கடந்த இரண்டு நாட்களாக
ஜேவிபியும் ஜனாதிபதித்தேர்தலும்
முஸ்லிம் காங்கிரசும் ஜனாதிபதிதேர்தலும்
என இரண்டு கட்டுரைகளை பார்த்தோம்.
பொன்சேக்கா அணிக்கு கிடைக்கும் வாக்குகளில் பல கட்சிகள் உரிமை கோரலாம். ஆனால் மஹிந்த அணிக்கு வரும் வாக்குகளை அவ்வாறு எந்தவொரு கட்சியும் உரிமை கோரமுடியாது.
அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு மற்றும் யுத்த வெற்றி என்பன மஹிந்தவின் முக்கிய பலங்கள். இவற்றுள் முதல் இரண்டிற்கும் யாரும் பங்குதாரர்கள் இல்லை என்பது முக்கியமான விஷயம்.
ரணிலின் ஆட்சிக்காலப்பகுதியில் அபிவிருத்திகளும் தொழில் வாய்ப்புகளும் இடைநிறுத்தப்பட்டிருந்ததை இன்னும் மக்கள் மறக்கவில்லை. ஆனால் ஜனாதிபதி அவர்கள் யுத்தத்துக்கு சமாந்தரமாக இவை இரண்டையும் வெற்றிகரமாக முன்னெடுத்தார் என்பது முக்கியமான விடயம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திக்கு தெளிவான அத்தாட்சிகள் இருக்கின்றன. எந்தப்பிரதேச மக்களும் தமது பிரதேசத்தில் அபிவிருத்தி பணிகள் நடைபெறவில்லை என்று சொல்ல முடியாத அளவுக்கு ஜனாதிபதி அவர்கள் இப்பணியை சீராக மேற்கொண்டுள்ளார்கள். இவற்றுள் பாதை அபிவிருத்தி மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
ஜனாதிபதி தமிழில் பேசத்தொடங்கியிருப்பது தமிழ் பேசும் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுத்தந்துள்ளது. அவர் தமிழை சரியாக உச்சரிக்கிறாரோ இல்லையோ, தமிழ் பேசும் ஆர்வத்திற்கு ஆதரவு இருக்கிறது. இவரது மகன் நாமல் ராஜபக்ச கூட இப்போது கூட்டங்களில் தமிழில் பேசத்தொடங்கியுள்ளார்.
மக்களிடையே தான் உங்களில் ஒருவன் என்பதை எங்கு சென்றாலும் பொதுமக்களுடன் கைகுலுக்குவது, சிறு பிள்ளைகளை தூக்குவது என பல சிறிய விடயங்கள் மூலம் அடிக்கடி உணர்த்துவதும் இவர் பலம்.
ஆயினும் இவருடன் எப்போதும் ஒட்டிக்கொண்டிருக்கும் சம்பிக்க ரணவக்கவும், சிறுபான்மை மக்க்ளின் வாக்குகளை மஹிந்த பெறுவதற்கு தடையாக இருப்பார்.
இதன் காரணமாகத்தான் பொன்சேக்கா அணி குடும்ப அரசியல், மெகா அமைச்சரவை என்று குறிப்பிட்ட விடயங்களில் மட்டும் கவனத்தை செலுத்துகிறது.
இவை ஜனாதிபதிக்கு சவாலாக அமையுமா என்பதே இன்றுள்ள கேள்வி
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment