Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

Dictionary - பிரபல நிறுவனங்களில் வேலை செய்பவர்கட்கு தேடுபவர்கட்கு


இன்று பிரபல நிறுவனங்களில் வேலை என்றதும் ஆலாய்ப்பறப்ப்வர்கள் பலர். அவர்களுக்கு பயன்படககூடிய விளக்கமான Dictionary

சில குறிப்புகளுடன்


சக ஊழியர்கள் : பிரபல நிறுவனம் என்பதால் அதில் வேலை செய்யும் சக ஊழியர் தொடங்கி சாதாரண peon வரை எல்லாருக்கும் ஒரு மமதை இருக்கும். இவர்கள் அனைவரின் எண்ணமும் company இவ்வளவு பிரபல்யமடைவதற்கு தாங்கள் தான் காரணம் என்பதே! வெளி இடங்களில் இவர்கள் காட்டும் பந்தா சக ஊழியரிடமும் குறைவதேயில்லை. அதிலும் பல வருடங்களாக அதே நிறுவனத்தில் குப்பை (இவர்களுக்கு யாராவது ஒருவரின் சிபாரிசு மூலம் வேலை கிடைத்திருக்கும். இன்னொரு நிறுவனத்திற்கு மாறுவது நடக்காது, ஏன் என்றால் வேறு யாரும் இவர்களுக்கு வேலை கொடுக்க மாட்டார்கள்) கொட்டுபவர்கள் எல்லாம்

Company இன் வரலாற்றையும் அதில் அவர்கள் காட்டிய தியாகத்தையும் புராணம் பாடியே உங்கள் காதிலிருந்து இரத்தம் வடியச்செய்வார்கள்.


HR DEPARTMENT : இவர்களை நீங்கள் அனுசரித்து நடக்காவிட்டால் ஒரு நிமிடம் கூட பிந்தாமல் வேலைக்கு சமூகமளிக்கவேண்டும். இல்லையேல் அது இது என்று பேசியே சாகடிப்பார்கள். அதேபோல் உங்களுக்கு உரித்தான விடுமுறைகளை பெற்றுக்கொள்ளவும் இவர்கள் தயவு தேவை.


Training and Development Officers : பொய்க்கு file ஒன்றை எப்போதும் காவும் இவர்கள் பெண்களுக்கு மட்டும் training கொடுப்பதில் குறியாய் இருப்பவர்கள். இதை கண்டுகொள்ளும் ஆண்கள் எல்லாம் riot பண்ணுபவர்களாக முத்திரை குத்துவார்கள்.

ஊழியர்களை ஊக்கப்படுத்துவதாக கூறிக்கொண்டு இவர்கள் அடிக்கும் கூத்து இருக்கிறதே தாங்க முடியாதது. 24 மணி நேரமும் வேலை செய்பவர்களுக்கு ஐந்து சதமும் கொடுக்காமல் அந்த ஊழியரைப்பற்றி ஒரு பக்க கட்டுரை எழுதி ஊழியர்களை ஊக்கப்படுத்துவதாக பீற்றிக்கொள்வார்கள்.


Manager : நினைத்த நேரம் வருவர் போவர். ஆனால் சம்பளம் மட்டும் suitcase நிறைய எடுப்பர். பெண் ஊழியர்கள் செய்யும் அனைத்து வேலைகளும் சிறப்பாக தெரியும் இவர்களுக்கு ஆண்கள் செய்யும் வேலைகள் மட்டும் கண்ணுக்கு தெரிவதில்லை.


பெண் ஊழியர்கள் : காலையில் வேலைக்க்கு வந்ததும் நேற்றைய serial கதைகளையெல்லாம் பேசி நாளை ஆரம்பிக்கும் இவர்கள் சரியாக வேலை நேரம் ஆரம்பித்ததும் காலைச்சாப்பாட்டிற்காக கூட்டமாக செல்வார்கள். ஒரு மணித்தியாலம் கழித்து வந்து மீண்டும் கூட்டமாக make up போட செல்வார்கள். அரை மணி நேரம் கழித்து வந்து வேலையை தொடங்குமுன் அவர்களை பார்த்து ஜொள்ளு விட்டு கொடிருக்கும் ஒரு ஆண் ஊழியரை பார்த்து கொஞ்சமாய் சிரித்து சில வார்த்தைகள் பேசி பாதி வேலையை அந்த ஜொள்ளரின் தலையில் கட்டிவிடுவார்கள். பிறகு boyfriend இன் கதை இல்லாவிட்டால் கணவனுக்கு நல்வழி காட்டிய கதை எல்லாம் சொல்வார்கள். வேலை முடிவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன் மீண்டும் கூட்டமாக make up போட சென்றால் சரியாக வேலை முடியும் நேரத்துக்கு தான் வருவார்கள். அதன் பின் 15 நிமிடம் OT செய்து தங்களின் அர்பணிப்பான சேவையை நிரூபித்து நல்ல பெயர் வாங்கும் பாக்கியவதிகள்.


பெண் அதிகாரிகள் : ஆண்களின் உரிமைக்காவலன். எந்த பிரச்சினை ஆயினும் நியாயமாய் அணுகி ஜொள்ளு manager இன் பழிச்சொல்லில் இருந்து காப்பவர்கள். இவர்களுக்கும் பெண் ஊழியர்களுக்கும் ஆகாது. இதனால் எப்போதும் பெண் ஊழியர்கள் இவர்களை பற்றி தூற்றிக்கொண்டிருப்பார்கள்

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

2 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

ARV Loshan said...

எல்லாம் நல்லாத் தான் இருக்கு..
//Managers : நினைத்த நேரம் வருவார் பொவார். ஆனால் சம்பளம் மட்டும் suitcase நிறைய எடுப்பார். பெண் ஊழியர்கள் செய்யும் அனைத்து வேலைகளும் சிறப்பாக தெரியும் இவர்களுக்கு ஆண்கள் செய்யும் வேலைகள் மட்டும் கண்ணுக்கு தெரிவதில்லை.
//
ஏன்யா எங்க மாதிரி ஆட்கள் மீது மட்டும் இத்தனை எரிச்சல்?
முகாமையாளர்கள் தான் பெண்கள் பக்கம் என்று சொல்லீட்டு, கீழே நீங்க போட்டிருக்கிறது மட்டும் என்னவாம்?

//அதன் பின் 15 நிமிடம் OT செய்து தங்களின் அர்பணிப்பான சேவையை நிரூபித்து நல்ல பெயர் வாங்கும் பாக்கியவதிகள்.

பெண் அதிகாரிகள் : ஆண்களின் உரிமைக்காவலன். எந்த பிரச்சினை ஆயினும் நியாயமாய் அணுகி ஜொள்ளு manager இன் பழிச்சொல்லில் இருந்து காப்பவர்கள். இவர்களுக்கும் பெண் ஊழியர்களுக்கும் ஆகாது. இதனால் எப்போதும் பெண் ஊழியர்கள் இவர்களை பற்றி தூற்றிக்கொண்டிருப்பார்கள்
//

என்ன கொடும சார் இது?