Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

லோஷனின் தோராயமான மதிப்பு 9,782/-


லோஷனின் தீவிர விசிறிகளே வந்துட்டீங்களா? என்னை உங்கள் வலைப்பதிவுக்கு வரவேண்டாம் என்று சொன்னவங்களும் நல்ல chance கெடச்சிருக்கு.. கும்மலாம் என்று வந்திருப்பீங்களே..

மிச்சத்தையும் வாசிங்க..

உங்கள் வலைப்பதிவின் மதிப்பு எவ்வளவு?

அதன் Traffic Rank என்ன?

அதன் PageRank என்ன?

ஒவ்வொரு நாளும் எத்தனை பேர் பார்வையிடுகிறார்கள்

எந்த எந்த நாடுகளில் இருந்து பார்வையிடுகிறார்கள்

என்று அறியணுமா இந்த முகவரிக்கு போங்க..

http://www.websiteoutlook.com

அப்படி நான் பார்த்த லோஷன் என்ற தலைப்பிலான வலைப்பூவின் மதிப்புத்தான் தலைப்பு. அது ரூபா இல்ல அமெரிக்க டாலரில் என்பதை கவனத்தில்கொள்க..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

பதிவர் சந்திப்பு 13-12-2009

 

இடம் : தேசிய கலை இலக்கியப் பேரவை, வெள்ளவத்தை (ரொக்சி திரையரங்கு முன்னால்)

காலம் : மார்கழி பதின்மூன்று, மாலை இரண்டு மணி, ஞாயிற்றுக் கிழமை ( 13-12-2009 )



மேலதிக விபரங்கள் http://subankan.blogspot.com/2009/11/blog-post_24.html

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

வட இந்திய குஜராத் மாநிலத்தைச் சார்ந்த


அறிவிப்பாளர் லோஷனுக்கு சாகித்திய விருது கிடைப்பது பற்றிய செய்தியை நேற்று வந்தியத்தேவனின் உளறல்கள் மூலம் அறிந்தேன்.

அத்துடன் இலங்கையின் மூத்த படைப்பாளியான மேமன் கவிக்கும் சாகித்திய விருது கிடைக்கிறது.

உளறல்களில் இந்த மேமன் கவியை அறிமுகப்படுத்தும்போது பயன்படுத்திய "வட இந்திய குஜராத் மாநிலத்தைச் சார்ந்த" என்ற சொற்றொடர் எனக்கு பிடிக்கவில்லை.

இலங்கையை சேர்ந்த படைப்பாளியை வெறுமனே இலங்கையின் மேமன் சமூகத்தை சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்தியிருக்கலாம். ஆனால் இந்திய என்ற சொற்றொடர் அவரை பிரித்து வைக்கிறது என்பது என் கருத்து.

குறிப்பிட்ட் பதிவிற்கு நான் இட்ட பின்னூட்டத்தில் லோஷன் அண்ணாவுக்கு வாழ்த்து தெரிவித்தும் இச்சொற்றொடரை எதிர்த்தும் பின்னூட்டமிட்டிருந்தேன்.

இருந்தும் 24 மணித்தியாலம் கழிந்தபின்னும் அப்பின்னூட்டம் இதுவரை பிரசுரிக்கப்படவில்லை.

அத்துடன் "வட இந்திய குஜராத் மாநிலத்தைச் சார்ந்த" என்ற சொற்றொடரும் இதுவரை நீக்கப்படவில்லை. அல்லது இன்னமும் நியாயப்படுத்தப்படவில்லை.

தன்னால் எழுதப்படுத்தப்பட்ட ஒரு கருத்தை நியாயப்படுத்த முடியாத பதிவர்களுக்கும் சாகித்திய விருதுபெறும் லோஷனின் எழுத்துக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

சுவிஸ் கலநதுரையாடலும் ஊடகங்களும்



சுவிஸ்ஸில் இடம்பெற்ற தமிழ் பேசும் மக்களை பிரதிநிதிப்படுத்தும் கட்சிகளிடையேயான கலந்துரையாடல் பற்றி வித விதமான கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இது தேவையான முயற்சி என்பதில்  எவ்வித ஐயமுமில்லை. யுத்தவெற்றிக்குப்பின்; இனிவருங்காலத்தில் கூர்மையடையக்கூடிய பேரினவாதத்துக்கு எதிராக எல்லா கட்சிகளும் சேர்ந்து செயற்படுவது மிக அவசியமாகும். எல்லா விடயங்களிலும் இணக்கம் காணப்படும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம். இருந்தும் சிறுபான்மை மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் விடயங்களில் கட்டாயமாக ஒத்திசையவேண்டியது அவசியமாகும். இல்லாவிட்டால் இச்சிறுபான்மை மக்களை மட்டும் அடிப்படையாகக்கொண்ட இத்தனை தலைவர்களினதும் தலைமைப்பதவியைக்கூட தக்க வைக்காமுடியாமல் போகும். எனவே பொதுவாக மக்களின் நலனுக்கும் இக்கட்சிகளின் சுயநலத்துக்கும் இவ்வாறான கலந்துரையாடல் மிக அவசியம். (WIN WIN SITUATION)


இக்கலந்துரையாடல் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதில்கூட நிறைய வேறுபாடுகளை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

Daily Mirror ஆங்கில பத்திரிகையின் இணையத்தில் வெளியான இக்கலந்துரையாடல் தொடர்பான படத்திற்கு வந்த பின்னூட்டங்கள் நடுத்தர சாமானியனின் எண்ணங்களை எல்லா திசைகளிலும் வெளிப்படுத்தின எனலாம்.

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=68620


இருந்தும் இதில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள தமிழ் பேசும் மக்களுக்கான ஊடகங்கள் இக்கலந்துரையாடல் தொடர்பாக மக்களின் கருத்தை பிரதிபலிக்கவில்லை. அத்துடன் மக்களின் கவனத்தை இதன்மீது குவியச்செய்வதன் மூலம் இத்தலைவர்களை இணக்கப்பாடொன்றிற்காக நெருக்குதலுக்குள்ளாக்ககூடிய தார்மீக கடமையையும் செய்யவில்லை. மாறாக இதில் எதையும் எதிர்பார்க்கவேண்டாம் என்ற கருத்தையே பரப்பின.

முக்கியமாக சக்தி ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் இக்கலந்திரையாடலுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டது. சம்பளப்பிரச்சினை இதில் ஆராயப்படவில்லை என்று குற்றம்சாட்டியது. இதுவரை நாளும் என்ன செய்தன இக்கட்சிகள் என்று கேள்வியெழுப்பியது.

அரசியல் பிரவேச ஆசை மிகுந்துள்ள ரங்கா இவ்வகைச்செய்திகளை வெளியிடச்செய்திருக்கலாம். மே மாத கடைசி மின்னல் நிகழ்ச்சியில் சில ஊடகங்கள் புதிய பாதைய / தலைமையை இனங்காட்டுவதாகவும் அவ்வாறு செய்யவேண்டிய அவசியமில்லை என்வும் பரப்புரை மேற்கொண்ட இவர், அண்மைக்காலமாக மக்கள் அவரை அரசியல் பிரவேசம் செய்யுமாறு வலியுறுத்துவதாக காண்பிக்க பகீரத பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறார்.

அண்மையில் தென்மாகாண சபை தேர்தலின் பின்னான மின்னலில் தங்கள் ஊடக வல்லமையை காண்பிப்பதாக நினைத்து தமது அரசியல் நோக்கங்களை மரிக்காருடன் சேர்ந்து நிர்வாணமாக்கி காட்டியிருந்தார்.

இது வரை சாத்தியப்படாத தமிழ் பேசும் கட்சிகளிடையேயான கருத்தொற்றுமை இனி ஏற்படத்தேவையில்லை என்ற பாணியில் இவ்வூடகம் வெளியிடும் கருத்து இதுவரை அரசியலில் ஈடுபடாத நீரும் இனி ஈடுபடவேண்டிய அவசியம் இல்லை என்றும் சொல்வதை புரிந்துகொள்ளாமை வெட்கமே.

அத்துடன் இரண்டு நாய்களின் கதையை பெரும்பாலான நிகழ்ச்சியில் சொல்லிவரும் இவரது இதயசுத்தியையும் இச்செய்திகள் கேள்விக்குட்படுத்துவதைக்கூட இவர் அறியவில்லை.

ஒருவேளை இக்கலந்திரையாடலுக்கான EXCLUSIVE COVERAGE RIGHTஐ இந்த ஊடகத்துக்கு வழங்கியிருந்தால் எல்லாமே தலை கீழாக சொல்லப்பட்டிருக்கும்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

நிதி திரட்டும் முயற்சிகள் பற்றிய எனது பார்வை..


அண்மைக்காலமாக நான் அவதானித்த சில நிதி திரட்டும் முயற்சிகள் பற்றிய எனது பார்வை..

ஆதவன் திரைப்படம்; வெளியாவதற்கு முதல் நாளிரவு ஒரு அரச பாடசாலை சார்பான அமைப்பொன்றுக்கும் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றுக்குமாக நிதி திரட்டுமுகமாக வெவ்வேறு திரையரங்குகளில் விஷேட காட்சியாக காண்பிக்கப்பட்டது.

இதற்கான டிக்கட் ரூபா 500/- க்கு விற்கப்பட்டது. இதன் மூலம் கிடைக்கும் வருமானம் இவ்வமைப்புகளின் ஏதாவது ஒரு தேவைக்கு பயன்படும். அது ஒரு முக்கியமான தேவையாகவும் இருக்க முடியும். இருந்தாலும் இது தொடர்பாக எனது கருத்தை எழுதுவது அவசியமாகிறது.

என்னுடைய பார்வையில் இவை

பண விரயம்
ஒவ்வொருவரினதும் பொருளாதாரம் சிரிப்பா சிரிக்கும் இக்காலத்தில் விலை அதிகம் கொடுத்து திரைப்படம் பார்க்கவேண்டியதன் அவசியம் என்ன?

விலை அதிகமான இந்த டிக்கட்டை விற்க ஏமாற்றுதல் -
திரைப்படத்தின் முதற் காட்சியை காண்பது ஏதோ முக்தி பேறு போல் காண்பிக்கப்படுகிறது. விளம்பரம் செய்யப்படுகிறது. இதன் மூலம் இந்தியப்பாணியிலான மூளைச்சலவை செய்யப்பட்ட ரசிகர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

இக்காட்சிகள் Late night show ஆகவே இருக்கின்றன. பிள்ளைகள் அடம்பிடித்து படம் பார்க்கச்செல்கிறார்கள். இரவு 1 மணிக்கு வருகிறார்கள். அதுவரை வீட்டில் அம்மா அப்பா நிம்மதியாக உறங்க முடியுமா? வயது வந்த பிள்ளைகள்தான் என்று எந்த அம்மா அப்பாவாவது நிம்மதியாக இருப்பார்களா?

டிக்கட்டுகளை விற்பதற்கு மாணவர்களை பயன்படுத்தல்

நேற்று காலையில் ஒரு வானொலி விளம்பரம். மேலே குறிப்பிட்ட தனியார் கல்வி நிறுவனம் இரவுக்களியாட்டத்திற்காக வானொலியில் விளம்பரம் செய்து அழைக்கிறது.

பெண்களுக்கு அனுமதி இலவசமாம்!

ஏன் பெண்களுக்கு அனுமதி இலவசம்? பெண்கள் வந்தால்தான் ஒரு கவர்ச்சி. பெண்கள் வருவார்கள் என்றால்தான் ஆண்களும் வருவார்கள். வந்து என்ன செய்வார்கள்? விளக்கமாக சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

இதை ஒரு ஒன்றுகூடல் நிகழ்வாக கூறக்கூடும். குறிப்பிட்ட நிறுவனத்தின் ஒன்று கூடலாயின் எதற்கு வானொலியில் விளம்பரம்?

எங்கள் நிறுவனத்தில் படிக்கும் fashionஆன குட்டிகள் வருவார்கள். நீங்களும் வாருங்கோ என்ற அழைப்புத்தானே இது? அல்லது ஒன்றுகூடல் நிகழ்ச்சியென்றால் எல்லாரும் அம்மா அப்பா மற்றும் மனைவி பிள்ளைகளோடு வரலாமே?

யாராவது இவர்கள் அனைவரும் வயது வந்தவர்கள் என்று வாதிடக்கூடும். ஆம் வயது வந்தவர்கள்தான். அவர்கள் விரும்பினால் எதையும் செய்யலாம். ஆனால் எதற்காக ஒரு கல்வி நிறுவனம் ஒழுங்குசெய்கிறது? மாமா வேலை!

இவ்வாறான கேவலமான சமூக விழுமியங்களை சிதைக்கும் உத்திகளை விடுத்து பணத்தேவையை வேறொரு வழியில் தீர்த்துக்கொள்ளலாமல்லவா?

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

விஜயகாந்த், கமல் + பிஜேபி






  • எழுத்தாளர் - சுஜாதா (எழுத்துக்கு மட்டுமல்ல.. தேவையற்ற விடயங்களில் மூக்கை நுழைக்காததற்கும்) ஜெயகாந்தன் இன்னும் பலர் + ஞானி

  • கவிஞர் - வாலி

  • நடிகர் - கமல் (அன்பே சிவம்), மாதவன்

  • நடிகை - எல்லாரும்

  • இயக்குனர் - மணிரத்னம், ஷங்கர், ஜீவா, சரண்

  • பாடகர்கள் , இசையமைப்பாளர்கள் - ஏறத்தாள எல்லோரையும் பிடிக்கும். பிடிக்கதவற்றை யார் பாடினார் என்று தேடுவதில்லை. இளையராஜாவை சில சமயங்களில் ரஹ்மான் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக பிடிப்பதில்லை

  • கிரிக்கெட் வீரர்கள் - இலங்கை வீரர்களுடன் ட்ராவிட், வெட்டோரி, அக்தார்

  • அரசியல்வாதிகள் - எல்லோரையும் ஒவ்வொரு காரணத்துக்காக பிடிக்கும். பிடிக்காதவர்களை தவிர






  • நடிகர் - விஜயகாந்த், கமல் (உன்னைப்போல் ஒருவன்)

  • இயக்குனர் - பேரரசு, விக்ரமன் (சென்டிமன்ட் தாங்கல), பாரதிராஜா (பிந்திய படங்களுக்காக)

  • கிரிக்கெட் வீரர்கள் - ஹர்பஜன், கில்கிரிஸ்ட் (உலக கிண்ணத்தில் தப்பாட்டம்), அர்ஜுன ரணதுங்க (சாயி பாபா காரணமாகத்தான் உலக கிண்ணம் வெல்ல முடிந்தது என்ற பேட்டி கல்கியில் வந்த நாள் முதல், அத்துடன் கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை விவகாரங்கள்)

  • அரசியல்வாதிகள் - சிஹல உறுமய இந்திய பிஜேபி அனைவரும்

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

உனக்கு நூறு எனக்கு ஆயிரம்..


இன்று The Island பத்திரிகையில் காணக்கிடைத்த சுவாரசியமான புகைப்படம்.


ஆயிரங்க்ளை வைத்துக்கொண்டு நூறுகளை மனைவிக்கு கொடுக்கும் சங்கக்கார. 

இந்தியாவுக்கு பிரயாணிக்க தயாராகும் சங்கக்கார மனைவிக்கு காசு கொடுக்கிறார்..

லட்சக்கணக்கில் சம்பாதிப்பவர்களே நூறில் தானா கொடுக்கிறார்கள்?



EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

சுகமளிக்கும் ஆராதனையில் பங்குபற்றிய இரு பெண்கள் மரணம்


டந்த சனிக்கிழமை விஹாரமஹாதேவி திறந்தவெளியரங்கில் இடம்பெற்ற சுகப்படுத்தும் ஆராதனையின்போது மர்மமான முறையில் மரணிதத இரன்டுபெண்களினதும் உறவினர்கள் அளித்த முறைப்பாட்டின்மீது விசாரணை நடைபெறுவதாக பொலிஸ் தெரிவிக்கிறது.

இது தொடர்பாக Daily Mirror பத்திரிகை வெளியிட்ட செய்தியின் முக்கிய பகுதிகளின் மொழிபெயர்ப்பு அசல் செய்தியுடன் தரப்படுகிறது.

இப்பெண்கள் இருவரும் மயங்கி வீழ்ந்தபோது அவர்களின் உறவினர்கள் இவர்களை வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல முயற்சித்துள்ளனர்.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் இதனைத்தடுத்து இருவரையும் பூங்காவில் ரகசிய இடம் ஒன்றிற்கு தூக்கிச்சென்றுள்ளனர்.

இதன்பின் பொலிஸ் தலையிட்டு இருவரையும் வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோது இருவரும் மரணித்திருப்பது தெரியவந்துள்ளது.

மரணவிசாரணைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கும்.

Probe into deaths at healing service

By T. Farook Thajudeen 

 An investigation is being carried out, on a complaint made by relatives, into the sudden deaths under mysterious circumstances, of two women during a healing service held at the Vihara Maha Devi open air theatre last Saturday, police said.

 Filing a report before Additional Magistrate Kumari Abeyratne, Cinnamon Gardens Police informed the Colombo Chief Magistrate’s Court that two elderly women who were said to be ailing had died under unexplained circumstances while performing some religious ritual during which sick patients were supposedly healed.

 The Police further said many people had attended the meeting as publicity had been given by the organizers of the event titled ‘Suva Kereeme Deva Meheya’ (healing service) to be held on October 31.

 The two women who attended the healing service had allegedly gone into a trance and collapsed.

 Thereafter the relatives of the two women had wanted to take them to hospital but 

 the organizers had reportedly refused to release them but had instead taken the women to some secret place at the Park.

Subsequently with the intervention of the Police the victims had been taken to hospital but had been found dead by that time.

 The magistrate ordered the Police to hand over the bodies of the victims to their relatives following the post mortem examination and postponed the case till November 13 for further inquiries.


"சுகமளிக்கும் ஆராதனைகளை நடாத்துவதை ஜனாதிபதி தடுக்கவேண்டும்" என்று கோரி ஜாதிக ஹெல உறுமயவால் உழுங்குபடுத்தப்பட்டிருந்த சமாதான பாத யாத்திரை கடைசியில் வன்முறையில் முடிவுற்றது.

இதில் பேசிய எல்லாவல மேதானந்த தேரர் "அரசு இவ்வாறான நிறுவனங்களை பௌத்தத்துக்கு எதிரான அமைப்புகளாக கருதி தடைசெய்யவேண்டும் என கோரினார். இவ்வாறான ஒழுக்கமற்ற நிறுவனங்களுக்கு எதிராக நாம் மௌனமாக இருக்கமாட்டோம் எனவும் அவர் கூறினார்.

இந்நிறுவனத்தின் பாதுகாவலரால் ஏறத்தாள 34 ஆயிரம் ரூபா பெறுமதியான சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ள்தாக பொலிஸில் முறைப்படு செய்யப்பட்டுள்ளது.


Protest against Viharamaha Devi deaths turns violent
By Supun Dias and Indika Sri Aravinda

A peace walk organized by the Jathika Hela Urumaya (JHU) urging the President to intervene and ban religious centres that conduct healing sessions such as the one which held at the Viharamaha Devi Park, at which two women lost their lives, turned violent after a clash erupted between two parties at Koswatta, Thalangama yesterday.
The clash caused severe damage to the property which is believed to be a location at which several healing sessions were held previously.

Speaking to the protesters JHU leader Ellawala Medhananda Thera urged the President to ban such disputed religious entities which are bent on converting Buddhists to their faith. “The government should ban such organizations which are considered anti- Buddhist movements. We will not keep silent against such unethical organizations which are a serious threat to religious co-existence in the country,” the Thera said.

A spokesman for the JHU said in addition to the JHU several relations of the two victims too had joined the protest and violence erupted when stones were thrown at them from the centre. In the melee that ensured the Thalangama police were called in to shield centre staff from the violent protestors, Police media spokesman DIG Nimal Mediwake said. A guardian of the centre had lodged a complaint with the Thalangama police saying they had suffered Rs.34, 000 in damages during the violence that took place, said DIG Mediwake said.

The Thalangama police are conducting further investigations into the incident.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்