ஒரு நீண்ட இடைவெளியின் பின் பதிவுலகத்துடன் இணைகின்றேன். ஒரு மாதமாக நடைபெற்ற IPL; ஓய்வு நேரத்தை மட்டுமல்லாது வேலை நேரத்தையும் சேர்த்து அபகரித்துகொண்டதுதான் இந்த இடைவெளிக்கு காரணம். எல்லா அணிகளிலும் பெரிதாக ஈடுபாடு இல்லாவிட்டாலும் லலித் மோடியின் திறமையான MARKETTING STRATERGY ஏதாவது ஒரு காரணத்துக்காக TV முன் கட்டிப்போட்டது.. திறமைக்கு DELHI DARE DEVILS, ENERGYக்கு KINGS XI PUNJAB மற்றும் CHEER GIRLSக்காக RAJASTHAN ROYALS (அவர்களை TV இல் புறக்கணித்த CREW இன் தலை மேல் இடி விழ) என KOLKATTA KNIGHT RIDERS இன் போட்டிகளை தவிர எந்த போட்டியிலும் ரசிப்பத்ற்கு நிறையவே இருந்தது.. இது போதாதற்கு STADIUMத்தில் பாதிக்கு மேல் SOUTH AFRICAN குதிரைகள்.
இறுதிப்போட்டியில் பெரிதாக ஆர்வம் இருக்கவேயில்லை.. எதிர்பார்த்த இரு அணிகள் அப்போட்டியில் இல்லாமை ஒரு வெறுமையை தோற்றுவித்திருந்தது.. இது போதாதற்கு ARE YOU READY என்று UMPIRE வரை கேட்டது எரிச்சலை உண்டாக்கியது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாற்றமாக ஒரு பந்தையும் MISS பண்ண முடியாதளவுக்கு போட்டியில் நிறைய TWIST. ஒரு கட்டத்தில் தோல்வியின் விழிம்பில் இருந்த தன் அணியை அசராத தன்னம்பிக்கை மிகுந்த AUSTRALIYAN தரத்திலான CAPTAINSHIP மூலம் வெற்றி பெறக்காரணமான GILCHRISTதான் மொத்த IPL இன் STARஎன்றால் மிகையாகாது..
AKON இன் பாடல் இரு முறை அவரை முந்தி ஒலிபரப்பானது செம காமடி.. அதைக்கூட நாசூக்காக கையாண்டு வெறும் RAP இன் மூலம் சமாளித்தது பரவாயில்லை. ஆனால் MISS BOLLYWOOD ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர் முதல் மூன்று இடத்துக்குள்ளாவது இடம்பெறக்கூடியவரா??
SEMI FINAL இல் DARE DEVILSக்கு எதிரான போட்டியில் GILCHRISTஆடிய விதம் WORLD CUP FINAL இல் இலங்கைக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டத்தையே ஞாபகப்படுத்தியது.. அது ஒரு DO OR DIE MATCH என்பதால் GLOUSEக்குள் எதையாவது வைத்து விளையாடியிருப்பாரோ? ஏன் யாருக்காவது CHECK பண்ணி பார்க்கவேண்டும் என்ற IDEA வரவில்லை?
இவற்றையும் வாசிங்க
STREET MAGIC - வகுப்பறையில்
அரசியலுக்காக மக்களை மாக்களாக கருதுவதா?
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment