Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

இலங்கையில் ஹலால் பிரச்சினை (Update 1)




Halal
(Arabic: حلال alāl, "permissible") is a term designating any object or an action which is permissible to use or engage in, according to Islamic law. The opposite of this word is haraam.

ஹலால் என்பது அனுமதிக்கப்பட்ட்து என்பதை குறிக்கும். நாம் இங்கு தற்போதைய பேசுபொருளாக உள்ள உணவுப்பொருள்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கும் முறைமை பற்றியே பேசவிருக்கிறோம்.

உயிரினங்கள்
மனிதன் உண்பதற்கு இஸ்லாம் அனுமதிக்கப்பட்ட விலங்கினங்களுக்கு உதாரணமாக ஆடு, மாடு, ஒட்டகை போன்ற கால்நடைகளை குறிப்பிடலாம். பறவைகளில் கோழி, காடை, வாத்து.. என்பன வரும். இவ்விரண்டு வகையிலும் வேட்டையாடும் உயிரின்ங்களான புலி, நாய், பருந்து போன்றன ஹறாமாகும். கடலுணவுகள் ஹலாலானதாகும். பன்றி, மது, போதைப்பொருட்கள் ஹராமாகும்.

உண்ண அனுமதிக்கப்பட்ட உயிரினங்களில் பறவை, கால்நடை போன்றவற்றில் தாமாக செத்தவை ஹறாமாகும். இவை இஸ்லாம் கூறிய முறைப்படி அறுக்கப்பட்டால் மாத்திரமே ஹலாலாகும். கடலுணவுகளை அறுக்கவேண்டும் என்ற சட்டமில்லை. கடலில் தாமாக செத்தவைகளும் ஹலால் ஆகும். (பிடிக்கப்படும் நெத்தலி மீன்களில் ஒவ்வொரு மீனுக்கும் “மரணத்திற்கான காரணத்தை
நாம் பரிசோதிக்க முடியாதல்லவா!)

மரக்கறி உணவுகள் ஹலாலாகும். அதனால்தான் முஸ்லிம்கள் சைவ உணவகங்களில் தயக்கமில்லாமல் சாப்பிடுகிறார்கள்.

சான்றிதழ் அவசியமா?

நீங்கள் சைவ உணவு சாப்பிடுபவர் என்று வைத்துக்கொள்வோம். நான் எமது வீட்டில் சமைத்த மரக்கறி உணவை உங்களுடன் பகிரும்போது நீங்கள் சாப்பிடுவீர்கள். சிலவேளை சுவைக்காக மாசி போட்டிருந்தால்/ சிக்கன் சூப் கட்டி சேர்த்திருந்தால் நான் அதை உங்களுக்கு தரமுடியாது. அப்படி செய்வதுதான் நான் உங்கள் நம்பிக்கையை மதிப்பதாக இருக்கும்.

இதே நிலமையை ஒரு கடைக்கு யோசித்துப்பாருங்கள். நீங்கள் கிரிபத்கொடைக்கு பயணம் சென்றுள்ளீர்கள். அங்கு சைவ ஹோட்டலே இல்லை. ஏதாவது ஒரு கடையில் மரக்கறி சாப்பாட்டை வாங்கி சாப்பிடுவீர்கள். ஆனால் அந்த ஹோட்டலில் இறைச்சி / மீன் சமைக்கப்படுகிறது. ஒரே அகப்பையை இரண்டு கறிக்குள்ளும் போட்டிருக்கலாம். அல்லது மரக்கறியில் சூப் கட்டி போட்டிருக்கலாம். நீங்கள் 10 பேர் சென்று மாசியோ, சூப்போ போடாத கறிதான் வேண்டுமென்றால், சைவ நம்பிக்கையை மதிக்காத கடைக்காரர் வேண்டுமென்றே தனக்கு கிடைத்த வருமானத்தை இழக்க விரும்பாதவராக இதற்குள் அதெல்லாம் போடவில்லை என்று சொல்லலாம்.

அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் உங்களுக்கு அதை உறுதிப்படுத்த ஒருவர் தேவைப்படுகிறது இல்லையா?

இதே சந்தர்ப்பத்தை ஹலாலுக்கு பொருத்திப்பாருங்கள்.


ஹலால் சான்றிதழ்

முஸ்லிம்கள் எப்போதும் ஹலால் உணவையே உண்டு வந்திருக்கிறார்கள். கிராமிய வாழ்க்கை முறையில் ஹலால் உணவுகளை அடையாளம் கண்டுகொள்வது இலகுவாக இருந்த்து. தமக்கு அறிமுகமான முஸ்லிம்களிடம் இருந்து இறைச்சி வகைகளை வாங்கிக்கொண்டார்கள். ஏனைய உணவுகள்
Freshஷாக கிடைத்ததால் அவை ஹலால் என்பது வெளிப்படையாக தெரிந்தது.

ஆனால் நகரமயமாக்கல் நுகர்வுக்கலாச்சாரம் என்பவற்றின் காரணமாக உணவுப்பொருட்கள்
Freshஷாக கிடைக்காமல் போனது. பல உணவுகளில் மணமும் சுவையும் சேர்க்கப்படலாயிற்று. உதாரணமாக சோயா என்பது ஹலாலானதாகும். ஆனாலும் “சிக்கன் சோயா மீட்என்று இன்று சந்தைப்படுத்தப்படும்போது குறிப்பிட்ட சுவைக்காக என்ன சேர்க்கப்படுகிறது என்று சந்தேகம் ஏற்படுகிறது. மாவினால் தயாரிக்கப்பட்ட நூடுல்ஸ் ஹலாலானதாகும். அதுவும் Beed flavour என்று சந்தையில் விற்கப்படும்போது அதனுடன் என்ன சேர்க்கப்படுகின்றது என்ற சந்தேகம் எழுகின்றது.

Natural Flavoring substances obtained from plant or animal raw materials, by physical, microbiological or enzymatic processes

·  Cochineal (E120), a red dye derived from the cochineal insect, Dactylopius coccus

மேலேயுள்ள தகவல்கள் விக்கிப்பீடியா கட்டுரைகளில் இருந்து எடுக்கப்பட்ட்தாகும். இது சில நிறமும் மணமும் விலங்குப்பொருட்கள் பூச்சிகளில் இருந்து பெறப்படுவதை உறுதிசெய்கிறது.

எனவே சுவையூட்டலுக்காக மிருக கொழுப்போ இறைச்சியோ பாவிக்கப்படுகின்றது என்பது உறுதியாகிறது.  ஹலாலான இறைச்சி அதற்காக பயன்படுத்தப்பட்டிருந்தால் மட்டுமே அது சேர்க்கப்பட்ட உணவும் ஹலாலாகும்.

மேலும் கொழும்பு போன்ற நகரங்களில் வாழும் முஸ்லிம்களுக்கோ அல்லது ஏனைய மதத்தவர்களுடன் வாழ்வோருக்கோ அல்லது பயணம் ஒன்றை மேற்கொள்ளுபவருக்கோ ஹலாலான உணவை அடையாளம் கண்டு கொள்வதில் சிக்கல் இருக்கிறது.

இன்னும் முஸ்லிம் சந்தையை இலக்குவைத்து உணவுப்பொருட்களை சந்தைப்படுத்தும் நிறுவனக்களுக்கு குறிப்பிட்ட பொருள் ஹலால் என்று அத்தாட்சிப்படுத்தினால் அந்த பொருளை சந்தைப்படுத்துவது இலகுவானதாகும். உதாரணமாக ஒரு பௌத்தர்; கோழிப்பண்ணை ஒன்றை அமைத்து இறைச்சியை விற்றால் நிச்சயமாக முஸ்லிம்கள் அது ஹலாலா என்ற சந்தேகத்தில் அங்கு இறைச்சியை கொள்வனவு செய்யமாட்டார்கள். ஆனால் அவர் இஸ்லாமிய வரைமுறைகளை அமுல்படுத்தினால் (அதாவது முஸ்லிம் பணியாளரை கொண்டு கோழிகளை அறுத்தல்) தான் அவ்வாறு செய்வதை முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அமைப்பால் உறுதி செய்தால் அவர் இலகுவாக சந்தைப்படுத்த முடியும்.

இந்து ஒருவருக்கு சொந்தமான நிறுவனத்தில் தயாரிக்கப்படும்
Beef flavor நூடுல்ஸில் ஹறாமானது சேர்க்கப்படவில்லை என்று சான்றளிக்கப்படுமானால் அவரும் இலகுவாக தனது பொருளை சந்தைப்படுத்த முடியும்.

அவ்வாறன்றி இருந்தால் முஸ்லிம்கள்; முஸ்லிம்களிடையே மட்டும் பொருட்களை வாங்க நிர்ப்பந்திக்கப்ப்டுவர். இவ்வாறான சந்தர்ப்பத்தை சமூக விரோத சக்திகள் முஸ்லிம்கள் துவேசமானவர்கள், அவர்கள் ஏனையவர்களுடன் கொடுக்கல் வாங்கல்களை செய்யமாட்டார்கள் என்று அறியாத மக்களிடையே வெறுப்பை வளர்க்க இலகுவாகிவிடும் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஒரு பொருளுக்கு ஹலால் சான்றிதழ் பெறுவது முழுக்க முழுக்க அந்த உற்பத்தியாளரின் நலன் சார்ந்த விடயமாகும். அவர் தனது விற்பனையை அதிகரிக்க விரும்பி அந்த முறைமைக்குள் தன்னை உட்படுத்திக்கொள்கிறார். அவ்வாறன்றி ஹலால் முறைமையை மத நம்பிக்கையின் திணிப்பாக கருதினால்; அவர் அந்த முறைமைக்குள் தன்னை உட்படுத்தவேண்டிய அவசியமில்லை. அதேபோல் அந்த ஹறாமான உணவைத்தான் உண்ணவேண்டும் என்று முஸ்லிம்களை கட்டாயப்படுத்தவும் முடியாது.

சில தெளிவூடட்ல்கள்
- நீங்கள் ஹலாலான பொருளை வாங்குகிறீர்கள். ஆனால் அந்த உற்பத்தியாளர் அண்மைய நிதிச்சரிவிலிருந்து தன்னை விடுவிக்க வட்டிக்கு கடன் எடுத்துள்ளார். இது உணவை ஹராமாக்காது. வட்டிக்கு கடன் எடுத்த்து உற்பத்தியாளர் செய்த ஹராமான விடயமாகும். அதற்கு இறைவன் அவருக்கு தண்டனை வழங்குவான். பாவனையாளர் ஒரு பொருளை வாங்கும்போது அவர் அவர் ஹலாலான உணவையே வாங்குகிறார். மேலும் உற்பத்தியாளர் நுகர்வோர் ஒவ்வொருவருக்கும், தான் வட்டிக்கு கடன் எடுக்கவில்லை என்பதை நிரூபிக்க முடியாது. இஸ்லாம் நடைமுறை சாத்தியமான விடயங்களை மட்டுமே கட்டளையிடுகிறது.

-     - பெரிய நிறுவன்ங்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்ட்தன் காரணமாக முஸ்லிம்களை நம்பிச் சிறு சிறு இறைச்சிக்கடைகள், கோழிப்பண்ணைகள், உணவுக்கடைகள் வைத்துப் பிழைத்து வந்த சாதாரண முஸ்லிம் தொழில் முனைவோர்கள் நட்டப்பட்டுக் காணாமற்போனார்கள்.

இது பிழையான வாதமாகும். இன்றும் Fresh இறைச்சிவகைகள் சிறுவியாபாரிகளால் விற்கப்படுகின்றன. அவர்கள் Frozen இறைச்சி வகைகளை விட அதிக விலைக்கே விற்கிறார்கள் என்பதை நாம் எந்த சந்தைக்குச்சென்றாலும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

சிறிய உணவு நிறுவன்ங்களை நடாத்திய முஸ்லிம் வியாபாரிகள் கடையை மூடவேண்டிய நிலைக்கு ஆளானர்கள் என்பது மிகப்பெரிய பொய்யாகும். முஸ்லிம் கடைகளில் அது முஸ்லிம் ஒருவரின் கடை என்பது தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கையில் முஸ்லிம்கள் ஹலால் சான்றிதழை கோருவதில்லை. முஸ்லிம் ஹோட்டல் என்ற பெயரில் இயங்கும் எந்த கடைக்கு ஜம்மியதுல் உலமா சான்றிதழ் வழங்கியிருக்கிறது? இதுவரை 10 க்கும் குறைவான உணவகங்களே ஹலால் சான்றிதழ் பெற்றவை. அவை அனைத்தும் மேல்தட்டு உணவகங்களாகும்.

எதிர்பாருங்கள்: Update 2 ஆக சில சந்தேகங்களுக்கான விளக்கங்கள்

தண்ணீர் போத்தலுக்கு, பாணுக்கு (Bread) ஹலால் சான்றிதழ் ஏன் அவசியம்?

மேலே குறிப்பிடப்பட்ட விடயங்களில் குறை இருப்பின் சுட்டிக்காட்டவும். சரியான தகவல்கள் சேர்க்கப்படும்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்