இதை படிக்குமுன் : வெறுமனே உங்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக எழுதப்படும் பதிவல்ல இது. 100% உண்மையான விஷயம் ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் நான் எதிர்நோக்கும் பிரச்சினையில் இருந்து வெளிவர உங்களில் யாராவது தரும் advice உதவக்கூடும் என்ற நம்பிக்கையில் எழுதப்படுவதாகும். எனவே அக்கறையுடன் படித்து உங்கள் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்கள்.
அதேபோல் அண்மையில் நான் பார்த்த யாவரும் நலம் திரைப்படம், என் blog இல் ஆவி வந்திருக்கலாம் என்ற சந்தேகம் தோன்ற கால்கோலானது என்பதை மறைக்கவும் நான் தயாரில்லை. யாவரும் நலம் பற்றிய என் பார்வை அறிய இங்கே சொடுக்குங்கள். ஏன் என்றால் doctor இடமும் lawyer இடமும் உண்மையை மறைக்க கூடாது என்று சொல்வார்கள். (உங்கள் Balance Sheetஐ இவர்களிடம் மறைக்கவேண்டும் என்று நான் கருதுகிறேன்) எனவே உங்களிடம் எதையும் மறைக்காமல் சொல்கிறேன்.
யாவரும் நலம் திரைப்படத்தில் Doctor சொல்வார் ஆவிகள் உலகத்துடன் தொடர்புகொள்ள ஒரு Medium தேவை;. அது TV ஆக இருக்கலாம் என்று. படம் முடியும் போது Doctor இன் ஆவி Mobile Phone ஊடாக மாதவனை தொடர்பு கொள்வதையும் நாம் பார்த்தோம். ( கொசுறு தகவல் : என்னோடு படம் பார்த்த நண்பன் ஓரிரு மணித்தியாலங்கள் எந்த call ஐயும் answer பண்ணாமல் call பண்ணும் நபர் உயிருடன் இருக்கிறாரா என்று யோசித்து கொண்டிருந்தார்.)
ஆ.. பிரச்சினையை சொல்லாமல் rubber மாதிரி இழுக்கிறேன் போலிருக்கிறது.. சரி சரி பிரச்சினைக்கு வருவோம்.
நான் இந்த blog ஆரம்பித்த நாள் அன்றே widget களில் Google Adsense ஐயும் சேர்த்துகொண்டேன். என்னை ஒரு சமூக சேவகன் என்று Google நினைத்ததோ என்னவோ "பொது சேவை விளம்பரம் தருவது Google " என்ற தலைப்பில் சூரிய சக்தி பற்றிய விளம்பரங்களை மட்டும் காண்பித்தது.
சூரிய சக்தி பற்றிய விளம்பரங்களை click செய்து யாராவது பயன் பெற்றுருந்தால் கூட பரவாயில்லை. எனவே சல்லி காசு கூட கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை சமூக சேவை செய்த நன்மையுமில்லை என்ற நிலையில் இது வேலைக்கு ஆகாது என்று முடிவெடுத்த நான்; எனது வெறொரு website இல் வெற்றிகரமாக இயங்கிகொண்டிருக்கும் Google Adsense இன் html code ஐ இந்த blog இல் இணைத்தேன்.
அன்று ஆரம்பித்தது பிரச்சினை..
மற்ற website இல் வெற்றிகரமாக இயங்கி கொண்டிருந்த html code இங்கு எதையுமே காட்டவில்லை. சரி blog என்பது இலவச சேவை. சும்மா கிடைக்கிற space இல் காசு பண்ண விடமாட்டார்களாக்கும் என்று நினைத்த நான் அலட்டிக்கொள்ளாமல் விட்டுவிட்டேன். html code ஐயும் அகற்ற வில்லை.
ஒருநாள் blog ஐ நான் பார்வை இட்டு கொண்டிருக்கும் போது யதேச்சயாக பார்த்த போது Google Adsense விளம்பரங்கள் தோன்றியது தெரிந்தது.. ஆக காசு வருவதற்கு வழி காட்டு இறைவா என்று அன்று காலை செய்த பிரார்த்தனைக்கு உடனடியாக இறைவன் Google Adsense மூலமாக வழி காட்டிவிட்டான் என்று சந்தோஷப்பட்ட நான் உடனடியாக நண்பனுக்கு call செய்து என் blog இல் Google Adsense தெரிகிறது என்று செய்தி சொல்ல.... என் தகவலை பரிசோதித்து பார்க்க அவர் என் blog க்கு சென்று பார்க்க.... அங்கு அது தெரியாமல் இருக்க....., இங்கு தெரியவில்லை என்று அவர் தெரிவிக்க...
நான் Google Adsense தெரிந்த page அப்படியே இருக்க இன்னொரு tab இல் என் blogஐ பார்த்தால் Google Adsense தெரியவில்லை!!!
அதன் பின் இன்று வரை சில நேரங்களில் Google Adsense தெரிந்தது. எப்போது தெரியும் என்று என்ற முகூர்த்தம் மட்டும் எனக்கு புரியவில்லை... தமிழ் மொழியை ஐ Google Adsense support பண்ணாவிட்டால் எப்படி ஆ.வி. (ஆனந்த விகடன்) இல் மட்டும் எப்படி தெரிகிறது என்றும் எனக்கு புரியவில்லை..
இந்த நிலையில் யாவரும் நலம் பார்க்க போயிருந்தேன். மாதவனை எடுக்கும் புகைப்படங்கள் சில நேரங்களில் நன்றாகவும் சில நேரங்களில் கோணலாகவும் வருவதை கண்டதுமே எனக்கு லேசாக சந்தேகம் வந்தது..
மாதவன் இந்த கோணல் புகைப்படங்களுக்கெல்லாம் காரணம் ஆவி என்பதையும் ஒரு நாய் மூலம் தெரிந்துகொண்டார். என் blog இல் ஆவி இருக்கிறதா என்று பரிசோதிக்க blog வாசிக்கும் நாய்க்கு நான் எங்கு போவேன்?
எனவே நண்பர்களே தயவுசெய்து இந்த கேள்விகளுக்கு பதில் தாருங்கள்.
· என் blog இல் ஆவி உள்ளதா?
· இருக்கா என்று எப்படி உறுதி செய்வது எப்படி?
· இருந்தால் எப்படி இந்த ஆவியை விரட்டுவது?
பதில் சொல்லுங்க please…
Extra : இன்று ஒரு பதிவர் நான் என்ன பதிவிடப்போகிறேன் என்று தனக்கு தெரியும் என்று சொன்னார். இந்த ஆவி அவரின் agent ஆக இருக்குமோ?
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
3 comments:
ஹ ஹ ஹ ஹ நல்ல பதிவு நண்பரே , நானும் இதற்கான விடையை தான் தேடிக் கொண்டு இருக்கிறேன் ...தெரிந்த உடனே சொல்கிறேன்
நினைத்தை அப்படிய செய்திடிங்க, ஆவி விடையை என்னுடனும் பதிர்ந்து கொள்ளுக்கள்,நானும் விடையை தான் தேடிக் கொண்டு இருக்கிறேன்,
இப்படியெல்லாம் நடக்கும் என்று எனக்கு படம் பார்க்கும் போதே தெரியும்..எங்கேப்பா ஆவி வந்த வலைப்பூ என்று பதிவு வரலே என்று பார்த்தேன்.. வந்திட்டு..
உங்களுக்கு வந்தது தான் ஆச்சரியம்.. (பூச்சாண்டிக்கே ஆவியா?)
என் தளத்திலும் இதே பிரச்சினை இருக்கு.. யாராவது நல்லவர் ,வல்லவர் தீர்வு தந்தா புண்ணியமாப் போகும்..
என் blog இல் ஆவி உள்ளதா?//
இருக்கலாம்.. உங்களையே நேர்ல பார்க்க முடியல.. ;)
· இருக்கா என்று எப்படி உறுதி செய்வது எப்படி?//
யாராவது பூசாரி கிட்ட கூட்டிட்டு போங்க.. (ஓ காட்டத் தான் முடியுமா?)
· இருந்தால் எப்படி இந்த ஆவியை விரட்டுவது?//
ஸ்பெஷல் பூஜை,பேய் விரட்டுறது தான் ஒரே வழி.. விபரங்கள் அறிய அருந்ததி படம் பார்க்கவும்.. (யாம் பெற்ற இன்பம்..)
//இன்று ஒரு பதிவர் நான் என்ன பதிவிடப்போகிறேன் என்று தனக்கு தெரியும் என்று சொன்னார்//
யார் அந்த மாயாஜால சகல கலா வல்லவா பதிவர்? ;)
Post a Comment