Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

TV உடன் ஞாயிறு

இந்த ஞாயிறு உடன் வீட்டில் கழிந்தது. அதில் சில சுவாரசியங்களை உங்களுடன் பகிரலாம்.

  • வெற்றி TV முதல் தடவையாக பார்த்தேன். (பயணங்கள் காரணமாக பிந்திப்போனது). Tune பண்ணி முடித்தபோது நேபாளி படம் போய்க்கொண்டிருந்தது.

    நேபாளி என்ற பெயர் காரணமாக படத்தில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கவில்லை. அதனால் அதைப்பார்த்திருக்கவில்லை. காதல் காட்சிகளாகட்டும் மற்றவையாகட்டும், எல்லாம் பிடித்திருந்தது. பரத்தின் மரணம் சொல்லப்பட்ட விதம் ரொம்ப பிடித்திருந்தது. கதாநாயகனின் மரணம் சோகமின்றி ஜீரணிக்க கூடியதாக இருந்தது படத்தின் தரத்துக்கு சான்று.

    தம்பதியர் தனியாக வாழ்வது எவ்வளவு பெரிய என்பது பயமுறுத்தி புரியவைக்கப்பட்டுள்ளது. இனி எல்லா நண்பர்களுக்கும் தனியாக வாழ வேண்டாம் என்று சொல்லவேண்டும்.

    அத்துடன் நீண்ட நாட்களுக்குப்பின் மது போதை அல்லாத காட்சிகள் censor செய்யப்பட்டதும் இப்படத்தில் தான் காணக்கிடைத்தது. சிறையில் ஆண் கைதிகள் குளிக்கும் காட்சியும் censor செய்யப்பட்டது.

  • வெற்றிக்கு Tune பண்ணியபோது இலவச இணைப்பாக டாண் TV கிடைத்தது. ஒரு ஆரோக்கியமான போட்டி இலங்கை தமிழ் தொலைக்காட்சிகளில் எதிர்பார்க்கப்பட்ட போதும் அது டாண் TV இல் கிடைக்குமா என்பது சந்தேகமே..

  • டில்ஷானின் மீது ஆத்திரம். மலை போல் ஒரு இலக்கு இருக்கும்போது பொறுப்பற்று; ஜயசூரிய ஆட்டமிழந்த பின்னும் நிதானமாக டில்ஷான் ஆடவில்லை. அவ்வளவு விரைவாக அடித்தாடவேண்டியிருக்கவில்லை. தான் அப்படித்தான் என்று காட்டப்போய் விக்கட்டை தாரை வார்த்தார். அதேபோல் மகேலவும். வெட்டோரியின் அந்த ஓவரில் பொறுமை காத்திருக்கலாம். வெல்ல முடியாவிட்டாலும் இலக்குக்கு அருகில் கொண்டு சென்றிருந்திருக்கலாம். Run Rateக்காவது உதவியிருக்கும்.

  • அசத்தப்போவது யாரு பற்றியும் கட்டாயம் சொல்லவேண்டும். இந்நிகழ்ச்சியில் சிறுவர்கள் பங்குபற்றுவது எனக்கு உடன்பாடு இல்லாத விடயம். சுயமாக சிந்தித்து ஒரு 16 வயதுக்கு மேல் அவர்கள் கொமடி பண்ணினால் பரவாயில்லை. அம்மாவின் அப்பாவின் திணிப்புகளால் பிஞ்சில் வெம்பி இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பிரக்ஞை உள்ள ஒருவராவது எதிர்க்கவில்லயா?

  • மின்னல் நிகழ்ச்சி ஆர்வத்துடன் பார்க்க வேண்டியதாகியது. ரங்காவுக்கோ அல்லது அஸாத் சாலிக்காகவோ அல்ல. நீண்ட காலத்தின் பின் சுவாரசியமாக்கிய ஹரீஸுக்காக.

    மின்னலின் ஆஸ்த்தான அரசியல்வாதிகளாக இருந்த ரவி ராஜ், சிவாஜிலிங்கம், பஷீர் சேகுதாவூத், இராதா கிருஷ்ணனின் வரிசையில் விரைவில் அஸாத் சாலியும் ஆனந்த சங்கரியும் சேர்ந்திருகிறார்கள் என்று தெரிகிறது,

    தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிய ரங்காவின் பேச்சுக்கள் மகா கொமடி. இவர்தான் மூதூர் மக்கள் வெளியேற்றப்பட்டபோது இரண்டு முஸ்லிம் அரசியல்வாதிகளை கூட்டிவிட்டு கூத்து பார்க்க நினைத்தவர். (இருவரும் சண்டை பிடிக்க வேறு நாள் வருகிறோம். இப்போது மூதூர் பற்றியே பேசுவேம் என்று ரங்காவுக்கு ஆப்படித்தது பசுமையாக இன்றும் இனிக்கிறது) மூதூர் சம்பவம் தொடர்பாக மழுப்பல் போக்கை கையாண்டவர். சாத்தான் வேதம் ஓதுகிறது. தயவு செய்து அந்த நாய் கதையை விடுமாறு அவரை யாராவது சொல்லுங்கள். வேணாம்.. வலிக்குது.. அழுதுடுவன்..

    அதில் மகா கொமடி, ஹரீஸிடம் கேள்விகேட்ட அந்த கல்முனை நபரை உங்களுக்கு தெரியுமா என்று ஹரீஸிடம் கேட்டதுதான். ஒரு நகரத்தில் வாழும் எல்லாரையும் தெரிந்திருக்க வேண்டியது மேயரின் கடமையா என்ன? பட்டதாரி ஒருவர் கேட்கும் கேள்வியா இது? என்ன கொடும சார்.

  • EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
    EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
    Based on a work at eksaar.blogspot.com.

    பூச்சரம்

    Mobile phone இன் ஒளியில் சத்திர சிகிச்சை

    >கண்டி பொது வைத்தியசாலையில் Mobile phone இன் ஒளியில் சத்திர சிகிச்சை ஒன்று நடைபெற்றுள்ளது.

    குறிப்பிட்ட வைத்தியசாலையில் Dr. M.M. நியாஸ்; பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும்போது மின் தடை ஏற்பட்டது. மின் தடையின் போது பாவிக்கப்படும் Generator உம் 10 நிமிடங்களுக்கு மேல் வேலை செய்யவில்லை. இதன்போது வேறு எந்த வழியுமற்ற சத்திர சிகிச்சை குழு Mobile phone இன் ஒளியில் சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக நடாத்தியது. இவ்வாறான இக்கட்டான நிலையை சமாளிப்பதற்கு தயாராகா ஒரு Battery இல் இயங்கும் Torch கூட சத்திர சிகிச்சைக்கூடட்தில் இருக்கவில்லை.

    ஏனைய காத்திருந்த நோயாளிகள் மீதான சத்திர சிகிச்சை மின்சாரம் வரும் வரை பிற்போடப்பட்டது. மின்சாரம் ஏறத்தாள ஒன்றரை மணித்தியாலத்தின் பின்பே திரும்பியது.

    இவ்வாறான சம்பவம் கண்டி வைத்தியசாலை வரலாற்றில் முதற்தடவை நடைபெற்றதாக அறியக்கிடைக்கிறது.

    EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
    EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
    Based on a work at eksaar.blogspot.com.

    பூச்சரம்