அண்மைக்காலமாக கணனியும் இணையமும் இளைய சமுதாயத்தில் ஏற்படுத்திவரும் தாக்கம் பற்றி அதிகளவாக பேசப்படுகிறது.
இது பற்றி எமது சமுதாயத்தில் பலர் அக்கறை கொள்வதேயில்லை. எங்கள் வீட்டில் கணனியோ இணையமோ இல்லை என்று நிம்மதியாக இருக்கிறார்கள்.
ஆனால் இன்றைய உலகில் (விதிவிலக்கு இல்லாமல் நம் நாட்டிலும், நம் சமூகத்திலும்) கணணியை விட மொபைல் போன் அதிகம் என்பதும், அவற்றில் பெருவாரியானவை தொழிநுட்பத்தில் இற்றைபடுத்தப்பட்டவை என்பதும், இதை வாசித்துகொண்டிருக்கும் உங்களை விட இளைய வயதுடையவர்கள் அவற்றை பாவிப்பதில் கில்லாடிகள் என்பதும் சொல்லி தெரியவேண்டியதில்லை.
அத்துடன் இன்று வழங்கப்படும் மொபைல் சிம்கள் இணைய வாசதியுடயவை என்பதும் தெரிந்ததே..
இன்று மொபைல் போன் பாவிக்கும் இளையவர்களில் பாதிபேர் Hi5, Facebook, Mig33 போன்றவற்றை உங்கள் கண் முன்னே பாவிக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா? அதை பரிசோதிக்கும் அளவுக்கு உங்களுக்கு மொபைல் பற்றிய அறிவு இல்லை என்ற தைரியம் அவர்களுக்கு அசைக்க முடியாத அளவு உள்ளது.
இந்த மிக் பாவிப்பவர்கள் புதிதாக நண்பர்களை நண்பிகளை கண பொழுதில் தேடிக்கொள்கிறார்கள். அவர்களிடம் தங்களது விபரங்களையும் அந்தரங்கங்களையும் பிரச்சினைகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்களது மொபைல் வழியாக வேண்டிய விதமாக தத்தமது புகைபடங்களை எடுத்து பகிந்து கொள்கிறார்கள்.
சர்வதேச பாடசாலையில், பிரபல்ய பாடசாலையில் படிக்கும் உங்கள் பிள்ளையோ அவ்வாறான அதன் நண்பர்களோ இதை பாவிக்கும் வாய்ப்பு மிக அதிகமாகும். இன்று இணையத்தில் chat செய்பவர்களை விட மொபைல் இல் chat செய்பவர்கள் மிக அதிகம். இலங்கையர்களிடம் பிரபலமான Chat Room களும் எப்போதும் நிரம்பி வழிகின்றன. இதை தமிழ் நாட்டை விட இலங்கையர்கள் அதிகமாக உபயோகிக்கிறார்கள். தமிழ் நாடு chat room களில் கெட்ட வார்த்தை நிரம்பி வழிகிறது.. அதிகாலை 4 மணிக்கு கூட இளையவர்கள் இதில் தான் இருக்கிறார்கள். (நண்பனை நண்பியை தேட இதுதான் உகந்த நேரம், மற்றவர்கள் எல்லாம் தூக்கம் என்பதால்)
இவற்றால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை நாம் விலாவாரியாக அலச தேவை இல்லை. ஏற்படும் பிரச்சினைகளை எல்லாராலும் ஊகிக்க முடியும். அது போதாதென்று சிலர் தன் சமயத்தை மேன்மை படுத்துகிறேன் பேர்வழி என்று பிற மத கடவுள்களையும் நம்பிக்கைகளையும் கத்து குட்டி தனமாக விமர்சிக்கிறார்கள். . இது பலவீன பட்டு போயிருக்கும் எம் சமூக கட்டமைப்பை எவ்வாறு பாதிக்கும் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை.
இந்த mig33 மாலைதீவு மக்களின் வலது கை என்று கூறக்கூடிய அளவு அவர்களிடையே பிரபலமானது. உலகத்திலே அதிக விவாகரத்து வீதமுடயது இந்த நாடு என்பது அண்மைய புள்ளி விபரமாகும்.
இதை வாசித்ததும் உங்கள் பிள்ளையிடம் உள்ள மொபைல் போனை பிடுங்கிவிடாதீர்கள். அவர்களை இவ்வாறு அறிமுகமற்றவர்களிடம் நட்பு தேட நீங்கள் எதாவது வழியில் காரணம் என்று உணர்ந்து அக்காரணத்தை அகற்ற முயலுங்கள்.
இதையும் படிக்க மறக்காதீங்க..
பாரினில் சிறந்த தேசம் - எங்கள் இலங்கை தேசம்
ஓசியில மாலைதீவு போகணுமா?
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment