"அன்னப்பட்சி இலங்கயில் இல்லை" கீதா குமாரசிங்ஹ
"இந்த அரசாங்கத்தில் சீகிரியவை காணாதவர்கள்தான் இருப்பதாக நினைத்துக்கொண்டிருந்தோம். அன்னப்பட்சி காணாதவர்களும் இருக்கிறார்கள்." ரில்வின் சில்வா
வீரவன்ச சொன்ன ஆணியில் சூப் காய்ச்சிய கதை
ஒரு ஆள் தனக்கும் ஆணியால் சூப் காய்ச்சும் வித்தை தெரியும் என்று சொன்னாராம். வாழ்க்கைச்செலவு கூடிப்போய் இருக்கிற காலம் என்பதால் பெண்ணும் காய்ச்ச சொன்னாளாம். அவர் தண்ணீரில் ஆணியை போட்டு கொதிக்கும்போது இதுக்கு கொஞ்சம் மரக்கறி போட்டால் நல்லா இருக்கும் என்று சொன்னாராம், அதன் பின் இறைச்சி போட்டால் நல்லா இருக்கும் என்று சொன்னாராம். இப்படி ஒவ்வொன்றாக சூப் காய்ச்ச சாதாரணமாக தேவைப்படும் அனைத்து பொருட்களையும் வாங்கி சுவையாக சூப் காய்ச்சி கொடுத்தாராம். கடைசியில் அடியில் கிடந்த ஆணிய எடுத்து வீசினாரம்
இக்கதையை சொல்லும்போது பாவிக்கப்பட்ட வாழ்க்கைச்செலவு என்ற சொற்பிரயோகம், வீரவன்ச உண்மையை ஒத்துக்கொள்வதாகாதா?
இளைஞர்கட்கு நாளை என்ற அமைப்பினால் காட்சிப்படுத்தப்படும் விளம்பரங்களில் வரும் வாசகம் "அனுபவமான தலைவருக்கு"
அனுபவம் முக்கியமென்றால் எப்போது / எப்படி இளைஞர்கட்கு வாய்ப்பு கிட்டும்?
இதே இளைஞர்கட்கு நாளை விளம்பரங்களில் தமிழ் கலைஞர்கள் என்று சிலபேர் வருகின்றனர். மக்கள் விரும்பும் விதமாக சொந்தமாக தனித்துவமாக ஒரு படைப்பை செய்ய முடியாத இந்த ஈயடிச்சான் கொப்பிகள் எல்லாம் கலைஞர்களா? கொடும சார்..
அதைக்காட்டிலும் இவ்விளம்பரங்களில் வரும் பொதுமகனின் சொற்களுக்கு வீச்சு அதிகம்.
இதே விளம்பரங்களில் ஊழல் தொடர்பாக ஒரு வார்த்தையேனும் இல்லை!
ஏன் ஊழல் என்ற வார்த்தை கவனமாக தவிர்க்கப்பட்டுள்ளது என்று மக்கள் சிந்திக்கமாட்டார்களா?
மனித உரிமை மீறல்கள் யுத்த குற்றச்சாட்டுக்கள் ஐ பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்வேன் சரத் பொன்சேக்கா
சொல்வதை பார்த்தால் நடந்திருக்கும் போல தெரிகிறதே..
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
2 comments:
வாசித்தேன் ..சிரித்தேன்
நன்றி கருணையூரான். வருகைக்கும் கருத்துக்கும்..
Post a Comment