கொழும்பின் கொம்பனித்தெருப்பிரதேசத்தில் சட்டவிரோத கட்டடங்களை அகற்றியதை தொலைக்காட்சியில் பார்க்ககூடியதாக இருந்தது. இது தொடர்பான பல கண்ணோட்டங்கள் இருந்தாலும் யதார்த்தமான தீர்வு பற்றி யாரும் யோசிப்பதாக தெரியவில்லை.
Slave Island is a suburb in Colombo, Sri Lanka located directly south of the Fort area of Colombo. The name Slave Island was named during the British occupation and administration and originates from the Portuguese and Dutch period of administration when the slaves were held there, most of them were from Africa. Most of the slaves had returned to Africa The suburb contains Beira Lake, a large lake and its esplanade visited by many for recreation. Slave Island is mostly a commercial area with commercial establishments, hotels and shopping centres.
இன்னும் கொழும்பின் வெவ்வேறு பிரதேசங்களில் கட்டப்படக்கூடிய வீடுகள் தொடர்பான town planக்கு அமைவான அறிவுறுத்தல்கள் இருக்கின்றன. உதாரணமாக கொழும்பு 10 இல் அமைக்க அனுமதிக்கப்படும் வீடுபோல் கொழும்பு 7 இல் அமைக்க முடியாது.
இன்னும், எவ்வாறான வீடானாலும் கதவு ஜன்னல் தொடர்பான நியம அளவுகள் இருக்கின்றன. வீட்டின் சுவர் அளவில் குறிப்பிட்ட வீதம் கதவு ஜன்னல்களுக்காக இருக்கவேண்டியது அவசியம்.
பலர் இவ்வீடுகள் சட்டபூர்வமானவை என்று வாதிடுகிறார்கள். ஆனால் பல்வேறு சட்டங்களை கவனத்தில்கொள்ளும்போது இவ்வீடுகள் குறைந்தது கதவு ஜன்னல் தொடர்பான சட்டங்களின் அடிப்படையிலாவது சட்டவிரோதமாகக்கூடிய வாய்ப்புகளே அதிகம்.
இந்த சேரிவாழ் மக்கள் பெரும்பாலும் நடைபாதை வியாபாரிகளாக, கொழும்பின் மொத்தவிற்பனை சந்தையின் கூலித்தொழிலாளிகளாக இருக்கிறார்கள்.
இப்பிரதேசங்கள் மிகுந்த சன நெரிசல் மிக்கவை. சன நெருக்கடிமிக்க இப்பிரதேசத்தில் வாழும் பிள்ளைகள் கல்விகற்ககூடிய சூழலில் இல்லை என்பதே உண்மை. இதன்காரணமாக இங்கு தோன்றும் அடுத்த சமூகமும், கூலித்தொழிலாளிகளாக, சமூகத்தின் கடைநிலை அந்தஸ்த்துடையவர்களாகவே இருப்பர். இன்னும் வீடுகளுக்குள் போதியளவு காற்று வராததன்காரணமாக வீட்டில் உள்ள அதிகமானோர் வீட்டு வாசலிலேயே இருப்பதை இப்பிரதேசங்களுக்கு சென்றிருந்தால் கவனித்திருப்பீர்கள்.
முதலில் சேரிவாழ் மக்கள் இது தமக்கு வசதி இல்லாது என்பதை உணரவேண்டும். இவர்களின் கல்வியறிவு மிக மோசமான நிலையில் இருப்பதால் இதை உணரச்செய்வதே கடின இலக்காக இருக்கும்.
இவர்கள் சேரியாகா வாழ்ந்தாலும் இவர்களில் பலர் தமது நிலத்திற்கு உரிமை பத்திரங்களை கொண்டவர்களே. இப்பிரதேசங்கள் கொழும்பில் காணியின்பெறுமதி கூடிய இடங்களிலேயே இருக்கின்றன.
இப்பிரதேசங்களில் வாழ்வதற்கு இவர்கள் கூறும் நியாயங்கள்
- தமது தொழில்வாய்ப்புக்கு கொழும்பு நகருக்குள் இருப்பது அவசியம்
- இலங்கையில் சமூகங்களிடையேயான நம்பிக்கைகள் மிகக்குறைவாக இருக்கும் நிலையில், தாங்கள் வேறொரு பிரதேசத்தில் வேறொரு சமயக்குழுவின் ஆதிக்கத்தில் இருக்கும் பிரதேசத்தில் திணிக்கப்படுவது தமது இருப்புக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதமற்றது
- இவர்கள் தொடர்மாடி வாழ்க்கையை விருபவில்லை. தொடர்மாடிக்கட்டடதொகுதிகளில் காணப்படும் மேலதிக செலவுகள், அசௌகரியங்கள் பற்றி அதிக கவலைப்படுகிறார்கள். இன்னும் சிறியதாயினும் தமது நிலத்தில் வாழ்ந்தால், பிள்ளைகளுக்கு அக்காணியில் ஒரு மாடியைக்கட்டி கொடுக்கமுடியும் என்பது இவர்களது முக்கிய வாதம்.
இவ்வாறான நியாயங்கள் கட்டாயம் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
- முதலில் அரசு துறைமுகப்பகுதிய அண்டிய மொத்தவிற்பனை போன்ற வர்த்தகங்களை சன நெரிசலற்ற இன்னொரு பிரதேசத்திற்கு நகர்த்தவேண்டும்.
- போக்குவரத்து, புகையிரத மத்திய நிலையங்கள் இப்போது கொழும்பில் அமைந்துள்ளன. இவை வேறொரு பிரதேசத்திற்கு நகர்த்தப்பட வேண்டும்.
- அத்துடன் கொழும்பின் போக்குவரத்து வசதிகள் சீரமைக்கப்படலும், ஒழுங்குபடுத்தப்படலும் அவசியம். கொழும்பின் புற நகர்ப்பகுதிகளுக்கு இவ்வாறான போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கப்படவேண்டும்.
இவ்வாறு செய்யும்போது, தொழில்வாய்ப்புகளும் வேறுபிரதேசங்களுக்கு நகர்வதால் சேரிவாழ் மக்களும் விருப்பத்துடன் இடம்பெயர்வர்.
இன்னும், இச்சேரிப்புற மக்கள் தமக்கிடையே ஒரு சபையை அமைத்து இக்காணிகள் எல்லாவற்றையும் ஒன்றிணைத்து தனியாருக்கு விற்கமுடியும். இவர்கள் இருக்கும் நிலங்கள் கொழும்பின் மிக முக்கியமான இடங்கள். இக்காணிகளின் பெறுமதி மிக அதிகம். இவற்றை விற்பதன்மூலம் கிடைக்கும் பணத்தில் ஒவ்வொருவரும் கொழும்புக்கு அருகிலேயே 10 பேர்ச் நிலத்தையும் வாங்கி அதில் வசதியான ஒரு வீட்டையும் கட்டிக்கொள்ளமுடியும். இது நிச்சயம் வசதியானதாக இருக்கும். (சுறா படத்தில்வருவதுபோல் எங்கள் குப்பத்தை காப்பாற்றுவோம் என்று யாராவது விஜய் ரசிகர் சொன்னால்?!)
I wouldn’t even call this a slum, more like middle class housing with dodgy deeds.
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment