யாராவது அதை காது கொடுத்து கேட்டால்தானே! (At least அவங்களாவது இதை கேட்க செய்யலாம். சிறுவர்கள் எல்லாம் வானொலி மாமா நிகழ்ச்சி கேட்பதுமாதிரி கையில் ஒரு note book, pen உடன் குறிப்பெடுக்க காத்திருக்க இது என்ன அந்த காலமா?)


Jingles - எல்லா அறிவிப்பாளர்களினது வாழ்க்கையும் பாடல்களோடு நெருங்கியது.. கொஞ்சகாலம் பாடல் கேட்டு பழகியபின் பல பாடல்கள் ஏறத்தாள copy and paste style இல் இருப்பதை உணர்வீர்கள். அந்த நேரத்தில் ஏன் நாமும் முயற்சிக்க கூடாது என்று தோன்றி உங்கள் கைவண்ணம் காட்டும் போது குறை பிரவசமாக வளர்ச்சியற்ற ஒரு பாடல் பிறக்கும். இவ்வாறு பிறக்கும் பாடல்களை இலவசமாக கொடுத்தாலும் வேறு யாரும் ஒலிபரப்பி தன்கையை சுட்டு கொள்ளமாட்டார்கள் என்பதால் உங்கள் radio இல் மட்டும் ஒலிபரப்ப வேண்டிவரும். எனவே இனி அதை jingles என்று safety ஆக அழைக்கவும். இதன் மூலம் பாடல் எழுதுவது இசையமைப்பது (அதுதான் வெட்டி ஒட்டுவது) பாடுவது என பல ஆசைகளை பூர்த்தி செய்யமுடியும். இதை யாரும் ரசிப்பார்களா ? அதற்கான தரத்தில் இருக்கிறதா என்றெல்லாம் வீணான கவலைகள் உங்களுக்கு வேண்டாம்.


விளம்பரம் வரும் விளம்பரம் எதையும் விட்டுவிடாமல் கபால் என்று பிடித்து கொள்ளவும். அதில் என்ன சொல்கிறார்கள் என்பது எல்லாம் நமக்கு தேவையற்ற விஷயம். யாரவது கேட்டால் ஆனானப்பட்ட கவிப்பேரரசு கூடசீனா தானா எழுதவில்லயா என்று உதாரணம் காட்டி நியாயம் கற்பிக்கலாம்.


தலைப்பு - உங்கள் இஷ்டத்துக்கு ஒரு தலைப்பை எடுத்து விடுங்கள். பழையதாக இருந்தால் தூசு தட்டி புது look கொடுக்கவும். பழைய தலைப்புகள் தேறாது என்றால் TAMILISH இல் தேடி ஒரு தலைப்பு எடுக்கவும். இதில் மிகவும் இலகுவானது கருத்து கணிப்பு நடத்துவதே.. உதாரணத்துக்கு சாப்பாட்டில் பிடிக்காத பொருள் வெள்ளைப்பூடு வெங்காயம் கறிவேப்பிலை இதில் எது என்று கருத்துக்கணிப்பு நடத்தலாம். உங்கள் radio இன் முதன்மை வருமான வழி sms ஆக இருந்தால் இன்னும் அபத்தமான தலைப்புகளை கொடுக்கவும். அப்போதுதான் wide reach கிடைத்து கூடுதல் sms வரும். தலைப்பில் சில துண்டுகளை garnishக்காக சீவி வைக்கவும்.


பாடல்கள் - பாடல்கள் எதுவாக இருந்தாலும் புதிதாக இருப்பது நல்லது.. அப்போதுதான் இந்த பாடலை முதலில் தந்தது உங்கள்... என்று போடலாம். உங்கள் என்று சொன்னதற்காக எனக்கும் லாபத்தில் பங்கு வேண்டும் என்று எந்த listeners உம் வரமாட்டார்கள். என்வே அச்சம் தவிர்க்க. இனி உங்களுக்கு பிடித்த அந்த பாடலை பல முறை ஒலிபரப்பி அது hit ஆகிவிட்டது என்று சொல்லி கொள்ளவும். CD இல் யார் யார் பாடினார்கள் என்று விபரம் இருக்கும். வேண்டுமானால் அதை கூட புதிர் ஆக போடலாம்.


நட்ஷத்திர பலன் - தயாரிப்பதற்கு மிக இலகுவானது இதுதான்.. நலம், சிறப்பு, பயணம், நஷ்டம் போன்ற சில சொற்களை துண்டு காகிதத்தில் எழுதிக்கொள்ளவும். உங்கள் vocabulary அந்த அளவுக்கு இல்லை என்றால் ஒரு pocket dictionary வாங்கி அதில் உள்ள பொருத்தமான சொற்களை கிழித்து ஒரு fish bowl இல் போடவும். இனி இந்த ராசிக்கு என்று நினைத்து கொண்டு ஒரு துண்டு சீட்டை எடுக்கவும். இனியென்ன ஆனானப்பட்ட சிம்ம ராசிக்கு வரும் பலன் கூட உங்கள் கையில்! இன்னும் கொஞ்சம் சுவை கூட்ட வேண்டும் என்றால் யாராவது ஒரு மரத்தடி ஜோசியரை தொலைபேசியில் அழைத்து live ஆக நிகழ்ச்சி செய்யவும். இனியென்ன அவர்கூட புகழ் ஜோசியர் ஆக விளம்ம்பரப்படுத்தி காசு தேடலாம்.


எல்லா பொருட்களையும் தயார் செய்து முடித்து விட்டீர்கள். ஒரு பெரிய அண்டாவை எடுத்து முதலில் பாடல்களை சிந்தாமல் ஊற்றவும். அதற்குள் மற்ற பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து போட்டுக்கொள்ளவும். நன்றாக ஊறியபின் ஒரு beater எடுத்து நன்கு நுரை வரும் வரை beat பண்ணவும். இனி வரும் order இல் glass களில் (அதுதாங்க time! ) ஊற்றவும். மறக்காமல் garnishக்காக் இருக்கும் தலைப்பு சீவல்களை glass இல் அழகாக பொருத்தவும். இனிய குரல் வளத்துடன் பரிமாறவும்.


காலை நேர FM நிகழ்ச்சி” JUICE குடித்தவர்கள் பின்னூட்டம் இடவும், TAMILSIH இல் vote போடவும் மறக்கவேண்டாம்.. இல்லாவிட்டால் அஜீரணம் ஆகக்கூடும்..


தீட்டிய மரத்தில் கூர் பார்ப்பதாக நினைக்க வேண்டாம்.


தையும் வாசிங்க..

நுளம்புகளை (MOSQUITO)கொல்லும் இலகு சாதனம் - நீங்களும் தயாரிக்கலாம்EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்