ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த சனிக்கிழமை கிண்ணியாவில் இலன்கையின் மிக நீளமான பாலத்தை திறந்துவைத்தார்.
இதன் கட்டுமானட்துக்கான நிதி சவூதி அரசால் வழங்கப்பட்டிருந்தபோதும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகளால் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் 18 அடிக்கல்கள் நட்டபின்பே ஆரம்பிக்கப்பட்டிருந்தது! கடைசி அடிக்கல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் அவர் சந்திரிக்கா அரசில் பெருந்தெருக்கள் அமைச்சராக இருந்தபோது நடப்பட்டிருந்தது.
இப்பிரதேச அரசியல்வாதிகள் எல்லோரும் தங்கள் பெயரை இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க பாலத்திறப்பில் பதிந்துகொள்ள ஆர்வம் காட்டினார்கள்.
அழைப்பிதழில் பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் TB ஏக்கநாயக்க பிரதியமைச்சர் WB ஏக்கநாயக்க மற்றும் அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற அட்மிரல் வசந்த கருணாகொட மட்டுமே இருந்தது.
தன்னுடைய பெயர் இல்லாதது பற்றி அமைச்சரவை அந்தஸ்த்து அற்ற அமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற அட்மிரல் வசந்த கருணாகொட விடம் தொலைபேசியில் கேட்டபோது அவர் இராணுவ பாணியில் "மேலிடத்து கட்டளை" என கூறியிருக்கிறார்.
அதன்பின் அவர் ஜனாதிபதி ஆலோசகர் பசில் ராஜபக்ஷவை தொடர்புகொள்ள பிரச்சினைக்கு தீர்வு கிட்டியுள்ளது.
ஜானதிபதியால் திரைநீக்கம் செய்யப்பட்டதாக 3 மொழியிலும் அமைந்த நினைவுப்படிகத்தில் நஜீப், அமைச்சர், பிரதியமைச்சர், செயலாளர், தேச நிர்மாண அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே ஆகியோருடன் பசில் ராஜபக்ஷவின் பெயரும் சேர்ந்துகொண்டது.
ஜனாதிபதி தமிழிலும் சிலவார்த்தைகள் உரையாற்றுவார் என்றும் கதை இருந்தது. இதனால் மஜீட் அரபியில் ஒரு உரையை எழுதித்தருமாறு பிரபல மௌலவியை கோரினார். இது வாசிக்கப்பட்டபோது பலருக்கு விழங்காத போதும் சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அஸீஸ் அப்துல் ரஹ்மான் ஜம்னாஸ் விழங்கிக்கொண்டார்.
தூதுவர் மர்ஹபா என்று உணர்ந்த்திருக்க கூடும்.
இருந்தபோதும் ரணில் விக்ரமசிங்க அரசில் அமைச்சராக இருந்தபோது இந்த சவூதி அரேபிய உதவியை கொணர்ந்த சிறீ லங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பற்றி ஒரு வார்த்தை கூட இருக்கவில்லை!
நன்றி the SundayTimes : Talk at the Cafe Spectator : Sunday October 25, 2009
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment