கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் Election Jokes என்ற தொடர் பதிவை தந்துதிருந்தேன். அதில் முக்கியமான 2 வேட்பாளர்கள் இருந்தனர். பகிர்வதற்கும் நிறைய விடயங்கள் இருந்தது.
பாராளுமன்றத்தேர்தலின் வெற்றி எவர் பக்கம் என்பது அனைவருக்கும் தெரிந்த நிலையிலும், இதுவரை வெளிவராத சில சுவாரசியமான செய்திகள் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். அவற்றை உங்களுடன் பகிர்வதற்காக பாராளுமன்றத்தேர்தல் 2010 என்ற தொடரை ஆரம்பிக்கிறேன். உங்களின் கருத்துக்கள், எதிர்பார்ப்புகளை எனக்கு அறியத்தாருங்கள்.
சஜித் பிரேமதாச அவர்கள், 2/3 பெரும்பானமையை கோரும் அரசு நாட்டில் பாதியளவான பிரச்சினையேயேனும் தீர்த்துள்ளதா என்று கேள்வியெளுப்பியுள்ளார்.
இந்த தேர்தலில் திகாமடுல்ல (அம்பாரை) மாவட்டத்தில் கூடுதலான சுயேட்சை கட்சிகள் போட்டியிடுவதனால் புதிய சின்னங்களை தேர்தல்கள் செயலகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சின்னங்களில் அரிவாள் (விவசாய அரிவாள் அல்ல) காண்டாமிருகம், நாகம், கட்டில் போன்ற சின்னங்களும் அடங்குகின்றன.
வன்முறை மிக்கதாக மாறிவரும் அரசியல் கலாச்சாரத்தில் ஆக்கூடுதலாக வன்முறையில் ஈடுபடும் கட்சிக்கு அடுத்த தேர்தலில் அரிவாள் சின்னத்தை வழங்கவேண்டும்.
பிரபல சிங்கள திரையுலக நடிகை, கீதா குமாரசிங்ஹ, தான் வென்றதும் 40,000 பேருக்கு தொழில் வழங்கப்போவதாக கூறியுள்ளார்.
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment