Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

சுவிஸ் கலநதுரையாடலும் ஊடகங்களும்சுவிஸ்ஸில் இடம்பெற்ற தமிழ் பேசும் மக்களை பிரதிநிதிப்படுத்தும் கட்சிகளிடையேயான கலந்துரையாடல் பற்றி வித விதமான கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இது தேவையான முயற்சி என்பதில்  எவ்வித ஐயமுமில்லை. யுத்தவெற்றிக்குப்பின்; இனிவருங்காலத்தில் கூர்மையடையக்கூடிய பேரினவாதத்துக்கு எதிராக எல்லா கட்சிகளும் சேர்ந்து செயற்படுவது மிக அவசியமாகும். எல்லா விடயங்களிலும் இணக்கம் காணப்படும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனம். இருந்தும் சிறுபான்மை மக்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் விடயங்களில் கட்டாயமாக ஒத்திசையவேண்டியது அவசியமாகும். இல்லாவிட்டால் இச்சிறுபான்மை மக்களை மட்டும் அடிப்படையாகக்கொண்ட இத்தனை தலைவர்களினதும் தலைமைப்பதவியைக்கூட தக்க வைக்காமுடியாமல் போகும். எனவே பொதுவாக மக்களின் நலனுக்கும் இக்கட்சிகளின் சுயநலத்துக்கும் இவ்வாறான கலந்துரையாடல் மிக அவசியம். (WIN WIN SITUATION)


இக்கலந்துரையாடல் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதில்கூட நிறைய வேறுபாடுகளை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

Daily Mirror ஆங்கில பத்திரிகையின் இணையத்தில் வெளியான இக்கலந்துரையாடல் தொடர்பான படத்திற்கு வந்த பின்னூட்டங்கள் நடுத்தர சாமானியனின் எண்ணங்களை எல்லா திசைகளிலும் வெளிப்படுத்தின எனலாம்.

http://www.dailymirror.lk/DM_BLOG/Sections/frmNewsDetailView.aspx?ARTID=68620


இருந்தும் இதில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ள தமிழ் பேசும் மக்களுக்கான ஊடகங்கள் இக்கலந்துரையாடல் தொடர்பாக மக்களின் கருத்தை பிரதிபலிக்கவில்லை. அத்துடன் மக்களின் கவனத்தை இதன்மீது குவியச்செய்வதன் மூலம் இத்தலைவர்களை இணக்கப்பாடொன்றிற்காக நெருக்குதலுக்குள்ளாக்ககூடிய தார்மீக கடமையையும் செய்யவில்லை. மாறாக இதில் எதையும் எதிர்பார்க்கவேண்டாம் என்ற கருத்தையே பரப்பின.

முக்கியமாக சக்தி ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் இக்கலந்திரையாடலுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டது. சம்பளப்பிரச்சினை இதில் ஆராயப்படவில்லை என்று குற்றம்சாட்டியது. இதுவரை நாளும் என்ன செய்தன இக்கட்சிகள் என்று கேள்வியெழுப்பியது.

அரசியல் பிரவேச ஆசை மிகுந்துள்ள ரங்கா இவ்வகைச்செய்திகளை வெளியிடச்செய்திருக்கலாம். மே மாத கடைசி மின்னல் நிகழ்ச்சியில் சில ஊடகங்கள் புதிய பாதைய / தலைமையை இனங்காட்டுவதாகவும் அவ்வாறு செய்யவேண்டிய அவசியமில்லை என்வும் பரப்புரை மேற்கொண்ட இவர், அண்மைக்காலமாக மக்கள் அவரை அரசியல் பிரவேசம் செய்யுமாறு வலியுறுத்துவதாக காண்பிக்க பகீரத பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறார்.

அண்மையில் தென்மாகாண சபை தேர்தலின் பின்னான மின்னலில் தங்கள் ஊடக வல்லமையை காண்பிப்பதாக நினைத்து தமது அரசியல் நோக்கங்களை மரிக்காருடன் சேர்ந்து நிர்வாணமாக்கி காட்டியிருந்தார்.

இது வரை சாத்தியப்படாத தமிழ் பேசும் கட்சிகளிடையேயான கருத்தொற்றுமை இனி ஏற்படத்தேவையில்லை என்ற பாணியில் இவ்வூடகம் வெளியிடும் கருத்து இதுவரை அரசியலில் ஈடுபடாத நீரும் இனி ஈடுபடவேண்டிய அவசியம் இல்லை என்றும் சொல்வதை புரிந்துகொள்ளாமை வெட்கமே.

அத்துடன் இரண்டு நாய்களின் கதையை பெரும்பாலான நிகழ்ச்சியில் சொல்லிவரும் இவரது இதயசுத்தியையும் இச்செய்திகள் கேள்விக்குட்படுத்துவதைக்கூட இவர் அறியவில்லை.

ஒருவேளை இக்கலந்திரையாடலுக்கான EXCLUSIVE COVERAGE RIGHTஐ இந்த ஊடகத்துக்கு வழங்கியிருந்தால் எல்லாமே தலை கீழாக சொல்லப்பட்டிருக்கும்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

3 comments:

தங்க முகுந்தன் said...

தகவலுக்கு நன்றி! - அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!

எதற்கெடுத்தாலும் குறை பிடிக்கும் சமூகத்திலல்லவா நாமும் வாழ்கிறோம்!

என்ன கொடும சார் said...

நன்றி தங்க முகுந்தன். அடிக்கடி இத்தளத்துக்கு
வந்து கருத்துக்களை சொல்லலாமே..

தங்க முகுந்தன் said...

ம்.. பார்க்கலாமே!
நேரம் கிடைக்க வேணும்!
அதுசரி உம்மோடு எப்படி தொடர்பு கொள்ளுவது?