Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

நாட்டு நடப்புக்கள்

உயர்தர பரீட்சை குளறுபடிகள்
இன்று நாட்டின் முக்கிய பேசுபொருளாக உயர்தர பரீட்சை குளறுபடிகள் இருக்கின்றது. உடனடியாக முடிவுகளை இரத்துச்செய்து முழுமையான விசாரணைகளின் பின் முடிவுகளை மீள வெளியிட்டிருக்கவேண்டும். ஆனால் முடிவுகளை சந்தேகத்துக்கிடமான நிலையில் வைத்திருக்கவேண்டிய அவசியம் அரசுக்கு இருப்பதாவே தெரிகிறது. எஸ்பிக்கு தனியார் பல்கலைக்கழகங்கள் மீது இருக்கும் காதல் சொல்லிமாள முடியாதது. பரீட்சை முடிவுகள் மீதான சந்தேகம் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு நல்லதொரு ஆரம்பத்தை கொடுக்கும் என்ற கணக்கு இருக்கும் போல்தான் தெரிகிறது. தேசிய சுதந்திர முன்னணி கூட முன்னாள் பரீட்சை ஆணையாளர், அமைச்சர் ஒருவர் ஆரம்பிக்கப்போகும் தனியார் பல்கலைக்கழகத்தில் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்படுவார் என கூறியிருப்பது இச்சதித்திட்டத்தை வெளிச்சமாக்குகின்றது.


இதேவேளை ஊடகங்கள் கூட இவ்வளவுநாளும் திறம்பட இயங்கிய பரீட்சைத்திணைக்களத்தினை மிக கேவலமாக சித்தரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. பொறுப்பற்ற தனியார் ஊடகங்கள் நாட்டின்தும் பொதுமக்களினதும் நலன்களுக்கு எதிரானவை என்பதை இது உறுதிப்படுத்துகின்றது.
தொடர்புடைய பதிவு 

தேசிய சுதந்திர முன்னணி
விமல் வீரவன்ச தலைமை வகிக்கும் தேசுமு; சமகால நிகழ்வுகளில் நியாயமான நிலைப்பாடுகளை எடுத்திருக்கிறது. தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பாக, உயர்தர பரீடசை முடிவுகள் தொடர்பாக, என்கவுன்டரில் கொல்லப்படும் பாதாள உலகம் தொடர்பாக அதன் நிலைப்பாடு நியாயமானது. சிலவேளை மஹிந்த அரசாங்கமுடன் முறுகல் ஏற்பட்டிருக்கலாம் என்ற ஊகங்கள் பரவலாக இருந்தாலும் நியாயம் நியாயம்தானே..


மக்கள் விடுதலை முன்னணி
மக்கள் விடுதலை முன்னணிக்குள்ளிருக்கும் குத்து வெட்டுக்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன. ரணிலைப்போல் சோமவன்சவும் அரசின் கைப்பொம்மையாக மாறிவருகின்றது என்ற சந்தேகம் வலுக்கின்றது.
ஆயினும் ஜேவிபி இன் பிரசன்னம் நாட்டின் நலன்களுக்கு மிக இன்றியமையாது. புத்தக்கப்பூச்சிகளான ரேங்க் எடுத்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களை விட ஜேவிபியின் நிகழ்ச்சி நிரலில் இயங்கும் பல்கலைக்கழக மாணவர்கள் இலவசக்கல்வியை பாதுகாக்க எடுக்கும் முனைப்புக்கள் பார்ரட்டப்படவேண்டியவை. புத்தகப்பூச்சிக்களை விட இவர்களே நாட்டின் சொத்து. இவ்வாறான தன்னலமற்ற துடிப்பான இளைஞர்களைக்கொண்ட கட்சியில் எவ்வளவுகாலத்திற்கு சோமவன்சவால் தாக்குப்பிடிக்கமுடியும்?

ஐக்கிய தேசியக் கட்சி
ஐதேகவின் நிர்வாகிக்களுக்கான தேர்தல் கரு ஜயசூரியவை பூச்சியமாக்கியிருக்கிறது. ஒரு கட்சிக்குள் வெற்றிபெறுவதற்கு சரியான வியூகம் அமைக்கத்தெரியாத சஜித்தின் திட்டத்திற்கு பலியாலிப்போன ஒருவர் எவ்வாறு சிரந்த தலைவராக இருப்பார்? அதேவேளை ஊடக வெளிச்சம்மூலம் தன்னை பிரபலம் என நினைத்துக்கொண்டிருந்த தயாசிறிக்கும் நல்ல அடி. தேவையான அடியும் கூட. வெகுஜன ஊடகங்களை மட்டும் நம்பும் அரசியல்வாதிகள் இனி சுதாகரித்துக்கொள்ளவேண்டும். ஐதேகவின் யாப்புத்தான் இத்தோல்விகளுக்கு காரணம் என பலர் நியாயம் கற்பிக்க கூடும். ஆனாலும் ஆளம் அறியாமல் காலை விடுவதும் தப்பு, ஆடத்தெரியாதவன் கூடம் கோணல் என்பது தப்பு. தகுதியான தலைவர் எந்தவொரு களத்திலும் தன்னை நிரூபிக்க கூடியவராக இருக்கவேண்டாமா?
தொடர்புடைய பதிவு 

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

0 comments: