பெண்கள் மட்டுமே பார்க்கும் சீரியல் எப்படி மாதவனயும் அடிமை படுத்துகிறது என்று திகிலாக சொல்லியிருக்கிறார்கள்.
இப்படத்தின் பெரிய plus அதன் தொய்வற்ற திரைக்கதை. இதுவரை காலமும் நாம் பார்த்த திகில் படங்களெல்லாம் அநியாயத்திற்கு எல்லா பாத்திரஙகளையும் சந்தேகிக்கவைக்கும். அதேபோல் எல்லாவற்றிலும் மிஞ்சிப்போனால் முக்கால் படம் வரைக்கும் மட்டுமே வில்லன் யார் என்ற suspense இருக்கும். இந்த படத்தில் அதை கடைசி வரைக்கும் நகர்த்தியமைக்கு டைரக்டருக்கு ஒரு சபாஷ். X-files தரத்துக்கு இணையாக வந்திருக்கிறது..
படத்தில் மாதவன் lift இல் போகும் காட்சிகள் Mr. Bean க்கு இணையான கலக்கல் காட்சிக்ள். மாதவன் முழி திகிலை இன்னும் அதிகப்படுத்துகிறது.
அந்த cook book எங்க கிடைக்கும் என்று தெரிந்தவர்கள் சொல்லவும்..
இதில் கண் தெரியாதவராக நடித்தவரை கமல் தசாவதாரத்தில் flutcher க்கு பதிகலாக நடிக்க வைத்திருக்கலாம்.. அப்படி ஒரு ஒற்றுமை..
படத்தில் பாடல்கள் பெரிதாக பேசுமளவுக்கு இல்லை. ஆனால் பின்னணி இசை நலம்.
நான் பார்த்த படஙகளிலேயே கடைசிவரை ஒருவர் கூட போகாமல் பார்த்த படம் இது மட்டுமே..
மாதவன் stupid network என்று சொல்லும்போது Airtel ஞாபகம் வந்து தொலைக்கிறது..
யாவரும் நலம் serial ஆரம்பிக்கும்போது தூ தர்ஷன் என்றும் ஒரு பெயர் வருகிறது.. நக்கலோ..
மாற்றம் என்பது ஆவிக்கும் தேவை என்று சொல்வது அமெரிக்காவை ஆவியோடு ஒப்பிட வைக்கிறது..
உங்களில் யாராவது படத்தில் லாஜிக் இடிக்கவில்லயா?
என்று கேட்ககூடும். அவர்களுக்கெல்லாம் ஒரு பதில் தமிழ் சினிமாவில் அது இருந்திருக்கிற்து என்ற பதில் கேள்வியே!
சரி திகில் படம் என்பதால் தவிர்த்து விடாதீர்கள். நீங்கள் பார்த்த “நான் கடவுள்” படம் அளவுக்கு பயங்கரம் இல்லை.
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment