Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

மத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது?



இந்த மாகாண சபை தேர்தல்களில் மத்திய மாகாணசபை சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பம் சிறுபான்மை மக்களிடையே பரவலாக ஏற்பட்டிருக்கிறது.

  • எப்படியும் ஐமசுமு வெல்லத்தான் போகிறது
  • ரணில் இருக்கும் வரை ஐதேக பலம் பெறாது
  • இதுவரை காலமும் இருந்த கொஞ்ச நஞ்ச ஆறுதல்களும் இந்த ஐமசுமு அரசாங்கத்தில் பறிக்கப்படுகின்றன
  • வெற்றிலை சின்னத்தில் போட்டியிடும் சிறுபான்மை கட்சிகளுக்கு வாக்களிப்பதா?
  • தனியாக கேட்கும் கட்சிகளுக்கு வாக்களிப்பதா? அந்த வாக்குகள் கடைசியில் யாரை போய்ச்சேரும்?
போன்ற பல்வேறு நம்பிக்கைகளும் சந்தேகங்களுமே இந்த குழப்பங்களுக்கு காரணம்.

இந்த குழப்பத்தை தீர்த்துக்கொள்ள  பின்வரும் விடயங்களை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.



  1. ஐமசுமுவின் தோல்வி அலை பயம் :-
    வடமாகாண சபை தேர்தலை மட்டும்நடாத்திருக்கவேண்டிய அரசாங்கம் மத்தி சப்ரகமுவா மாகாண சபைகளையும் கலைத்து மொத்தமாக3 மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடாத்துகிறது. ததேகூ வெற்றிபெறுவது உறுதியான வடமாகாணசபை தேர்தலை மட்டும் நடாத்தினால் அங்கு ஆரம்பமாகும் தோல்வி அலை தொடர்ந்து வரும்தேர்தல்களில் தாக்கம் செலுத்தி இந்த அரசாங்கத்தை கவிழ்த்துவிடும் என ஆளும் ஐமசுமுகருதுவதால் அந்த அலையை இல்லாமல் செய்யவே தனக்கும் வெற்றி வாய்ப்புள்ள இன்னும்இரண்டு மாகாணசபைகளையும் கலைத்து தேர்தலை நடாத்துகிறது. இதன்மூலம் 2 மாகாண சபைகளைவெல்வதை கொண்டு ஒரு மாகாண சபையின் தோல்வியை ஐமசுமு மறைக்க முயல்கிறது.
  2. மத்திய மாகாண சபையை வெல்வது இலகுவானதல்ல என்ற ஐமசுமுவின்பயம் :-மத்திய மாகாண சபையில் அரசாங்கத்தின் வெற்றி இலகுவானதல்ல என்ற உளவு அறிக்கைஐமசுமு தலைவர்களுக்கு கிடைத்திருக்க கூடும். இதனாலேயே தயாசிறி ஜயசேகரவை அதுவாங்கியிருக்கிறது. ஆக எதிர்க்கட்சியை ஆட்சியில் அமர்த்துவது ஒன்றும் சாத்தியமற்ற விடயம் அல்ல. அது சத்தியம்தான் என்பதை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் கோடிட்டு காட்டுகின்றன. ஆக மக்கள் நம்பிக்கையாக வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பது அவசியம்.

    ஆக ஐமசுமுவுக்கே தோல்வி பயம் இருக்கும்போது நாம்மட்டும் ஏன் அவர்கள்தான் வெல்வார்கள் என்ற விரக்தி மனப்பான்மையில் இருக்கவேண்டும்?
  3. பஷீர் சேகுதாவூத் ஏன் வடக்கை தவிர்த்து கண்டியில்பிரச்சாரம் செய்கிறார்? :- வடமாகாண சபை தேர்தலில் பிரச்சாரம் செய்யகேட்டுக்கொள்ளப்பட்ட பஷீர் சேகுதாவூத் ஏன் அங்கு பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடாமல்மத்திய மாகாணத்தில் ஈடுபடுகிறார் என்ற சந்தேகம் எழுகிறது. முஸ்லிம்களின் வாக்குகள்ஐதேகவுக்கு செல்வதை தடுத்து எப்படியாயினும் முகாவுக்கு வாக்களிக்க செய்வதற்கானமுயற்சியே யாக அது இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். ஐமசுமு அரசாங்கத்தின்பங்காளியாக இருக்கும் முகாவுக்கு கிடைக்கும் வாக்குகளால் கிடைக்கும்உறுப்பினர்களையும் சேர்த்து ஐமசுமு மத்திய மாகாணசபையை குறைந்த நெருக்கடிகளோடுகைப்பற்றிக்கொள்ளும்.
  4. அதிக உறுப்பினர்களை பெறும் கட்சியே வெற்றி பெறும் :-
    மாகாணசபையை வெல்வதற்கு கட்சி தனியாக கூடுதலான உறுப்பினர்களை பெறவேண்டும். மத்தியஅரசாங்கத்தைப்போல் கூட்டரசாங்கம் அமைக்க முடியாது. ஆனால் அங்கு பெரும்பான்மையை கூட்டணியூடாக உறுதி செய்வதன்மூலம் மாகாண சபையில் சட்ட மூலங்களை இலகுவாகவெற்றிபெறச்செய்ய மட்டுமே முடியும். ஆக சிறிய கட்சிகளால் ஆட்சியமைப்பவரை தீர்மானிக்க முடியாது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
  5. சிறிய கட்சிகள் பேரம் பேசும் நிலமையில் இல்லை :-
    சிறுபான்மை கட்சிகளின் வழமையான தேர்தல் பிரசாரம், அவர்களுக்கு கிடைக்கும் உறுப்பினர்களை கொண்டு பேரம் பேசி சிறுபான்மை மக்களுக்கான உரிமைகளை அபிவிருத்திகளை பெற்றுக்கொடுக்க முடியும் என்பதாகும். இரு பிரதான கட்சிகளும் ஏறத்தாள சமமான வாக்குகளை பெறாதவரை சிறுபான்மை கட்சிகளின் உறுப்பினர்களால் எதுவும் செய்ய முடியாது என்பது நிதர்சனமான உண்மையாகும். மேலும் இவர்களின் பேரம் பேசும் சக்தியை வைத்துக்கொண்டு கிழக்கு மாகாண சபையில் எதையும் கிழிக்கமுடியவில்லை என்பதை நாம் மறக்கக்கூடாது. தென்கிழக்கு நிர்வாக மாவட்டம் என்ற கவர்ச்சியான வாக்குறுதி, அரசாங்கத்தின் இனவாத நடவடிக்கைகள் காரணமாக மறக்கடிக்கப்பட்டிருக்கிறது. மக்களை அரசாங்கம் “ பிச்சை வேண்டாம் நாயை பிடி” என்ற நிலைக்கு கொண்டுவந்திருக்கிறது. எனவே இந்த நிலமையில் சிறிய கட்சிகளை நம்பி பலன் இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆக மத்திய மாகாண சபையில் ஐமசுமு வெற்றி பெறாமல் இருக்கவேண்டுமானால் ஐதேக அதிகஉறுப்பினர்களை பெறவேண்டும். இதை உறுதி செய்ய சிறிய கட்சிகளுக்கு வாக்களிக்காமல்ஐதேகவுக்கே வாக்களிக்கவேண்டும்.

இந்த அரசாங்கத்தின்ஜனநாயகவிரோத போக்கை கட்டுப்படுத்தவேண்டுமானல், மக்களின் கையில் இருக்கும் ஒரேயொருஜனநாயக ரீதியான ஆயுதம் இதுதான்.


EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

0 comments: