உலகை படைத்த இறைவனை நினைத்தவனாக ,
என்ன கொடும சார் வசனத்துக்கு முழு உரிமை உள்ள பிரேம்ஜி க்கு நன்றி செலுத்தியவனாக (அவர் அதற்கு patent right வைத்திருந்தால் என் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்காமலிருப்பட்காக இந்த ஏற்பாடு ) இந்த வலைப்பூவை ஆரம்பிக்கின்றேன்.
இதில் என் மனதை தொட்ட சில கொடுமைகளை பதியலாம் என்றுநினைக்கின்றேன். ( கொடுமை என்றால் என்ன என்று பிரேம்ஜி இன் அகராதியில்அர்த்தம் பார்க்கவும்). முகம் காட்டாமல் இருப்பது என்னுடைய மற்றும்என்னுடைய நண்பர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு நல்லதாகயால், நான்எப்போதும் அண்ணா என்று அழைக்கும், என்னது இன்னொருபக்கத்தை எனக்கு இனங்காட்டிய ஊக்கமளித்த அண்ணாவுக்கு அவர் பெயரை குறிப்பிடாமலேஎனது நன்றியறிதலை இச்சந்தர்பத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்று முதல் சந்தர்பங்கள் கிடக்கும் போதும் நிகழ்வுகள் நிகழ்ந்தேறும் போதும்இதில் பதிவு இடப்படும். அதை வாசித்து என்ன கொடும சார் என்று புகழ்ந்தோ இகழ்ந்தோ சொன்னால் இவ் வலை பதிவு ஜன்ம சாபல்யம் பெறும்.

EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
1 comments:
நல்ல ஆரம்பம்.. நல்ல முக விழிப்புடன் ஆரம்பிச்சிருக்கீங்க.. வெங்கட் பிரபுவை சொன்னேன்.. ;)
நடத்துங்க நடத்துங்க..
Post a Comment