நேற்று, இந்த ஜனாதிபதித்தேர்தலில் ஜேவிபியின் பங்கு பற்றி பார்த்தோம். இன்று பொன்சேக்கா அணியின் முக்கியாமான் 3தூண்களில் ஒன்றான முஸ்லிம் காங்கிரஸ் பற்றி பார்ப்போம்.
வட கிழக்கில் வாழும் முஸ்லிம்களிடையே மிகப்பிரபலம் மிக்க கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் இருக்கிறது. அரசு யுத்த காலப்பகுதியில் கிடைத்த வெற்றிகளுக்கு சமாந்தரமாக தேர்தலை நடாத்தியபோது, கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் அரசுக்கு மிகப்பெரும் சவாலாக முஸ்லிம் காங்கிரஸ் இருந்தது. திருகோணமலை மாவட்டத்தில் ஐதேக வெற்றி பெற்றது இதனை உறுதிப்படுத்துகிறது. இதை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் பெற்றுக்கொடுத்தார்.
அண்மைக்காலமாக முஸ்லிம் காங்கிரஸ்க்கு சவாலாக அமைவது முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்றவர்களே. அவர்களில் பலர் இந்த அரசாங்கத்தில் இருப்பதால் அச்செல்வாக்கு மூலம் தொழில் வாய்ப்புகளையோ அபிவிருத்தி பணிகளையோ மேற்கொண்டு மக்களிடையே செல்வாக்கு
பெற்றிருக்கிறார்கள்.
இப்பிராந்திய அரசியலில் முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயரைத்தவிர்த்து பார்ப்பது முடியாத விடயம். முஸ்லிம் காங்கிரஸின் எதிரிகளுக்கே முஸ்லிம் காங்கிரஸ் என்ற பதத்தை தவிர்த்து அரசியல் செய்ய முடியாது. இதனால்தான் பல கட்சிகள் நாங்கள் தான் உண்மையான முஸ்லிம் காங்கிரஸ் என்று உரிமை கோரிக்கொண்டு தோற்றம் பெற்றிருக்கின்றன.
இந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சில முக்கியமான கருத்துக்களை பிரச்சாரம் செய்தது. "மக்களை வழிநடத்துவதே தலைமை" என்று கூறி அதனூடாக "எய்தவனை நோவதா, அம்பை நோவதா" என்ற கேள்வியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இது பெருமளவுக்கு எடுபட்டுள்ளதாக தெரிகிறது. அத்துடன் சேகு இஸ்ஸதீன் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸ் இல் இணைந்துள்ளது முஸ்லிம் காங்கிரஸை பலப்படுத்தியுள்ளது.
இத்தேர்தலில் பெரும்பான்மை முஸ்லிம்களின் ஆதரவை பெற்ற கட்சி என்ற வசனப்பிரயோகத்தினூடாக முஸ்லிம் காங்கிரஸ் ஜனநாயகத்தை ஆதரிப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஏகப்பிரதிநிதிகள் என்ற சொல்லாடலுக்கும் பாசிசத்திற்குமிடையே பெரிய வேறுபாடு இல்லை என அண்மையில் கட்சி முக்கியஸ்த்தர் பஷீர் சேகுதாவூத் கூறியிருக்கிறார்.
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment