நம்மில் பலர் அழகிப்போட்டி பார்த்திருக்கிறோம். பல இனத்து பல தேசத்து அழகிகள் பார்த்திருக்கிறோம். அதில் யார் சிறந்த அழகி என்பதில் நீங்கள் எல்லாம் ஒரே கருத்தில் எப்போதாவது இருந்திருக்கிறீர்களா?
மனிதர்களிடையே கருத்து வேற்றுமை சாதாரணமான்தும் இயல்பானதும் என இலகுவாக விளங்கவைக்க இதைவிட இலகுவான உதாரணம் எனக்கு கிடைக்கவில்லை.
இதை மனதில் கொண்டு மேற்கொண்டு படியுங்கள்.
பதிவுலகம் - எந்த வித கட்டுப்பாடும் இல்லாமல் யார் வேண்டும் என்றாலும் எழுதலாம் என்றாகிவிட்டது. எனக்கு பிடித்ததும் அதுதான். சிலர் நினப்பதுபோல் ஊரோடும்போது ஒத்து ஓடுவதானால் எதற்கு அது? யாராவது எழுதும்போது வாசித்து FACEBOOK வருவதுபோல் I LIKE THIS என்பதில் ஒரு ஓட்டை மட்டும் பதிந்துவிடலாமே?
ஊடக வியலாளர் அல்லது ஊடக நிறுவனத்தில் வேலை செய்பவர் மாத்திரம் அல்லது எங்காவது இதற்கும் போய் ஒரு கோஸ் முடித்து சான்றிதழ் எடுத்தவர்தான் எழுத வேண்டும் என்பதுபோல் சிலர் தன்னை தானே பிரபல பதிவர் என அழைத்துக்கொண்டு தன் கருத்தோடு மட்டும் இயைந்து வருபவர்கட்கு மாத்திரம் ஆஹா ஒஹோ என பாராட்டி வால் பிடித்துக்கொண்டு சொல்லவருவதுதான் இப்பதிவுலகின் என் மிகப்பெரிய வருத்தம்.
இலங்கை பதிவர் சந்திப்பு - ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு நிகழ்வு. ஆரம்பம் முதலே எனக்கு அதில் கலந்துகொள்ள எண்ணம் இல்லாமல் இருந்தாலும் அது தோல்வியுற வேண்டும் என நான் ஒருபோதும் இருக்கவில்லை.
இலங்கையின் தமிழ் மக்களிடையே கருத்து சுதந்திரம் மதிக்கப்படும் என்பதில் எனக்கு சிறிதளவும் நம்பிக்கை இல்லாதிருந்தமைதான் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளாமல் ஒதுங்க நினைத்தமைக்கு காரணம். ஆயினும் அது தொடர்பான அறிவித்தல்களை என் வலைப்பதிவில் பிரசுரித்தும் நான் அறிந்திருந்த நண்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பியும் என் பங்களிப்பை எவ்வித குறையும் இன்றி வழங்கினேன்.
கலந்து கொள்ள ஆர்வம் இல்லாதிருந்தும் நான் மதிக்கும் அண்ணாவின் அழைப்பை மறுப்பது மரியாதையற்றது என்று கருதியமையால் சரியாக 9.05 க்கு சமூகமளித்தேன். அதை வேண்டுமானால் இதில் சந்தேகம் கொள்பவர்கள் அனைவராலும் என்னாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவரிடம் நிரூபிக்கவும் தயார்.
இப்பதிவர் சந்திப்பில் என்னை அடையாளம் காட்டுவதினின்றும் தவிர்ந்தும் கொண்டேன். ஆர்வலராக காட்டிக்கொள்ள நினைத்திருந்தபோதும், நிகழ்ச்சியை நடாத்திய ஒருவர் ஆர்வலர்களை வடை சாப்பிட வந்தவர்கள் என விளித்தமையால் அதைக்கூட நான் செய்யவில்லை.
இச்சந்திப்பு நடந்து முடிந்தபின் எல்லோரும் அதை புகழ்ந்தார்களே தவிர அதை காத்திரமாக மதிப்பீடு செய்யவில்லை. அதை செய்யாதே என்று குறிப்பால் ஏனை பதிவர்களை அச்சுறுத்தவும் என்னை வசைபாடியது வழிவகுத்தது.
பதிவர் சந்திப்பு முடிந்த கையோடு எனக்கு வசை பாட சிலர் ஆரம்பித்துவிட்டார்கள். கருத்து சுதந்திரம் தொடர்பான என் கருத்தை பரிசீலுக்க சரியான தருணம் என்பதாலும், சில பதிவர்களை தோலுரித்து அறிந்து கொள்ளவும், கடைசியாக சிரிப்பவன் பெரிதாய்ச்சிரிப்பான் என்ற ஆங்கில பழமொழியை உறுதிப்படுத்தவும், இவ்வளவு நாளும் என் மௌனம்....
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
5 comments:
நிகழ்ச்சிக்கு வராத ஒருவரின் விமர்சனத்திற்க்கு பதில் சொல்லவேண்டிய தேவையில்லை.
விடிய விடிய ராமாயணம்தான் ஞாபகம் வருகிறது. என்ன சொல்லியிருக்கிறேன் என்று வாசித்து விழங்கி பதில் எழுதுங்கள்.
ஒருவரை திட்டுவதும் பின் அதற்கு பதில் இடும் பின்னூட்டத்தை (அதில் கெட்ட வார்த்தை இல்லை, தனிப்பட்ட தாக்குதல் இல்லை) பிரசுரிக்காமல் இருப்பதுமாக இருக்கும் உங்களிடம் கருத்து சுதந்திரத்தை எதிர்பார்க்கலாமா?
உங்களின் எந்தப் பின்னூட்டமும் எனக்கு வரவில்லை புளொக்கர்ஸில் பிரச்சனை என்பது தெரியாதா?
நீங்கள் சந்திப்பு வந்திருந்தால் ஏன் ஒன்லைனில் வந்து வாழ்த்துச் சொன்னீர்கள்?
சகோதரா.. உங்கள் இந்தப் பதிவு மிகத் தாமதமானதும் பொய் உரைப்பதாகவும் இருக்கிறது.
நீங்கள் வந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.
எங்களிடம் வீடியோ, புகைப்பட ஆதாரங்கள் உள்ளன.
நீங்கள் வருவதும் வராமல் இருப்பதும் உங்கள் தனிப்பட்ட உரிமைகள்.. ஆனால் வராமல் வந்தேன் என்று பொய் உரைப்பது தேவையற்றதும் விஷமத் தனமானதும் கூட.
மீண்டும் ஆன்லைனில் வந்து விஷமக் கருத்துக்கள் சொன்னதும், வம்பு பண்ணியதும் கண்டிக்கக் கூடிய செயல்கள்.
பல வெளிநாட்டு பதிவர்கள் அதற்கு சாட்சி.
வந்த எல்லோருமே, பதிவர்கள்,ஆர்வலர்கள்.. ஒரு படிவத்தில் தங்கள் பெயர் பதிந்தனர்.நீங்கள் அதிலும் எழுதவில்லையோ? ஏன்?
//கலந்து கொள்ள ஆர்வம் இல்லாதிருந்தும் நான் மதிக்கும் அண்ணாவின் அழைப்பை மறுப்பது மரியாதையற்றது என்று கருதியமையால் சரியாக 9.05 க்கு சமூகமளித்தேன். //
அந்த மதிப்புக்குரிய ஒருவரிடமாவது உங்களை இனம் காட்டி இருக்கலாமே?
//அனைவராலும் என்னாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவரிடம் நிரூபிக்கவும் தயார்.//
யார் அது? ஜனாதிபதியா?
//இச்சந்திப்பு நடந்து முடிந்தபின் எல்லோரும் அதை புகழ்ந்தார்களே தவிர அதை காத்திரமாக மதிப்பீடு செய்யவில்லை. அதை செய்யாதே என்று குறிப்பால் ஏனை பதிவர்களை அச்சுறுத்தவும் என்னை வசைபாடியது வழிவகுத்தது.//
அதை நீங்கள் வந்தீர்கள் என்று உறுதியாகக் காட்டி இருந்தால்,நீங்கள் நேர்மையானவர் என்று நிரூபித்திருந்தால் நீங்களே செய்திருக்கலாமே..
மேமன் கவி, சேரன் கிரிஷின் விமர்சனங்கள் படிக்கவில்லையோ?
http://eksaar.blogspot.com/2009/08/blog-post_26.html
ஏன் இந்த வம்பு பதிவு?
மீண்டும் எனது தளத்தில் அடுத்த சந்திப்பு பற்றி ஏன் ஒரு வம்பு பின்னூட்டம்?
ஏன் உங்களை நீங்களே தனியன் ஆக்குகிறீர்கள்?
உங்களுக்குள்ளே ஆயிரம் பிழைகளை வைத்துக் கொண்டு மற்றவர்கள் உங்களைத் தனியன் ஆக்குகிறார்கள் என்று புலம்புவது முறையா?
மனசாட்சியிடம் நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்..
//எங்களிடம் வீடியோ, புகைப்பட ஆதாரங்கள் உள்ளன.//
இதெல்லாம் தெரியாமலா 21ஆம் நூற்றாண்டில் வாழ்கிறேன். நான் பொய்யுரைக்கவில்லை.
//ஒரு படிவத்தில் தங்கள் பெயர் பதிந்தனர்.நீங்கள் அதிலும் எழுதவில்லையோ? //
தவிர்த்துக்கொண்டேன். காரணம் பதிவில் சொல்லியிருக்கிறேன்.
//அந்த மதிப்புக்குரிய ஒருவரிடமாவது உங்களை இனம் காட்டி இருக்கலாமே?//
எங்க சாத்தியம். அவரை சுற்றி எபோதும் மக்கள் கூட்டம்.
//மீண்டும் ஆன்லைனில் வந்து விஷமக் கருத்துக்கள் சொன்னதும், வம்பு பண்ணியதும் கண்டிக்கக் கூடிய செயல்கள்.//
நான் கலந்துகொண்டேன் என proof பண்ணுகிறேன். நான் online இல் வம்பிளுத்தேன் என்று கூறுவோர் அதை proof பண்ணட்டும். எனக்கு இங்க நிறைய வேலை இருக்கு..
http://eksaar.blogspot.com/2009/08/blog-post_26.html ஒரு வம்புப்பதிவு அல்ல. என் விமர்சனம் (பத்திரிகைகள் மீதும் பதிவர் சந்திப்பு மீதும் - ஒரு கல்லில் இரண்டு மாங்காய்)அதற்கு வந்த பின்னூட்டங்களில் கனககோபியினதைதவிர அனைத்திலும் வம்பு இருந்தது.
நான் என்னை தனியன் ஆக்கவில்லை. எனக்கு உடன்பாடான கருத்துக்களில் நான் பின்னூட்டம் இடுவதில்லை. (சரியாக சொன்னீர்கள் என்பதுமாதிரியான தாஜா / வால்பிடிக்கும் பின்னூட்டங்கள்). எனக்கு ஒரு மாற்றுக்கருத்து இருந்தால் மாத்திரம் எழுதுகிறேன். நான் எழுதியது மட்டும்தான் என் கருத்து என்று கருதுவது தவறு.
//உங்களுக்குள்ளே ஆயிரம் பிழைகளை வைத்துக் கொண்டு //
அபப்டி என்ன தான் இருக்கிறது?
Post a Comment