Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

எனது மனங்கவர் காலை வானொலி நிகழ்ச்சி

என்னைப்போலவே உங்களில் பலருக்கு காலை நேர வானொலி நிகழ்ச்சி உங்கள் நாளிற்கு உற்சாகம் தருவதாக இருக்கும். இன்று எனது மனங்கவர் காலை நிகழ்ச்சியைப்பற்றி சொல்லப்போகிறேன்.

எந்தவொரு நிகழ்ச்சியும் பொருத்தமான அறிவிப்பாளர் இன்றி பொலிவு பெறுவதில்லை. இதனால் பல நிகழ்ச்சிகள் வழமையாக தொகுத்து வழங்குபவர் இல்லையென்றால் சப்பென்றாகிவிடும். மாதக்கணக்கில் தொகுத்து வழங்கும் அனுபவத்தினூடாக கிடைக்கும் பக்குவம் எப்போதும் நல்லதொரு கேட்டல் அனுபவத்தை தரும்.

தேசம் விட்டு தேசம் வந்த பின் எனது வழமையான காலை நேரநிகழ்ச்சியை மிகவும் மிஸ் பண்ணினேன். ஆனால் இப்போது இணையத்தின் உதவியுடன் மீண்டும் காலைப்பொழுதுகளுக்கு உற்சாகம் கூடியுள்ளது.

முதலில் நிகழ்ச்சி அறிமுகம்.

ஐக்கிய அரபு அமீரக நேரபப்டி காலை 7 மணிமுதல் 11 மணிவரை


இல் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிதான் The Maha Bada Breakfast Show with Kritika. இது ஒரு ஹிந்தி வானொலி. என்றாலும் உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமென்றால் ஹிந்தி அறிவு பற்றிய கவலையேயில்லை. எல்லா ஹிந்தி ஊடகங்களையும் போல மிஞ்சிப்போனால் 10% ஹிந்தி பேசுவார்கள். ஏன், 100% விளங்காவிட்டால் என்ன.. கிருத்திக்காவின் கொஞ்சும் குரல் உற்சாக டானிக்தான்


அடுத்ததாக நிகழ்ச்சித்தொகுப்பாளரைப்பார்ப்போம்.


நீங்கள் இப்போது நிகழ்ச்சித்தொகுப்பாளரை கண்குளிர கண்டுள்ளமையால் நீங்கள் நிகழ்ச்சியின் உற்சாகம் பற்றி ஐயுறமாட்டீர்கள்.

இனியென்ன.. நாளை முதல் உங்கள் காலைப்பொழுதை உற்சாகமாக்க கிருத்திக்காவுடன் இணையுங்கள்...

உங்கள் அனுபவத்தை கருத்தை பதிய மறக்காதீர்கள்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

உலக கிண்ண எரிச்சல்கள் 2

உலககிண்ண இறூதிப்போட்டிகளின் முடிவுகளின்பின் பல விடயங்களில் எரிச்சலாய் வருகிறது. ஒரு பதிவுக்குரிய வசனநடையில் எழுத மூட் இல்லாததால் குறிப்புகளாக..

1. 50 ஓவர் வரை போட்டி நடக்கும் என்று சங்கக்கார கணித்து கடைசி நேரத்திற்கு மாலிங்கவினதும் முரளியினதும் விக்கட்டுகளை மிச்சம் பிடித்தது.

2. போட்டிகளை காணச்செல்லும் அரசியல்வாதிகள். 2007 இற்கும் 2011 இற்கும் ஒருவரது ராசிதான் காரணமோ..

3. அடிக்கடி அமீர்கானை காட்டிய தொலைக்காட்சி. எவ்வளவுப்பா வாங்கினீங்க

4. லதா மங்கேஸ்கரின் நோன்பு, மஹிந்தவின் திருப்பதி.. அணிக்கு உண்மையாக இருந்தால் ஏன் இந்த விளம்பர வெறி?

5. துட்டுக்கு ஆசப்பட்டு அடிக்கடி இந்தியாவுடன் போட்டிகளுக்கு போகும் இலங்கை கிரிக்கட். இலங்கையின் வெற்றியை தாரைவார்த்ததில் இதற்கும் பங்குண்டு.

6. மஹேலவை கப்டன் பதவியிலிருந்து விலகச்செய்த அரசியல். அந்த அரசியலின் மீது இடி விழ.. சங்கக்கார நல்ல தலைவர்தான்.. ஆனால் இன்று நிறைய பிழையான முடிவுகள்

7. அப்பவே சொன்னேன் என்னும் சில மேதாவிகளின் தீர்க்கதரிசனம். போடாங்...

8. இந்திய கிரிக்கட் வெலவதற்கு தோதாக போட்டிகளை திட்டமிட்ட ஐசிசி. ரவுன்ட் ரொபின் நடந்திருந்தா தெரிஞ்சிருக்கும்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

உலக கிண்ண எரிச்சல்கள்

உலககிண்ணஇறுதிப்போட்டிகள் நாளை நடக்கவிருக்கும் நிலையில் அதைச்சுற்றி நடக்கும் எரிச்சல் தரும் நிகழ்வுகளையும் உங்களிடன் பகிர்வதே இப்பதிவு..

Indian cricket captain Mahendra Singh Dhoni (L) and Sri Lankan captain Kumara Sangakkara pose with the ICC Cricket World Cup Trophy at The Wankhede Stadium in Mumbai on April 1, 2011, on the eve of the final match which is scheduled to be played in the city on April 2. AFP PHOTO

 முதல் எரிச்சல் உலக கிண்ணப்போட்டிகளுக்காக புற்றீசல்போல் வெளிவந்த பாடல்கள். இவற்றில் பல கேட்க்க்கூடியதாக இருந்தாலும் வீடியோ காட்சிகள் மிக கீழ்த்தரமாக இருந்தது. இராஜின் லயன் நேஷன், பாத்தியாவின் ஹொட் அன்ட் ஸ்பைசி, ரந்திரின் நொட் அவுட் போன்றவற்றை சொல்லலாம். பாடல்களுக்கு பொருத்தமற்ற காட்சிகளும் அதிகளவு திணிக்கப்பட்ட கவர்ச்சியும் இதற்கு முக்கிய காரணங்கள்.

அடுத்த எரிச்சல் அரசியல்வாதிகள்..

விளையாட்டில் அரசியல் நுழைவது எந்தவொரு விளையாட்டிற்கும் நல்லதல். ஏற்கெனவே அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ள ஆசிய கிரிக்கட் சபைகள் ஏற்கெனவே கிரிக்கட்டை குட்டிச்சுவராக்கிக்கொண்டிருந்தாலும், உள்ளூர் திறமைகளின் தயவில் நிகழ்வின் பார்தூரத்தை மறைத்துக்கொண்டிருந்தாலும் நிகழ்வுகளின் பாரதூரத்தை விளையாட்டின் ஆர்வலர்கள் அறியாமல் இல்லை.

அரை இறுதிப்போட்டிகளில் இந்தியா பாகிஸ்தான் பிரதமரையும் இலங்கை நியூசிலாந்து பிரதமரையும் அழைத்தது இம்முறை உலககிண்ணப்போட்டிகளின் முதல் எரிச்சல். ஏற்கெனவே பாகிஸ்தானியர்கள் வறுமையில் வாடும் நிலையில் பாகிஸ்தான் பிரதமர் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து பாகிஸ்தான் கேவலமாக தோற்பதை பார்த்துச்சென்றார். இந்த அரசியல்வாதிகள் அரங்கிற்கு சென்று கிரிக்கட் பார்ப்பதால் யாருக்கு என்ன பயன்? இவ்விடத்தில் நியூசிலாந்து பிரதமரை கட்டாயம் பாராட்ட வேண்டும்

அதன்பின் இலங்கை இந்திய் இறுதிப்போட்டியை ஒட்டி வரும் அரசியல் அறிக்கைகள் இன்னும் எரிச்சலூட்டுகின்றன. வெற்றியின் பங்காளிகளாக தம்மை காட்டிக்கொள்வதற்காக ஜனாதிபதி முதல் சிறையில் இருக்கும் சரத் பொன்சேக்கா வரை சகல் கட்சித்தலைவர்களும் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதுபோதாதென்று மேஜர் ஜெனரல் சவேந்ர சில்வாவைக்கூட மேற்கோள்காட்டி செய்தியொன்றை கேட்க நேரிட்டது.

இன்னும் இந்தியாவில் திருப்பதியில் இலங்கையணியின் வெற்றிக்காக வழிபடுவார் என்றும் இன்னொரு செய்தி.
இச்செய்ற்பாடு மூலம் ஏனைய பல இலங்கை அரசியல்வாதிகள்போல பௌத்தத்தினை கேள்விக்குள்ளாக்கும் ஜனாதிபதி, திருப்பதியில் வழிபாடு செய்வதன்மூலம் உலக கிண்ணம் பெறலாம் என்றும் நம்புகிறார். அப்படியாயின் இந்திய அணியும் திருப்பதியில் வழிபாடு செய்தால் வெற்றி யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழும்பாதா? 96 உலக கிண்ண வெற்றிக்கு சத்தி சாயி பாபா காரணம் என அர்ஜுன ரணதுங்க முட்டாள்தனமாக கூறியது இங்கு ஞாபகத்தில் கொள்ளத்தக்கது.


இவ்வாறான கவனக்கலைப்பான்களை இலங்கை அணி தூரப்போட்டு நாளை எமக்கு வெற்றியை தேடித்தரவேண்டும் என்பதே எம் எல்லோரினதும் அவா. இதன் மூலம் பன்னாட்டு சமூகங்களுடன் வாழும் என்னைப்போன்ற நாட்டில் இல்லாத பலருக்கு நாளை மிகப்பெருமையாக இருக்கும்.

படங்கள் CrickClick இலிருந்து

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்