இலங்கை கிரிக்கட் அணி மீதான தாக்குதலை தொடர்ந்து இலங்கையின் வெளி விவகார் அமைச்சர் பாகிஸ்தானுக்கு விரைவதாக செய்தி இலங்கை பத்திரிகையான த டெய்லி மிரர் இன் இணயதளத்தில் வந்தது.. அதற்கு சில வாசகர் இட்ட பின்னூட்டங்களை பாருங்கள்..
அவர் என் அங்கே போகிறார்? அவர் குடும்பத்துடனா செல்கிறார்? அவர் இதன் மூலம் எதை சாதிக்க நினைக்கிறார்?
Posted By: Eagle Eyes
இலங்கையின் கரப்பந்து அல்லது கால் பந்து அணி இன்னொரு நாட்டில் இவ்வாறான நிலைமைக்கு முகம் கொடுத்திருந்தால் இவ்வாறு அவர் விரைந்திருப்பாரா? நான் அப்படி நினைக்கவில்லை.
Posted By: Amal
இதோ மேலதிக வீரர் போகிறார்.. இனி போட்டியை ஆரம்பிக்கலாம்..
Posted By: Ranil
இது உண்மையிலேயே தேவையானதா? ரோஹித பாகிஸ்தானில் என்ன செய்ய முடியும்?
சும்மா அணியை திருப்பி எடுத்து விட்டு பிறகு பேசிபார்கலாம்.. எதாவது ஒரு காரணத்தை வைத்து கொண்டு விமானம் ஏற வெளி விவகார அமைச்சர் காத்திருக்கிறார்.. வரி இறுப்பாளர்
Posted By: Dharmadasa
எல்லா நாடுகளும் தொடர்களை ரத்து செய்கிறபோது நமக்கு எமது அணியை அனுப்ப என்ன தேவை ? இராணுவா தளபாட உதவிக்கு நன்றி காட்ட எமது வீரர்களின் அவயவங்களை இழப்பதா? எமது அரசியல் வாதிகளுக்காக வெட்கபடுகிறேன்.
Posted By: angry slman
எதுக்கு இலங்கை அணி நாளை நாடு திரும்பிவிடும். போகோள்ளவுக்கு அரச செலவில் விடுமுறை..
Posted By: Peter
Weldone Rohita, நீங்கள் அதிஷ்டக்காரன். யாருடைய செலவிலாவது பயணம் செல்கிறீர்கள். அனுபவியுங்கள். பாவம் எமது கிரிக்கட் வீரர்கள்..
Posted By: Careem from Dubai
முழுமையாக பார்க்க http://www.dailymirror.lk
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.
0 comments:
Post a Comment