Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

My Name Is Khan


மை நேம் இஸ் ஹான் (அப்ப்டித்தான் உச்சரிக்க வேண்டும் என Shahrukh Khan இப்படத்தில் வலியுறுத்துகிறார்) உலகெங்கும் வெற்றிகரமாக ஓடுகிறது. அது ஆரம்ப நாட்களிலேயே 3 Idiots இன் சாதனையை முறியடித்திருக்கிறது.
   முதல் நாள் வசூல்
       UK £123,000
       Oceania (Australia) AUS$ 39,000
       Middle East and Pakistan US$ 300,000
       USA & Canada $1.94 million
ஆனால் 3 Idiots பார்த்து விமர்சனம் எழுதிய பலர் இப்படம் தொடர்பாக மௌனிகளாகவே இருக்கிறார்கள். பதிவுலகில் 3ஆம் தர படத்துக்கு கூட பக்கம் பக்கமாய் விமர்சனம் எழுதியவர்கள் இப்படத்த்தை கண்டுகொள்ளவேயில்லை.

என்னை பொறுத்தவரையில் இப்படம் முழுக்க முழுக்க ஒரு வித்தியாசமான அனுபவம்.

முதலில் திரையரங்கைப்பற்றி கட்டாயம் சொல்லவேண்டும். இத்திரைப்படத்திற்கு கூட்டம் நிரம்பி வழிவதாக பத்திரிகைகளிலும் (பார்க்க மை நேம் இஸ் கான் இலங்கையில் சாதனை) பிற ஊடகங்களிலும் செய்தி வந்திருந்ததனால், வார நாளில் காலை காட்சிக்கு சென்றிருந்தேன். டிக்கட் எடுக்க நீண்ட வரிசையில் அந்த நேரத்திலும் காத்திருக்க நேர்ந்தது.

லிபர்டி திரையரங்கு நவீன வசதிகள் கொண்ட பழைய அரங்காகும். டிக்கட் கட்டணமும் 225/- தான். இதேவகையான வசதிகள் கொண்ட திரையரங்குகளில் 300/- பிடுங்குகிறார்கள். வந்திருந்த கூட்டமும் நாகரீகமான இளைஞர் கூட்டம். அதிலும் பெரும்பான்மை நாகரீக இளைஞிகள். சில திரையரங்குகள் போல இருட்டில் சில்மிசம் பண்ண வந்தவர்களும் அல்ல (அப்படியான தேவைகளும் அவர்களுக்கு இல்லை). பல தமிழ் படங்களை பார்க்கும்போது நாம் சந்திக்கும் இரைச்சலிடும், விசிலடிக்கும், கூக்குரலிடும் அநாகரிக சமுதாயம் இல்லாதிருந்தது மிகப்பெரிய ஆறுதல்.

படத்தின் சாரம் முஸ்லிம்கள் எல்லாம் பயங்கரவாதிகள் எனும் ஊடக பயங்கரவாத நிகழ்ச்சி நிரலை ஒரு சாமானியன் எப்படி வெற்றி கொள்கிறான் என்பதே.

Shahrukh Khan இப்பாத்திரத்தில் ஒன்றித்து போயுள்ளார். அமெரிக்க விமான நிலையத்தில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவமும், ஒரு காத்திரமான நியாயமான கருத்தை வெற்றி பெறச்செய்யவேண்டும் என்ற வைராக்கியமும் அவரை அப்படிச்செய்ய தூண்டியிருக்கலாம்.

திரைப்படம் முழுவதும் தான் முஸ்லிம் என்பதை வெளிக்காட்டியிருக்கிறார். தொழுகை என்பது நம்மை சுற்றி இருப்பவர்களுக்காக அனுசரித்து நடக்கும் இடம் அல்ல என்று கூறுமிடத்தில் முஸ்லிம்களுக்கே பாடம் நடத்துகிறார்.

படத்தின் முக்கியமான பலம் திரைவசனம். வாள்முனையை விட பேனாமுனையின் கூர்மை படம் முழுவதும் வெளிப்படுகிறது.Yellow Yellow dirty Fellow எனும் இடத்தில் நக்கல் தெரிகிறது.  $500 ஐ கிறிஸ்த்தவர்கள் அல்லாத ஆபிரிக்க பிள்ளைகளுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறுவது இனியாவது பலருக்கு விளங்கட்டும்.

இன்னும் கதையை உறுத்தாத பாடல்கள், அழகாக இசையமைத்திருக்கும் Shankar-Ehsaan-Loy, தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் நடிகர்கள் என படத்திற்கு ஏராளமான பலங்கள்.

படத்தில் காண்பிக்கப்படும் விமான நிலைய பரிசோதனைகள் போல், இலங்கை மக்கள் ஒரு கோடியிலிருந்து இன்னொரு கோடிக்கு செல்லும்போது ஆக குறைந்தது 5 முறையாவது அனுபவித்திருப்பார்கள்.

படத்தில் Hollywood க்கு போகும் Bus இன் இலக்கம் 112. கொழும்பின் 112 இலக்க Bus அந்நேரத்தில் ஞாபகம் வந்து தொலைத்தது.

படத்தில் வரும் சூறாவளியால் பாதிக்கப்பட்ட கறுப்பினத்தவர்களுக்கு உதவும் காட்சி, இலங்கையில் யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு பள்ளிவாசல்களினூடாக நிவாரண உதவிகளை செய்த இலங்கை முஸ்லிம்களை ஞாபகப்படுத்தியது. ஆனால் வித்தியாசம் BBC ஐத்தவிர மற்றெல்லா ஊடகங்களும் இங்கு அச்செய்தியை இருட்டடிப்பு செய்ததுதான்.

பார்த்த படங்களில் கொடுத்த காசுக்கு கொஞ்சமேனும் நட்டமில்லாத படம் என்று இதை கட்டாயம் சொல்லலாம்.

படத்தில் ஒரு வருத்தம், முஸ்லிம்கள் எவ்வாறு வன்முறையிலீடுபட தூண்டப்படுகிறார்கள் என்று சொல்லப்ப்டாமையே. ஆயினும் ஒரு காத்திரமான கருத்தை உலகெங்கும் எடுத்துசெல்லவேண்டிய அவசியத்திற்காக Shahrukh Khan அவ்வாறான நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருகக்லாம் என்பதால் பெருங்குறையாக தெரியவில்லை.
இவ்வாறான நல்ல படத்தை படித்த இளைஞர்கூட்டம் பார்ப்பது, முக்கியமாக சமூகரீதியான கொள்கைகளில் பெரும்பாக்கம் செலுத்தும் பெண்கள் பார்ப்பது, Shahrukh Khan உலகிற்கு சொல்லவந்த சேதியை இலகுவாக உள்ளீர்த்துக்கொள்ளும் என்றே நம்புகிறேன்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

1 comments:

ஜெயக்குமார் said...

சரி, திரைப்பட விமர்சனம் எங்கே?