இலங்கையை வாட்டிவதைத்துக்கொண்ட கொடிய யுத்தம் ஓய்ந்து ஒரு வருடம் பூர்த்தியாகியிருக்கிறது. ஒருபக்கம் வெற்றிக்கொண்டாட்டங்களும் இன்னொருபக்கம் அஞ்சலி எனவும் எதிரும் புதிருமான நிகழ்வுகள் நடந்தேறுகின்றன.
அப்பாவி மக்கள் கொல்லப்படுவது ஒரு சிலரின் வார்த்தையில் துன்பியல் நிகழ்வு என்றொரு வார்த்தைக்குள் முடிந்துபோவதில்லை. உயிர்களின் இழப்பும் சொத்துக்களின் இழப்பும் வெறும் அஞ்சலி என்ற வார்த்தையால் மனமாறிப்போவதில்லை.
இங்கு மக்கள் என்பது சகல மனிதர்களையும் குறிக்கும். அவர்களை சிங்களவர், தமிழர், முஸ்லிம் என பிரித்தோ அல்லது யாழ்ப்பாணத்தான், மட்டக்களப்பான் அல்லது மாத்தறையான் என்று பிரித்து ஒரு பகுதியினரின் மரணத்தில் சந்தோஷமும் ஒரு பகுதியினரின் மரணத்தில் துக்கமும் அடைபவர்களின் மனதில் இருக்கும் குரூரம், வன்மம் இன்னும் இதுபோன்றா ஆயிரம் இழப்புகளையே கொண்டுவரும் அல்லவா?
ஒரு சாதாரண மனிதனால் எப்படி காத்தான்குடியில் மக்கள் கொல்லப்படும்போதும் கெப்பிட்டிகொல்லாவயில் கொல்லப்படும்போதும் மகிழ்ந்து வன்னியில் கொல்லப்பட்டவர்களுக்காக மட்டும் கண்ணீர் வடிக்கமுடியும்?
அல்லது தமிழ்ச்செல்வனின் மரணத்தில் கொதித்து கதிர்காமரின், நீலன் திருச்செல்வத்தின், பிரேமதாசவின், உதுமாலெப்பையின் மரணத்தில் மகிழ முடியும்?
இடம்பெயர்ந்த யாழ் முஸ்லிம்களையும், எல்லைக்கிராம சிங்களவர்களையும் பற்றிக்கவலைப்படாமல் எப்படி ஓராண்டு அகதிகளை பற்றி மட்டும் பேசமுடியும்?
இவையாவும் மனதிற்குள் இருக்கும் வன்மத்தின் புகையில்லையா?
(மரணங்களை புகைப்படங்களாக்கி அதைக்கொண்டு வாசகர்களின் மனதில் வன்மத்தை விதைப்பதில் எனக்கு உடன்பாடில்லாமையால் எந்தவொரு மரணத்தின் புகைப்படத்தையும் இப்பதிவில் பகிரவில்லை)
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
7 comments:
சகோதரா,
//அல்லது தமிழ்ச்செல்வனின் மரணத்தில் கொதித்து கதிர்காமரின், நீலன் திருச்செல்வத்தின், பிரேமதாசவின், உதுமாலெப்பையின் மரணத்தில் மகிழ முடியும்?//
இந்தக் கேள்வியை தாண்டி பதில் சொல்ல விரும்புகின்றேன்.
வன்னியில் கொல்லப்பட்ட மக்களுக்காக அஞ்சலி செய்கின்ற வேளையில், காத்தான்குடியில் கொல்லப்பட்ட முஸ்லிம்களுக்காகவும், எல்லைக்கிராம சிங்கள் மக்களுக்காகவும் நான் சந்தோசிக்கவில்லை. அத்துடன், ஒரு அப்பாவியின் இழப்பினை இன்னொரு அப்பாவியின் இழப்பின் மூலம் நியாயப்படுத்த என்னால் முடியாது. உங்களால் முடிகிறதல்லவா???
இவையாவும் மனதிற்குள் இருக்கும் வன்மத்தின் புகையில்லையா?
என்னுடைய கேள்வியையும் சேர்த்துக்கொள்ளுங்கள்
காத்தன்குடி கொலைகளுக்கோ, கெப்பிட்டிகொல்லாவ கொலைகளுக்கோ எழுதாத கரங்கள் எப்படி வன்னிக்கு மட்டும் எழுதும்?
//அப்பாவியின் இழப்பினை இன்னொரு அப்பாவியின் இழப்பின் மூலம் நியாயப்படுத்த என்னால் முடியாது. உங்களால் முடிகிறதல்லவா???//
மன்னிக்கவேண்டும்.. தவறான புரிதல். பிரித்துப்பார்த்து மகிழ்ந்தவர்களுக்கே என் பதிவு.. ஒரு மனிதனை மனிதனாக பார்க்கமுடிகின்ற எந்தவொருவரையும் நோக்கி இக்கேள்வி எழுப்பப்படவில்லை..
காத்தான்குடியிலும் கெப்பட்டிக்கொல்லாவிலையிலையும் கொலைசெய்தவர்கள் கருணாவின் குழுவினரே, ஜிகாத் என்ற பெயரில் எத்தனை தமிழர்களை முஸ்லீம்கள் கொலை செய்தார்கள்? உலகத்தின் பயங்கரவாதிகள் முஸ்லீம்கள் தான்.
அதன் பின் சமாதான பேச்சுவார்த்தையில் புலியை பிரதிநிதித்துவம் செய்தாரே மறந்துவிட்டிரோ?
ivanodu pesip payanillai.
ivan oru muslim inavaathi
vishamam vithaikkira oru islamiya inavathi
Post a Comment