Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

The Dirty Picture


சிறுவயது முதல் திரைப்படங்களில்மீது ஆர்வம்கொண்ட ஒரு பெண் திருமணத்திற்கு முந்திய நாள் வீட்டை விட்டு தப்பியோடி சினிமாவில் சேர்கிறாள்.


The Dirty Picture (Hindi: द डर्टी पिक्चर) is a 2011 Indian semi biographical, drama film inspired by the life of Silk Smitha, an actress noted for her erotic roles. The filmmakers, however, clarified that the story is not officially and literally based on Smitha alone, but also on many of her other Southern contemporaries like Nylon Nalini and Disco Shanthi

சினிமாவில் சேர்வதற்காக என்னவேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாக வெளிப்படையாக சொன்னாலும் அவளுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஒரு துணைநடிகைக்கு பதிலாக அவளுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. சாட்டையடிகளை தாங்கிக்கொண்டு கவர்ச்சியாக நடிக்கிறாள். ஆனாலும் படத்தின் டைரக்டர் அவளது காட்சிகளை கத்தரித்தே சினிமாவை வெளியிடுகிறார். படம் ஊத்திக்கொள்ள இவளது கவர்ச்சியான நடனத்தை இணைத்து மீண்டும் வெளியிடுகிறார் தயாரிப்பாளர். அதனால் படம் வசூலை அள்ளுகிறது.

அவளை தேடிப்பிடிக்கும் தயாரிப்பாளர் அவளுக்கு சில்க் (பட்டு) என்று பெயரிடுகிறார். சில்க் என்றொரு பாத்திரத்திரத்தை உருவாக்கியதால் (பட்டு) புழு என்றே என்றே அவரை அழைக்கிறாள்.

சூர்யகாந்த என்ற பிரபல நடிகருக்கு ஆசைநாயகியாக இருப்பதாக செய்யப்பட்ட ஒப்பந்த பிரகாரம் அந்நடிகர் இவளுக்கு நிறைய திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புக்களை பெற்றுக்கொள்கிறாள்.

ஒரு தருணத்தில் நடிகரின் மனைவி இவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு வர அவளை குளியலறையில் ஒழிந்துகொள்ளுமாறு துரத்துகிறார் நடிகர்.

அதன்பின் நடிகரை சில்க் புறக்கணிக்க அவளுக்கு வாய்ப்பே இல்லாமல் பண்ணுகிறார் அவர். தாமதமாக உண்மையை உணர்ந்துகொள்ளும் சில்க் இந்திய கலாச்சாரப்படி புடவை அணிந்து தற்கொலை செய்துகொள்கிறாள்.

இன்று பெண்ணியம் பேசுபவர்கள் காணும் கனவுப்பெண்ணுக்கு நிகரானவளாக சில்க் இருக்கிறாள். அவள் விரும்பாத திருமணத்தை அவள் செய்துகொள்ளவில்லை. அவள் ஆசைப்பட்ட துறையில் சாதிக்கவும் செய்கிறாள். தனது உடலை எவ்வளவு காட்டவேண்டும் என்று அவளே முடிவும் எடுக்கிறாள். தனது படுக்கையறையைக்கூட தான் விரும்புவோருடன் பகிர்ந்தும் கொள்கிறாள். அப்படி இருந்தும் கடைசியில் வாழ்க்கையில் விரக்தியுற்று தற்கொலை செய்ய வைப்பது எது?

இந்த சில்க் எனும் கதாபாத்திரம் வெவ்வேறு தள்ங்களில் வெவ்வேறு பெயர்களில் இருப்பதை இங்கு நான் ஞாபகப்படுத்தவேண்டும். அது ஒரு அலுவலகமாக இருக்கலாம் ஊடக நிறுவனமாக இருக்கலாம் அல்லது பேஸ்புக் டுவிட்டரில் ஏன் பதிவுலகமாகக்கூட இருக்கலாம். தளம் எவ்வாறிருந்தும் அப்பாத்திரத்தின் முடிவும் சில்க்கின் கதையை ஒத்ததாகவே இருக்கும். புழுக்களும் ஏதாவதொரு விடுதலை என்ற முகமூடியை அணிந்து வலம் வருகின்றன. அவ்வாறான புழுக்களுக்குத்தான் இங்கு பஞ்சமில்லையே..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

அப்துல் கலாமின் இலங்கை வருகை

இந்திய அணு விஞ்ஞானியும் முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாமின் வருகை தொடர்பாக தமிழ் ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.


Avul Pakir Jainulabdeen Abdul Kalam About this sound pronunciation (help·info) (Tamil: அவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்; born 15 October 1931) usually referred to as A. P. J. Abdul Kalam, is a renowned aerospace engineer, professor (of Aerospace engineering), and first Chancellor of the Indian Institute of Space Science and Technology Thiruvananthapuram (IIST), who served as the 11th President of India from 2002 to 2007.[1] During his term as President, he was popularly known as the People's President.[2][3] He was awarded the Bharat Ratna, India's highest civilian honour in 1997.



அவரது வருகை முன்னாள் ஜனாதிபதி என்ற வகையிலேயே அமைந்திருந்தது. இந்தியாவில்; சம்பிரதாய  ஜனாதிபதியால் கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுக்க முடியாது. அவர் ஜனாதிபதியாக இருந்ததால் இந்திய சிறுபான்மை இனங்களுக்கு முக்கியமாக முஸ்லிம்களுக்கு என்ன பயன் விளைந்திருக்கிறது என்ற ஒரு கேள்வியே இவரது வருகையின் மூலம் என்ன பயனை எதிர்பார்க்கமுடியும் என காட்டும்.

அவ்வாறான ஒருவர் எல்லை மீறும் இந்திய மீனவர்களுக்கு அங்கீகார்ரம் வாங்கிக்கொடுக்க முட்டாள்தனமான கருத்தை சொல்லியிருக்கிறார். கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக தமிழ் நாட்டை சேர்ந்தவர்களே அவரது கருத்தை ஏற்றுக்கொள்ளாத நிலையில் இலங்கை விவகாரத்தில் ஏன் மூக்கை இவர் நுழைக்கவேண்டும்? சாமானியர்களுக்கு புரியாத மேதாவித்தனமான கருத்தாக கருதுவதற்கு இதில் எதுவும் எல்லை. (கூடங்குளம் தொடர்பான கருத்து வேண்டுமானால் சாமானியனுக்கு பிரியாமல் இருந்திருக்கலாம்)

இவ்வாறான ஒருவரை தென்கிழக்கு பல்கலைக்கழகம் சந்திக்கவில்லை முஸ்லிம் அமைப்புக்கள் சந்திக்கவில்லை என்றுவேறு ஒரு சிலர் எழுதியதை வாசிக்க நேர்ந்தது. இந்த கலாமை விட அலவியால் அதிகம் செய்யமுடியும்! அலவி என்ன செய்திருக்கிறார் என்று அறிந்தவர்கள் அதை வைத்து கலாம் என்ன செய்யக்கூடும் என ஊகித்துக்கொள்ளட்டும்.

இவர் முஸ்லிம் காங்கிரசுக்கு அபிவிருத்தி அரசியலை பரிந்துரை செய்தாராம். இது தெரியாமல்தான் முஸ்லிம் காங்கிரஸ் இவரிடம் சென்று ஆலோசனை கேட்டதா? அதுபோதாதென்று சகல படங்களிலும் அஸ்வர் வேறு. கொடும சார்

அப்துல்கலாமின் முட்டாள்தனம்
இலங்கை கடற்பரப்பை இந்திய மீனவர்களுக்கு திறந்துவிட பார்க்கிறார்.

அப்படியானால் காஷ்மீரில் இந்தியர்களும் பாகிஸ்தானியர்களும் தலா மூன்று நாட்களுக்கு வளங்களை பகிர அவர் முதலில் இந்திய அரசுக்கு ஆலோசனை கூறட்டும்

ஊடகவியலாளர்கள் வேறு முட்டாள்தனமாக எதையாவது கேட்டிருக்கிறார்கள். இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்கள் அவசியமா என்பதை நாம்தான் முடிவுசெய்யவேண்டும். எதற்கு இவரிடம் கேட்டிருக்கிறார்கள்?

இந்தியாவில் ஒரு சம்பிரதாய பதவியை வகித்த ஒருவரிடம் இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவது தொடர்பாக கேள்விகேட்ட முட்டாள் ஊடகவியலாள்ர் யார்?

மஹிந்த ராஜபக்சவை பழிவாங்கிய அப்துல் கலாம்!
அப்துல் கலாம் பேசிய சிங்களத்தை சொன்னேன் :D

தான் பேசிய தமிழ் எப்படி இருந்திருக்கும் என்பது இன்று ஜனாதிபதிக்கு புரிந்திருக்கும்

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

நண்பன்

விஜய் படம் என்பதைவிட சத்யனின் படம் என்பதே பொருத்தமானது.

இலியானா அனுஷ்காவை ஞாபகப்படுத்துகிறார்

இலியானாவின் மலையாள கிண்டல் படத்தின் ஹைலைட்

பிரசவ சீன் மகா அறுவை

பாரி பாத்திரம் மட்டுமே விஜய்க்கு பொருத்தமானது. இல்லாவிட்டால் விஜயை ஜட்டியுடன் பார்க்கும் சாபம் நமக்கு நேர்ந்திருக்கும்

பாடல்களின் காட்சியமைப்பில் மட்டும் ஷங்கர் டச். அதிலும் த்ன்னையே கிண்டலடித்திருக்கிறார் ஷங்கர்.

வழமையான விஜய் ரசிகர்களுக்கு இப்படம் பிடிக்குமா?

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

பின்னணியை ஆராய்வோர் முன்னிலைப்படுத்தியது

"தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்" என்ற தலைப்பில் வெளியான ஆவணத்திற்கு பதிலாக 71 பேர் கையெழுத்திட்ட "வேண்டுகோளின்" பின்னான அரசியல் பின்னணி  என்றதொரு கட்டுரை ஒன்று திரு     பி.இரயாகரன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது.

1.) இவ்விரு ஆவணங்களும் எத்தனைபேரால் பகிரப்பட்டது என்ற ஒரு புள்ளிவிபரமே தமிழ் சமூகத்தின் பெரும்பான்மை முகத்தை காட்டிவிடுகின்றது.

2.) கட்டுரையாளர் வேண்டுகோளின் பின்னணியை ஆராயும் ஆர்வம்கொண்ட அளவுக்கு உள்ளடக்கத்தை அறிய விளங்க ஏற்றுக்கொள்ள முயலவில்லை. அதனால்தான் வேண்டுகோளை தமிழின எதிர்ப்பு என்ற ஒன்றுடன் முடிச்சுப்போட்டு பின் உள்ளடக்கத்தை தவிர்த்து தமிழின எதிர்ப்பு என்ற ஒரு கற்பனை மீது விமரிசனம் செய்துள்ளார்.

3.)  ஒன்று தமிழ் சமூகத்திலிருக்கும் பிற்போக்குத்தனங்களுக்கு அரசு காரணம் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அவர்கள் வசதியாக இரு தசாப்தங்களுக்கு மேலாக புலிகளின் ஆட்சியில் இருந்த பிரதேசங்களிலும் சுயாதீனமாக முடிவெடுக்ககூடிய புலத்திலும் அதே பிற்போக்குத்தனங்களுக்கு அரசு காரணமா என தெளிவாக்குதல்வேண்டும்.


4.) அறிக்கைக்கு அரசியல் உண்டு அது இதிலுமுண்டு என்ற வாதம்.

ஒரு கட்சி அறிக்கை விடும்போது அக்கட்சியின் இற்றைவரையிலான அரசியல் வரலாற்றுடன் சேர்த்தே விளங்கப்படும். இதன்மூலம் உட்கருத்து சிதையும் வாய்ப்பு பெருவாரியாக இருக்கிறது. ஆனால் தனி நபர் அல்லஹு கட்சி / இய்ககம் சாராத  எனும்போது உள்ளடக்கமே முக்கியத்துவம் வகிக்கிறது என்பதை வசதியாக இவ்வாதம் மறைக்கிறது.

மொத்தத்தில் சாண் ஏற முழம் சறுக்கும் கதைதான் இதிலும் நடந்திருக்கிறது. சாண் ஏற்றிவிட்டவர்களை வாழ்த்துவது, தள்ளிவிட்டவர்களுக்காக கவலைப்படுவதும்தான் எம்மால் முடியும். அந்தோ பரிதாபம்; தள்ளிவிடுவதில் உங்கள் கவனம் ஒரு போதும் உங்களை நீங்களாவது ஏறுவதற்கான முஸ்தீவுகளில் கவனஞ்செலுத்தவிடாது என்பதாவது அவர்களுக்கு இன்னும் தெரியவில்லை.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

நாட்டு நடப்புக்கள்

உயர்தர பரீட்சை குளறுபடிகள்
இன்று நாட்டின் முக்கிய பேசுபொருளாக உயர்தர பரீட்சை குளறுபடிகள் இருக்கின்றது. உடனடியாக முடிவுகளை இரத்துச்செய்து முழுமையான விசாரணைகளின் பின் முடிவுகளை மீள வெளியிட்டிருக்கவேண்டும். ஆனால் முடிவுகளை சந்தேகத்துக்கிடமான நிலையில் வைத்திருக்கவேண்டிய அவசியம் அரசுக்கு இருப்பதாவே தெரிகிறது. எஸ்பிக்கு தனியார் பல்கலைக்கழகங்கள் மீது இருக்கும் காதல் சொல்லிமாள முடியாதது. பரீட்சை முடிவுகள் மீதான சந்தேகம் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு நல்லதொரு ஆரம்பத்தை கொடுக்கும் என்ற கணக்கு இருக்கும் போல்தான் தெரிகிறது. தேசிய சுதந்திர முன்னணி கூட முன்னாள் பரீட்சை ஆணையாளர், அமைச்சர் ஒருவர் ஆரம்பிக்கப்போகும் தனியார் பல்கலைக்கழகத்தில் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்படுவார் என கூறியிருப்பது இச்சதித்திட்டத்தை வெளிச்சமாக்குகின்றது.


இதேவேளை ஊடகங்கள் கூட இவ்வளவுநாளும் திறம்பட இயங்கிய பரீட்சைத்திணைக்களத்தினை மிக கேவலமாக சித்தரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. பொறுப்பற்ற தனியார் ஊடகங்கள் நாட்டின்தும் பொதுமக்களினதும் நலன்களுக்கு எதிரானவை என்பதை இது உறுதிப்படுத்துகின்றது.
தொடர்புடைய பதிவு 

தேசிய சுதந்திர முன்னணி
விமல் வீரவன்ச தலைமை வகிக்கும் தேசுமு; சமகால நிகழ்வுகளில் நியாயமான நிலைப்பாடுகளை எடுத்திருக்கிறது. தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பாக, உயர்தர பரீடசை முடிவுகள் தொடர்பாக, என்கவுன்டரில் கொல்லப்படும் பாதாள உலகம் தொடர்பாக அதன் நிலைப்பாடு நியாயமானது. சிலவேளை மஹிந்த அரசாங்கமுடன் முறுகல் ஏற்பட்டிருக்கலாம் என்ற ஊகங்கள் பரவலாக இருந்தாலும் நியாயம் நியாயம்தானே..


மக்கள் விடுதலை முன்னணி
மக்கள் விடுதலை முன்னணிக்குள்ளிருக்கும் குத்து வெட்டுக்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. ரணிலைப்போல் சோமவன்சவும் அரசின் கைப்பொம்மையாக மாறிவருகின்றது என்ற சந்தேகம் வலுக்கின்றது.
ஆயினும் ஜேவிபி இன் பிரசன்னம் நாட்டின் நலன்களுக்கு மிக இன்றியமையாது. புத்தக்கப்பூச்சிகளான ரேங்க் எடுத்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களை விட ஜேவிபியின் நிகழ்ச்சி நிரலில் இயங்கும் பல்கலைக்கழக மாணவர்கள் இலவசக்கல்வியை பாதுகாக்க எடுக்கும் முனைப்புக்கள் பார்ரட்டப்படவேண்டியவை. புத்தகப்பூச்சிக்களை விட இவர்களே நாட்டின் சொத்து. இவ்வாறான தன்னலமற்ற துடிப்பான இளைஞர்களைக்கொண்ட கட்சியில் எவ்வளவுகாலத்திற்கு சோமவன்சவால் தாக்குப்பிடிக்கமுடியும்?

ஐக்கிய தேசியக் கட்சி
ஐதேகவின் நிர்வாகிக்களுக்கான தேர்தல் கரு ஜயசூரியவை பூச்சியமாக்கியிருக்கிறது. ஒரு கட்சிக்குள் வெற்றிபெறுவதற்கு சரியான வியூகம் அமைக்கத்தெரியாத சஜித்தின் திட்டத்திற்கு பலியாலிப்போன ஒருவர் எவ்வாறு சிரந்த தலைவராக இருப்பார்? அதேவேளை ஊடக வெளிச்சம்மூலம் தன்னை பிரபலம் என நினைத்துக்கொண்டிருந்த தயாசிறிக்கும் நல்ல அடி. தேவையான அடியும் கூட. வெகுஜன ஊடகங்களை மட்டும் நம்பும் அரசியல்வாதிகள் இனி சுதாகரித்துக்கொள்ளவேண்டும். ஐதேகவின் யாப்புத்தான் இத்தோல்விகளுக்கு காரணம் என பலர் நியாயம் கற்பிக்க கூடும். ஆனாலும் ஆளம் அறியாமல் காலை விடுவதும் தப்பு, ஆடத்தெரியாதவன் கூடம் கோணல் என்பது தப்பு. தகுதியான தலைவர் எந்தவொரு களத்திலும் தன்னை நிரூபிக்க கூடியவராக இருக்கவேண்டாமா?
தொடர்புடைய பதிவு 

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்