பொன்சேக்கா கைது - நடந்தது என்ன? பகுதி 1
"என்னைத்தொட வேண்டாம்" என் பொன்சேகா எச்சரித்தார். ஆயினும் 59வயதான இராணுவத்தளபதியின் கைகளையும் காலையும் பிடித்து தூக்கி வேனில் அடைததனர். அத்துடன் அவரின் தனிப்பட்ட செயலாளரான சில்வாவும் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டார். வாகனம் இராணுவ தொடரணியின் பாதுகாப்புடன் அங்கிருந்து அகன்றது. அதேசமயம் இவ்வலுவலகத்தின் ஒவ்வொரு அறையையும் இராணுவ பொலிஸ் சோதனையிட்டது.
ஏறத்தாள 45 நிமிடம் 4 அரசியல் வாதிகளும் அடைக்கப்பட்டிருந்தனர். நுழைவாயிலையும் பூட்டிவிட்டே சென்றிருந்தனர். அரசையல்வாதிகள் தத்தமது கைத்தொலைபேசியூடாக ஊடகங்களுக்கு செய்தியை அறிவித்தனர். ஊடகவியலாளர்கள் வந்தபோது அலங்கோலமான நிலையில் கைகலப்பு நடந்த இடம்போல இருந்த அறையை கண்டனர். சில ஜன்னல் கண்ணாடிகள் சேதமுற்றும் ஒரு இராணுவ அதிகாரியின் name-tag கழன்று கீழே விழுந்து கிடப்பதையும் கண்டனர். அங்கிருந்த படைவீரர்கள் ஊடகவியலாளர்களை தடுத்ததுடன், அவர்களின் கமரா மெமரி கார்ட்களையும் பறிமுதல் செய்தனர்.
இங்கு "ஒப்பரேசன் பொன்சேகா" நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அவர் வாடகைக்கு தன் மனைவியுடன் தங்கியிருந்த குயீன்ஸ் வீதியில் இருந்த வீட்டில் பொன்சேகாவுக்கு இராணுவத்தால் வழங்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியை CID யின்ர் தேடிக்கொண்டிருந்தனர். அதை கண்டுபிடித்த பின் பொன்சேக்காவின் மனைவி அனோமாவிடம் வாக்குமூலம் பெறப்பட்டபோது நடுநிசியாகியிருந்தது.
கைது பற்றிய தகவல் கிடைத்து அவ்விடத்துக்கு ரவி கருணாநாயகவுடன் வந்த மங்கள் சமரவீர "இடி அமீனின் விசாரணைக்கு வாக்குமூலம் வழங்குவதை நிறுத்துங்கள்" என கத்தினார். உடனடியா ஒரு உதவியாளர் ஒருவர் அவரை அவசரமாக அவ்விடத்தில் இருந்து கூட்டிச்சென்றார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் இச்சந்தர்ப்பத்தில் டெல்லியில் இருந்தார். கட்சியின் உபதலைவர் கரு ஜயசூரிய அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு தகவலை கூறினார். விக்கிரமசிங்க தனது பயணத்தை இடைநிறுத்தி கொழும்பு திரும்புவதாக கூறினார்.
(இது The Sunday Times இல் வெளிவந்த கட்டுரையின் சுருக்க தமிழ் வடிவம்)
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment