கட்சிகளின் தேசியப்பட்டியலில் சிறுபான்மை
ஐமசுமு (UPFA) பட்டியலில் இடம்பெறுவதற்காக போராடிக்கொண்டிருந்த கருணா தனது இடத்தை உறுதிசெய்துள்ளார். அவரையும் சேர்த்து 3 தமிழர்கட்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் முஸ்லிம்கள் 4 பேர் இடம்பெறுகிறார்கள். இவர்களில் கட்சிதாவுவதற்காக பணம் வழங்கப்பட்டதாக கூறிய முஸம்மில், ஐதேக விலிருந்து கட்சி மாறிய முஹம்மட், அஸ்வர் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
இதில் பௌத்த பிக்குகள் இருவரும் இடம்பெறுகின்றனர்.
இன்னும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவரும், பொன்சேக்காவின் ஜனாதிபதி தேர்தல் மனு நிராகரிக்கப்படவேண்டும் என ஆட்சேபனை தெரிவித்தவருமான சரத் கோங்கஹகே இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
ஐதேக வின் (UNP) தேசியப்பட்டியலில் 9 தமிழர்கட்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் இடம்பெறும் 6 முஸ்லிம்களில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த நிசாம் காரியப்பர், ஹஸன் அலி, மசூர் சின்னலெப்பை ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
ஜெனரல் சரத் பொன்சேகா போட்டியிடும் ஜனநாயக தேசிய முன்னணியில் அர்ஜுன ரணதுங்கவின் சகோதரர் சஞ்சீவ ரணதுங்க, அனுர குமார திசாநயக்க, டிரான் அலஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இப்பட்டியலில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்களது பெயர் இடம்பெறவில்லை.
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment