பௌத்த மதத்தை நிந்தித்தார் என்ற காரணத்தால் Akon இற்கு இலங்கைக்கு வர visa மறுக்கப்பட்டுள்ளது. Akon புத்தரின் சிலையை அவ்வாறான பாடலில் பயன்படுத்தியிருக்க கூடாது என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனாலும் இந்தப்பிரச்சினை சாதித்தது என்ன என்ற கேள்வியிருக்கிறது.
Akon என்பவர் யார் என்பது இலங்கையில் 10% ஆன மக்களுக்கேனும் தெரிந்திருக்குமா என்று சந்தேகம். தெரிந்தவர்களுக்கும் அவரை கடந்த IPL இன் கடைசிநாள் நிகழ்வுகளில் கலந்து அவர் பாடியதுதான் அடையாளமாக தெரிந்திருக்கும்.
Akon இன் இசை நிகழ்ச்சி இலங்கையர்களை குறிவைத்து ஒழுங்கு செய்யப்பட்டதும் அல்ல. இலங்கைக்கு அதிகளவான சுற்றுலா பயணிகளை அழைத்துவர, இலங்கையை பிரபலபடுத்த உலகறிந்த நட்சத்திரமான அவர் கருவியாக உபயோகிக்கப்பட இருந்தார்.
திடீரென ஒருநாள் சக்தி ஊடாக நிறுவனத்தின் தலைமையகத்தின் மீது சண்டித்தனத்திற்கு பெயர்போன அமைச்சரின் குண்டர்கள் தாக்குதல் என செய்திவந்தது. அந்த சண்டியருக்கும் இந்த நிறுவனத்திற்கும் எப்போதும் ஆகாது என்பதால் இது இடம்பெற்றிருக்கும் என்றே நினைத்தேன்.
அடுத்த நாள் பௌத்த மதத்தை இழிவு படுத்தினார் என்று செய்தி வந்தது. இது தொடர்பாக இலங்கையில் எத்தனை பௌத்தர்கள் அறிந்திருந்தார்கள் என்று கூட தெரியவில்லை. ஆனால் பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் பொதுமக்களிடையே இது பேசுபொருளாக இருக்கவேயில்லை. பிரச்சினை பெரிதாகிவிட்டதால் உடனடியாக ஜனாதிபதி தலையிட்டார். (இலங்கையில் இதுதான் மிகப்பிரச்சினை என்று அன்றுதான் எனக்கு தெரிந்தது). இதை தொடர்ந்து visa மறுக்கப்பட்டது.
ஆனால் நடந்தது என்ன? இதுவரை இலங்கையில் அறியப்பட்டிராத பாடலை நிறையப்பேர் இணையத்தில் தேடி downlaodசெய்தார்கள். இன்னும் சிலர் அதன் காட்சிகளை banner செய்து பொதுமக்களுக்கு அறிவூட்டினார்கள்.
பின்னணியில் புத்தர் சிலை இருப்பதை கண்டிக்க, உள்ள மிஞ்சி போனால் 3 செக்கன் வரும் காட்சியை, அரை நிர்வாண பெண்கள் உள்ளடங்கலாக பெரிய banner ஆக print செய்து அதற்கு முன் உயிருள்ள, bus இல் கூட பெண்களுக்கு அருகில் இருக்காத பிக்குமார் இருந்து உரையாற்றினார்கள். எது பின்னணியில் இடம்பெற்றது தவறு என்றார்களோ அதை முன்னிலைப்படுத்தினார்கள். அதை பிக்கு ஒருவர் திரும்பி பார்த்து கொண்டிருப்பதும் ஊடகத்தின் கண்களுக்கு தப்பவில்லை.
இதை பார்த்தால் புத்தர் சிலை என்ன சொல்லியிருக்கும்?
இந்த பாடலையெல்லாம் பிக்குமார் பார்க்கிறார்களா என்றெல்லாம் கேட்ககூடாது. பார்க்காவிட்டால் எப்படி தெரியும் என்றும் கேட்ககூடாது. பார்த்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்?
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
1 comments:
சரி அப்போது என்ன செய்திருக்க வேண்டும் என்கிறீர்கள்?
பேசாமல் அப்படியே விடுவது?
Post a Comment