Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

Election Jokes 1

ஜனாதிபதித்தேர்தல் இலங்கையில் என்றுமில்லாதவாறு சூடுபிடித்துள்ளது, இந்திய இணையமான தமிழிஷ் இல் கூட ஜனாதிபதித்தேர்தல் விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமையை இதற்கு ஆதாரமாக கொள்ளலாம்.

தேர்தல் பிரச்சாரங்களில் தன் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக நினைத்து தமக்கே எதிராக கருத்துக்களை பரப்புமளவுக்கு நிலமை சென்றுள்ளது.

இவ்வாறான logic இல்லாத பேச்சுக்களின் தொகுப்பே Election Jokes .



சரத் பொன்சேக்காவின் ஊடக பேச்சாளரான மங்கள சமரவீர பற்றி அண்மையில் கட்சி தாவிய எஸ். பி. திசாநாயக்க சில கருத்துக்களை கூறியிருந்தார்.

மங்கள அவர்கள் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் தன் அலுவலக அறையை ஒரு பெருந்தொகை பணத்தில் புனருத்தாரணம் / அழகுபடுத்தல் செய்ததாகவும், இதற்கு முழு அமைச்சரவைவுமே எதிர்ப்புத்தெரிவிக்க ஜனாதிபதி அவர்கள் அந்நிதியை அங்கீகரித்ததாகவும் எஸ்.பி. கூறியுள்ளார்.

முழு அமைச்சரவையையும் எதிர்த்து தனக்கு விருப்பமானதை ஜனாதிபதி செய்துள்ளார் என்றல்லவா இது நிரூபிக்கிறது? இவ்வாறான ஜனாதிபதி அதிகாரங்களை ஒழிப்பதே முக்கிய இலக்காக கூறும் மங்களவின் கருத்துக்கு இது வலுச்சேர்க்காதா?


கடந்த வாரம் தெரண தொலைக்காட்சியில் நடந்த அரசியல் நிகச்சியில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க 2 லட்சம் ரூபாவை வாடைகையாக அரசிடம் இருந்து பெற்றதாக ஐதேகவும் ஜேவிபியும் குற்றஞ்சாட்டியது.

இது தொடர்பாக எதிர்த்து வாதிட்ட ரணவக்கவும் ரம்புக்வெல்லவும் அதை மறுக்கவோ நிராகரிக்கவோ தவறி ஜேவிபி இன் வங்கிக்கொள்ளை பற்றி பேசினார்கள்.

மக்கள் உண்மையில் 2 லட்சம் ரூபா வாடகையாக பெறப்பட்டுள்ளது என்பதை உணர்ந்துகொள்வர் என்பதை இவர்கள் அறியவில்லையா?

இரு தசாப்தங்களுக்கு முன் நடந்த குற்றங்கள் பற்றி பேசும்போது சிலவருடங்களுக்கு முன் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சிலரை எவ்வாறு அரச பதவிகளில் வைத்திருக்கலாம் என்ற கேள்வியெழும்புமல்லவா?


தம்பர அமில தேரர், வெளிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டார் என்று குற்றங்சாட்டி கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக அரச தொலைக்காட்சிகளில் பாதிக்கப்பட்ட் மக்களை பேட்டிகண்டபோது அவர்கள் தேரரின் வாகன சாரதியிடமே பணம் கொடுத்ததாக கூறினர்.

அப்படியாயின் ஏன் சாரதியை கைது செய்வதை விடுத்து தேரரை கைது செய்துள்ளார்கள் என்ற கேள்வியெழும்புமல்லவா?


பொதுவேட்பாளர் சரத் பொன்சேக்கா இராணுவ தளபதியாக இருந்தபோது சிறுபான்மை மக்கள் தொடர்பாக கூறிய கருத்துக்களை இன்று சில அரசில் அங்கம் வகிக்கும் சில சிறுபான்மையின அரசியல்வாதிகள் விமர்சிக்கிறார்கள்.

ஏன் இதை அவர் இராணுவ தளபதியாக இருக்கும்போதே எதிர்க்கவில்லை என்றும் அவரை பதிவி நீக்குமாறு அன்று அரசை நிர்ப்பந்தித்திருக்கலாம் என்றும் சிறுபான்மை மக்கள் கேட்கமாட்டார்களா?




ஜனாதிபதியை சரத் பொன்சேக்காவுடன் விவாதிக்க வருமாறு சோமவன்ச அழைத்திருந்தார். இத்ன் பின் ஒலிபரப்பு கூட்டுத்தாபன பணிப்பாளர் ஹட்சன் சமரசிங்ஹ தான் நடாத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிங்கம் பன்றியுடன் சண்டைக்கு போகாது என்று கூறியிருந்தார்.

சென்றவாரம் பொன்சேக்காவை தன்னுடன் விவாதிக்க வருமாறு விமல் வீரவன்ச அழைத்தார். அதற்கு பொன்சேக்கா தரப்பின் பதிலும் சிங்கம் பன்றியுடன் விவாதிக்காது என்றே இருந்தது.

அடுத்த நாள் வீரவன்ச சிங்கத்துக்கு வரமுடியாவிட்டால் காகத்தையோ அல்லது வேறொரு மிருகத்தையோ விவாதிக்க வருமாறு மீண்டும் அழைத்தார்.

இதன்மூலம் தான் பன்றி என்று ஏற்றுக்கொள்வதாகாதா?

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

2 comments:

அஸ்பர் said...

ஒரு பக்கம் சாய்ந்துள்ளமாதிரி ஒரு feeling.இது எனது முதல் வருகை

EKSAAR said...

நன்றி அஸ்பர் வருகைக்கும் கருத்துக்கும்..

சார்ந்து எழுதவில்லை.. இந்த சில நாட்களில் என் அவதானத்தை கவர்ந்தவை இவை..

தொடர்ந்து உங்கள் கருத்துக்களை அறியத்தாருங்கள்..