Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts

பொன்சேக்கா கைது - நடந்தது என்ன? பகுதி 2

பொன்சேக்கா கைது - நடந்தது என்ன? பகுதி 1


"என்னைத்தொட வேண்டாம்" என் பொன்சேகா எச்சரித்தார். ஆயினும் 59வயதான இராணுவத்தளபதியின் கைகளையும் காலையும் பிடித்து தூக்கி வேனில் அடைததனர். அத்துடன் அவரின் தனிப்பட்ட செயலாளரான சில்வாவும் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டார். வாகனம் இராணுவ தொடரணியின் பாதுகாப்புடன் அங்கிருந்து அகன்றது. அதேசமயம் இவ்வலுவலகத்தின் ஒவ்வொரு அறையையும் இராணுவ பொலிஸ் சோதனையிட்டது.

ஏறத்தாள 45 நிமிடம் 4 அரசியல் வாதிகளும் அடைக்கப்பட்டிருந்தனர். நுழைவாயிலையும் பூட்டிவிட்டே சென்றிருந்தனர். அரசையல்வாதிகள் தத்தமது கைத்தொலைபேசியூடாக ஊடகங்களுக்கு செய்தியை அறிவித்தனர். ஊடகவியலாளர்கள் வந்தபோது அலங்கோலமான நிலையில் கைகலப்பு நடந்த இடம்போல இருந்த அறையை கண்டனர். சில ஜன்னல் கண்ணாடிகள் சேதமுற்றும் ஒரு இராணுவ அதிகாரியின் name-tag கழன்று கீழே விழுந்து கிடப்பதையும் கண்டனர். அங்கிருந்த படைவீரர்கள் ஊடகவியலாளர்களை தடுத்ததுடன், அவர்களின் கமரா மெமரி கார்ட்களையும் பறிமுதல் செய்தனர்.

இங்கு "ஒப்பரேசன் பொன்சேகா" நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அவர் வாடகைக்கு தன் மனைவியுடன் தங்கியிருந்த குயீன்ஸ் வீதியில் இருந்த வீட்டில் பொன்சேகாவுக்கு இராணுவத்தால் வழங்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியை CID யின்ர் தேடிக்கொண்டிருந்தனர். அதை கண்டுபிடித்த பின் பொன்சேக்காவின் மனைவி அனோமாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டபோது நடுநிசியாகியிருந்தது.

கைது பற்றிய தகவல் கிடைத்து அவ்விடத்துக்கு ரவி கருணாநாயகவுடன் வந்த மங்கள் சமரவீர "இடி அமீனின் விசாரணைக்கு வாக்குமூலம் வழங்குவதை நிறுத்துங்கள்" என கத்தினார். உடனடியா ஒரு உதவியாளர் ஒருவர் அவரை அவசரமாக அவ்விடத்தில் இருந்து கூட்டிச்சென்றார்.



ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் இச்சந்தர்ப்பத்தில் டெல்லியில் இருந்தார். கட்சியின் உபதலைவர் கரு ஜயசூரிய அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு தகவலை கூறினார். விக்கிரமசிங்க தனது பயணத்தை இடைநிறுத்தி கொழும்பு திரும்புவதாக கூறினார்.


(இது The Sunday Times இல் வெளிவந்த கட்டுரையின் சுருக்க தமிழ் வடிவம்)

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

பொன்சேக்கா கைது - நடந்தது என்ன?

கடந்த திங்கட்கிழமை Provost Marshal பிரிகேடியர் ஜகத் விஜேசிறி உடனான இராணுவ பொலிஸ்குழு நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள தனது தலைமையலுவலகத்தில் ஒத்திகையில் ஈடுபட்டது.

இரவு 9 மணிக்கு இக்குழு கொழும்பு கட்டளைத்தளத்தை சேர்ந்த மேஜர் ஜெனரல் சுமித் மானவடுகே தலைமையிலான 200 துருப்பினருடனும், குற்றப்புலனாய்வு அதிகாரிகளுடனும், கொழும்பு ரோயல் கொலேஜ்க்கு முன்னிருக்கும் ராஜகீய மாவத்தைக்கான பாதைகளை தடைசெய்தது.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேர்தல் அலுவலகத்திற்கு இரண்டு சீனியர் இராணுவ அதிகாரிகளுடன் இராணுவ பொலிசாரும் சென்றனர்.

இவர்கள் இவ்வலுவலகத்தில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமினதும் தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவர் மனோகணேசனினதும் தனிப்பட்ட பாதுகாவலர்களாக இருக்கும் அமைச்சு பாதுகாப்பு பிரிவிநரை (MSD) கண்டனர்.

அவர்களில் (MSD) இருவர் மேல்மாடிக்கு வந்திருப்பவர்கள் பற்றிய செய்தியை அறிவிக்க மாடிப்படிகளில் ஏறியபோது நிறுத்தப்பட்டு அனைவரும் ஒரு மூலையில் நிறுத்தப்பட்டனர். இதன் மூலம் மேல்மாடியில் ஆயுததாரிக்ள் எவரும் இல்லாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அத்துடன் CCTV கமெராவை நிறுத்தி பதிவுசெய்யும் கருவியையும் (recording equipment) எடுத்துக்கொண்டனர்.

மேல்மாடியில் ஜேவிபியின் சேமவன்ச, சுனில் ஹந்துனெட்டி, ஹக்கீம், கணேசனுடன் ஜெனரல் பாரளுமனற தேர்தல் தொடர்பாக ஆராய்ந்துகொண்டிருந்தார்.

இராணுவ பொலீஸ் அதிகாரிகள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சோமவன்சவையும் அறையை விட்டகலுமாறு கூறியபோதும் அவர்கள் மறுத்துவிட்டனர்.



பொன்சேகா இராணுவதளபதியாக இருந்தபோது அப்போது கேணலாக இருந்த விஜேசிறியை இராணுவ வாகனத்தில் மாடொன்றை ஏற்றிச்சென்றதாக குற்றஞ்சாட்டி திருகோணமலை இடட்தங்கல் முகாமுக்கு மாற்றஞ்செய்திருந்தார். இவர் தனக்கு பதவியுயர்வு கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, பின் பதவியுயர்வு கிடத்ததும் வழக்கை வாபஸ் பெற்றிருந்தார். இஅவ்ர் இரு வாரங்களுக்கு முன்னரேயே மீண்டும் Provost Marshal ஆக நியமிக்கப்பட்டிருந்தார்.

மற்றும் மேஜர் ஜெனரல் மானவடுகே பொன்சேக்காவின் காலத்தில் தளபதியுடனான முரண்பாடு காரணமாக கட்டளைப்பிரிவிலிருந்து (யுத்த நடவடிக்கை தொடர்பான பிரிவு) பொதுப்பிரிவுக்கு (நிர்வாகப்பிரிவு) மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.

நான்கு அரசியல்வாதிகளும் பார்த்துக்கொண்டிருக்க; ஜெனரல் பொன்சேகா இரு இராணுவ அதிகாரிகளுடனும் "தான் சிவிலியன் என்பதால், பொலீஸ் தான் கைதுசெய்யவேண்டும்" என வாதாடினார். மேஜர் ஜெனரல் மானவடுகே பொலீஸ் (CID) கீழே காத்திருப்பதாகவும், தான் தனக்கு இடப்பட்டிருக்கும் கட்டளையையே நிறைவேற்றுவதாகவும் தயவுசெய்து வருமாறும் கூறினார். இதன் பின் பலத்த எழுதமுடியாத வார்த்தை பரிமாறல்கள் நடந்தது.

ஒரு அதிகாரி குற்றப்பத்திரிகையை வாசிக்கத்தொடங்கியிருந்தார். ஆனால் மேஜர் ஜெனரல் மானவடுகே "வாசிப்பதற்கு நேரமில்லை. அவரைப்பிடித்து தூக்கிச்செல்லுங்கள்" என்று இராணுவ பொலீஸ் அதிகாரிகளுக்கு கட்டளையிட்டதாக ஹக்கீம் சொல்கிறார்.

மிகுதி பகுதி 2 இல் தொடரும்
(இது The Sunday Times இல் வெளிவந்த கட்டுரையின் சுருக்க தமிழ் வடிவம்)

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

தமிழ் வளர்க்கும் மெட்ரோ நியூஸ

இலங்கையில் மெட்ரோ நியூஸ் என்று ஒரு பத்திரிகை வீரகேசரி பத்திரிகை குழுமத்திலிருந்து வருகிறது.

மெட்ரோ நியூஸ் என்றதுமே ஆங்கில பத்திரிகை என்று நினைத்துவிடாதீர்கள். தமிழ் கூறும் நல்லுலகுக்கான பத்திரிகையே அது. ஏன் ஆங்கில பெயர் என்று சில தமிழ் வளர்க்கும் பதிவர்கள் கேட்கமாட்டார்கள். எல்லாம் பிரபலம் எனும் போதை.

முதல் பக்கம் ஒரு பெரியபடம் அத்துடன் இரண்டுவரி செய்திகள் நடுவில் 2 பக்கம் சினிமா ஒருபக்கம் தொலக்காட்சி நிகழ்ச்சி நிரல் ஒரு பக்கம் விளையாட்டு அத்துடன் ஓரிரண்டு பக்கம் மசாலா கதை (உண்மை சம்பவமாக அல்லது துப்பறியும் கட்டுரையாக) ஏறத்தாள ஜனனி தரத்தில் இருக்கும்.

இந்தப்பத்திரிகையின் தரம் பற்றி ஒரு பானை சோற்றுக்கு இரண்டு சோறு பதம் பார்ப்போமா?

இப்பத்திரிகையில் கேள்வி பதில் அம்சமும் இருக்கிறது. அதில்



கே: இலங்கை கிரிக்கட் அணியின் எதிர்கால தலைமைப்பொறுப்பு டில்ஷானிடம் வளங்கப்படுமா?

ப: ... ஒரு நாள் போட்டி ஒன்றின்போது டில்ஷான் தலைமை ஏற்று நடத்தியபோது மிகுந்த பதற்றமடைந்தார்.



கே: இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காளியாக யாரை கருதுகிறீர்கள்?

ப: ....ஆரம்பத்தில் அதிர்ச்சி கொடுக்கும் சமிந்த வாஸ், பின்னுக்கு இடைஞ்சல் கொடுக்கும்..

இது பிரசுரமாகி ஒரு மாதம்ளவே இருக்கும். எழுதுபவர்கள் எவ்வளவு தூரம் விஷய ஞானம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்?

வீரகேசரியில் வந்த விளம்பரம் Personal Secretry ? 

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

பாலத்திற்கு பின்னாலுள்ள பெயர்!


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த சனிக்கிழமை கிண்ணியாவில் இலன்கையின் மிக நீளமான பாலத்தை திறந்துவைத்தார்.

இதன் கட்டுமானட்துக்கான நிதி சவூதி அரசால் வழங்கப்பட்டிருந்தபோதும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகளால் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் 18 அடிக்கல்கள் நட்டபின்பே ஆரம்பிக்கப்பட்டிருந்தது! கடைசி அடிக்கல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் அவர் சந்திரிக்கா அரசில் பெருந்தெருக்கள் அமைச்சராக இருந்தபோது நடப்பட்டிருந்தது.

இப்பிரதேச அரசியல்வாதிகள் எல்லோரும் தங்கள் பெயரை இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க பாலத்திறப்பில் பதிந்துகொள்ள ஆர்வம் காட்டினார்கள்.
அழைப்பிதழில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் TB ஏக்கநாயக்க பிரதியமைச்சர் WB ஏக்கநாயக்க மற்றும் அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற அட்மிரல் வசந்த கருணாகொட மட்டுமே இருந்தது.

தன்னுடைய பெயர் இல்லாதது பற்றி அமைச்சரவை அந்தஸ்த்து அற்ற அமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற அட்மிரல் வசந்த கருணாகொட விடம் தொலைபேசியில் கேட்டபோது அவர் இராணுவ பாணியில் "மேலிடத்து கட்டளை" என கூறியிருக்கிறார்.

அதன்பின் அவர் ஜனாதிபதி ஆலோசகர் பசில் ராஜபக்ஷவை தொடர்புகொள்ள பிரச்சினைக்கு தீர்வு கிட்டியுள்ளது.

ஜானதிபதியால் திரைநீக்கம் செய்யப்பட்டதாக 3 மொழியிலும் அமைந்த நினைவுப்படிகத்தில் நஜீப், அமைச்சர், பிரதியமைச்சர், செயலாளர், தேச நிர்மாண அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே ஆகியோருடன் பசில் ராஜபக்ஷவின் பெயரும் சேர்ந்துகொண்டது.


ஜனாதிபதி தமிழிலும் சிலவார்த்தைகள் உரையாற்றுவார் என்றும் கதை இருந்தது. இதனால் மஜீட் அரபியில் ஒரு உரையை எழுதித்தருமாறு பிரபல மௌலவியை கோரினார். இது வாசிக்கப்பட்டபோது பலருக்கு விழங்காத போதும் சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அஸீஸ் அப்துல் ரஹ்மான் ஜம்னாஸ் விழங்கிக்கொண்டார்.
தூதுவர் மர்ஹபா என்று உணர்ந்த்திருக்க கூடும்.
இருந்தபோதும் ரணில் விக்ரமசிங்க அரசில் அமைச்சராக இருந்தபோது இந்த சவூதி அரேபிய உதவியை கொணர்ந்த சிறீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பற்றி ஒரு வார்த்தை கூட இருக்கவில்லை!

நன்றி the SundayTimes : Talk at the Cafe Spectator : Sunday October 25, 2009

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

இலங்கை பதிவர் சந்திப்பு – IAM NOT AFRAID TO BE ALONE


நம்மில் பலர் அழகிப்போட்டி பார்த்திருக்கிறோம். பல இனத்து பல தேசத்து அழகிகள் பார்த்திருக்கிறோம். அதில் யார் சிறந்த அழகி என்பதில் நீங்கள் எல்லாம் ஒரே கருத்தில் எப்போதாவது இருந்திருக்கிறீர்களா?

மனிதர்களிடையே கருத்து வேற்றுமை சாதாரணமான்தும் இயல்பானதும் என இலகுவாக விளங்கவைக்க இதைவிட இலகுவான உதாரணம் எனக்கு கிடைக்கவில்லை.

இதை மனதில் கொண்டு மேற்கொண்டு படியுங்கள்.

பதிவுலகம் - எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் யார் வேண்டும் என்றாலும் எழுதலாம் என்றாகிவிட்டது. எனக்கு பிடித்ததும் அதுதான். சிலர் நினப்பதுபோல் ஊரோடும்போது ஒத்து ஓடுவதானால் எதற்கு அது? யாராவது எழுதும்போது வாசித்து FACEBOOK வருவதுபோல் I LIKE THIS என்பதில் ஒரு ஓட்டை மட்டும் பதிந்துவிடலாமே?

ஊடக வியலாளர் அல்லது ஊடக நிறுவனத்தில் வேலை செய்பவர் மாத்திரம் அல்லது எங்காவது இதற்கும் போய் ஒரு கோஸ் முடித்து சான்றிதழ் எடுத்தவர்தான் எழுத வேண்டும் என்பதுபோல் சிலர் தன்னை தானே பிரபல பதிவர் என அழைத்துக்கொண்டு தன் கருத்தோடு மட்டும் இயைந்து வருபவர்கட்கு மாத்திரம் ஆஹா ஒஹோ என பாராட்டி வால் பிடித்துக்கொண்டு சொல்லவருவதுதான் இப்பதிவுலகின் என் மிகப்பெரிய வருத்தம்.

இலங்கை பதிவர் சந்திப்பு - ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு நிகழ்வு. ஆரம்பம் முதலே எனக்கு அதில் கலந்துகொள்ள எண்ணம் இல்லாமல் இருந்தாலும் அது தோல்வியுற வேண்டும் என நான் ஒருபோதும் இருக்கவில்லை. 

இலங்கையின் தமிழ் மக்களிடையே கருத்து சுதந்திரம் மதிக்கப்படும் என்பதில் எனக்கு சிறிதளவும் நம்பிக்கை இல்லாதிருந்தமைதான் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளாமல் ஒதுங்க நினைத்தமைக்கு காரணம். ஆயினும் அது தொடர்பான அறிவித்தல்களை என் வலைப்பதிவில் பிரசுரித்தும் நான் அறிந்திருந்த நண்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியும் என் பங்களிப்பை எவ்வித குறையும் இன்றி வழங்கினேன்.

கலந்து கொள்ள ஆர்வம் இல்லாதிருந்தும் நான் மதிக்கும் அண்ணாவின் அழைப்பை மறுப்பது மரியாதையற்றது என்று கருதியமையால் சரியாக 9.05 க்கு சமூகமளித்தேன். அதை வேண்டுமானால் இதில் சந்தேகம் கொள்பவர்கள் அனைவராலும் என்னாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவரிடம் நிரூபிக்கவும் தயார்.

இப்பதிவர் சந்திப்பில் என்னை அடையாளம் காட்டுவதினின்றும் தவிர்ந்தும் கொண்டேன். ஆர்வலராக காட்டிக்கொள்ள நினைத்திருந்தபோதும், நிகழ்ச்சியை நடாத்திய ஒருவர் ஆர்வலர்களை வடை சாப்பிட வந்தவர்கள் என விளித்தமையால் அதைக்கூட நான் செய்யவில்லை.

இச்சந்திப்பு நடந்து முடிந்தபின் எல்லோரும் அதை புகழ்ந்தார்களே தவிர அதை காத்திரமாக மதிப்பீடு செய்யவில்லை. அதை செய்யாதே என்று குறிப்பால் ஏனை பதிவர்களை அச்சுறுத்தவும் என்னை வசைபாடியது வழிவகுத்தது.

பதிவர் சந்திப்பு முடிந்த கையோடு எனக்கு வசை பாட சிலர் ஆரம்பித்துவிட்டார்கள். கருத்து சுதந்திரம் தொடர்பான என் கருத்தை பரிசீலுக்க சரியான தருணம் என்பதாலும், சில பதிவர்களை தோலுரித்து அறிந்து கொள்ளவும், கடைசியாக சிரிப்பவன் பெரிதாய்ச்சிரிப்பான் என்ற ஆங்கில பழமொழியை உறுதிப்படுத்தவும், இவ்வளவு நாளும் என் மௌனம்....

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

ஆதவன், பேராண்மை மற்றும் 60வருட ARMY

இலங்கை இராணுவத்தின் 60ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டாங்களை முன்னிட்டு நடாத்தப்பட்ட கண்காட்சியை பார்க்கச்சென்றிருந்தேன். அதுக்கு என்னா எங்கிறீங்களா? கடைசியில பாருங்க..




















எதிர்வரும் 16ஆம் திகதியுடன் இலங்கை திரையரங்குகளைவிட்டு உன்னைப்போல் ஒருவனை தூக்க இருப்பதால் மறுநாள் உன்னைபோல் ஒருவன் பார்க்கச்சென்றேன். சின்னப்படம் என்பதால் என்னவோ; நிறைய trailer காட்டினார்கள். முக்கியமாக பேராண்மை மற்றும் ஆதவன். ஆனால் ஒரு விஷயம் பாருங்கோ.. இந்த படங்களில வாற மாதிரி ஆயுதங்கள் ஒண்டும் 60 வருஷ army கிட்ட இல்ல பாருங்கோ.. (இருந்தா வெச்சுகிட்டு காட்டாம வஞ்சகமா செய்றாங்க)

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

Mobile phone இன் ஒளியில் சத்திர சிகிச்சை

>கண்டி பொது வைத்தியசாலையில் Mobile phone இன் ஒளியில் சத்திர சிகிச்சை ஒன்று நடைபெற்றுள்ளது.

குறிப்பிட்ட வைத்தியசாலையில் Dr. M.M. நியாஸ்; பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும்போது மின் தடை ஏற்பட்டது. மின் தடையின் போது பாவிக்கப்படும் Generator உம் 10 நிமிடங்களுக்கு மேல் வேலை செய்யவில்லை. இதன்போது வேறு எந்த வழியுமற்ற சத்திர சிகிச்சை குழு Mobile phone இன் ஒளியில் சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக நடாத்தியது. இவ்வாறான இக்கட்டான நிலையை சமாளிப்பதற்கு தயாராகா ஒரு Battery இல் இயங்கும் Torch கூட சத்திர சிகிச்சைக்கூடட்தில் இருக்கவில்லை.

ஏனைய காத்திருந்த நோயாளிகள் மீதான சத்திர சிகிச்சை மின்சாரம் வரும் வரை பிற்போடப்பட்டது. மின்சாரம் ஏறத்தாள ஒன்றரை மணித்தியாலத்தின் பின்பே திரும்பியது.

இவ்வாறான சம்பவம் கண்டி வைத்தியசாலை வரலாற்றில் முதற்தடவை நடைபெற்றதாக அறியக்கிடைக்கிறது.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

பாரினில் சிறந்த தேசம் - எங்கள் இலங்கை தேசம்


தசாப்தங்களாக உள்நாட்டுப்போரில் சிக்குண்டிருப்பது இலங்கை. உலகின் மிகக்கொடூரமான போர் ஒன்றை எங்கள் தேசம் சந்தித்த போதும் அசராமல் நடை போடுகின்றது.. யுத்தத்தின் உயிரிழப்புகள் வெறும் இலக்கங்களாகவும், யுத்த சேதங்கள் கண்காட்சிகளாகவும் ஆகுமளவுக்கு எல்லாருக்கும் யுத்தம் பழகிப்போனது. விமானம் மோதுண்டு சிறு பாதிப்புக்கு உள்ளான இறை வரித்திணைக்கள அலுவலகத்தை அண்மிக்கும் போது வாகனத்தின் கண்ணாடிகளுக்கூடாக சிறிது எட்டிப்பார்த்துவிட்டு மறு நிமிடம் கொழும்பு நகரம் தன் இயல்பான இயந்திர வாழ்க்கையில் பயணிக்கிறது.

இவ்வாறான யுத்த அபாயச்சூழல் இந்தியாவின் 95% ஆன பகுதிகளில் இல்லை. இருந்தாலும் மத்திய கிழக்கிற்கு தொழில் செய்யச்செல்லும் இந்தியன் அடித்து துரத்தினாலும் இந்தியாவுக்கு திரும்ப மனமின்றி இருக்கும் நிலையில் அதே இடத்தில் பணியாற்றும் இலங்கையன் தன் contract எப்போது முடியும் என்று calendar ஐ பார்த்த படி நாட்களை ஓட்டுகிறான். இது இலங்கை மீது இலங்கையர் கொண்ட பாசத்திற்கு சிறந்த உதாரணம்.

மத்திய கிழக்கில் ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படும் ஒவ்வொரு இலங்கையனும் இலங்கையில் இருக்கும் பௌர்ணமி விடுமுறையையும் அந்த நாளை தான் கழித்த ஞாபகங்களையும் நினைத்து பெரு மூச்செறிகிறான்.

இந்த ஏப்ரல் மாத்தத்தை பாருங்கள்.

9 - பௌர்ணமி
10 - பெரிய வெள்ளி
11,12 - சனி, ஞாயிறு
13,14 - தமிழ் சிங்கள புது வருடம்

இன்னும் 2 நாட்கள் மாகாண சபை election இற்கும் கிடைக்கும்...

9 ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை விடுமுறை. எவ்வளவு சந்தோஷம் பாருங்கள். இன்னும் ஓரிரு நாட்கள் தங்கள் சொந்த கணக்க்கில் லீவு எடுத்து கொண்டு குடும்பமாக / நண்பர்களுடன் Little England என்று அழைக்கப்படும் நுவரெலியா சென்று ஏப்ரல் வசந்த காலத்தை மகிழ்ச்சியாக குளிருடன் கழிக்க முடியும்..

இந்த பாக்கியம் உலகத்துல வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறதா? இருந்தா சொல்லுங்க...

நாங்க Little England போகப்போகிறோம். நீங்கள் எல்லாம் வயிற்றெரிச்சல் படுங்க...

என்ன.. இந்த முறை checking எல்லாம் அதிகமாக இருக்கும்... அவ்வளவுதான்


EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

இலங்கையின் பொருளாதாரத்தை ஆட்டம் காணச்செய்யுமா Ceylinco இன் சரிவு?


இலங்கையர் ஒவ்வொருவருக்கும் தெரிந்த corporate பெயர் Ceylinco. ஏன் அதன் தலைவர் தேசமான்ய லலித் கொதலாவலவை தெரியாதோரும் இல்லை என்று சொல்லலாம்.. இவர் ஒரு Business Tycoon ஆக மட்டுமல்லாது சிறந்த பரோபகாரியாகவும் நாடு பூராவும் தெரிந்தவர். இவரது நிறுவனங்கள் கால் பதிக்காத துறையே இல்லையென்று சொல்லலாம்.. இவரது நிறுவனங்கள் பற்றி தெரிய வேண்டுமானால் ceylinco என்று Google இல் தேடிப்பாருங்கள். அது எந்த துறை சார்ந்த நிறுவனம் என்றாலும் நிறுவனத்தின் பெயரில் Ceylinco வருமாறு பார்த்து கொள்வார்.. அவருக்கு தெரியும் மக்கள் அந்த பெயர் மீது எவ்வளவு நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்று.

ஆனால் இது எல்லாம் பழைய கதையாகிப்போனது தான் சோகம். ஏன் என்பதுதான் இந்த பதிவு..

ஒரு நாள் Ceylinco குழும நிறுவனம் Golden Key திவால் ஆகி போனதாக திடீரென செய்திகள் பரவ ஆரம்பித்தன. இந் நிறுவனத்தில் முதலிட்ட பலருக்கு அதற்கான வட்டி சில மாதங்களாக செலுத்தபடாததால் சந்தேகம் கொண்ட சில முதலீட்டாளர்கள் வைப்புகளை திருப்பி பெற முயற்சிக்க; வைப்புகளை திருப்பி எடுக்க முடியாதென்று நிறுவனம் சொல்ல அப்போதுதான் பலருக்கு நெருப்பு பற்றி கொண்டது.. அண்மைக் காலமாக சக்விதி பிரமுக என பல முதலீடுகளில் பணத்தை இழந்த இலங்கை முதலீட்டாளர்கள் ரொம்பதான் பயந்து போனார்கள். Golden Key இற்கு முன்னால் எல்லோரும் வரிசை கட்டி நிற்க பிரச்சினை இன்னும் சிக்கலாகியது.. செய்தியும் காட்டுத்தீ போல் பரவியது. இன்னும் சில வைப்பாளர்கள் Ceylinco குழும நிறுவனமான Seylan Bank இல் வைப்பிட்ட பணத்தயும் மீளப்பெற முயற்சிக்க மத்தியவங்கி உடனடியாக தலையிட்டு Seylan Bank இன் நிருவாகத்தை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது. இது வெறுமனே மக்களுக்கு நம்பிக்கையூட்டும் செயல் மட்டுமே. ஏன் என்றால் இந்த நிலையிலும் Seylan Bank இன் தலைவராக லலித் கொதலாவல தொட்ர்ந்து இருக்க மத்திய வங்கி அனுமதித்தது.

இந்த இடத்தில் ஒரு அடிப்படை விஷயத்தை விளக்க வேண்டும். மக்கள் வங்கியில் போடும் பணம் எல்லாம் வங்கியின் Locker இல் பாதுகாப்பாக இருப்பதாகவே நினைக்கிறார்கள். யதார்தத்தில் மக்கள் வைப்பு செய்த பணத்தில் 10% மட்டுமே வங்கியில் இருக்கும் (இது சராசரி மீளளிப்புகளை எதிர்கொள்ள போதுமானது). மிகுதி 90% ஆன வைப்புகள் வங்கியால் வட்டி தொழிலுக்கு பாவிக்கப்படும்.

மக்கள்; வங்கியில் இருக்கும் பணம் பாதுகாப்பாக இல்லை என்று நினைக்க தொடங்கினால் Withdrawals அதிகரிக்கும். எல்லா withdrawals ஐயும் சமாளிக்க 10% போதுமா என்ன? இந்த நிலையில் வங்கியால் இப்போதைக்கு withdraw பண்ண முடியாது என்று கூற, அதனால் மக்கள் பயந்து இன்னும் வங்கியில் சென்று வைப்புகளை மீளப்பெற முண்டியடிக்க, வங்கி திவால் ஆகும்!

இது அந்த வங்கியோடு நின்று விடாது மற்ற வங்கி மீதும் மக்கள் சந்தேகிக்க வங்கித்துறையே collapse ஆகும்.

இதை தவிர்ப்பதற்காகவே மத்திய வங்கி, Seylan Bank ஐ இலங்கை வங்கியிடம் கையளித்தது.

Golden Key இல் முதலிடப்பட்ட பணம் வெளிநாடுகளில் (முக்கியமாக அவுஸ்த்திரேலியாவில்) புதிய company களை ஆரம்பிப்பதற்காக நாட்டுக்கு வெளியே நகர்த்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் வெளிவந்துள்ளது.

சரி Golden Key இல் கொதலாவல என்ன என்ன பண கொடுக்கல் வாங்கல் களை ஒவ்வொரு மாதமும் செய்தார்?

அவரது சம்பளம் 3,500,000/-
சரண நிதியம் 2,000,000/-
Solo U நிதியம் 400,000/-

இதே வேளை அவர் மனைவியோ 17 வருடங்களுக்குரிய gratuity ஐ பெற உரித்துடையவராக இருக்கையில் 20 வருடத்திற்கான gratuity ஐ பெற்றுள்ளார். அதுமட்டுமல்லது பல வெளி நாட்டு பயணங்களுக்கான பணமும் அவரது இதர செலவுகட்கான பணமும் எந்த வித கட்டுப்பாடோ ஒழுங்கோ இல்லாமல் இந்நிறுவனத்தில் இருந்து எடுக்க பட்டுள்ளது.

அவர் இப்பொது சிங்கப்பூரில் (உண்மையா என்று தெரியாத நோய்க்கு) சிகிச்சை பெறுவதாக நீதி மன்றத்தில் கூறப்பட்டுள்ளது. இதை நீதிமன்றம் நிராகரித்து அவர் மீது பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது.

Golden Key ஐ பற்றி விசாரித்தபோது அதன் வைப்பாளர் ஒருவர் தொடர்பான அதிர்ச்சித்தகவல் கிடைத்தது. அவரது மகா புத்திசாலித்தனமான எந்த ஊடகத்திலும் வராத அந்த தகவல் உடன் இன்னும் பல சுவையான விஷயங்கள் பகுதி இரண்டில் வரும்..

இதையும் பாருங்க ஆவி வந்த Blog!!! இதை படிக்குமுன் : வெறுமனே உங்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக எழுதப்படும் பதிவல்ல இது. 100% உண்மையான விஷயம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் நான் எதிர்நோக்கும் பிரச்சினையில் இருந்து வெளிவர உங்களில் யாராவது தரும் advice உதவக்கூடும் என்ற நம்பிக்கையில் எழுதப்படுவதாகும். எனவே அக்கறையுடன் படித்து உங்கள் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்கள்



EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்