Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

விண்ணைத் தாண்டி வருவாயா


படம் பாத்துட்டு வெளியில வாரவங்க கொஞ்சம் புன்னகையோடும் கொஞ்சம் கண்ணீரோடும் வந்தால் அதுவே இந்த படத்தோட வெற்றின்னு கௌதம் சொல்லியிருந்தார். எனக்கு அது நடந்தது. அது எப்படின்னு கடைசில சொல்றேன்.

''காதலை தேடிக்கிட்டு போக முடியாது...
அது நிலைக்கணும்...
அதுவா நடக்கணும்...
நம்மள போட்டு தாக்கணும்...
தலைகீழ போட்டு திருப்பணும்...
எப்பவுமே கூடவே இருக்கணும்...
அதான் ட்ரூ லவ்...
அது எனக்கு நடந்தது..."


விண்ணை தாண்டி வருவாயா படத்திற்கு விமர்சனம் எழுதியவர்கள் எல்லோரும் இதை மேற்கோள் காட்டத்தவறவில்லை. ஏற்கெனவே Trailer பார்த்த நாளிலிருந்து எப்படியும் "விதாவ"வை திரையில் பார்க்கவேண்டும் என்றிருந்தேன். பலரும் மேற்சொன்ன வசனங்களை சொல்லி படம் வெளியான நாள் முதல் என்னை பொறுமையை இல்லாமல் ஆக்கிக்கொண்டிருந்தார்கள்.

பொதுவாக நான், எந்த தமிழ் படத்தையும் முதல் வாரத்தில் பார்க்க விரும்புவதில்லை. வெறித்தனமான ரசிகர்கள் விசிலடித்தே படத்தின் பாதி வசனங்களை விளங்காமல் செய்து விடுவார்கள் என்பதால் அப்படி.

நாடோடிகள் படம் ஆரம்பிக்கும்போது பாதையில் எழுத்துக்கள் ஓடும். இங்கு தண்ணீரில் ஓடுவதுடன் ஆரம்பிக்கிறது.

படத்தின் ஆரம்பத்தில் சிம்பு காதல் பற்றி சொல்வது விசில் சத்தத்தில் எதுவும் கேட்கவில்லை. இந்த அர்த்தமற்ற கைதட்டல்களும் விசிலும் தமிழ் சினிமாவின் சாபம். கொடுக்கும் காசுக்கு படத்த பார்க்க விடக்கூடிய மனநிலை இந்த மனிதர்களுக்கு எப்போ வருமோ தெரியாது.

சிம்புவின் முன்னைய Hit ஆன வல்லவனைப்போலவே இதிலும் வயது கூடிய பெண்ணை காதலிக்கிறார். அவருக்கு அதுதான் ராசியோ தெரியாது.

அதேபோல் வாரணம் ஆயிரத்தில் வருவது போல் ஒரு ரயில் செட் போட்டு ஒரு பாடல். கௌதமின் Trade Mark?

படத்திலிருந்து சில வசனங்கள்

அவ Front அ விட Backஅ பார்த்ததுதான் அதிகம்

Love வேணாம். Friend ஆக இருப்போம். நீ வீட்டில் வந்து பேசிக்கொண்டிருக்கலாம். (Lets have a secreat affair என்பதை சொல்கிறாரோ)


படத்தில் நான் கவனித்த இன்னொரு விடயம், கார்த்திக்தான் ஜெஸியை காதலிக்கிறார். ஜெஸியிடம் பெரிதாக காதல் தெரியவில்லை. அப்பாத்திரத்தின் வசனங்களில், Expressionகளில் தெரிவது காதல் என்ற பெயருக்குள் அடைபடாமல், உலகத்திற்கு நட்பு என்று காட்டிக்கொண்டு ரகசியமாய் சில்மிசம் செய்யவேண்டும் என்ற கள்ளத்தனமே.

உருகி உருகி காதலித்திருந்தால், எப்படி இன்னொருவனுக்கு மனைவியாக வாழ்வது? சரி கட்டாயத்தின் அடிப்படையில் கல்யாணம் நடந்திருந்தால், பழைய காதலனுடன் படம் பார்க்க போவது? இன்னும் ஜெஸியின் கன்ணீரில் தெரிவதும் "இவன் பாவம்" என்ற அனுதாபமே! அல்லது வாய்த்த கணவன் இவனைப்போல் இல்லை என்ற தெரிந்தபின், "Miss பண்ணிட்டோமே" என்ற கவலையாகவும் இருக்கலாம்!

ஒரு வேண்டுகோள்! இனி யாரும் ஜெஸி என்று பெயர் வைக்காதீங்க...

"உங்க அக்கா சந்தோஷமாக வாழல. நடிக்கிறா" என்று சிம்பு சொல்லும்போது ஒரு சந்தேகம் - Arranged Marriage பண்ணி படம் பார்க்க வந்த தம்பதிகளில் ஒருவர் மேல் ஒருவருக்கு சந்தேகம் வராதா?

படத்தில் மிகப்பெரிய எரிச்சல், கல்யாணத்திற்காக சர்ச்சிற்கு வந்து கல்யாணத்தை நிறுத்தும் அளவுக்கு கார்த்திக்கை காதலித்த தைரியசாலி ஜெசி, அதற்குபின் கார்த்திக்குடன் அவ்வளவு பழகி, உருகி உருகி லவ் பண்ணி, கடைசியில் எந்தவொரு வலிதான காரணமுமின்றி, கார்த்திக்கை பிரிவதுதான். அங்குதான் படத்திற்கு சொந்த செலவில் சூனியம் வைத்துள்ளார் கௌதம்.

படத்தின் முதுகெலும்பு இசைதான். பாடல்கள் காட்சிகளுடன் சேர்ந்து புது பரிணாமமே எடுக்கின்றன. உணர்வுகளை ஊசியின்றி எம் இரத்தில் ரஹ்மான் கலந்துள்ளார்.

கண்ணீரின் கதையை சொல்லவேண்டுமில்லையா? பதிவுகளை பார்த்து பெரிய எதிர்பார்ப்புகளோடு படம் பார்க்க செல்பர்களுக்கு - உங்கள் கதை; ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போட்ட கதைதான். (நன்றி ஹிஸாம்)

விதாவ - DVD இல் பாருங்கள். தியேட்டருக்கு போய் பார்ப்பதெல்லாம் Waste. (காதலை அழகாக சொல்லும் காட்சிகளை ரசிப்பதற்கு DVD தான் பொருத்தம்). இன்னும் பல காட்சிகளில் இங்கு கத்தரி போட்டிருப்பதும் தெரிகிறது. முக்கியமாக சில படங்களை ஞாபகப்படுத்தும் வகையான காட்சிகள் அறவே இல்லை.

இல்லை கட்டாயம் போவேன் என்று போனால், அல்லது இலவச டிக்கட் கிசைத்தால், A Film By Karthik என்றொரு Title வந்ததும் திரும்பி பார்க்காமல் வெளியே வந்துவிடுங்கள்.

நாளைக்கு கொடுத்த காசுக்கு வஞ்சகம் செய்யாத ஒரு படம் பற்றி சொல்கிறேன்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

0 comments: