Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

Election Jokes 2

என்னுடைய Election Jokes 1 பதிவில் சரத் பொன்சேக்காவை ஆயுத ஊழல் தொடர்பாக பகிரங்க விவாதத்திற்கு விமல் வீரவன்ச அழைத்தமை பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

சிங்கம் பன்றியோடு சண்டைக்கு போகாதென பொன்சேக்கா அணியினர் கூற; பிற விலங்குகள் கூட வரலாம் என விமல் மீண்டும் அழைத்திருந்தார்.

இந்த சவாலை எவரும் எதிர்பார்க்காதவிதமாக ஐதேகவின் தயாசிறி ஏற்றுக்கொண்டார். (இவர் என்ன விலங்கு?)

இவ்விவாதம் 08.01.2010 வெள்ளியிரவு சுவர்ணவாஹினியில் விஷேட "ரத்து இர" நிகழ்ச்சியில் இடம்பெறும் என்ற விளம்பரம் சுவர்ண்வாஹினி குழுமத்தின் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.

இது தொடர்பான சுவ்ர்ணவாஹினியின் செய்தியில் வந்த அறிவித்தல். செய்தியின் 13ஆம் நிமிடத்தில் இது ஆரம்பிக்கிறது



நானும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு காத்திருந்தேன்.

இப்பொழுது இலங்கையில் அரசியல் நிகழ்ச்சிகள் இன் WWF போல் buildup உடன்தான் நடைபெறுகின்றன. சிரச தொலைக்காட்சியின் "சட்டண" நிகழ்ச்சியைப்போல் பிரமுகர்கள் வாகனத்தில் வந்து இறங்குவது முதல் சில clippingகளை காட்டி மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்த முயல்கிறார்கள்.

முதலாவது அதிர்ச்சி சுமார் 9.45 ம்ணியளவில் இருந்தது. நிகழ்ச்சிக்கு முதலாவதாக வந்த பிரமுகர் ராஜித சேனாரத்ன. விமலுக்கும் தயாசிறிக்குமான விவாதமாகவே என்னைபோல் பலர் எண்ணியிருக்க இவர் ஏன் வருகிறார் என்று குழம்பிப்போயிருந்தேன்.

அதன் பின் தயாசிறி வந்திறங்குவதும் அவர் ராஜித்த வந்திருப்பதை அவதானிப்பதும் காண்பிக்கப்பட்டது.

நிகழ்ச்சி ஆரம்பிக்க சுமார் 20 நிமிடம் தாமதமேற்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் chat roomகளில் இவ்விவாதம் பற்றிய பேச்சே இருந்தது மிகுந்த சுவாரசியம்.

நிகழ்ச்சி ஆரம்பமான்தும் தயாசிறி தான் விவாதத்திற்கு தயாராக வந்திருப்பதாகவும் ஆனால் தான் எப்போதும் சொல்லிவந்ததுபோல ராஜித அல்லது விமல் இருவரில் ஒருவருடன் மட்டும்தான் விவாதிக்க தயார் என்றார்.

ராஜித இரண்டுபேருக்கான நேரத்தை தயாசிறிக்கு வழங்கி நிகழ்ச்சியை நடாத்தலாம் என்று கூறியது தயாசிறியால் நிராகரிக்கப்பட்டது.

தயாசிறி; தான் மணப்பெண்ணுடன் "வேலை"க்கு தயார் எனவும் அவ்வேலையை மணப்பெண் தோழியையும் சேர்த்து செய்ய முடியாது என்றும் கிண்டலடித்தார்.

வீரவன்ச தரப்போ அரசு என்பது ஒரு தனி நபர் அல்ல என்றும் குழுவாகவே விவாதிக்க முடியும் என்றுஒற்றைக்காலில் நின்றது.

வாத பிரதிவாதங்களிடயே எப்படி யாருடன் விவாதிப்பது என்று முடிவுகாண (நிகழ்ச்சி நியம நேரத்தை விட சுமார் 40 நிமிடம் கடந்தபின்) விளம்பர இடைவேளை எடுக்கப்பட்டது.

இந்த விளம்பர இடைவேளைதான் சுவர்ணவாஹினியின் திட்டத்தை வெட்டவெளிச்சமாக்கியது. ஏராளமான விளம்பரங்கள் இச்சந்தர்ப்பத்தில் காண்பிக்கப்பட்டது சுவர்ணவாஹினீன் முழுமையான வர்த்தக நோக்கை காட்டியது. நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இவ்விவாதத்தை பயன்படுத்தி வருமானத்தை தேடிக்கொள்ள காட்டிய ஆர்வத்தின் ஒரு பகுதியையேனும் சுவர்ணவாஹினி இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடாத்த காட்டவில்லைஎன்பது நிரூபணமா ஆனது.

யார் விவாதிப்பது என்று சண்டை முடிவுக்கு வரவே 11.45 ஆகிவிட்டது. கடைசியில் அரச தரப்பு குற்றச்சாட்டுகளை இன்று முன்வைக்க ஒரு மணிநேரம் வழங்கப்படும் எனவும் இதற்கு பதிலளிக்க எதிர்வரும் வாரம் தயாசிறி தலமையிலான இருவர் கொண்ட அணிக்கு ஒரு மணி நேரம் வழங்கப்படும் என்றும் தொகுப்பாளர் கூற அதை ஏற்றுக்கொண்ட தயாசிறி நிகழ்ச்சியின்போதே எழுந்து சென்றார். அவர் சென்றபின் விமல் அணியின எதிர்த்தரப்பு இல்லாத நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தாம் தயாரில்லை எனவும் ஆளும்கட்சி கலந்துகொள்ளாத நிகச்சியில் எதிர்க்கட்சியை மாத்திரம் கருத்துச்சொல்ல அனுமதிக்காமல் மீண்டும் அடுத்தவாரம் இரண்டு தரப்பிலும் இவ்விருவராக நிகச்சி நடாத்தப்பட வேண்டும் என்றும் கூறினார்.









கடைசியில் இரவு 12 மணிவரை எம்மையெல்லாம் விழிக்கவைத்து விளம்பரங்களையெல்லாம் பார்க்கச்செய்த நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

Reality Show பாணியில் நிகழ்ச்சியை பற்றிய எதிர்பார்ப்பை எகிறச்செய்து விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கும் ஒரு கீழ்த்தரமான வர்த்தக உத்திக்கு என்னைபோல் பலர் ஏமாற்றப்பட்டதுதான் நிஜம்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

5 comments:

asfer said...

விளம்பரங்கள் போடுவதை நீங்கள் ஏன் பிழையாக பார்க்குறீர்கள். அது அவர்களின் தொழில்.. விளம்பரம் போடாத ஊடகம் ஏதும் இருக்கா என்ன. பதிவு ஏமாற்றம் தந்தது

EKSAAR said...

இல்லை அஸ்பர்,
காசு உழைப்பதில் காட்டியிருந்த ஆர்வத்தை அவர்கள் நிகழ்ச்சியை வழங்குவதில் காண்பிக்கவில்லை. நிச்சயமாக எவரும் இருவருடன் விவாதிக்கமாட்டார்கள்தானே.. அதுவும் விமல் ராஜித்த போன்ற குழப்படிகாரர்களுடன்.. இந்நிகழ்ச்சி நடந்திருந்து விளம்பரங்கள் வந்திருந்தால் பிரச்சினை இல்லை. சுவர்ணவாஹினிக்கு ஆரம்பம் முதலே நிகழ்ச்சி நடைபெற வாய்ப்பில்லை என்று தெரிந்திருக்கும். அதைத்தான் கண்டித்திருக்கிறேன்.

அஸ்பர் தொடர்ந்தும் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். பதிவுகளை மேம்படுத்த உதவும்

ramanes said...

Eamandadu neenga ... eamathunavungala kutram solla koodadu.. edukku piragum neenga eamaruvinga... paarpoma... ?????

ARV Loshan said...

ஹா ஹா ஹா .. நல்ல நகைச்சுவை.. உருப்படியா வேற ஏதாவது வேலை பார்த்திருக்கலாம்..

EKSAAR said...

நன்றி Ramsh , நீங்கள் சொல்வதும் சரிதான்.. 100% உடன்படுகிறேன்..

நன்றி லோஷன் அண்ணா,
அன்று ஒரு கொஞ்சம் early ஆக தூங்க இருந்தேன். இருந்தும் நிகழ்ச்சிக்காக 12 மணிவரை காத்திருந்து ஏமாந்ததில், அதற்கு பின் தூக்கம் வரவில்லை. அந்த ஆத்திரத்தில் நடுநிசியில் எழுதியது..