Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

ஜேவிபியும் ஜனாதிபதித்தேர்தலும்

மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) இன்று ஜனாதிபதித்தேர்தலில் சரத் பொன்சேக்கா அணியில் முக்கிய இடம் வகிக்கிறது.

ஜேவிபி என்றதும் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருவது சுவரொட்டி. அந்தளவுக்கு அவர்கள் சுவரொட்டியின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். எப்போதும் ஜேவிபியின் கூட்டங்களில் பெருமளவு மக்கள் பங்குபற்றுவார்கள். ஒரு பிரச்சார கூட்டம், அல்லது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் எதையும் குறுகிய கால அவகாசத்தில் அசத்தலாக செய்து முடிப்பவர்கள். பல்கலைக்கழக மட்டத்தில் மாணவர்களிடையே பெரும் செல்வாக்கு கொண்டவர்கள். மேடைப்பேச்சுக்களில் அவர்களைப்போல் சிறந்தவர்கள் இல்லை.

ஆனால்

தேர்தல் என்று வந்துவிட்டால், கடைசியில் கிடைக்கும் வாக்கு கூட்டங்களுக்கு வந்த சனக்கூட்டத்தை விட குறைவாக இருக்கும்! அது ஏன்?

அரசியல்வாதிகள் மக்களை பிரதிபலிக்கிறார்கள் என்பர். இலங்கை மக்களிடையே நேர்மையான அரசியல் பற்றிய பேச்சு இருந்தாலும், பெரும்பாலானவர்கள் இவ்வரசியல் மூலம் தமது சுய நலன்களை முன்னிறுத்துகிறார்கள். அரசியல் செல்வாக்கு மூலம் ஒரு தொழிலைப்பெறல் என்பதுதான் தீவிர அரசியலில் ஈடுபட முக்கியமான காரணம்.

ஜேவிபி ஆதரவாளர்கட்கே தெரியும், ஜேவிபி ஆட்சிக்கு வந்தால் எந்தவொரு தனிநபர் நலனையும் முன்னிறுத்த முடியாது போகும் என்பது. எனவே அரசியல் நெளிவு சுழிவு என்று நாகரீகமாக சொல்லப்படும் அல்லது யதார்த்தம் என்ற பதத்தின் கீழ் அடக்கப்படும் "தனி நபர் நலன்களை" ஜேவிபிக்கு வாக்களிப்பதன் மூலம் உறுதிப்படுத்த முடியாது.

எனவேதான் ஜேவிபி தனி்த்து கேட்கும்போது எதிர்பார்த்த அளவு பிரகாசிப்பதில்லை. ஆனால் ஏதாவது நெளிவு சுழிவு தெரிந்த கட்சியுடன் சேரும்போது மக்கள் வாக்குகளை ஜேவிபியின் வேட்பாளர்கட்கு அள்ளி வழங்குகிறார்கள்.

மஹிந்த அரசாங்கதை உருவாக்குவதில் ஜேவிபி மிகப்பெரும் பங்கு வழங்கியது. அதன் பின் இந்திய வாகனங்களை, அதன் உறுப்பினர்கள் பெற்றபோது பெரும் எதிர்ப்பை சம்பாதித்தது. இதன்பின் இன்னும் சில காரணங்களுக்காகவும் தனது தீவிர ஆதரவாளர்களின் நம்பிக்கையை இழக்காமலிருக்க மஹிந்த அரசிலிருந்து விலகிக்கொண்டது. ஆயினும் எதிர்க்கட்சியிலிருந்த படியே மஹிந்த அரசு கவிழாமல் இருப்பதை உறுதி செய்தது.

இதன்மூலம் பெரும்பாலான மக்களிடையே அது தார்மீக கடமையை செய்யும் கட்சியாக பெயரெடுத்தது. மஹிந்த அரசின்மீது வெளிநாட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலெல்லாம், அரசுக்கெதிராக, வெளிநாட்டு சக்திகளுக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடாத்தி, மஹிந்த அரசு "மக்கள் எதிர்க்கிறார்கள்" என்று சொல்லி தப்புவதற்கு போதுமான வாய்ப்புகளை வழங்கியது.

மஹிந்த அரசுக்கு முட்டுக்கொடுத்துக்கொண்டிருந்த ஜேவிபி இன்று தேசத்துரோக அணியில் சேர்ந்திருப்பதாக அரசு குற்றஞ்சாட்டுகிறது. ஆயினும் இது மக்களிடையே எவ்வளவு தூரம் எடுபடும் என்பது கேள்விக்குறியே.



இந்த தேர்தலில் பொன்சேக்கா அணி அணி தெற்கில் பெறும் வாக்குகளுக்கு ஜேவிபியின் பெரும் பங்கு இருக்கப்போவது நிச்சயம். பொன்சேக்காவின் இரு ஊடக பேச்சாளர்களிடையே ஜேவிபியின் அநுர குமார திசாநாயக்கவும் ஒருவர்.

பொன்சேக்காமீது யுத்த குற்ற காட்டிக்கொடுப்பு பற்றிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது, ஜேவிபி "அதைபற்றி கவலைப்படவேண்டாம், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்" என்றி சிம்பிளாக சொன்னதாக ஆங்கிலப்பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

ஆனால் அதே அநுர குமார திசாநாயக்கவும் பொதுக்கூட்டம் ஒன்றில் "மஹிந்தவின் வெற்றி உறுதியானது" என்று வாய்தவறியேனும் கூறியது என்ன விளைவை ஏற்படத்தியிருக்கிறது என்பது தேர்தலின் முடிவின் பின்னரேயே தெரியும்..

Google இல் JVP என்று தேடிப்பார்த்தால் 
Buy Accutane canadian pharmacy no prescription
என்று வருகிறது

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

0 comments: