இலங்கையில் கடந்த சனிக்கிழைமை நடைபெற்ற மாகாண சபை தேர்தலில் ஆளும் கட்சி பாரிய வெற்றி பெற்றது தெரிந்ததே..
ஆயினும் இத்தேர்தலில் கொழும்பு நகர பிரதேசங்களில் எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியே வெற்றி பெற்றிருந்தது.. பெருவாரியான சிறுபான்மை மக்களின் வாக்கும் பொருளாதார வீழ்ச்சியில் கோபம் கொண்ட வர்த்தகர்களையும் கொண்ட இப்பிரதேசத்து மக்கள் இடையே ஆளும் கட்சி சம்பாத்திதிருக்கும் வெறுப்பையே இது காட்டுகின்றது..
எனினும் இதெல்லாம் பழைய கதை.. மாற்றுக்கருத்து கொண்டோரை அரவணைத்து செல்வதே நாகரிக ஜனநாயகத்தின் மரபு..அதே போல் கொழும்பு படித்த மக்களை கொண்ட பிரதேசம்.. இங்கு அரசியல் வன்முறைகள் அதி குறைந்தளவே கிராமப்பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் இடம்பெறும்.. அத்துடன் மேல் மாகாண சபை மக்களில் லட்சம் பேர் இம்முறை வாக்களிப்பதில் இருந்து தவிர்ந்து கொண்டனர்..
இருந்த போதும் இன்று காலை கொழும்பின் பல முக்கிய சந்திகளில் வைக்கோல் குவித்து வைக்கபட்டிருந்தது.. விமானப்படை தலைமையகம், அரச பத்திரிக்கை அலுவலகமான LAKE HOUSE மற்றும் சகல 5 STAR ஹோட்டல்களும் அமைந்துள்ள பிரதேசமான REGAL ROUNDABOUT இலும் குவிக்கப்பட்டிருந்ததை காணக்கிடைத்தது..
அந்த வைக்கோல் குவியல்களின் மேல் எழுதப்பட்டிருந்த பதாதை..
"இது ஐக்கிய தேசியக்கட்சிக்கு வாக்குகளை வழங்கியோருக்காக.. "
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment