Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

நித்தியானந்த சுவாமிகள் - பேசியது போதும்

நித்தியானந்த சுவாமிகளின் பள்ளியறைக்காட்சிகள் சன் TVயில் வெளியானதாக நேற்று ஏறத்தாள 9 மணியளவில் twitter ஊடாக செய்தி கிடைத்தது. பெயரின்மூலம் ஞாபகப்படுத்திக்கொள்ளமுடியாவிடினும், கதவை திற காற்று வரும் என்றபோது ஞாபகப்படுத்திக்கொள்ள கஷ்டம் இருக்கவில்லை. குமுதத்தில் வாராவாரம் Installment ஆக குறைந்தது அரைப்பக்கத்துக்கு சிரித்துக்கொண்டிருந்தவரல்லவா? நானும் "அவருக்கும் காற்று தேவைப்படும்தானே" என்று tweet பண்ணியிருந்தேன். ஏறத்தாள அரை மணி நேரத்தில் அதுதான் தமிழ் பேசும் twitterகளின் பேசுபொருளாகவும் ஆகிப்போனது.

அதிகாலையில் மீண்டும் இணையத்தில் இணைந்தபோது, You tube இல் அந்த video
இணைக்கப்பட்டுள்ளதாக link கிடைத்தது. ஒரு நாளை ஆரம்பிக்க எவ்வளவு அழகான வழி. தமிழ் சினிமாவின் முதலிரவுக்காட்சியை விட அதிகமாகவே cover
பண்ணியிருக்கிறார்கள்.

இவ்வாறான காட்சிகள் Adults Only என்ற அறிவித்தல் இன்றி செய்திகள் என்ற போர்வையில் நேரம் காலம் இல்லாமல் தொலைக்காட்சியை நிரப்பும்போது, இதை பார்க்கும் சில குழந்தைகளாவது "அம்மா, அங்க என்ன நடக்குது? ஏன் அப்படி" என்று கேட்டிருக்கமாட்டார்களா?

இன்று பகல் நேரத்தை தாண்டிய பின்னும் twitter இன் பக்கம் முழுவதும் இவரைப்பற்றிய tweetகளும் Retweetகளும் இறைந்துகிடக்கின்றன. இதைப்பற்றி பேசுவதினூடாக, கேட்பதினூடாக, பகிர்வதினூடாக பலர் "அவர் பெண்ணுடன் இருப்பதன்மூலமாக அடைந்த சுகத்தை" அனுபவிக்கிறார்களோ என்றும் சந்தேகம் வருகிறது.

ஒரு கதை ஞாபகம் வந்தது.

இயேசு நாதரிடம் சிலர் ஒரு பெண்ணை "விபச்சாரி" என்றும் தண்டனை கொடுக்குமாறும் கூட்டிவந்தார்கள். இயேசு நாதர் அப்பெண்ணிடம் விசாரித்தபோது அவளும் ஏற்றுக்கொண்டாள். அதன்பின் இயேசுநாதர் ஜனங்களை பார்த்து "உங்களில் யார் இவ்வாறான பாவத்தை செய்யவில்லையோ. அவர் இவள் மீது கல்லெறியட்டும் என்றார்". அங்கு கல்லெறிய யாரும் இருக்கவில்லை.


இவ்வாறான விடயங்கள் தமிழ்பேசும் நமக்கு புதிதல்லவே.
தவ வலிமை படைத்த முனிவர்களையும் அவர்களை இசசையுறச்செய்த பெண்களையும் பாத்திரமாக கொண்ட புராணங்களை இலக்கியத்தின் பேரில் நாம் தலை முறை தலை முறையாக பரிமாறிக்கொண்டே இருந்திருக்கிறோம். இந்த நித்தியானந்த சுவாமிகள் ஒன்றும் முனிவர் இல்லையே. (நித்தியானந்த சுவாமிகளை நியாயப்படுத்துவது என் நோக்கமல்ல. )

மனிதனை கடவுள் என போற்றும் சில மூடர்களுகு புத்தி சொல்வதற்காக நாம் அதைவிட கீழ்த்தரமான வேலையை செய்வதா? பன்றியை பிடித்து குளிக்க வைக்கப்போனால், நாம் பன்றியை விட அழுக்காவது உறுதி.

இனியும் இதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கவேண்டாம். "மனிதனை மகானாக்காதீர்கள். சாய்பாபா முதல் நித்தியானந்தா வரை பார்த்தீர்கள்தானே" என்று சொன்னால் போதும். திருந்த வாய்ப்புள்ளவர்களுக்கு விளங்கும்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

2 comments:

rama said...

அருமை. தவறை நாம் தான் உணர வேண்டும். சூப்பர். நான் உங்கள் பக்கம் தான். வாழ்த்துக்கள்.

கன்கொன் || Kangon said...

எனக்குத் தெரிந்தவரை இந்த விடயத்தில் நீங்கள் மூக்கை நுழைக்காமலிருப்பது நன்று.

ஒரு மதத்திற்கு உட்பட்ட விடயத்தை இன்னொரு மதத்தைச் சேர்ந்த ஒருவர் பேசுபொருளாகக் கொள்வது சிறந்ததல்ல..

உங்கள் மதத்திற்குள் நடக்கும் உள்மத விடயங்களை இன்னொரு மதத்தைச் சேர்ந்தவர் விமர்சனம் செய்வதை உங்களால் எப்படிப் பொறுத்துக் கொள்ள முடியாதோ அப்படியே எல்லோருக்கும்.
(எனக்கு அப்படி ஒன்றும் இல்லை என்று பொய் சொல்லத் தேவையில்லை. நீங்கள் விரும்பமாட்டீர்கள். )