Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

பிரமிக்கவைத்த மாற்று மதத்தவர்களின் கேள்விகள்

பிரபல்யமிக்க பேச்சாளரான Dr. Zakir Naik அவர்களின் நிகழ்வொன்று நேற்று இலங்கையின் கொழும்பில் உள்ள சுகததாச வெளியரங்கில் இடம்பெற்றது.

Wiki Introduction
Zakir Abdul Karim Naik (Urdu: ذاکر عبدالکریم نائیک, Hindi: ज़ाकिर अब्दुल करीम नायक; born 18 October 1965) is a Muslim public speaker, and writer on the subject of Islam and other comparative religion. Naik is a medical doctor by profession, having attained a Bachelor of Medicine and Surgery (MBBS) from the University of Mumbai. [1][2]
Naik is the founder and president of the Islamic Research Foundation (IRF),[1][3] a non-profit organization which also owns and broadcasts the free-to-air global Peace TV channel from Mumbai.


இந்நிகழ்வுக்கு பல முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்கு நேரடியாக அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டிருந்தன. ஊடகங்களினூடாக இலங்கைவாழ் சகலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

உலகின் பல மதங்களை பற்றி ஒப்பீடுகளில் (comparative religion) இவர் மிகப்பிரபலம் என்பதாலும் பார்வையாளர்களில் இருந்து நேரடியாக கேட்கப்படும் கேள்விகளுக்கு இவர் மேடையிலேயே பதிலளிப்பதாலும் நிகழ்வில் கலந்துகொண்டேன்.

மாற்றுமதத்தவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் நிகழ்ச்சிகள் பல ஆண்டுகளுக்கு முன் தமிழ்மொழியில் பிஜே அவர்களால் இலங்கையின் பல பாகங்களிலும் நடைபெற்றிருந்தது. அந்நிகழ்வுகளை நிறுத்தும் முகமாக இலங்கையரசால் பிஜே அவர்கள் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டிருந்தார்.

6.30க்கு நிகழ்வு ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்து. 6.30க்கு முன்னரேயே மைதானம் நிரம்பி வழிந்தது. பிந்தி வந்த பலரை அனுமதிக்க முடியாத நிலமை ஏற்பட்டது. 25,000 பார்வையாளர்கள் கலந்துகொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.

மைதானத்தின் பிரதான பார்வையாளர் மண்டபத்தை நோக்கியதாக அரங்கு அமைந்திருந்தது. ஏனையவர்கள் பார்ப்பதற்காக பெரிய திரைகள் மைதானத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்தன. பிரமிப்பூட்டும் மேடையமைப்பு, professional ஆன Videography என பல எதிர்பார்க்காத விஷயங்கள் இருந்தன.

நிகழ்வு 7.30க்கு சற்று பின் ஆரம்பித்தது ஒரு கவலைக்குரியது. (Dr. Zakir Naik அவர்கள் சிங்கப்பூரில் இருந்து அன்று பிற்பகலே வர இருந்தார் என கேள்விப்பட்டேன். அது காரணமாக இருந்திருக்கலாம்) ஆயினும் இயலுமானவரை நிகழ்வு குறிப்பிட்ட நேரத்தில் நடப்பதில் ஏற்பாட்டாளர்கள் கூடிய கவனம் செலுத்தியிருக்கவேண்டும். அடுத்த நாள் வேலைநாளாக இருபப்தனால் நிகழ்வு 10 மணிக்கேனும் நிறைவுசெய்யப்பட்டிருக்கவும் வேண்டும்.

ரிஸ்வி முப்தி (அகில இலங்கை ஜம்மியதுல் உலமா) அவர்களினதும் ஆளுனர் அலவி மௌலானாவினதும் பிரபலமான சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவினதும் (பிரதியமைச்சர் பைசர் முஸ்தபாவின் தந்தை) பேச்சுக்களைத்தொடர்ந்து Dr. Zakir Naik இன் 15 வயது மகன் Fariq Naik உரையை ஆரம்பித்தார். அழகான ஆங்கில உரையால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். தந்தைக்கு பெருமை சேர்க்கும் மகன் இவர். கடவுளுக்கு இருக்க வேண்டிய பண்புகளையும், ஒருவர் கடவுள்தானா என்பதை உறுதிசெய்வதற்கு கடவுளின் பண்புகள் எப்படி இருக்கவேண்டும் என்றும் இவர் விளக்கினார். (Theology)

அதன்பின் மக்னின் பேச்சிலிருந்து அவர்கள் பேச்சை ஆரம்பித்தார்கள். கடவுள் மற்றும் மதங்களை நம்பாத விஞ்ஞானத்தை நம்பும் நாத்திகருக்கான பேச்சாக அது இருந்தது. கடவுள் நம்பிக்கை இல்லாத பதிவர்கள் இதில் கலந்துகொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

தனது பேச்சில் அவர்கள் வாதங்களை கோர்வையாக எடுத்துவைத்திருந்தார். பல சமய நூல்கள் பற்றிய அறிவு பிரமிக்கத்தக்கதாக இருந்தது. பைபிளில் இன்னொரு இறைதூதர் வருவார் என்பதற்கான ஆதாரங்களையும், அவர் பெயர் முஹம்மத் என்பதற்கான ஆதாரங்களையும் அள்ளி வழங்கினார்.

ITNஇன் "அட்டபட்டம" ஹசந்த ஹெட்டியாராசீயும் வந்திருந்தார். கேள்வி பதில் நிகழ்ச்சி கொழும்பின் பாராழுமன்ற உறுப்பினர் சுஜீவ சேரசிங்கவின் கேள்வியுடன் ஆரம்பித்தது. அதன்பின் நாத்திகர் ஒருவரின் கேள்வியும், கிறிஸ்த்தவர் ஒருவரினதும் காத்திரமான கேள்விகளுக்கு பதில்ளித்தவிதம் பிரமிப்பூட்டுவதாக் இருந்தது. இவை பற்றி சில பதிவுகளை சில தலைப்புகளின்கீழ் தனித்தனியாக தரலாம் என எண்ணுகிறேன்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

4 comments:

Balu said...

Good in intellectual but i don't think he realized god.

Unless you have tasted a sweet you can't say it's tasty.

சந்ரு said...

இதை வேறு பெயரால் 'மதப் பிரசாரம்' என்று சொல்வாங்களாம்
இசுலாம் மதத்தை இப்படித்தான் பரப்புகிறார்கள்.
தமிழரின் வரலாற்றில் வாசியுங்கள்

Robin said...

//பைபிளில் இன்னொரு இறைதூதர் வருவார் என்பதற்கான ஆதாரங்களையும், அவர் பெயர் முஹம்மத் என்பதற்கான ஆதாரங்களையும் அள்ளி வழங்கினார்.// தெரிந்து கொள்ள ஆவல்.

EKSAAR said...

//சந்ரு said...
இதை வேறு பெயரால் 'மதப் பிரசாரம்' என்று சொல்வாங்களாம்
இசுலாம் மதத்தை இப்படித்தான் பரப்புகிறார்கள்.//

இவ்வாறான கேள்வி பதில் நிகழ்ச்சி மூலம் தெளிவு பெறும் மக்கள் சரியான பாதையை தெரிவதில் தவறு இல்லையே.. இவ்வாறான நிகழ்வுகளை நீங்களும் ஒழுங்கு செய்யலாமே ..

Robin said...
//பைபிளில் இன்னொரு இறைதூதர் வருவார் என்பதற்கான ஆதாரங்களையும், அவர் பெயர் முஹம்மத் என்பதற்கான ஆதாரங்களையும் அள்ளி வழங்கினார்.// தெரிந்து கொள்ள ஆவல்

விரைவில் பதிவாக தர நினைத்திருக்கிறேன்