Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

Yahoo! க்கு என்ன ஆச்சு?


கடந்த வெள்ளியன்று காலையில் வேலைக்கு போனதும் Yahoo! இல் உள்ள என் முதன்மயான email ஐ check பண்ணி பார்த்தேன். பிறகு மற்ற வேலைகளை முடித்து பகல் நேரத்தில் மீண்டும்check பண்ண முயற்சித்தால்
Invalid ID or password.
Please try again using your full Yahoo! ID.
என்று வந்தது. மீண்டும் spelling எல்லாம் check பண்ணி முயற்சித்தாலும் அதே message! அதிர்ச்சியான நான் நண்பர் ஒருவரின் Yahoo! Mail வேலை செய்கிறதா என்று பார்க்க சொன்னால் அது வேலை செய்தது... அவர் account இல் இருந்து என் email address க்கு email அனுப்பினால் Delivery Failure என்று வந்தது..

Yahoo! Customer care என்று Google இல் தேடி ஒரு complain போடுவோம் என்று பார்த்தால் complain போடுவதற்கே log in ஆக சொன்னது ! என்னடா இது கஞ்சி பாய் மாதிரி முட்டாள் கேள்விகள் எல்லாம் கேட்கிறது என்று நினைத்தாலும் வேறு வழியில்லாமல் புதிதாய் ஒரு account ஆரம்பித்து அதன் மூலமாக complain போட்டேன். அதிலும் Yahoo! மீது நம்பிக்கை இல்லாத காரணமாக என் Gmail இற்கு மறுமொழி அனுப்புமாறும் அறிவுறுத்தினேன்.

உடனடியாக auto reply ஒன்று வந்தது. அதில் 24 மணித்தியாலத்திற்குள் Yahoo! இன் நிபுணர் ஒருவர் என் பிரச்சினையை கவனித்து மறுமொழி அனுப்புவார் என்றது.

மறுநாள் வந்த பதிலில் என் account இன் password ஐ மாற்றுமாறு advice வந்தது. நான் account க்குள் போக முடியவில்லை என்றால் இவர்கள் பதில் அனுப்புகிறார்கள் உள்ளே சென்று மாற்றும்படி...

என்ன கொடும சார்..

மீண்டும் ஒரு complain form நிரப்பி அனுப்பினால் அதற்கும் உடனடியாக வந்த இலும் 24 மணித்தியாலத்திற்குள் Yahoo! இன் நிபுணர் ஒருவர் என் பிரச்சினையை கவனித்து மறுமொழி அனுப்புவார் என்று இருந்தது.

இப்போது 48 மணித்தியாலங்கள் களிந்துவிட்டது. இன்னும் அந்த Yahoo! இன் நிபுணரின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

Yahoo! இன் பெயரில் கடைசியில் இருக்கும் ஆச்சரியக்குறி இதுதானா?

என்ன கொடும சார்..

யாருக்காவது தெரிந்திருந்தால் ஒரு வழி சொல்லி உதவவும்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

0 comments: