Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

எக்சார் விருதுகள் 2008

தமிழ் சினிமாவின் உயர்ந்த படைப்புகட்கான அங்கீகாரமாகவும் உற்சாகமாகவும் ஊக்கமாகவும் அமைகின்ற எக்சார் (eksaar) விருது வழங்கும் நிகழ்வை காண பெருங்கடலாக திரண்டிருக்கும் ரசிக பெருமக்களை வருக வருக என்று வரவேற்கிறோம்..

உலக சினிமாவை தன் ஆளுமையால் வசீகரித்து ஆட்படுத்தலுக்கு உள்ளாக்கி பல புதிய நுணுக்கங்களையும் கற்றுகொடுத்த இந்திய தமிழ் சினிமாவின் பல உயர்ந்த விடயங்களை ஒவ்வொரு வருடமும் தேர்ந்தெடுத்து விருது வழங்கி அதன் மூலம் இந்த நுணுக்கங்களை உலகிற்கு ஈந்தது தமிழ் சினிமாவே என்று ஆவணப்படுத்துவதே எமது எக்சார் குழுவின் இலட்சியம்...

இந்த வருடத்தின் தொனிப்பொருளாக தமிழ் சினிமாவில் பெண்கள் அமைகின்றது. இந்த விருது வழங்கும் நிகழ்வை கடந்த எட்டாம் திகதி மகளிர் தினத்தன்று நடாத்த முயற்சிகள் மேற்கொள்ள பட்டாலும் நிகழ்வில் விருது பெரும் நடிகயர்கட்கு இருந்த commitmentகள் காரணமாக பின்போட வேண்டியாகிவிட்டது..

இத்துடன் என் அறிமுக உரையை மட்டுபடித்திகொண்டு விருதுகளுக்கு செல்வோம்..

அம்மா.. தமிழின் அருமையான அழகிய சொல். தமிழின் சிறப்பியல்பு கூட இந்த சொல்தான்.. நாம் உச்சரிக்கும் முதல் சொல் அம்மா.. இந்த எக்சார் விருதின் முதல் விருதும் அம்மா என்ற சொல்லுக்காக; அதை தமிழ் சினிமாவில் அழகாக கையாண்டதற்காக வழங்கபடுகின்றது .. இந்த வருடத்தின் அம்மா விருது சரோஜாவுக்கு..



பெண்ணை போகப்பொருளாக பாவிக்கும் இயல்பு சில ஆண்களிடம் இருக்கின்றது.. திருமணமாகாமல் எந்த வித commitmentஉம் இன்றி இதை செய்துகொள்ள நினைக்கும் ஆண்களுக்கு இந்த நாயகி சரியான பதிலடி கொடுக்கிறாள். இந்த வருடத்தின் பெண் உரிமை ஆர்வலர் விருது வாரணம் ஆயிரம்..



உலகில் பெண்களை உணர்ச்சிகள் அற்ற ஜடமாக கருதுவது இந்த நவீன உலகத்திலும் தொடர்கின்றது. இல்லை.. பெண் என்பவள் ஜடமல்ல.. அவளுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்று பார்வையாளர் மனதில் நிலை நிறுத்தியமைக்காக எக்சார் இன் விசேட விருது சக்கரகட்டி படத்திற்கு வழங்க படுகிறது. இதோ அந்த காட்சி



சிக்கனம்.. உலகம் மிக பெரும் பொருளாதார பின்னடைவை சந்திக்கும் இந்த நேரத்தில் நாம் எல்லாரும் சிக்கனத்தை கடைப்பிடிப்போமாயின் இந்த சிக்கலில் இருந்து குறைந்தது நம் குடும்பத்தையாவது காப்பாற்ற முடியும். இந்த காட்சியில் வரும் நாயகி வெறும் நாப்பது டாலர் என்று நினைக்காமல் தன் அறையை பகிர்ந்து சிக்கனத்தின் முக்கியத்தை சொல்கிறாள். இது பெண் என்றால் வீண் விரயம் என்ற ஆணாதிக்க கருத்தை தவிடு பொடியாக்குகிறது.. சிக்கனத்துக்கான விருதை வாரணம் ஆயிரத்துக்காக இயக்குனர் கௌதம் பெறுகிறார்.



இதேபோல் பெண் என்பவள் மட்டுமே சமைக்க வேண்டும் என்ற கருத்து நூற்றாண்டு காலமாக ஆண்களிடையே இருந்து வந்திருக்கின்றது. இக்கருத்தை அகற்ற, ஆணும் சமைக்க முடியும் என்று நிரூபிக்க, கத்தியின்றி ரத்தமின்றி ஆர்பாட்டமும் இன்றி தன் மீது உள்ள அன்பு என்ற ஒரு விஷயத்தை மட்டும் பயன்படுத்தி ஆணை செய்விக்க முடியும் என்று பெண்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த தற்காக இந்த சிறப்பு விருது தாம் தூம் படத்திற்கு வழங்க படுகின்றது..



சமூக அநீதியை கண்டு பொங்கும் ஆண்களை ஊக்கபடுத்துவது பெண்ணின் கடமையாகும்.. இந்த விருதும் வாரணம் ஆயிரத்துக்கு..



கேள்விகளுக்கு நக்கலாக விடை சொல்வது பெண்களின் இயல்புகளில் ஓன்று. இவ் வருடத்திற்கான நக்கல் விருது சக்கரகட்டி




சமூக பொறுப்பு என்பது ஆண் பெண் இருபாலாருக்கும் உரியது. பெண் என்பவள் இந்த கடமையை சரிவர செய்வதை இந்த காட்சி நிரூபிக்கிறது.. எச்சரிக்கை செய்வதிலும் தன் கருத்தை வெளிப்படுத்துவதிலும் பெண் தன் மென்மையை இக்காட்சியில் வெளிப்படுத்துகிறாள்.. அடுத்த விருது வாரணம் ஆயிரம்..




தமிழ் சினிமாவில் பெண்கள் என்றால் டிக்கி ஆட்டம் மறுக்க முடியாத இடத்தை பெறுகிறது.. இதற்கு போட்டியாக சிம்பு போன்று சிலர் ஆட்டினாலும் அது கொஞ்சம் கூட எடுபடவில்லை என்பது இந்த துறையில் பெண்ணால் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துகின்றது. இந்த விருதுக்கான தேர்வில் இரண்டு காட்சிகள் சம புள்ளிகளை பெற்றதனாலும் அவ்விருகாட்சிகளும் ஒரே படத்தில் இடம்பெற்றதாலும் இரண்டுக்கும் சேர்த்து அக்காட்சிகளை படத்தில் இடம்பெற செய்த இயக்குனருக்கு விருது வழங்கப்படுகின்றது..

இவ்விருதை சரோஜா படத்திற்காக இயக்குனர் வெங்கட் பிரபு பெற்று கொள்கிறார்





இவ்விருது வழங்கும் நிகழ்வை கண்டு களித்த ரசிகர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்து எக்சார் குழுவுக்கு ஊக்கத்தை வழங்குமாறு கேட்டவாறு இந்த நிகழ்வு இனிதே நிறைவெய்துகிறது.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

1 comments:

ARV Loshan said...

ரொம்ப பொறுப்பா , பொறுக்கி (திட்டல) எடுத்து விருது குடுத்த உங்களை நினைச்சாலே.. புல்லரிக்குது.. எனினும் நம்ம தலைவிமார் மூவருக்கும் விருது குடுக்காத உங்களை வன்மையாக கண்டிக்கிறோம்..

அசின், நமீதா,தமன்னா.. இவங்களுக்கு குடுக்காத எந்த விருதுமே விருது அல்ல..

சரோஜா மீதான,ஷமீரா மீதான உங்கள் பைத்தியம் பக்க சார்பானது..
ஆட்டோ வரும் .. கவனம்