எனது அன்பிற்குரிய சனத்,
உங்கள் சொந்த ஊரான மாத்தறையிலிருந்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக வேட்புமனுவை தாக்கல் செய்வதை கண்டபின் உங்களுக்கு கட்டாயம் மடல் வரையவேண்டுமென நினைத்திருந்தேன். உங்கள் தீர்மானம் தொடர்பாக நான் வியப்படையவில்லை என்பதை ஏற்றுக்கொண்டபோதும், நான் ஏமாற்றமடைந்திருக்கிறேன் என்பதை கட்டாயம் சொல்ல வேண்டும்.
உங்களுடன் ஏமாற்றத்தை சந்திப்பது ஒன்றும் புதிதல்ல. ஏனென்றால் நாட்டுக்காக நீங்கள் விளையாடிய கிரிக்கட் போட்டிகளில் துடுப்பாலும் பந்தாலும் சில காலமாக ஏமாற்றமளித்து வந்துள்ளீர்கள். ஆனால் அப்போதெல்லாம் நீங்கள் தொடர்ந்து விளையாடியே வந்துள்ளீர்கள். அதிலும் முதிர்ந்த வயதான் 40 இலும் விளையாடியதும் மிகப்பெரிய ஏமாற்றமே.
கொஞ்ச நாட்களாக அது தெரிவாளர்களின் பிழை என நினைத்திருந்தபோதும், அவர்கள் உங்களை விடுவதற்கு தைரியத்தை வரவழைத்தபோது நீங்கள் மஹிந்த மாமாவிடம் ஓடியதையும், அவர் எவ்வாறு உங்கள் இடத்தை மீள் உறுதிப்படுத்த உத்தரவிட்டார் என்பதும் ஞாபக்ம் இருக்கிறது. பெந்தர கங்கையின் மற்றைய கரையில் இருந்து வந்திருப்பது சில அனுகூலங்களை கொண்டிருகிறது என்றே நினைக்கிறேன்.
சிந்தித்து பார்த்தால், 1996 இன் உலக கிண்ண வெற்றி அணி அரசியல் அணியாகத்தான் தெரிகிறது இல்லையா சனத்? ஏன் என்றால் இந்த தேர்தலின் பின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தக்க வைத்துக்கொள்வாரா என்பது சந்தேகமாக இருந்தாலும் அவர் பாராளுமன்ற உறுப்பினராக Captain Cool இருந்திருக்கிறார். நீங்களும் பெரும்பாலும் மாத்தறை MP ஆகுவீர்கள்.
இன்னும் எனது ஞாபகம் சரியாக இருந்தால், பச்சை அணியினரில் பலருக்கு வந்த பொதுவான நோய் வருமுன் ப்ரமோடய; கம்புறுபிட்டியவின் பச்சை அணியின் அமைப்பாளராக இருந்தார். அவரும் பக்கங்களை மாற்றிக்கொண்டு தான் மஹிந்த மாமாவை ஆதரிப்பதாக தெரிவித்திருந்தார்.
இன்னும்,இந்நாட்களில் குற்றச்சாட்டுக்கள் காரணமாக அடிக்கடி செய்திகளில் அடிபடும் ஹசானும் இருக்கிறார். அவருக்கு என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும். 1996 இன் உலககிண்ண அணியில் இனியும் அடக்கவிருப்பது முரளிதரனை (முத்தையா, வினாயகமூர்த்தி அல்ல) வடக்கின் முதலமைச்சர் ஆக்குவதுதான்.
ஆனால் சனத் நான் உங்களுக்கு கடிதம் எழுத நினைத்தது, இந்த கிரிக்கட் வீரர்களும், மற்றைய SJயும் (சுசந்திக்கா ஜயசிங்ஹ) மாலனி, கீதா மற்றும் பிற கலைஞர்களும் தேர்தலுக்காக பிரேரிக்கப்பட்டுள்ளது தொடர்பாகத்தான்.
மில்லிய்ன் கணக்கான தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றி ‘palapurudu, sanvedi naayakaya’ வைத்தான் நாங்கள் தெரிவுசெய்யவேண்டும் என்று சொன்னீர்கள். இப்படித்தான் அந்த ‘palapurudu, sanvedi naayakaya’ உங்களுக்கு ஊதியமளிக்கிறார் என்று நினைக்கிறேன்.
அதனால்தான் எமது நாட்டின் பாராளுமன்றத்தை கிரிக்கட் வீரர்கள் , தடகள வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் கொண்டு நிரப்புவது நல்ல தீர்வாக என்று அங்கலாய்க்கிறேன்.
கிரிமினல்களையும் போதைப்பொருள் கடத்தல் காரர்களையும் கொண்டு பாராளுமன்றத்தை நிரப்புவதை விட இது சிறந்தது என்று வாத்தித்தால் அதில் கொஞ்சம் உண்மை உண்டு என்றே சொல்லவேண்டும். ஆனாலும் பிரபலங்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஆவதற்கு பொருத்தமானவர்கள்தானா என்று இன்னமும் சந்தேகிக்கிறேன்.
சிறந்த கிரிக்கட் வீரராக இருப்பது, உங்களை சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் ஆக்கும் என்ற வாதத்தை வைப்பீர்கள் என்றால் ஏன் அதன் மறுபக்கத்தை பார்க்ககூடாது? உதாரணத்துக்கு புத்திகூர்மை மிக்க சட்டநிபுணர்களான மறைந்த லலித் அத்துலத் முதலியையோ அல்லது மறைந்த லக்ஸ்மன் கதிர்காமரையோ எடுத்து பாருங்கள். (கட்ந்த பாராளுமன்றத்தில் எந்தவொருவரையும் ஞாபகம் வரவில்லை. அதனால்தான் மறைந்த கனவான்களை ஞாபக படுத்தினேன்)
அதே வாதத்தை பாவித்தால், லலித் அத்துலது முதலியை அல்லது கதிர்காமரை தேசிய கிரிக்கட் அணியில் வெறுமனே அவர்கள் சிறந்த அரசியல்வாதிகள் என்ற காரணத்திற்காக சேர்க்கமுடியும். இது உங்களுக்கு அசட்டுத்தனமாக தெரிந்தால், அதேபோல் உங்களைப்போன்ற சிறந்த கிரிக்கட் வீரர்கள் சிறந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆவார்கள் என்பது எனக்கு அசட்டுத்தனமாகவே தெரியும்.
இன்னும் சமகால உதாரணங்களான பாகிஸ்தானின் இம்ரான் கானும், எமது கெப்டன் கூலும் அரசியலில் பெரிதாக சாதிக்கவில்லை. அதேபோல் எமது சிறந்த நடிகர்களான காமினியும் விஜயவும். அதனால் உண்மையாக நான் உங்கள் நற்பெயர் பற்றிய்ம், அரசியல்வாதியாக எதிர்காலம் பற்றியும் பயப்படுகிறேன் சனத்.
நாம் உங்களை 1996 இல் உலககிண்ணத்தை வென்றுதந்த சிறந்த கிரிக்கட் வீரராகவே ஞாபகிக்கவே விரும்பினோம். ஆனால் அரசியலை தேர்வு செய்ததன் மூலம், உங்களை அரசியல் வாதியாக அன்றி வேறுவழிகளில் நினைத்து பார்க்க முடியாது செய்துவிட்டீர்கள். உங்களுக்கு என்னால் அதிஷடம் கிடைக்கட்டும் என்று சொல்வதை தவிர வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை. ஏன் என்றால் கிரிக்கட் அரங்கிலும் பார்க்க இங்குதான் உங்களுக்கு அது அதிகப்படியாக தேவைப்படுகின்றது.
உண்மையுடன்
புஞ்சி புதா
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment