ஊடகங்களில் மதத்திணிப்பா "வணக்கம்"? என்ற என்னுடைய பதிவு தொடர்பாக சில அடிப்படை விடயங்களை விளக்கவேண்டியது அவசியமாகிறது. (தமிழ். தமிழ் என்று உயிரை விட போபவர்கட்கு தமிழில் எழுதிய பதிவுக்கு விளக்கவுரையும் தரவேண்டியிருக்கிறது - என்ன கொடும சார்)
1. மொழி - மொழி கருத்துக்களை பரிமாறுவதற்கான ஒரு ஊடகம். அவ்வளவே. ஊடகம் எமக்கு வசதியானதாக இருக்கவேண்டும். தமிழிலும் வசதிக்காக பல மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. சில வருடங்களுக்கு முன் லை. ளை, ணை போன்ற எழுத்துக்கள் எழுதப்படும் விதம் வித்தியாசமாக இருந்தது. பண்டைய பேச்சு முறைக்கும் இன்றைய பேச்சு முறைக்கும் நிறைய வித்தியாசங்கள். இன்னும் சம காலத்திலும் பிரதேசத்துக்கு பிரதேசம் தமிழ் வித்தியாசமாக உச்சரிப்பு வழக்குகளை கொண்டுள்ளது.
எனவே இந்த மொழி என்ற ஊடகம், எமக்கு வசதியானதாக இருக்கவேண்டும். அதைவிடுத்து தமிழ் வழக்கம் என்பவர்கள் நூறு ஆண்டுகளுக்கு முன் இருந்த தமிழ் வழக்கட்தின் படியா நடந்துகொள்கிறார்கள், பேசிக்கொள்கிறார்கள், எழுதுகிறார்கள் என்ற கேள்வியெளும்புகிறது.
2. திணிப்பு - ஒருவர் ஏற்றுக்கொள்ளாத விடயத்தை கட்டாயப்படுத்தல் திணிப்பு. வர்த்தகம் படிக்க விரும்பும் மாணவனை விஞ்ஞானம் படிக்குமாறு கட்டாயப்படுத்தல், மீன் சாப்பிட விரும்பாதவரை சாப்பிடுமாறு வலியுறுத்தல் சிங்களம் பேசினால் மட்டும் காரியம் நடக்கும் என்றிருத்தல் என்பன திணிப்பாக இருந்தால் வணக்கம் சொல்ல விரும்பாதோருக்கு வணக்கம் சொல்வதன்மூலம் அவரை பதிலுக்கு வணக்கம் சொல்ல நிர்ப்பந்தித்தலும் திணிப்பே.
3. இது எந்த மதம் சரியானது என்ற விவாதமல்ல. இங்கு திணிப்பு என்பதுதான் கருப்பொருள்
4. பொதுவான - இங்கு பொதுவான, மரபான என சில வாதங்கள் வைக்கப்படுகின்றன. பொது என்றால் எல்லோரும் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும். எப்போது வணக்கம் தொடர்பாக எப்போது சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது?
5. ஒருவர் செய்தார் என்பதற்காக ஒரு விடயம் சரி என்றாகாது. கருணா, டக்ளஸ், ஆனந்த சங்கரி ஆகியோர் இலங்கை அரசாங்கத்துடன் நல்லுறவில் இருப்பதால் அனைவரும் நல்லுறவில் இருக்கவேண்டும் என்று நான் கூறினால் ஒருவராவது எதிர்க்க மாட்டீர்களா?
நடந்த விவாதத்தில் பகிரப்பட்ட தலைப்புக்கு பொருத்தமான கருத்துக்களை மாத்திரம் தொகுத்து பதிவாக விரைவில் தருகிறேன். அப்போது கவன கலைப்பான்கள் இன்றி எந்த ஒரு வாசகரும் "வணக்கம்" பற்றி தனக்கான கொள்கையை வகுத்துக்கொள்ளமுடியும்.
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
3 comments:
// தமிழ். தமிழ் என்று உயிரை விட போபவர்கட்கு தமிழில் எழுதிய பதிவுக்கு விளக்கவுரையும் தரவேண்டியிருக்கிறது - என்ன கொடும சார் //
எனக்குத் தெரிந்தவரை உங்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் தெளிவாகவே இருக்கிறார்கள்.
கிணற்றை விட்டு வெளியே வாருங்கள்.
//மொழி - மொழி கருத்துக்களை பரிமாறுவதற்கான ஒரு ஊடகம். அவ்வளவே. //
மதம்- மனிதனை நல்வெறிப்படுத்துவதற்காக என்று சொல்லப்படுகின்ற விடயம். அவ்வளவே...
// தமிழிலும் வசதிக்காக பல மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. //
அது ஒரு குறிப்பிட்ட ஒரு பிரிவினரின் கோரிக்கைக்காக ஏற்படுத்தபடவில்லை.
நாளை நான் 'எனக்கு இந்த எழுத்துப் பிடிக்கவில்லை. இது எனது கொள்கைக்கு எதிராக இருக்கிறது மாற்றுங்கள்' என்றால் அதையும் மாற்றினால் தமிழ் என்னவாகும்?
// திணிப்பு - ஒருவர் ஏற்றுக்கொள்ளாத விடயத்தை கட்டாயப்படுத்தல் திணிப்பு. //
ஆனால் தனியே மீன் மட்டும் சமைக்கும் உணவுக் கடைக்குள் சென்று மரக்கறி உணவைக் கேட்டு ஆர்ப்பாட்டம் செய்தல் முட்டாள்தனம், அது அந்தக் கடைக்காரன் உங்கள் மீது மீனைத் திணிக்க முயல்கிறான் என்று அர்த்தமல்ல...
// இது எந்த மதம் சரியானது என்ற விவாதமல்ல. //
புரிந்து கொண்டால் சரி.
அந்த பெயரிலி நண்பரும் புரிந்து கொண்டால் சரி.
// எப்போது வணக்கம் தொடர்பாக எப்போது சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது? //
Father என்பதற்கு அப்பா என்று யார் சொன்னது?
யாராவது சர்வசன வாக்கெடுப்பு நடத்தி அதற்கு அப்பா தான் சொல் என்று ஏற்றுக் கொண்டார்களா?
நாங்கள் பய்னபடுத்தும் மொழிக்கு தமிழ் என்று பெயர் வைத்தது யார்?
சர்வசன வாக்கெடுப்பு நடத்தினார்களா?
// ஒருவர் செய்தார் என்பதற்காக ஒரு விடயம் சரி என்றாகாது. //
ஒரு குறிப்பிட்ட குழுவினர் எதிர்க்கிறார்கள் என்பதற்காக ஒரு விடயம் பிழையாகாது.
சச்சின் ரெண்டுல்கர் இரட்டைச்சதம் அடித்ததை சிலர் மட்டந்தட்டினாலும் அது சாதனை என்று இல்லாமல் போகாது.
//மொழி - மொழி கருத்துக்களை பரிமாறுவதற்கான ஒரு ஊடகம். அவ்வளவே. //
அவ்வளவு தானா...
இக்கருத்திலிருந்து உங்கள் பரவலான விடய ஞானம் புலப்படுகிறது.
no comments... continue...
நன்றி
மன்னார் அமுதன்
நீங்கள் மொழியை தெரிவா செய்தீர்கள்? தமிழ் பேசுவோர்க்கு பிறந்ததால், இன்னும் தமிழ் சூழலில் இருப்பதால் தமிழ் பேசுகிறீர்கள். உங்கள் மொழி எது என்று யார் முடிவுசெய்தது?
Post a Comment