Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

பொன்சேக்காவுக்கு வாக்களிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்பொன்சேக்காவுக்கு வாக்களிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்

 • ஒக்லஹோமா நகருக்கு வாழ்வதற்காக சென்று விடுவார்
 • தயானந்த திசாநாயக்கவை ஒய்வு பெறுமாறு நிர்ப்பந்திப்பார்
 • அழியும் இனமாக மாறும்
 • புதிதாய் அச்சடிக்கப்பட்ட மில்லியன் கணக்கான (மகிந்தவின் படத்தை கொண்ட) ஆயரம் ரூபா வூட்டுக்கள் நோட்டுக்கள் அழிக்கப்படும்
 • மிஹின் லங்கா விமான சேவை பொன் லங்கா விமானசேவையாக பெயர் மாற்றம் பெறும்
இவை அனைத்தும் நேற்று Sunday Times பத்தரிகையில் பிரசுரமானவை :D

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

சரத் பொன்சேக்காவுக்கு வாக்களிப்பதற்கான காரணங்கள்

 • 2016 ஆம் ஆண்டும் ஜனாதபதி தேர்தலிலும் போட்டியிடும் தர்ம சங்கடத்தை தவிர்க்க
 • தொடர்ந்தும் ரணிலும் சோமவன்சவும் ஒரே மேடையில் இருப்பதை ரசிக்க
 • தேச ஒற்றுமையை வலியுறுத்த - காரணம் சம்பந்தன் கூட இப்போது சிங்களத்தில் கையொப்பமிடுகிறார்
 • வேலை வாய்ப்பின்மைய குறைக்க - மங்களவுக்கு வேலை கொடுப்பதன் மூலம்
 • ‘sanvedi palapurudu nayakaya’வை தெரிவு செய்ய ‘kalavedda’ ‘paaharaya’போன்ற சொற்களை பகிரங்கமாக உபயோகிப்பதன் மூலம் ராணுவ அனுபவத்தையும் விமர்சனங்களை எதிர்கொள்ளும் வதத்தை காட்டியமைக்காக
சரத் பொன்சேக்காவுக்கு வாக்களிக்காமல் இருப்பதற்கான காரணங்கள் பிற்பகல் 6 மணிக்கு

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

மகிந்தவுக்கு வாக்களிக்காமல் இருப்பதற்கான காரணங்கள்

 • விளம்பரங்களில் வந்த எல்லா B தர நடிகர்களும் ஜனாதிபதி ஆலோசகர் பதவ கேட்பார்கள்
 • எஸ் பி திசாநாயக்க பிரதமர் ஆவார்
 • நிமல் சிறிபால பிரதமர் ஆக கூடும். அவர் சுகாதார அமைச்சர் இல்லாது போனால் டெங்கு ருபெல்லா பன்றி காய்ச்சல் மரணங்கள் அதிகரிக்கும்
 • சனத் ஜெயசூரிய 2011 உலக கிண்ணத்தில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவார்
 • இலங்கை முதலாம் உலக நாடாகும் இதனால் வெளிநாட்டு உதவிகள் கிடைக்காது. நாம் அமெரிக்க பிரத்தானிய உள் விவகாரங்களில் தலையிட நேரும்
சரத் பொன்சேக்காவுக்கு வாக்களிப்பதற்கான காரணங்கள் நாளை காலை 6 மணிக்கு
என்ன கொடும சார் :D

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

மகிந்தவுக்கு வாக்களிப்பதற்கான காரணங்கள்

 • உலகின் மிகப்பெரிய அமைச்சரவை சாதனையை தக்கவைக்க
 • விமல் வீரவன்ச ராஜித சேனாரத்தன மேர்வின் தொடர்ந்து எம்மை மகிழ்விக்க
 • ராஜபக்ச விமான நிலையம் ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்பட
 • அரசியல் அமைப்பு சபையை அமைக்காதிருப்பதன் மூலம் c வீண்செலவுகள் குறைக்கப்பட
 • வாக்காளர்களை அறிவுறுத்த ஆயுத பட பிரதானிகள் தொடர்ந்தும் தொலைக்காட்சியில்தோன்ற

மகிந்தவுக்கு வாக்களிக்காமல் இருப்பதற்கான காரணங்கள் பிற்பகல் 6 மணிக்கு

என்ன கொடும சார் :D

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

மஹிந்தவும் ஜனாதிபதிதேர்தலும்

கடந்த இரண்டு நாட்களாக
ஜேவிபியும் ஜனாதிபதித்தேர்தலும்
முஸ்லிம் காங்கிரசும் ஜனாதிபதிதேர்தலும்
என இரண்டு கட்டுரைகளை பார்த்தோம்.

பொன்சேக்கா அணிக்கு கிடைக்கும் வாக்குகளில் பல கட்சிகள் உரிமை கோரலாம். ஆனால் மஹிந்த அணிக்கு வரும் வாக்குகளை அவ்வாறு எந்தவொரு கட்சியும் உரிமை கோரமுடியாது.

அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு மற்றும் யுத்த வெற்றி என்பன மஹிந்தவின் முக்கிய பலங்கள். இவற்றுள் முதல் இரண்டிற்கும் யாரும் பங்குதாரர்கள் இல்லை என்பது முக்கியமான விஷயம்.

ரணிலின் ஆட்சிக்காலப்பகுதியில் அபிவிருத்திகளும் தொழில் வாய்ப்புகளும் இடைநிறுத்தப்பட்டிருந்ததை இன்னும் மக்கள் மறக்கவில்லை. ஆனால் ஜனாதிபதி அவர்கள் யுத்தத்துக்கு சமாந்தரமாக இவை இரண்டையும் வெற்றிகரமாக முன்னெடுத்தார் என்பது முக்கியமான விடயம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திக்கு தெளிவான அத்தாட்சிகள் இருக்கின்றன. எந்தப்பிரதேச மக்களும் தமது பிரதேசத்தில் அபிவிருத்தி பணிகள் நடைபெறவில்லை என்று சொல்ல முடியாத அளவுக்கு ஜனாதிபதி அவர்கள் இப்பணியை சீராக மேற்கொண்டுள்ளார்கள். இவற்றுள் பாதை அபிவிருத்தி மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

ஜனாதிபதி தமிழில் பேசத்தொடங்கியிருப்பது தமிழ் பேசும் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது. அவர் தமிழை சரியாக உச்சரிக்கிறாரோ இல்லையோ, தமிழ் பேசும் ஆர்வத்திற்கு ஆதரவு இருக்கிறது. இவரது மகன் நாமல் ராஜபக்ச கூட இப்போது கூட்டங்களில் தமிழில் பேசத்தொடங்கியுள்ளார்.

மக்களிடையே தான் உங்களில் ஒருவன் என்பதை எங்கு சென்றாலும் பொதுமக்களுடன் கைகுலுக்குவது, சிறு பிள்ளைகளை தூக்குவது என பல சிறிய விடயங்கள் மூலம் அடிக்கடி உணர்த்துவதும் இவர் பலம்.

ஆயினும் இவருடன் எப்போதும் ஒட்டிக்கொண்டிருக்கும் சம்பிக்க ரணவக்கவும், சிறுபான்மை மக்க்ளின் வாக்குகளை மஹிந்த பெறுவதற்கு தடையாக இருப்பார்.


இதன் காரணமாகத்தான் பொன்சேக்கா அணி குடும்ப அரசியல், மெகா அமைச்சரவை என்று குறிப்பிட்ட விடயங்களில் மட்டும் கவனத்தை செலுத்துகிறது.
இவை ஜனாதிபதிக்கு சவாலாக அமையுமா என்பதே இன்றுள்ள கேள்வி

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

முஸ்லிம் காங்கிரசும் ஜனாதிபதிதேர்தலும்

நேற்று, இந்த ஜனாதிபதித்தேர்தலில் ஜேவிபியின் பங்கு பற்றி பார்த்தோம். இன்று பொன்சேக்கா அணியின் முக்கியாமான் 3தூண்களில் ஒன்றான முஸ்லிம் காங்கிரஸ் பற்றி பார்ப்போம்.

வட கிழக்கில் வாழும் முஸ்லிம்களிடையே மிகப்பிரபலம் மிக்க கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்கிறது. அரசு யுத்த காலப்பகுதியில் கிடைத்த வெற்றிகளுக்கு சமாந்தரமாக தேர்தலை நடாத்தியபோது, கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் அரசுக்கு மிகப்பெரும் சவாலாக முஸ்லிம் காங்கிரஸ் இருந்தது. திருகோணமலை மாவட்டத்தில் ஐதேக வெற்றி பெற்றது இதனை உறுதிப்படுத்துகிறது. இதை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பெற்றுக்கொடுத்தார்.


அதன்பின்னும் கூட கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திரகாந்தனை அதி முக்கியமா சந்தர்ப்பங்களில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வழிநடத்தியுள்ளமை இரகசியமல்ல..

அண்மைக்காலமாக முஸ்லிம் காங்கிரஸ்க்கு சவாலாக அமைவது முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்றவர்களே. அவர்களில் பலர் இந்த அரசாங்கத்தில் இருப்பதால் அச்செல்வாக்கு மூலம் தொழில் வாய்ப்புகளையோ அபிவிருத்தி பணிகளையோ மேற்கொண்டு மக்களிடையே செல்வாக்கு
பெற்றிருக்கிறார்கள்.

இப்பிராந்திய அரசியலில் முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரைத்தவிர்த்து பார்ப்பது முடியாத விடயம். முஸ்லிம் காங்கிரஸின் எதிரிகளுக்கே முஸ்லிம் காங்கிரஸ் என்ற பதத்தை தவிர்த்து அரசியல் செய்ய முடியாது. இதனால்தான் பல கட்சிகள் நாங்கள் தான் உண்மையான முஸ்லிம் காங்கிரஸ் என்று உரிமை கோரிக்கொண்டு தோற்றம் பெற்றிருக்கின்றன.


கடந்த மாகாண சபை தேர்தலின்போது மின்னல் நிகழ்ச்சியில் அப்போது அரசில் அமைச்சராக இருந்த சேகு இஸ்ஸதீன் மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் உடன் இருப்பதாகவும் ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெறாது என்றும் சொன்னார். யதார்த்தமான இக்கருத்தின் பொருள் மக்களிடையே தொழில் வாய்ப்பு, அபிவிருத்தி சம்பந்தப்பட்ட நோக்கங்கள் இருக்கின்றன, மேலோங்கியிருக்கின்றன என்பதே.

இந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சில முக்கியமான கருத்துக்களை பிரச்சாரம் செய்தது. "மக்களை வழிநடத்துவதே தலைமை" என்று கூறி அதனூடாக "எய்தவனை நோவதா, அம்பை நோவதா" என்ற கேள்வியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இது பெருமளவுக்கு எடுபட்டுள்ளதாக தெரிகிறது. அத்துடன் சேகு இஸ்ஸதீன் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸ் இல் இணைந்துள்ளது முஸ்லிம் காங்கிரஸை பலப்படுத்தியுள்ளது.

இத்தேர்தலில் பெரும்பான்மை முஸ்லிம்களின் ஆதரவை பெற்ற கட்சி என்ற வசனப்பிரயோகத்தினூடாக முஸ்லிம் காங்கிரஸ் ஜனநாயகத்தை ஆதரிப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஏகப்பிரதிநிதிகள் என்ற சொல்லாடலுக்கும் பாசிசத்திற்குமிடையே பெரிய வேறுபாடு இல்லை என அண்மையில் கட்சி முக்கியஸ்த்தர் பஷீர் சேகுதாவூத் கூறியிருக்கிறார்.


இன்று வாழ்க்கைச்செலவு அதிகரித்துள்ள நிலையில் தொழில் ஒன்றை பெற்றுக்கொள்ள அல்லது ஒரு பொது அபிவிருத்தியை பெற்றுக்கொள்ள மக்கள் பின்னிற்கப்போவதில்லை என்பதே இன்று முஸ்லிம் காங்கிரஸிற்கு முன்னுள்ள மிகப்பெரு்ம் சவால்..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

ஜேவிபியும் ஜனாதிபதித்தேர்தலும்

மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) இன்று ஜனாதிபதித்தேர்தலில் சரத் பொன்சேக்கா அணியில் முக்கிய இடம் வகிக்கிறது.

ஜேவிபி என்றதும் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருவது சுவரொட்டி. அந்தளவுக்கு அவர்கள் சுவரொட்டியின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். எப்போதும் ஜேவிபியின் கூட்டங்களில் பெருமளவு மக்கள் பங்குபற்றுவார்கள். ஒரு பிரச்சார கூட்டம், அல்லது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் எதையும் குறுகிய கால அவகாசத்தில் அசத்தலாக செய்து முடிப்பவர்கள். பல்கலைக்கழக மட்டத்தில் மாணவர்களிடையே பெரும் செல்வாக்கு கொண்டவர்கள். மேடைப்பேச்சுக்களில் அவர்களைப்போல் சிறந்தவர்கள் இல்லை.

ஆனால்

தேர்தல் என்று வந்துவிட்டால், கடைசியில் கிடைக்கும் வாக்கு கூட்டங்களுக்கு வந்த சனக்கூட்டத்தை விட குறைவாக இருக்கும்! அது ஏன்?

அரசியல்வாதிகள் மக்களை பிரதிபலிக்கிறார்கள் என்பர். இலங்கை மக்களிடையே நேர்மையான அரசியல் பற்றிய பேச்சு இருந்தாலும், பெரும்பாலானவர்கள் இவ்வரசியல் மூலம் தமது சுய நலன்களை முன்னிறுத்துகிறார்கள். அரசியல் செல்வாக்கு மூலம் ஒரு தொழிலைப்பெறல் என்பதுதான் தீவிர அரசியலில் ஈடுபட முக்கியமான காரணம்.

ஜேவிபி ஆதரவாளர்கட்கே தெரியும், ஜேவிபி ஆட்சிக்கு வந்தால் எந்தவொரு தனிநபர் நலனையும் முன்னிறுத்த முடியாது போகும் என்பது. எனவே அரசியல் நெளிவு சுழிவு என்று நாகரீகமாக சொல்லப்படும் அல்லது யதார்த்தம் என்ற பதத்தின் கீழ் அடக்கப்படும் "தனி நபர் நலன்களை" ஜேவிபிக்கு வாக்களிப்பதன் மூலம் உறுதிப்படுத்த முடியாது.

எனவேதான் ஜேவிபி தனி்த்து கேட்கும்போது எதிர்பார்த்த அளவு பிரகாசிப்பதில்லை. ஆனால் ஏதாவது நெளிவு சுழிவு தெரிந்த கட்சியுடன் சேரும்போது மக்கள் வாக்குகளை ஜேவிபியின் வேட்பாளர்கட்கு அள்ளி வழங்குகிறார்கள்.

மஹிந்த அரசாங்கதை உருவாக்குவதில் ஜேவிபி மிகப்பெரும் பங்கு வழங்கியது. அதன் பின் இந்திய வாகனங்களை, அதன் உறுப்பினர்கள் பெற்றபோது பெரும் எதிர்ப்பை சம்பாதித்தது. இதன்பின் இன்னும் சில காரணங்களுக்காகவும் தனது தீவிர ஆதரவாளர்களின் நம்பிக்கையை இழக்காமலிருக்க மஹிந்த அரசிலிருந்து விலகிக்கொண்டது. ஆயினும் எதிர்க்கட்சியிலிருந்த படியே மஹிந்த அரசு கவிழாமல் இருப்பதை உறுதி செய்தது.

இதன்மூலம் பெரும்பாலான மக்களிடையே அது தார்மீக கடமையை செய்யும் கட்சியாக பெயரெடுத்தது. மஹிந்த அரசின்மீது வெளிநாட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலெல்லாம், அரசுக்கெதிராக, வெளிநாட்டு சக்திகளுக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடாத்தி, மஹிந்த அரசு "மக்கள் எதிர்க்கிறார்கள்" என்று சொல்லி தப்புவதற்கு போதுமான வாய்ப்புகளை வழங்கியது.

மஹிந்த அரசுக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டிருந்த ஜேவிபி இன்று தேசத்துரோக அணியில் சேர்ந்திருப்பதாக அரசு குற்றஞ்சாட்டுகிறது. ஆயினும் இது மக்களிடையே எவ்வளவு தூரம் எடுபடும் என்பது கேள்விக்குறியே.இந்த தேர்தலில் பொன்சேக்கா அணி அணி தெற்கில் பெறும் வாக்குகளுக்கு ஜேவிபியின் பெரும் பங்கு இருக்கப்போவது நிச்சயம். பொன்சேக்காவின் இரு ஊடக பேச்சாளர்களிடையே ஜேவிபியின் அநுர குமார திசாநாயக்கவும் ஒருவர்.

பொன்சேக்காமீது யுத்த குற்ற காட்டிக்கொடுப்பு பற்றிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது, ஜேவிபி "அதைபற்றி கவலைப்படவேண்டாம், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்றி சிம்பிளாக சொன்னதாக ஆங்கிலப்பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

ஆனால் அதே அநுர குமார திசாநாயக்கவும் பொதுக்கூட்டம் ஒன்றில் "மஹிந்தவின் வெற்றி உறுதியானது" என்று வாய்தவறியேனும் கூறியது என்ன விளைவை ஏற்படத்தியிருக்கிறது என்பது தேர்தலின் முடிவின் பின்னரேயே தெரியும்..

Google இல் JVP என்று தேடிப்பார்த்தால் 
Buy Accutane canadian pharmacy no prescription
என்று வருகிறது

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

ஜனாதிபதி தேர்தல் படங்களும் கேலிச்சித்திரங்களும்
நல்ல வேலை! சட்ட விரோத சுவரொட்டிகளை கிழிக்கும் பொலிஸ் அதிகாரிகள் What a job! Policemen engaged in the thankless task of removing illegal election posters that have defaced walls all over the country. Our correspondent Hiran Priyankara snapped this photograph in Puttalam town.
Sri Lanka Insurance is the largest and strongest composite insurance provider in Sri Lanka with Rs. 64.8 billion worth of assets under management

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

ஜனாதிபதித்தேர்தலும், பர்வேஷ் மஹரூப் விவகாரமும்

நேற்று ஜனாதிபதித்தேர்தல் தொடர்பான துண்டுப்பிரசுரம் ஒன்று கிடைத்தது.

படத்தில் click செய்வதன் மூலம் பெரிதாக்கி பார்க்கலாம்.

அதில் இருந்த விடயங்கள் நாம் இதுவரை அறிந்ததாக இருந்தபோதும்,
என்ற கேள்வியொன்றும் இருந்தது.

இது உண்மையா இல்லையா என்று தெரியாது.

இருந்தும்

உண்மையாக இருந்தால் "என்ன கொடும சார்"

பொய்யாக இருந்தாலும் "என்ன கொடும சார்"

President Election, Mahinda Rajapaksha, Sarath Fonseka, ricket, Politics, Allegations, Farvesh Maharoof,

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

கட்சித்தாவல் ஜனநாயகத்திற்கு சாவுமணி

சென்றவார கடைசிப்பகுதியிலிருந்து, கட்சித்த்தாவல் பற்றி அதிகளவு பேசப்படுகிறது. இதுவரை காலமும் ஒரு அரச ஊடகத்திலேனும் தோன்றியிராத, எந்தவொரு அரசியல் நிகழ்ச்சியிலும் பங்குபற்றியிராத முஸம்மில், இன்று சகல ஊடகங்களின் செய்திகளிலும் முக்கிய இடத்தை வகிக்கிறார்.

(அவர் தனக்கு 300 இலட்சம் நிர்ணயிக்கப்பட்டது என்கிறார், அதை ஒரு போதும் நிரூபிக்க முடியாது போகும், அவராகவே தனது மதிப்பை கூட்ட இவ்வாறு சொல்லவும் கூடும் அல்லவா?)

ஒரு ஜனாதிபதித்தேர்தலில் ஒரு சிலர் கட்சி மாறுவது, மாற்றபப்டுவது, வாங்குவது என்பன ஜனாதிபதித்தேர்தலில் மக்களின் முடிவுகளில் எவ்வாறான மாற்றத்தை கொண்டுவரும் என்ற கேள்விக்கப்பாலும்

இன்னும் 3 மாதத்திற்குப்பின் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும்போது 3 மாத காலத்திற்கா இவ்வளவு விலை என்ற கேள்விக்கப்பாலும்

ஜனநாயகத்தின் முக்கிய தூணான பாராளுமன்ற அரசியலில் இது எவ்வாறான பாதகமான் விளைவுகளை நீண்ட கால நோக்கில் ஏற்படுத்தும் என்று ஆராய்வது அவசியமாகிறது.

இலங்கை பாராளுமன்ற அரசியலில் வாக்கு் முதலில் கட்சிக்கும் பின் அக்கட்சியில் உள்ள விருப்பத்திற்குரிய 3 வேட்பாளர்கட்கும் வழங்கப்படுகிறது. இங்கே தனிமனிதனான வேட்பாளர் அன்றி கட்சியே மக்களின் முதல் வாக்கை பெறுகிறது.

இலங்கை ஒரு சிறு தீவாக இருந்தபோதும், பிராந்திய ரீதியாக அரசியல் நோக்குகள் வேறுபடுகின்றன. தென்மாகாணத்தின் அரசியல் சிந்தனைக்கும் வடக்கு அல்லது கிழக்கு மாகாண அரசியல் சிந்தனைக்கும் இடையே பாரிய வேறுபாடு காணப்படுகிறது. தென்மாகாண அரசியல் சிந்தனை உள்ளவர், வடக்கு கிழக்கு மாகாணத்தில் வெற்றி பெறுவது இலகுவானதல்ல. இதன்போது, தான் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வுசெய்யப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலுக்கு முன்னிருந்தே தானும் பிராந்திய அரசியல் நோக்குடையவன் என்று காட்டிக்கொள்வதன்மூலம் பிராந்தியக்கட்சிகளினூடாக வாக்குகளைப்பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவாகுவது இலகுவானதாகும். இதன் பின் மாற்று அரசியல் நோக்குடைய கட்சிக்கு ஆதரவளித்து தன் சுய நலன்களை பூர்த்திசெய்துகொள்ளமுடியும்.

இவ்வாறான தாவல்கள் மூலம் எந்நோக்கத்துக்காக மக்கள் வாக்களித்தனரோ அதற்கெதிராகவே மக்களின் வாக்கு விளைவை ஏற்படுத்தும்.
இவ்வாறானவர்கட்கு அடுத்த தேர்தலில் பாடம் புகட்டலாம் என்றாலும், அதற்கு ஆறு வருடம் காத்திருக்க நேருகிறது. அக்காலப்பகுதியில் மக்களது அரசியல் நோக்கங்கள் பலவீனமாக்கப்படுவது கவனிக்க வேண்டியது.

ஒருவருக்கு தனது கட்சியின் நடவடிக்கைகளில் மாற்ருக்கருத்து இருந்தால் கட்சியை விட்டு ஒதுங்கி அடுத்த தேர்தலில் தன்னை நிரூபித்தே வேறொரு அணிக்கு மாறவேண்டும். அதுவரை தனக்கு ஏலவே இருக்கும் பிரபல்யத்தை பயன்படுத்தி ஊடகங்களூடாக தனது கருத்தை நியாயப்படுத்தமுடியும். மாறாக நொண்டிச்சாட்டுகளை கூறிக்கொண்டு கட்சி தாவுவது மிகப்பெரும் துரோகமாகும்.

இவ்வாறான கட்சித்தாவல்கள் மூலம் வெறுப்படைந்த மக்களே இன்று வாக்களிக்கச்செல்லாமல் வீடுகளில் முடங்குகிறார்கள். அரசியல் ஒரு சாக்கடை என்ற கருத்து வலுப்பெறுகிறது. இதன்மூலம் தகுதியானோர் அரசியலுக்கு வர பயப்படுகின்றனர். நியாயமானோர் கூட துரோகிகளாகிவிடுவார்களோ என்ற சந்தேக கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகின்றனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசிற்கு எல்லா கட்சிகளிலும் இருந்து தாவியோர் இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் தேவையான பாதுகாப்பு வசதி, பதவி, சொகுசுகள் என ராஜபோகமாக வாழ்கின்றனர். அவர்கள் பதவி மூலம் பெறும் சம்பளாம். பதவிமூலம் பெறும் லஞ்சம், வீடு வாகன வசதி (வாடகை அல்லது பெறுமதி) பதவி மூலம் செய்யும் வேலைகள் மூலமாக் தனிப்பட்ட ரீதியாக அடையும் பிரபலம், இவர்களுக்கு பாதுக்காப்பு வழங்க ஆகும் செலவு, இவர்களது தனிப்பட்ட ஆளணிக்கு வழங்கப்படும் சம்பளம் என எல்லாவற்றையும் கூட்டிப்பார்த்தால் ஒரு பெரும் தொகை வருகிறது. இது கூட ஒரு லஞ்சமே..

தகுதி உடையோராக இருப்பதனால்தான் அமைச்சுப்பதவி வழங்கப்படுகின்றதென்று வாதிட மாறியவர்கள் அனைவரும் மிலிந்த மொறகொட போல் கல்விரீதியான தகுதியை கொண்டவர்களல்ல

முஸம்மில் என்பவருக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படும் 10இலட்சம் ரூபா ஒரே தடவையாக கொடுக்கப்பட்டது, அமைச்சர்களுக்கு தவணை அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. இதை தவிர வேறு என்ன வித்தியாசம்?

ஆனால் அரச ஊடகங்களில் கட்சி மாறிய ஜோன்ஸ்டனும் கட்சி மாறாத முஸம்மிலும் ஒரே தரத்தில் நோக்கப்படுகிறார்கள். அரசிலிருந்து பொன்சேக்கா அணிக்கு மாறியோர் மட்டும் துரோகிகளாகிறார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் விலைக்கு வாங்கப்படுகின்றனர் என ஓலமிடும் விமல் வீரவன்ச கூட தன் கட்சி சார்பானவர்கட்கு அமைச்சுப்பதவிகளையும் இன்ன பிற பதவிகளையும் பெற்றவரே. கெஹலிய, ராஜித்த, யாப்பா போன்ற பிரச்சார பீரங்கிகளும் இதே தரத்தில் உள்ளவர்களே.

இச்சந்தர்ப்பத்தை எதிர்க்கட்சிகள் சரியாக சாதுரியமாக பயன்படுத்தவேண்டும். அரச ஊடகங்கள் உருவாக்கியுள்ள கட்சி மாறுதல் தரக்குறைவானதென்ற கருத்தியலை ஆதரிப்பதன்மூலம் கட்சித்தாவுதல் தடைசெய்யப்படுவதன் அவசியத்தை வலியுறுத்தமுடியும். நிறைவேற்றதிகாரம் எவ்வாறு கட்சித்தாவலை இலகுவாக்குகிறது என்பதை தெளிவாக்கவேண்டும்.

ஆனால் ஆட்சியை பிடிப்பது மாத்திரம் இலக்கு என்று கருதுவதன் மூலம் எதிர்க்கட்சிகள் இன்று கிடத்துள்ள நல்லதொரு வாய்ப்பை தவற விடக்கூடும்.

மக்களிடமிருந்து அழுத்தங்கள் வராதவரை அரசியல்வாதிகளும் மாறபோவதில்லை...

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

Election Jokes - 5

"சிறுபான்மை மக்களை வந்தேறு குடிகள் என்று சொன்ன பொன்சேக்காவுக்கு எப்படி சிறுபான்மை மக்கள் வாக்களிப்பது" ஆஸாத் சாலி

பொன்சேக்கா அப்படி சொன்னபோது அரசு அவருக்கெதிராக என்ன நடவடிக்கை எடுத்தது?"பள்ளிகளில் பாங்கு சொல்வதை நிறுத்திய சரத் என் சில்வா, பொன்சேக்காவுடன்..." ஆஸாத் சாலி

பாராளுமன்றத்தில் சட்ட திருத்தத்தை கொண்டுவருவது மூல்ம் பாங்கு சொல்வதை அனுமதிக்க முடியும் என ஹக்கீம் சொன்னபோது, உயர் நீதி மன்ற தீர்ப்பில் தலையிட முடியாது என்று கூறிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச; பெற்றோல் விலைக்குறைப்பு தொடர்பான தீர்ப்பில் உயர் நீதிமன்ற தீர்ப்பை கவனத்தில் எடுக்கவில்லையே.


"நாம் செய்வதை சொல்வோம்.. சொல்வதை செய்வோம்" ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

ஹிஸ்புல்லாஹ்க்கு முதலமைச்சர் பதவி என்றும் ஜனஹமுவவில் சொன்னீர்கள்..


"தோல்வியை தவிர்ப்பதற்காகவே சிலர் பொய்யான் வாக்குறுதிகளை வழங்குகின்றனர்" ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச

= வெற்றி பெறுவதற்காகவே சிலர் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகின்றனர்


"லஞ்ச ஆணைக்குழுவில் நம்பிக்கை இல்லை" விமல் வீரவன்ச

லஞ்ச குற்றச்சாட்டில் மட்டும் நம்பிக்கை போல..


"நாம் அந்த பணத்தை தொடவுமில்லை.. இன்னும் எண்ணிப்பார்க்கவுமில்லை" விமல் வீரவன்ச

எண்ணிப்பார்க்காமலா ஒரு மில்லியன் என்று சொன்னீர்கள்?

Insurance, in law and economics, is a form of risk management primarily used to hedge against the risk of a contingent loss. Insurance is defined as the equitable transfer of the risk of a loss, from one entity to another, in exchange for a premium, and can be thought of as a guaranteed and known small loss to prevent a large, possibly devastating loss. An insurer is a company selling the insurance; an insured or policyholder is the person or entity buying the insurance. The insurance rate is a factor used to determine the amount to be charged for a certain amount of insurance coverage, called the premium. Risk management, the practice of appraising and controlling risk, has evolved as a discrete field of study and practice.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

முஸாமில் லஞ்சக்குற்றச்சாட்டும் கந்தசாமி பட பாதிப்பும்

நேற்றிய தினம் இலங்கை அரசியலில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உச்சத்தை அடைந்தன எனலாம்.

இதில் முதன்மையானது, விமல் வீரவன்சவின் கட்சியை சேர்ந்த முஸாமில்; பொன்சேக்கா அணியில் இணைய ரூபா 30 மில்லியன் வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டாகும். இதில் advance ஆக ஒரு மில்லியன் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்மூலம்; ஒரு பாரளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும் நேற்றுவரை பெரும்பாலான மக்கள் அறியாதிருந்த முஸாமில் தனக்கு தேவையான பிரபல்யத்தை பெற்றுக்கொண்டார்.

இலங்கையில் ஆயிரம் ரூபா நோட்டுக்களும் இரண்டாயிரம் ரூபா நோட்டுக்களும் புழக்கத்தில் இருக்கின்றன. வழங்கப்பட்டதாக் கூறப்படும் லஞ்சம் புதிதாய் அச்சடிக்கப்பட்ட (ஜனாதிபதி தேர்தல் சுவரொட்டி என்று கிண்டலடிக்கப்படும்) ஆயிரம் ரூபா தாள்களாக இருப்பதை பட்ங்களில் காணக்கூடியதாக இருக்கிறது.


ஒரு மில்லியன் ரூபா என்பது 1,000 ஆயிரம் ரூபா தாள்களாகும். எப்போதும் 100 நோட்டுக்கள் ஒன்றாக Bundle செய்யப்படும். எனவே மொத்தம் 10 கட்டுக்கள் மாத்திரமே...(10 மிலியன் என்றால் 100 கட்டுக்கள்) பத்திரிகையாளர் சந்திப்பில் எத்தனை கட்டுக்கள் காட்டப்பட்டன என சரியாக தெரியவில்லை. இருந்தும் அவை 10க்கும் மேற்பட்டவை என்று தெரிகிறது. சிலவேளை 500 நோட்டுக்களும் இருந்தனவோ தெரியாது... :D :D
முஸாமிலுக்கு கொடுக்கப்பட்ட பணம் இதைவிட கூடுதல் தொகையாயிருந்து, அதில் ஒரு மில்லியனை மாத்திரம் அவர் வெளியிட்டிருந்தால், மிகுதிப்பணத்தை அவர் யாருக்கும் தெரியாமல் அனுபவிக்கலாம். (கந்தசாமி பட பாதிப்பு). சரியான பெறுமதியை கொடுத்தவர் ஒருபோதும் (கொடுத்திருந்தால்) சொல்லப்போவதில்லை.

10 மில்லியன் என இணையத்தில் வந்த செய்தி
http://www.colombopage.com/archive_10/Jan1263574120CH.html
http://www.news.lk//index.php?option=com_content&task=view&id=13269&Itemid=44

ஒரு மில்லியன் என அரச பத்திரிகையின் இணைய தளத்தில் வந்த செய்தி
http://www.dailynews.lk/2010/01/16/pol01.asp

பத்திரிகையாளர் மாநாட்டில் கொண்டுவரப்பட்டிருந்த traveling bagஐ பார்க்கும் எந்தவொரு சாமானியன் மனதிலும் இந்த பெட்டி நிறையவா பணம் கொடுத்தார்கள் என்ற பிரமிப்பை உண்டுபண்ணும்.
இதேவேளை கிரிக்கட்டில் அரசு சார்பாக ஊழல் நடபப்தாக முன்னால் கிரிக்கட் வீரர்கள் ஹஷான் திலகரட்ன (ஐதேக அமைப்பாலர்) அர்ஜுன ரனதுங்க (பா.உ.) ஆகியோர் குற்றஞ்சாட்டியிருதனர். அதன்போது ஓய்வுபெறாத கிரிக்கட் வீரர் அரசியலில் ஈடுபடுவது ஒழுக்கமற்றது என ரணதுங்க கூறினார்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

Election Cartoons


நன்றி : வீர்கேசரி, Daily Mirror

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

Election Jokes - 4


"அன்னப்பட்சி இலங்கயில் இல்லை" கீதா குமாரசிங்ஹ

"இந்த அரசாங்கத்தில் சீகிரியவை காணாதவர்கள்தான் இருப்பதாக நினைத்துக்கொண்டிருந்தோம். அன்னப்பட்சி காணாதவர்களும் இருக்கிறார்கள்." ரில்வின் சில்வாவீரவன்ச சொன்ன ஆணியில் சூப் காய்ச்சிய கதை

ஒரு ஆள் தனக்கும் ஆணியால் சூப் காய்ச்சும் வித்தை தெரியும் என்று சொன்னாராம். வாழ்க்கைச்செலவு கூடிப்போய் இருக்கிற காலம் என்பதால் பெண்ணும் காய்ச்ச சொன்னாளாம். அவர் தண்ணீரில் ஆணியை போட்டு கொதிக்கும்போது இதுக்கு கொஞ்சம் மரக்கறி போட்டால் நல்லா இருக்கும் என்று சொன்னாராம், அதன் பின் இறைச்சி போட்டால் நல்லா இருக்கும் என்று சொன்னாராம். இப்படி ஒவ்வொன்றாக சூப் காய்ச்ச சாதாரணமாக தேவைப்படும் அனைத்து பொருட்களையும் வாங்கி சுவையாக சூப் காய்ச்சி கொடுத்தாராம். கடைசியில் அடியில் கிடந்த ஆணிய எடுத்து வீசினாரம்

இக்கதையை சொல்லும்போது பாவிக்கப்பட்ட வாழ்க்கைச்செலவு என்ற சொற்பிரயோகம், வீரவன்ச உண்மையை ஒத்துக்கொள்வதாகாதா?


இளைஞர்கட்கு நாளை என்ற அமைப்பினால் காட்சிப்படுத்தப்படும் விளம்பரங்களில் வரும் வாசகம் "அனுபவமான தலைவருக்கு"

அனுபவம் முக்கியமென்றால் எப்போது / எப்படி இளைஞர்கட்கு வாய்ப்பு கிட்டும்?


இதே இளைஞர்கட்கு நாளை விளம்பரங்களில் தமிழ் கலைஞர்கள் என்று சிலபேர் வருகின்றனர். மக்கள் விரும்பும் விதமாக சொந்தமாக தனித்துவமாக ஒரு படைப்பை செய்ய முடியாத இந்த ஈயடிச்சான் கொப்பிகள் எல்லாம் கலைஞர்களா? கொடும சார்..

அதைக்காட்டிலும் இவ்விளம்பரங்களில் வரும் பொதுமகனின் சொற்களுக்கு வீச்சு அதிகம்.

இதே விளம்பரங்களில் ஊழல் தொடர்பாக ஒரு வார்த்தையேனும் இல்லை!

ஏன் ஊழல் என்ற வார்த்தை கவனமாக தவிர்க்கப்பட்டுள்ளது என்று மக்கள் சிந்திக்கமாட்டார்களா?


மனித உரிமை மீறல்கள் யுத்த குற்றச்சாட்டுக்கள் ஐ பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்வேன் சரத் பொன்சேக்கா

சொல்வதை பார்த்தால் நடந்திருக்கும் போல தெரிகிறதே..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

முத்தம் பற்றிய பாடம்

பதிவுலகில் காலத்துக்கு காலம் ஏதாவது ஒரு topic சூடுபிடிக்கும். சில நாட்களாக சில சின்னப்பையன்கள் காதல், கவர்தல் என இஷ்டத்துக்கு adviceகளை அள்ளித்தெளித்துக்கொண்டிருக்கிறார்கள். (சின்னப்பிள்ள வெச்சுக்கிட்டிருக்கிற லட்டை கூட பறித்து தின்ன நினைக்கிறவங்க சின்னபையன்கள் தானே)

நவம்பர் 2006 இல் save செய்யப்பட்டு கணணியில் பலநாட்களாக உறங்கிக்கொண்டிருந்த (உபயோகப்படுத்த சான்ஸ் கிடைக்கலியே) file ஒன்று சற்றுமுன் தான் கண்ணில் அகப்பட்டது. அதைத்தான் தமிழில் மொழிபெயர்த்து தமிழ்பேசும் நல்லுலகம் பயனுற இலகு தமிழில் உங்களுக்கு அள்ளித்தந்து ஜோதியில் ஐக்கியமாக...
kiss

நான் ரெடி...

ஒரு நிமிடம் முத்தமிட 26 கலோரி செலவாகிறது
(உடம்பை குறைக்க gymக்கு போய் கஷ்டப்படுறவங்க முயற்சி செய்து பார்க்கலாம்)

மொத்தமாக கணக்குபோட்டு பார்த்தால் ஒரு சராசரி மனிதனின் ஆயுளில் 2 வாரகாலம் முத்தமிடுவதிலேயே கழிகிறது.
(ப்பூ இவ்வளவுதானா என்று நினைத்து கணக்குபோட்டுப்பார்த்தால் 2 x 7 x 24 x 60 = 20,160 நிமிடங்கள்)

பெண்களின் புறங்கையில் முத்தமிடுவது மேலை நாடுகளில் ஒழுக்கமாக கருதப்படுகிறது

ஐரோப்பிய நாடுகளில் இரண்டு கன்னங்களிலும் முத்தமிடுவது வாழ்த்துவதற்கான நியம முறையாகும். அது இரண்டு அல்லது நாலாக இருக்கலாம்

கிஸ் என்பதற்கு விஞ்ஞானப்பெயர் philematology
(லோகநாதனுக்கு உபயோகமான தகவல்)

மிக நீளமான முத்தத்திற்கான சாதனை - 29 மனித்தியாலங்கள். மார்ச் 24 1998இல் நியூயோர்க் நகரில் ஒரு போட்டியின்போது நிகழ்த்தப்பட்டது / கொடுக்கப்பட்டது (எப்பிடி வேணுமெண்டாலும் வெச்சிக்கலாம் : குணா கமல்)

தண்ணீருக்கடியில் நீளமான முத்தத்திற்கான சாதனை : 2நிமிடம் 18 செக்கன் ஏப்ரல் 2 1980 இல் டோக்கியோவில்
(ரொம்ப ரகசியமா குடுத்தாங்களோ)

"The Kiss" என்ற படம்தான் முத்தக்காட்சி இடம்பெற்ற முதல் படம்.1896
(முதல் தமிழ்படம் எதுங்க?)

அதி கூடிய முத்த காட்சிகள் இடம்பெற்ற படம் - "Don Juan" (1927). இப்படத்தில் மொத்தமாக 127 முத்தங்களை ஜோன் பெரிமோர் (BarryMORE மோர் என்பது இதுதானா) அஸ்டர், எஸ்டெலே ஆகியோருக்கு வழங்கினார்
(கமல்ஹாசனுக்கு முடியாவிட்டால் அவர் வாரிசு "இச்" படத்தில் இச்சாதனையை முறியடிக்கலாம்)

திரைப்படத்தில் இடம்பெற்ற நீளமான முத்தம் - 3 நிமிடம் 5 வினாடிகளில் - படம் "You're in the Army Now" (1941). என்ன ஆர்மியோ?
(இன்றோ நாளையோ இலங்கை அரச ஊடகங்களில் வெளியாகப்போகும் ஒரு தகவலுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லீங்க)

சில இடங்களில் முத்தமிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் (க்ரைம்)

ஒரு முத்தத்தின் விலை என்ன? இந்த அப்திவை பாருங்கள்

திருடப்பட்ட முத்தத்தின் விலை?

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால தன் பிள்ளை தானே வளரும் என்று சொல்வாங்க.. உங்களுக்கெல்லாம் ஊட்டிட்டேனே...


இதுக்கு வாக்கு போடாட்டி எப்படிங்க .. போடுங்க போடுங்க

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்