"தமிழ் சமூகத்திற்கும் அதனுடைய சிவில், அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு வேண்டுகோள்" என்ற தலைப்பில் வெளியான ஆவணத்திற்கு பதிலாக 71 பேர் கையெழுத்திட்ட "வேண்டுகோளின்" பின்னான அரசியல் பின்னணி என்றதொரு கட்டுரை ஒன்று திரு பி.இரயாகரன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது.
1.) இவ்விரு ஆவணங்களும் எத்தனைபேரால் பகிரப்பட்டது என்ற ஒரு புள்ளிவிபரமே தமிழ் சமூகத்தின் பெரும்பான்மை முகத்தை காட்டிவிடுகின்றது.
2.) கட்டுரையாளர் வேண்டுகோளின் பின்னணியை ஆராயும் ஆர்வம்கொண்ட அளவுக்கு உள்ளடக்கத்தை அறிய விளங்க ஏற்றுக்கொள்ள முயலவில்லை. அதனால்தான் வேண்டுகோளை தமிழின எதிர்ப்பு என்ற ஒன்றுடன் முடிச்சுப்போட்டு பின் உள்ளடக்கத்தை தவிர்த்து தமிழின எதிர்ப்பு என்ற ஒரு கற்பனை மீது விமரிசனம் செய்துள்ளார்.
3.) ஒன்று தமிழ் சமூகத்திலிருக்கும் பிற்போக்குத்தனங்களுக்கு அரசு காரணம் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அவர்கள் வசதியாக இரு தசாப்தங்களுக்கு மேலாக புலிகளின் ஆட்சியில் இருந்த பிரதேசங்களிலும் சுயாதீனமாக முடிவெடுக்ககூடிய புலத்திலும் அதே பிற்போக்குத்தனங்களுக்கு அரசு காரணமா என தெளிவாக்குதல்வேண்டும்.
4.) அறிக்கைக்கு அரசியல் உண்டு அது இதிலுமுண்டு என்ற வாதம்.
ஒரு கட்சி அறிக்கை விடும்போது அக்கட்சியின் இற்றைவரையிலான அரசியல் வரலாற்றுடன் சேர்த்தே விளங்கப்படும். இதன்மூலம் உட்கருத்து சிதையும் வாய்ப்பு பெருவாரியாக இருக்கிறது. ஆனால் தனி நபர் அல்லஹு கட்சி / இய்ககம் சாராத எனும்போது உள்ளடக்கமே முக்கியத்துவம் வகிக்கிறது என்பதை வசதியாக இவ்வாதம் மறைக்கிறது.
மொத்தத்தில் சாண் ஏற முழம் சறுக்கும் கதைதான் இதிலும் நடந்திருக்கிறது. சாண் ஏற்றிவிட்டவர்களை வாழ்த்துவது, தள்ளிவிட்டவர்களுக்காக கவலைப்படுவதும்தான் எம்மால் முடியும். அந்தோ பரிதாபம்; தள்ளிவிடுவதில் உங்கள் கவனம் ஒரு போதும் உங்களை நீங்களாவது ஏறுவதற்கான முஸ்தீவுகளில் கவனஞ்செலுத்தவிடாது என்பதாவது அவர்களுக்கு இன்னும் தெரியவில்லை.

EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment