இலங்கையில் நடைபெற இருந்த பிரபல பாடகர் Akon கலந்துகொள்ளும் இசை நிகழ்ச்சி இரத்துச்செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையே இன்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பிறகு Akon க்கு visa மறுக்கப்பட்டுள்ளது.
இந்த இசை நிகழ்ச்சி இலங்கையின் சுற்றுலாத்துறையினை ஊக்குவிக்கும் நோக்குடன் சுற்றுலாத்துறை அமைச்சின் உப நிறுவனமொன்றினூடக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நுழைவுச்சீட்டுக்கள் அதிக விலைக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சி வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை முக்கிய இலக்காக கொண்டு ஒழுங்கு செய்யப்பட்டதாகும். இந்நிகழ்சியை காண மாலைதீவு, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படிருந்தது.
Facebook இல் Akon பௌத்த மதத்தை அவமதித்தார் என்று செய்திகள் வலம் வரத்தொடங்கியிருந்தன. இது பற்றி இதற்கு முன் எவ்வித எதிர்ப்புகளும் வெளியிடப்பட்டதாக (முக்கியமாக சாதாரண பௌத்த குடிமக்கள்) றியக்கிடைக்கவில்லை.ஆனால் இதை Facebook இன் பலம் என நினைத்து விடாதீர்கள். கடந்த ஜனாதிபதி தேர்தலில் Facebookஇல் பொன்சேகாவுக்கே அதிக fanகள் இருந்தனர்.
இன்னும் இந்நிகழ்ச்சி தடைப்பட்டமை இலங்கையில் பௌத்த மதத்தின் ஆதிக்கத்தை உணர்த்தும் ஒரு நிகழ்வாக சிலர் கருதக்கூடும். ஆனால் சில வாரங்களுக்கு முன்தான் தலதா மாளிகை முன்றலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாட்டின் ஜனநாயகத்தை உறுதி செய்யும் முகமாக கூட்டப்படவிருந்த முக்கிய 3 பௌத்த பீடங்களின் கூட்டம் அரசின் நெருக்குதல் காரணமாக காலவரையறை இன்றி பிற்போடப்படிருந்தது என்பதை கவனத்தில் கொள்க.
இந்நிகழ்ச்சியை எதிர்த்து நடத்தப்பட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் அரசுக்கு ஆதரவு வழங்கும் கடும்போக்காளரான அத்துரேலியே ரத்ன தேரர் கலந்து கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னணியில் வேறு சில நோக்கங்கள் இருக்கக்கூடும். அது பைசர் முஸ்தபாவுக்காவது தெரிந்திருக்குமா?
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment