தசாப்தங்களாக உள்நாட்டுப்போரில் சிக்குண்டிருப்பது இலங்கை. உலகின் மிகக்கொடூரமான போர் ஒன்றை எங்கள் தேசம் சந்தித்த போதும் அசராமல் நடை போடுகின்றது.. யுத்தத்தின் உயிரிழப்புகள் வெறும் இலக்கங்களாகவும், யுத்த சேதங்கள் கண்காட்சிகளாகவும் ஆகுமளவுக்கு எல்லாருக்கும் யுத்தம் பழகிப்போனது. விமானம் மோதுண்டு சிறு பாதிப்புக்கு உள்ளான இறை வரித்திணைக்கள அலுவலகத்தை அண்மிக்கும் போது வாகனத்தின் கண்ணாடிகளுக்கூடாக சிறிது எட்டிப்பார்த்துவிட்டு மறு நிமிடம் கொழும்பு நகரம் தன் இயல்பான இயந்திர வாழ்க்கையில் பயணிக்கிறது.
இவ்வாறான யுத்த அபாயச்சூழல் இந்தியாவின் 95% ஆன பகுதிகளில் இல்லை. இருந்தாலும் மத்திய கிழக்கிற்கு தொழில் செய்யச்செல்லும் இந்தியன் அடித்து துரத்தினாலும் இந்தியாவுக்கு திரும்ப மனமின்றி இருக்கும் நிலையில் அதே இடத்தில் பணியாற்றும் இலங்கையன் தன் contract எப்போது முடியும் என்று calendar ஐ பார்த்த படி நாட்களை ஓட்டுகிறான். இது இலங்கை மீது இலங்கையர் கொண்ட பாசத்திற்கு சிறந்த உதாரணம்.
மத்திய கிழக்கில் ஏறத்தாழ ஒவ்வொரு நாளும் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படும் ஒவ்வொரு இலங்கையனும் இலங்கையில் இருக்கும் பௌர்ணமி விடுமுறையையும் அந்த நாளை தான் கழித்த ஞாபகங்களையும் நினைத்து பெரு மூச்செறிகிறான்.
இந்த ஏப்ரல் மாத்தத்தை பாருங்கள்.
9 - பௌர்ணமி
10 - பெரிய வெள்ளி
11,12 - சனி, ஞாயிறு
13,14 - தமிழ் சிங்கள புது வருடம்
இன்னும் 2 நாட்கள் மாகாண சபை election இற்கும் கிடைக்கும்...
9 ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை விடுமுறை. எவ்வளவு சந்தோஷம் பாருங்கள். இன்னும் ஓரிரு நாட்கள் தங்கள் சொந்த கணக்க்கில் லீவு எடுத்து கொண்டு குடும்பமாக / நண்பர்களுடன் Little England என்று அழைக்கப்படும் நுவரெலியா சென்று ஏப்ரல் வசந்த காலத்தை மகிழ்ச்சியாக குளிருடன் கழிக்க முடியும்..
இந்த பாக்கியம் உலகத்துல வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறதா? இருந்தா சொல்லுங்க...
நாங்க Little England போகப்போகிறோம். நீங்கள் எல்லாம் வயிற்றெரிச்சல் படுங்க...
என்ன.. இந்த முறை checking எல்லாம் அதிகமாக இருக்கும்... அவ்வளவுதான்
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment