Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

பிரமிக்கவைத்த மாற்று மதத்தவர்களின் கேள்விகள்

பிரபல்யமிக்க பேச்சாளரான Dr. Zakir Naik அவர்களின் நிகழ்வொன்று நேற்று இலங்கையின் கொழும்பில் உள்ள சுகததாச வெளியரங்கில் இடம்பெற்றது.

Wiki Introduction
Zakir Abdul Karim Naik (Urdu: ذاکر عبدالکریم نائیک, Hindi: ज़ाकिर अब्दुल करीम नायक; born 18 October 1965) is a Muslim public speaker, and writer on the subject of Islam and other comparative religion. Naik is a medical doctor by profession, having attained a Bachelor of Medicine and Surgery (MBBS) from the University of Mumbai. [1][2]
Naik is the founder and president of the Islamic Research Foundation (IRF),[1][3] a non-profit organization which also owns and broadcasts the free-to-air global Peace TV channel from Mumbai.


இந்நிகழ்வுக்கு பல முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு நேரடியாக அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டிருந்தன. ஊடகங்களினூடாக இலங்கைவாழ் சகலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

உலகின் பல மதங்களை பற்றி ஒப்பீடுகளில் (comparative religion) இவர் மிகப்பிரபலம் என்பதாலும் பார்வையாளர்களில் இருந்து நேரடியாக கேட்கப்படும் கேள்விகளுக்கு இவர் மேடையிலேயே பதிலளிப்பதாலும் நிகழ்வில் கலந்துகொண்டேன்.

மாற்றுமதத்தவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிகழ்ச்சிகள் பல ஆண்டுகளுக்கு முன் தமிழ்மொழியில் பிஜே அவர்களால் இலங்கையின் பல பாகங்களிலும் நடைபெற்றிருந்தது. அந்நிகழ்வுகளை நிறுத்தும் முகமாக இலங்கையரசால் பிஜே அவர்கள் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டிருந்தார்.

6.30க்கு நிகழ்வு ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்து. 6.30க்கு முன்னரேயே மைதானம் நிரம்பி வழிந்தது. பிந்தி வந்த பலரை அனுமதிக்க முடியாத நிலமை ஏற்பட்டது. 25,000 பார்வையாளர்கள் கலந்துகொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.

மைதானத்தின் பிரதான பார்வையாளர் மண்டபத்தை நோக்கியதாக அரங்கு அமைந்திருந்தது. ஏனையவர்கள் பார்ப்பதற்காக பெரிய திரைகள் மைதானத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்தன. பிரமிப்பூட்டும் மேடையமைப்பு, professional ஆன Videography என பல எதிர்பார்க்காத விஷயங்கள் இருந்தன.

நிகழ்வு 7.30க்கு சற்று பின் ஆரம்பித்தது ஒரு கவலைக்குரியது. (Dr. Zakir Naik அவர்கள் சிங்கப்பூரில் இருந்து அன்று பிற்பகலே வர இருந்தார் என கேள்விப்பட்டேன். அது காரணமாக இருந்திருக்கலாம்) ஆயினும் இயலுமானவரை நிகழ்வு குறிப்பிட்ட நேரத்தில் நடப்பதில் ஏற்பாட்டாளர்கள் கூடிய கவனம் செலுத்தியிருக்கவேண்டும். அடுத்த நாள் வேலைநாளாக இருபப்தனால் நிகழ்வு 10 மணிக்கேனும் நிறைவுசெய்யப்பட்டிருக்கவும் வேண்டும்.

ரிஸ்வி முப்தி (அகில இலங்கை ஜம்மியதுல் உலமா) அவர்களினதும் ஆளுனர் அலவி மௌலானாவினதும் பிரபலமான சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவினதும் (பிரதியமைச்சர் பைசர் முஸ்தபாவின் தந்தை) பேச்சுக்களைத்தொடர்ந்து Dr. Zakir Naik இன் 15 வயது மகன் Fariq Naik உரையை ஆரம்பித்தார். அழகான ஆங்கில உரையால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். தந்தைக்கு பெருமை சேர்க்கும் மகன் இவர். கடவுளுக்கு இருக்க வேண்டிய பண்புகளையும், ஒருவர் கடவுள்தானா என்பதை உறுதிசெய்வதற்கு கடவுளின் பண்புகள் எப்படி இருக்கவேண்டும் என்றும் இவர் விளக்கினார். (Theology)

அதன்பின் மக்னின் பேச்சிலிருந்து அவர்கள் பேச்சை ஆரம்பித்தார்கள். கடவுள் மற்றும் மதங்களை நம்பாத விஞ்ஞானத்தை நம்பும் நாத்திகருக்கான பேச்சாக அது இருந்தது. கடவுள் நம்பிக்கை இல்லாத பதிவர்கள் இதில் கலந்துகொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

தனது பேச்சில் அவர்கள் வாதங்களை கோர்வையாக எடுத்துவைத்திருந்தார். பல சமய நூல்கள் பற்றிய அறிவு பிரமிக்கத்தக்கதாக இருந்தது. பைபிளில் இன்னொரு இறைதூதர் வருவார் என்பதற்கான ஆதாரங்களையும், அவர் பெயர் முஹம்மத் என்பதற்கான ஆதாரங்களையும் அள்ளி வழங்கினார்.

ITNஇன் "அட்டபட்டம" ஹசந்த ஹெட்டியாராசீயும் வந்திருந்தார். கேள்வி பதில் நிகழ்ச்சி கொழும்பின் பாராழுமன்ற உறுப்பினர் சுஜீவ சேரசிங்கவின் கேள்வியுடன் ஆரம்பித்தது. அதன்பின் நாத்திகர் ஒருவரின் கேள்வியும், கிறிஸ்த்தவர் ஒருவரினதும் காத்திரமான கேள்விகளுக்கு பதில்ளித்தவிதம் பிரமிப்பூட்டுவதாக் இருந்தது. இவை பற்றி சில பதிவுகளை சில தலைப்புகளின்கீழ் தனித்தனியாக தரலாம் என எண்ணுகிறேன்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

பதிவர்களுக்கு ஒரு அழைப்பு

பதிவுலகில் அடிக்கடி சமயங்கள் தொடர்பாக கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஒரு சமயத்தவர் இன்னொரு சமயத்தை பற்றி கேள்விகேட்பது நிச்சயம் வரவேற்கப்படவேண்டியது. இது மதம் தொடர்பான புரிதல்களை அதிகப்படுத்தும். அதேபோல் தான் பின்பற்றும் சமயம் தொடர்பாகவும் தனக்குள்ளேயே எழும் கேள்விகளை அல்லது தாம் எதிர்கொள்ளும் கேள்விகளையும் நாம் தீர்ப்பது அவசியம். இதன்மூலம் நாம் சரியான வழியில்தான் இருக்கிறோமா என்பதையும் சீர்தூக்கி பார்க்க முடியும்.

பதிவுலகில் கூட அடிக்கடி இவ்வாறான கேள்விகள் அடிக்கடி எழுப்பப்படுகின்றன. இவை காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாக கருதும் பலர் இருக்கிறார்கள். ஆனால் இக்கேள்விகளுக்கெல்லாம் தகுந்த பதில்கள் / விளக்கங்கள் இருக்குமானால் அவை அறியச்செய்யப்படல் அவசியம்.

ஆனாலும் பதிவுலகில் யாராவாது ஒருவர் தனது விளக்கத்திற்கேற்ப, புரிதல்களுக்கேற்ப சமய நம்பிக்கைகளை நோக்கிய கருத்துக்களை, விமர்சனங்களை, கேள்விகளை முன்வைப்பர். இவற்றை முதற்தடவை வாசிப்பவர்களில் எத்தனைபேர் பின்னூட்டங்களினூடாக இதற்கு சொல்லப்படும் பதில்களை தொடர்வர்? நிச்சயமாக பாதியளவேனும் இல்லை. இவ்வாறு பதில்களை தொடராதோர் இவ்விமர்சனங்களுக்கு பதில் இல்லை அல்லது அதில் நிறைய பிழைகள் இருக்ககூடும் என்று விளங்கிக்கொள்ளலாமல்லவா?

இவ்வாறான பிழையான புரிதல்களை கழையும், உங்கள் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதில் தரும் நிகழ்வொன்று எதிர்வரும் ஞாயிறு அன்று இலங்கையில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. ஆங்கில மொழியில் அமையும் இந்நிகழ்ச்சியில் இத்துறையில் அனுபவம் மிக்க வைத்தியர் சாகிர் நாயக் அவர்கள் கலந்துகொள்கிறார்கள். கொழும்பின் சுகததாச (வெளி) மைதானத்தில் இடம்பெற ஏற்பாடாகியிருக்கும் இந்நிகழ்ச்சிக்கு ஏற்கெனவே 25,000 பேர் தம் வரவை உறுதிப்படுத்தியுள்ளார்கள் என தெரிகிறது. இந்நிகழ்வில் கலந்துகொள்ள முஸ்லிம் அல்லாதோர் ஆர்வமூட்டப்பட்டுள்ளனர். இவர்களுக்கே முன்னுரிமையும் அளிக்கப்படும். ஒரு அறிமுக உரையைத்தொடர்ந்து கேள்விநேரமும் இருப்பது இதன் விசேட அம்சம். இதன்போது கேள்விகளை நேரடியாக கேட்கமுடியும். கேள்விகளுக்கு எந்த தணிக்கையும் இல்லை. மேலதிக விபரங்கள் http://www.peacethroughreligion.info என்ற இணையத்தளத்தில் கிடைக்கும்

Dr. Zakir Naik’s lecture tour to Sri Lanka
World’s renowned Islamic scholar Dr. Zakir Abdul –Karim Naik who is based in Mumbai India is to pay a visit to Sri Lanka on the invitation of ‘Association of Muslim Youth of Sailan (Jammiyathush Shabab)’ on the 23rd of May 2010. He is to address the gathering in the Sugathadasa out door stadium on the same day at 06.30pm on the theme “Peace through religion”.

Admission is Free of Charge

Please invite your all your Muslim & Non Muslim friends.

Special Seating arrangements for ladies.

Feel free to contact:

Bro. Nilam : 0716613884

இதற்குமுன் இவ்வாறான பல நிகழ்வுகள் தமிழ்மோழியில் இலங்கையின் பல இடங்களில் நடைபெற்றுள்ளன. தொடர்ந்தும் நடைபெறைருக்கின்றன. ஆங்கில மொழியினூடான இந்நிகழ்ச்சி இவற்றை விட அதிகமானோரின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பல கேள்விகளை மனதில் வைத்திருக்கும் இலங்கையின் சகல பதிவர்களுக்கும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்புவிடுக்கிறேன். அதேபோல் நீங்களும் இவ்வாறான நிகழ்ச்சிகளை ஒழுங்குசெய்யுமாறும் வேண்டுகிறேன்.

கேள்விகள் பதிலழிக்கப்பட வேண்டும் - பதில்கள் எத்திவைக்கப்படவும்வேண்டும்

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

பயங்கரவாதம் அழிக்கப்பட்டு ஓராண்டு

பயங்கரவாதம் இலங்கையிலிருந்து ஒழிக்கப்பட்டு ஓராண்டாகின்றது. இது தொடர்பான எனது பார்வைகள் சிலவற்றை பகிரலாம் என நினைக்கிறேன்.


You can also say that the government did a bunch of shafty things, but on the scale of the world’s biggest suicide bombers? Not so much.
indi.ca


இது பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றியாக நான் கருதுகிறேன். தமிழ் மக்களுக்கு எதிரான வெற்றியாக அல்ல. தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளும் ஜனநாயகரீதியான போராட்டங்களும் வெற்றிபெறவேண்டும்.


இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் கடவுள் இவ்வெற்றி விழாவை அங்கீகரிக்கவில்லை என்பதை காட்டுவதாக் சிலர் சொல்கிறார்கள். புலி ஆதரவாளர்கள் ஒரு கதையையும் பொன்சேகா ஆதரவாளர்கள் அவர் சிறையிட்ப்படமையையும் சொல்கிறார்கள். இவ்வாறான கற்பிதங்கள் எந்த நன்மையையும் தரா


இந்த ஓராண்டில் தெளிவான நன்மைகளை சகலரும் அனுபவிக்கிறார்கள். பாதுகாப்பு கெடுபிடிகள் 90% நீக்கப்பட்டுள்ளது. பயமின்றி பயணம் செய்ய முடிகின்றது. வட கிழக்கில் பாரிய அபிவிருத்தி நடந்துகொண்டிருக்கிறது.


கடந்த தேர்தலில் ததேகூ இன் வெற்றியை புலி அனுதாப வெற்றியாக சிலர் தப்பபிபிராயம் கொண்டிருக்கிறார்கள். ததேகூக்கு ஆதரவளித்த மக்கள் அது அரசுடன் இணைந்து அபிவிருத்தி பணிகளில் ஈடுபடவேண்டும் என்று எதிர்பார்ப்பது இதை உறுதி செய்கிறது.


பொன்சேகா இன்னொரு ஜனதிபதி தேர்தலில் நின்று வெற்றி பெறமுடியாது என்பது தெளிவானது. யுத்த வெற்றியின் மிக முக்கிய பங்காளியான ஜனாதிபதியும், பாதுகாப்பு அமைச்சின் செய்லாளரும் பொன்சேகாவும் சில விட்டுக்கொடுப்புகளை மேற்கொண்டு ஒருவரை ஒருவர் நோண்டாமல் இருக்கவேண்டும் என்பது அவா.. ஆனால் பொன்சேகாவின் போராட்டகுணம் இதற்கு எப்போதும் தடையாக இருக்கும்.


இந்த வெற்றியை அரசியல் இலாபங்களுக்கு பயன்படுத்தும் அரசியல்வாதிகள் மீது எரிச்சல் வருகிறது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தமைக்காக நன்றிக்கடனாக மக்கள் இவர்களுக்கு வாக்களித்ததை பலர் தவறாக புரிந்துகொண்டுள்ளார்கள் என்று தெரிகிறது. 6 வருடத்தின்பின் மீண்டும் நன்றிக்கடன் ஒன்றாக மட்டும் வாக்களித்தல் இடம்பெறாது என்பதுமட்டும் நிஜம்.


பல இணையங்கள் மீண்டும் தமிழ் மக்களை அழிவில் வீழ்த்துவதற்காக எதை எதையோ எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
  • யாராவது இங்கிலாந்தில், அவுஸ்த்திரேலியாவில் குடியுரிமை பெறுவற்கு
  • தமிழ்நாட்டில் செல்லாக்காசான அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்துவதற்கு
  • தமிழிஷ் இல் வோட்டு சேர்ப்பதற்கு
  • ஹிட்ஸ் அதிகமாக எடுப்பதற்கு
இலங்கைவாழ் தமிழ் மக்களை உசுப்பேத்திவிடுவது மிகவும் கீழ்த்தரமான உத்தியாகும்

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

யுத்த முடிவு - முரண் கொள்கையில் தமிழ் ஊடகங்கள்

இலங்கையை வாட்டிவதைத்துக்கொண்ட கொடிய யுத்தம் ஓய்ந்து ஒரு வருடம் பூர்த்தியாகியிருக்கிறது. ஒருபக்கம் வெற்றிக்கொண்டாட்டங்களும் இன்னொருபக்கம் அஞ்சலி எனவும் எதிரும் புதிருமான நிகழ்வுகள் நடந்தேறுகின்றன.

அப்பாவி மக்கள் கொல்லப்படுவது ஒரு சிலரின் வார்த்தையில் துன்பியல் நிகழ்வு என்றொரு வார்த்தைக்குள் முடிந்துபோவதில்லை. உயிர்களின் இழப்பும் சொத்துக்களின் இழப்பும் வெறும் அஞ்சலி என்ற வார்த்தையால் மனமாறிப்போவதில்லை.

இங்கு மக்கள் என்பது சகல மனிதர்களையும் குறிக்கும். அவர்களை சிங்களவர், தமிழர், முஸ்லிம் என பிரித்தோ அல்லது யாழ்ப்பாணத்தான், மட்டக்களப்பான் அல்லது மாத்தறையான் என்று பிரித்து ஒரு பகுதியினரின் மரணத்தில் சந்தோஷமும் ஒரு பகுதியினரின் மரணத்தில் துக்கமும் அடைபவர்களின் மனதில் இருக்கும் குரூரம், வன்மம் இன்னும் இதுபோன்றா ஆயிரம் இழப்புகளையே கொண்டுவரும் அல்லவா?

ஒரு சாதாரண மனிதனால் எப்படி காத்தான்குடியில் மக்கள் கொல்லப்படும்போதும் கெப்பிட்டிகொல்லாவயில் கொல்லப்படும்போதும் மகிழ்ந்து வன்னியில் கொல்லப்பட்டவர்களுக்காக மட்டும் கண்ணீர் வடிக்கமுடியும்?

அல்லது தமிழ்ச்செல்வனின் மரணத்தில் கொதித்து கதிர்காமரின், நீலன் திருச்செல்வத்தின், பிரேமதாசவின், உதுமாலெப்பையின் மரணத்தில் மகிழ முடியும்?

இடம்பெயர்ந்த யாழ் முஸ்லிம்களையும், எல்லைக்கிராம சிங்களவர்களையும் பற்றிக்கவலைப்படாமல் எப்படி ஓராண்டு அகதிகளை பற்றி மட்டும் பேசமுடியும்?

இவையாவும் மனதிற்குள் இருக்கும் வன்மத்தின் புகையில்லையா?


(மரணங்களை புகைப்படங்களாக்கி அதைக்கொண்டு வாசகர்களின் மனதில் வன்மத்தை விதைப்பதில் எனக்கு உடன்பாடில்லாமையால் எந்தவொரு மரணத்தின் புகைப்படத்தையும் இப்பதிவில் பகிரவில்லை)

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

சட்டவிரோத கட்டடங்கள் - யதார்த்தமான தீர்வு


கொழும்பின் கொம்பனித்தெருப்பிரதேசத்தில் சட்டவிரோத கட்டடங்களை அகற்றியதை தொலைக்காட்சியில் பார்க்ககூடியதாக இருந்தது. இது தொடர்பான பல கண்ணோட்டங்கள் இருந்தாலும் யதார்த்தமான தீர்வு பற்றி யாரும் யோசிப்பதாக தெரியவில்லை.

Slave Island is a suburb in Colombo, Sri Lanka located directly south of the Fort area of Colombo. The name Slave Island was named during the British occupation and administration and originates from the Portuguese and Dutch period of administration when the slaves were held there, most of them were from Africa. Most of the slaves had returned to Africa The suburb contains Beira Lake, a large lake and its esplanade visited by many for recreation. Slave Island is mostly a commercial area with commercial establishments, hotels and shopping centres.

Wikipedia

இலங்கையின் எந்தவொரு பிரதேசத்திலும் 6 பேர்ச் நிலத்தை விட குறைவான இடமொன்றில் வீடுகட்டுவது சட்டவிரோதமாகும். இச்சட்டத்திற்கு முன்னர் கட்டப்பட்ட வீடாயின் அது 2மாடிகளை விட கூடுதலாக கட்டப்படமுடியாது.

இன்னும் கொழும்பின் வெவ்வேறு பிரதேசங்களில் கட்டப்படக்கூடிய வீடுகள் தொடர்பான town planக்கு அமைவான அறிவுறுத்தல்கள் இருக்கின்றன. உதாரணமாக கொழும்பு 10 இல் அமைக்க அனுமதிக்கப்படும் வீடுபோல் கொழும்பு 7 இல் அமைக்க முடியாது.

இன்னும், எவ்வாறான வீடானாலும் கதவு ஜன்னல் தொடர்பான நியம அளவுகள் இருக்கின்றன. வீட்டின் சுவர் அளவில் குறிப்பிட்ட வீதம் கதவு ஜன்னல்களுக்காக இருக்கவேண்டியது அவசியம்.

பலர் இவ்வீடுகள் சட்டபூர்வமானவை என்று வாதிடுகிறார்கள். ஆனால் பல்வேறு சட்டங்களை கவனத்தில்கொள்ளும்போது இவ்வீடுகள் குறைந்தது கதவு ஜன்னல் தொடர்பான சட்டங்களின் அடிப்படையிலாவது சட்டவிரோதமாகக்கூடிய வாய்ப்புகளே அதிகம்.

இலங்கையின் சேரியாக கணிக்கப்படும் பிரதேசங்கள் கற்களால் அமைக்கப்பட்ட சிறிய காணியில் அமைந்த வீடுகளே. இவ்வாறான சேரிப்புறங்கள் தோன்றுவதற்கான காரணங்கள் சரியாக அடையாளம்காணப்பட்டு தீர்க்கப்படாமல் இருக்கும் நிலையில் முற்றுமுழுதாக சட்டரீதியற்ற கட்டடங்களை அகற்றுவது வெற்றியளிக்குமா / நியாயமானதா என்று நோக்கவேண்டியுள்ளது.

இந்த சேரிவாழ் மக்கள் பெரும்பாலும் நடைபாதை வியாபாரிகளாக, கொழும்பின் மொத்தவிற்பனை சந்தையின் கூலித்தொழிலாளிகளாக இருக்கிறார்கள்.

இப்பிரதேசங்கள் மிகுந்த சன நெரிசல் மிக்கவை. சன நெருக்கடிமிக்க இப்பிரதேசத்தில் வாழும் பிள்ளைகள் கல்விகற்ககூடிய சூழலில் இல்லை என்பதே உண்மை. இதன்காரணமாக இங்கு தோன்றும் அடுத்த சமூகமும், கூலித்தொழிலாளிகளாக, சமூகத்தின் கடைநிலை அந்தஸ்த்துடையவர்களாகவே இருப்பர். இன்னும் வீடுகளுக்குள் போதியளவு காற்று வராததன்காரணமாக வீட்டில் உள்ள அதிகமானோர் வீட்டு வாசலிலேயே இருப்பதை இப்பிரதேசங்களுக்கு சென்றிருந்தால் கவனித்திருப்பீர்கள்.

முதலில் சேரிவாழ் மக்கள் இது தமக்கு வசதி இல்லாது என்பதை உணரவேண்டும். இவர்களின் கல்வியறிவு மிக மோசமான நிலையில் இருப்பதால் இதை உணரச்செய்வதே கடின இலக்காக இருக்கும்.

இவர்கள் சேரியாகா வாழ்ந்தாலும் இவர்களில் பலர் தமது நிலத்திற்கு உரிமை பத்திரங்களை கொண்டவர்களே. இப்பிரதேசங்கள் கொழும்பில் காணியின்பெறுமதி கூடிய இடங்களிலேயே இருக்கின்றன.

இப்பிரதேசங்களில் வாழ்வதற்கு இவர்கள் கூறும் நியாயங்கள்

  • தமது தொழில்வாய்ப்புக்கு கொழும்பு நகருக்குள் இருப்பது அவசியம்
  • இலங்கையில் சமூகங்களிடையேயான நம்பிக்கைகள் மிகக்குறைவாக இருக்கும் நிலையில், தாங்கள் வேறொரு பிரதேசத்தில் வேறொரு சமயக்குழுவின் ஆதிக்கத்தில் இருக்கும் பிரதேசத்தில் திணிக்கப்படுவது தமது இருப்புக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதமற்றது
  • இவர்கள் தொடர்மாடி வாழ்க்கையை விருபவில்லை. தொடர்மாடிக்கட்டடதொகுதிகளில் காணப்படும் மேலதிக செலவுகள், அசௌகரியங்கள் பற்றி அதிக கவலைப்படுகிறார்கள். இன்னும் சிறியதாயினும் தமது நிலத்தில் வாழ்ந்தால், பிள்ளைகளுக்கு அக்காணியில் ஒரு மாடியைக்கட்டி கொடுக்கமுடியும் என்பது இவர்களது முக்கிய வாதம்.

இவ்வாறான நியாயங்கள் கட்டாயம் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

  • முதலில் அரசு துறைமுகப்பகுதிய அண்டிய மொத்தவிற்பனை போன்ற வர்த்தகங்களை சன நெரிசலற்ற இன்னொரு பிரதேசத்திற்கு நகர்த்தவேண்டும்.
  • போக்குவரத்து, புகையிரத மத்திய நிலையங்கள் இப்போது கொழும்பில் அமைந்துள்ளன. இவை வேறொரு பிரதேசத்திற்கு நகர்த்தப்பட வேண்டும்.
  • அத்துடன் கொழும்பின் போக்குவரத்து வசதிகள் சீரமைக்கப்படலும், ஒழுங்குபடுத்தப்படலும் அவசியம். கொழும்பின் புற நகர்ப்பகுதிகளுக்கு இவ்வாறான போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கப்படவேண்டும்.

இவ்வாறு செய்யும்போது, தொழில்வாய்ப்புகளும் வேறுபிரதேசங்களுக்கு நகர்வதால் சேரிவாழ் மக்களும் விருப்பத்துடன் இடம்பெயர்வர்.

இன்னும், இச்சேரிப்புற மக்கள் தமக்கிடையே ஒரு சபையை அமைத்து இக்காணிகள் எல்லாவற்றையும் ஒன்றிணைத்து தனியாருக்கு விற்கமுடியும். இவர்கள் இருக்கும் நிலங்கள் கொழும்பின் மிக முக்கியமான இடங்கள். இக்காணிகளின் பெறுமதி மிக அதிகம். இவற்றை விற்பதன்மூலம் கிடைக்கும் பணத்தில் ஒவ்வொருவரும் கொழும்புக்கு அருகிலேயே 10 பேர்ச் நிலத்தையும் வாங்கி அதில் வசதியான ஒரு வீட்டையும் கட்டிக்கொள்ளமுடியும். இது நிச்சயம் வசதியானதாக இருக்கும். (சுறா படத்தில்வருவதுபோல் எங்கள் குப்பத்தை காப்பாற்றுவோம் என்று யாராவது விஜய் ரசிகர் சொன்னால்?!)

I wouldn’t even call this a slum, more like middle class housing with dodgy deeds.

www.indi.ca

 

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

WiFi Bus


CTB என்று இன்னமும் அழைக்கப்படுகின்ற இலங்கை போக்குவரத்து சபை (SLTB) புதிதாய் அதி சொகுசு பஸ் சேவையொன்றை அறிமுகப்படுத்தியிருப்பதாக அறிந்தேன். ஆனால் அதில் பயணிக்கும் வாய்ப்பு இவ்வளவு விரைவாக கிடைக்கும் என நான் நினைக்கவேயில்லை.





Super luxury bus with a seating capacity for 21 passengers is complete with several modern facilities including internet , provision of food, sanitary and first aid facilities and a television screen showing the details of the towns passed by


China பஸ் என பொதுவாக அழைக்கப்படும் பஸ்தான் சொகுசு பஸ்ஸாக மாற்றப்பட்டிருக்கிறது.





பஸ்ஸில் WiFi வசதியும், உங்கள் Laptopஐ வைப்பதற்கு ஆசனத்திலேயே ஒரு மேசைபோன்ற வடிவமும் இருக்கிறது.

இருந்தாலும் Wifi வசதியை சோதித்துப்பார்க்க பயணிகள் எவரிடமும் Laptop இருக்கவில்லை.

இன்னொரு பஸ்ஸில் தொலைக்காட்சி இருப்பதாகவும் கேள்வி. அதில் சுறா படம் எல்லாம் போடமாட்டார்களாம். ஆனால் நீங்கள் கடந்து செல்லும் இடம் பற்றிய தகவல்கள் தொலைக்காட்சி திரையில் தெரியுமாம்.

பஸ்ஸில் பல அறிவுறுத்தல்கள் சின்னங்களாக தரப்ப்ட்டிருந்தன.

குடிக்காதீங்க
சண்டை பிடிக்காதீங்க
பிச்சை எடுக்காதீங்க
ஆயுதங்களுக்கு தடை
செல்லபிராணிகளுக்கு தடை
என பல இருந்தாலும்
KISS பண்ணாதீங்க என்று இருந்ததுதான் highlight

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

பூனை இளைச்சா எலிக்கு மச்சாள் முறையாம் - "இந்தவகையில்" ரங்கா?

மஹாராஜா குழும ஊடகங்களில் ஐதேக தலைமை பற்றித்தான் பாதி செய்தி வருகிறது. ஐதேக வின் தோல்விகளுக்கு காரணம் ரணில்தான் என பரவலாக ஐதேக ஆதரவாளர்கள் நம்பினாலும், இந்த ஊடகங்களுக்கு இன்றுதான் இதெல்லாம் தெரிந்ததுபோல் செய்தி வெளியிடுவதுதான் தாங்கமுடியவில்லை. 


இச்செய்திகளில் அடிக்கடி வரும் வசனம், "அரசியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்" என்பது. யார் அந்த அரசியல் ஆய்வாளர்கள் என்று தேடினால்

அது அந்த "இந்தவகையில்" புகழ் மின்னல் ரங்கா என ஆங்கிலப்பத்திரிகை ஒன்று தோலுரித்துள்ளது. இந்த "இந்தவகையில்" கூட தனது கட்சிக்கும் ஒரு தேசியப்பட்டியல் கேட்டுச்சாம். ஆனால் அந்த கட்சிக்கு ஒரு பிரதேச சபை உறுப்பினர் கூட இல்லையாம். எப்பிடி இருக்குது கத?

பூனை இளைச்சா எலிக்கு மச்சாள் முறையாம் எம்பாங்க.. அதமாதிரி ஐதேக தோற்க, நேத்து முழச்ச காளான் எல்லாம் விருட்சம் எங்கிறாப்பல இருக்கு. தானே அரும்பொட்டுல தெரிவாகியிருக்கிற நிலையில தேசியப்பட்டியல் ஒரு கேடு!

"இந்தவகையில்"க்கு தேசியப்பட்டியல் கிடைக்காத நிலையில்; தானும் ஒரு கட்சித்தலைவர், எனக்கும் பாராளுமன்றத்துல முன்வரிச ஆசனம் தர வேணும் எண்டும் அடம்புடிச்சுதாம். ஆனா அத கூட ஐதேக தலைமை கவனிக்கலயாம்.


இந்த ஆத்திரம்தான் அரசியல் ஆய்வாளரா தன்ன நினச்சிக்கொண்டு ஒருகட்சியின் பிரச்சினைய முக்கிய செய்தியா ஆக்கிருக்கு. இப்பவே தனக்கிருக்கிற பதவி அதிகாரம் எல்லாத்தையும் வெச்சி மக்கள ஏமாத்துறது, அமைச்சரானா எப்படி இருக்கும்?

இவருக்கு ஒரு தேசியப்பட்டியலும், முன்வரிசை ஆசனமும் குடுத்திருந்தா இன்னேரம் ரணில தலையில தூக்கி வைச்சு ஆடியிருக்கும்.

சில தமிழ்ச்சனம் எதோ ரங்காதான் தமிழ் மக்களின்ட விடிவெள்ளி போல நெனச்சுக்கிட்டு இருக்கு..

இந்த ரங்கா ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜபக்சவுக்கு பின்னால் பவ்வியமாக பௌத்த மத வழிபாடு செய்யிறதையும், தோளுக்கு மேல கைபோடுற அளவுக்கு நட்பு கொண்டாடுறதயும் பாருங்கோ..


EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

திஸ்ஸநாயகம், இலங்கையில் புதிதாய் உருவாகப்போகும் நிலப்பரப்பு


திஸ்ஸநாயகத்திற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவார் என வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் இன்று உடகவியாலாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

திஸ்ஸநாயகம் நீதிமன்றத்தால் குற்றவாளியாக காணப்பட்டு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர். அவருக்கு மன்னிப்பு வழங்குவதன்மூலம்
  • ஜனாதிபதியின் முடிவு சரியாயின் நீதித்துறை தவறானது
அல்லது
  • நீதித்துறை சரியாயின் ஒரு குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கும் நிறைவேற்றதிகாரம் வரம்புமீறியது
என இரண்டில் ஒன்று நிரூபணமாகும்.

இதேவேளை ஒலிபெருக்கி தொடர்பான நீதிமன்றத்தீர்ப்பு வந்தபோது நிறைவேற்றதிகாரத்தை அதற்கெதிராக பாவிக்க மறுத்த ஜனாதிபதி 'நீதிமன்ற விவகாரங்களில் தான் தலையிடப்போவதில்லை" என்று சொன்னது ஞாபகம் வந்து தொலைக்கிறது.

2012 ஆம் ஆண்டின் மேதினம்; காலிமுகத்திடலை அண்டிய பிரதேசத்தில் கடல் நிரப்பப்பட்டு அமைக்கப்படும் 500 ஏக்கர் பிரதேசத்தில் நடைபெறும் என மேதின உரையாற்றிய ஜனாதிபதி அறிவித்திருக்கிறார்.

கடல் பகுதிகளில் செயற்கையாக நிலப்பிரதேசங்களை உருவாக்குவது துபாயில் ஆரம்பித்து, பஹ்ரெய்ன், கத்தார், சவூதி அரேபியா ஆகிய பிரதேசங்களில் இருக்கும் திட்டம். ஆனால் இந்நாடுகளில் ஏற்கெனவே உள்ள நிலப்பரப்பில் வெளிநாட்டவர் நிலம் வாங்க தடை இருப்பதால் இத்திட்டங்களுக்கு அர்த்தம் இருக்கின்றது. மேலும் எண்ணெய் வளம் மிக்க நாடுகள் தனது வசதியப்பொறுத்து எதையும் செய்யும்.

எப்படியோ பாகிஸ்தானையும் தொற்றிக்கொண்ட இக்காய்ச்சல் இன்று இலங்கையையும் வந்தடந்துவிட்டது. ஆனால் இலங்கையில் கட்டுநாயக்க விமானநிலையத்திற்கான அதிவேக நெடுஞ்சாலை நத்தை வேகத்தில் நடக்கிறது. அபிவிருத்தியை காணாத பல இடங்கள் நாட்டின் சகல பிரதேசங்களிலும் இருக்கின்றன. சரியான பாதையமைப்போ, வடிகாலமைப்போ இன்றி நாட்டின் பெரும்பகுதி இருக்கின்றது. அவ்வளவு ஏன்? ஜனாதிபதி தேர்தலுக்கு முன் திறந்துவைக்கப்பட்ட உறுகொடவத்த மேம்பாலத்திற்கு இன்றுவரை மின்விளக்குகள் இல்லை!

ஏற்கெனவே கொழும்பு பிரதேசம் திட்டமிட்ட அபிவிருத்தி இன்மையால் மாடிக்கட்டடங்களை கொண்ட சேரியாகி வருகின்றது. கொழும்பு 7 இல் கூட வறிய மக்கள் சேரிகளில் வாழ்கிறார்கள்.

இத்திட்டம் ஜனாதிபதிக்கு தனது பெயரை நிலைநாட்ட உதவும். சில பெரிய நிறுவனங்கள் இலங்கையை நோக்கி வரக்கூடும். அதைதவிர என்ன இலாபம் இருக்கிறதென்று தெரியவில்லை. முக்கியமாக பொதுமக்களுக்கு.

காலிமுகத்திடல் முதல் பம்பலப்பிட்டியவரை குறுகலான சாலைகள் வேறு. புதிதாக உருவாகப்போகும் 500 ஏக்கர் நிலத்திற்கு பொருட்களையோ மக்களையோ போக்குவரத்துச்செய்யக்கூட அகலமான பாதைகள் இல்லை. பாதைகளை அகலமாக்க கூட முடியாது. காலிவீதியில் கொள்ளுப்பிட்டி முதல் சின்னமன் ஹோட்டல் வரை பாதி பாதையே திறந்துவிடப்பட்டுள்ளது.

அதைவிட இலங்கையின் கரையோரத்தை கடலரிப்பில் இருந்து காக்கும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தினாலும் பரவாயில்லை.

மொத்தத்தில் பெருமைக்கு மாவிடிக்கிறமாதிரி இல்ல?

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

மேதினம் - இலங்கையில் தனியார்துறை ஊழியர்கள் படும்பாடு

இன்று தொழிலாளர் தினமான மேதினம் அனுஷ்டிக்கப்படுகிறது. உழைக்கும் மக்களின் தினமாக இருக்கவேண்டிய மேதினம்கூட அரசியல்வாதிகளினால் அர்த்தமற்றதாகியிருப்பதை கடந்த பலவருடங்களாக நாம் அவதானித்துக்கொண்டேதான் இருக்கிறோம்.



அண்மையில் வெளிவந்த அங்காடித்தெரு திரைப்படம் பார்த்தபின் பல பதிவர்கள் உழைக்கும் வர்க்கத்தின் அவல நிலை பற்றி சிறிது பேசினார்கள். மத்திய தர வர்க்கத்தினதும் செல்வந்தர்களினதும் கைகளில் இருக்கும் பதிவுத்துறையில் இருப்பவர்களுக்கு சாமானிய உழைக்கும் வர்க்கம்; நாலு காசு சம்பாதிக்க படும்பாடு ஏதாவது திரைப்படத்தில் பார்த்தே தெரிந்துகொள்கிறார்கள் என்பது மிகவும் கவலைக்குரிய விடயம். இன்னும் சிலர் இலங்கையில் இவ்வாறு கஷ்ட்டப்படுபவர்கள் இல்லை என்றே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.


இலங்கையில் அர்ச துறையில் இருப்பவர்கள் ஓரளவுக்கு வசதியாக இருக்கிறார்கள். அதிலும் மின்சாரம், துறைமுகம், பெற்றொலியம் ஆகிய துறைகளில் உள்ள கடை நிலை பணியாட்கள் கூட 50,000/-க்கு அதிகமாக உழைக்கிறார்கள்.ஆனால் பெரும்பாலான மக்கள் வேலை செய்கின்ற தனியார்துறை இன்னும் உழைக்கும் வர்க்கத்தை கசக்கிப்பிழிந்துகொண்டே இருக்கிறது.

இன்று ஒரு கடையில் ( Super marketஆக இருந்தாலும்கூட) சிப்பந்தியாக இருப்பவரினதோ, ஒரு அலுவலகத்தில் executive அல்லாத தரத்த்தில் இருப்பவரினதோ, பகட்டாக வேலைக்கு செல்லும் பல பெண்களினதோ சம்பளம் 10,000/- முதல் 15,000/- வரையே இருக்கிறது. இதில் அடிப்படைச்சம்பளம் 7,000/- அல்லது 8,000/- அளவில் தான் இருக்கிறது. சாதாரண ஹோட்டல்களில் வேலை செய்பவர்களினதும் நட்சத்திர ஹோட்டல்களில் வேலை செய்பவர்களினதும் அடிப்படைச்சம்பளம் 3,000/- இலிருந்து 5,000/- திற்குள்ளேயே.

இந்த சாமானியன் over time செய்தாலும் ஒரு மணித்தியாலத்திற்கு 12/- இலிருந்து 41/- வரையே கிடைக்கும். 41/- கிடைக்கும் ஒருவர் மேலதிகமாக 2,000/- ஐ தேடிக்கொள்ள ஒரு நாளைக்கு 2 மணித்தியாலம் செய்யவேண்டும். அப்படியானால் அவர் 5 மணிக்கு மூடப்படும் வேலைத்தளத்தில் 7 மணிவரை வேலைசெய்யவேண்டும். பயணத்திற்கு ஒரு மணித்தியாலம் செலவானால் வீடுசென்றடைய 8 மணி. அடுத்த நாள் 8.30க்கு வேலைக்குச்செல்ல அவர் 6 மணிக்கெல்லாம் தயாராகவேண்டும்.

இதன்படி பார்த்தால் வேலையோடு சம்பந்தப்படாமல் தனிப்பட்ட விடயங்களுக்கு இருப்பது 8 மணி முதல் 6 மணிவரையான நேரமே. இந்த 10 மணித்தியாலத்தில் 7 மணித்தியாலம் தூங்க செலவானால் அவருக்கு மீதமிருப்பது வெறும் 3 மணித்தியாலமே.இந்த 3 மணித்தியாலத்தில்தான் குழந்தைகளை பராமரிப்பது, அவர்கள் படிப்பதற்கு உதவுவது என எதையாவது செய்யமுடியும்.

விடுமுறை
பல பிரபல நிறுவனங்களில்கூட விடுமுறை என்பது குதிரைக்கொம்பே. அவர்கள் சட்டரீதியாக உரித்துடைய விடுமுறைகளைக்கூட பெற்றுக்கொள்ள மிகுந்த சிரமப்படுகிறார்கள். உரிமை பற்றி பேசினால் வேறொரு காரணத்தை காட்டி வேலையிலிருந்து தூக்கப்படும் அச்சமும் இருக்கிறது.

இலங்கையில் விடுமுறை அதிகம் என்று பரவலான கருத்து இருக்கிறது. ஆனால் இந்த விடுமுறையெல்லாம் பெரிய நிறுவனங்களில் இருப்பவர்களுக்கே கிடைக்கிறது.பல கடைகள் விடுமுறைகளை வழங்குவதேயில்லை.

வாழ்க்கைச்செலவு
இன்று இலங்கையில் ஒரு சாப்பாட்டு பார்சலின்விலை 100/-. தொழிலுக்காக கொழும்பு வந்திருக்கும் ஒருவர் 8,000/- ஐ சாப்பாட்டுக்காக செலவுசெய்கிறார். அறை வாடகை குறைந்தது 2000/- ஆகும். ஆனால் இவரின் சம்பளமோ 15,000/- ஐத்தாண்டாது.

பதிவர்களே, இனியாவது உண்மை நிலையை படம்பிடிப்போம். சக மனிதன் வாழ்க்கையை அவதானிப்போம். அவனுக்காக எழுதுவோம். இல்லை வெறுமனே சுறா படம்பார்த்து விமர்சனம் எழுதுவது மட்டுமே எமது கடன் என்றால்.......

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

I got a place in groundviews' SL bloggers list

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்