Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

இந்திய உபகண்டத்துக்கு கிடைக்குமா கிரிக்கட் உலக கிண்ணத்தை நடாத்தும் வாய்ப்பு?


IPL போட்டிகளை இந்தியாவுக்கு வெளியே நகர்த்த எடுக்க பட்ட முடிவு உபகண்டத்தின் cricket அரங்கில் இருண்ட காலத்தின் ஆரம்பமாக அமையக்கூடும் என்பது ஒரு கசப்பான அனுமானமாகும்..

கடந்த மாதம் பாகிஸ்தானில் இலங்கை அணி மீதான தாக்குதல் ஒரு மோசமான ஆரம்பமாக, சங்கிலி தொடர் விளைவாக அமைந்துவிட்டது. இலங்கை அணி மீது தாக்குதல் நடாத்தப்படக்கூடும் என்று யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். எந்த நோக்கத்துக்காக இந்த தாக்குதல் நடாத்த பட்டது என்பது இன்று வரை மர்மமாக இருக்க அதன் விளைவுகள், பாதிப்புகள் ஆரம்பித்து விட்டன..

இந்த தாக்குதலின் பின், உள்நாட்டு பிரச்சினையில் சிக்கிய பங்களாதேஷ் எதுக்கு risk என்ற பாணியில் பாகிஸ்தான் உடனான தொடரை பிற்போட்டது; "வேலியில் இருந்த ஓணானை மடியில் கட்டியது" மாதிரி ஆகிப்போனது...

இது ஒப்பீட்டளவில் பாதுகாப்பான நாடாக கருதப்பட்ட பங்களாதேஷ் கூட இனி போட்டிகளை நடாத்த முடியாவிட்டால் இலங்கை, பாகிஸ்தான் , இந்தியா எம்மாத்திரம் என்ற கேள்வியை எழுப்பிவிட்டது.

இந்த நிலையில் மினி உலக கிண்ணத்தை தென்னாபிரிக்காவுக்கு மாற்ற முடிவு எடுத்தது நியாயமானதும் எதிர்பார்கப்பட்டதுமாகும்..

இலங்கை மினி உலக கிண்ணத்தை கிண்ணத்தை நடாத்த முனைப்பு காட்டினாலும் ICC, risk எடுக்க விரும்பவில்லை. அதுவும் பாகிஸ்தான் அணிக்கு இலங்கை மண்ணில் ரசிகர் மூலம் ஆபத்து எற்படலாம் (அண்மையில் இந்திய அணிமீது; போட்டி நடக்கும் வேளையில் சில பொருட்கள் எறியப்பட்ட சம்பவம் நடந்தேறியது காரணமாக இருந்திருக்கலாம்) அல்லது உள்நாட்டு போரில் பாரிய பின்னடைவை கண்டிருக்கும் பயங்கரவாதிகள் உலகின் கவனத்தை தன் மீது திசை திருப்ப வாய்ப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் காரணமாக இருந்திருக்கலாம்.

இந்த சந்தர்ப்பத்தில் இந்திய தேர்தல்கள் அறிவிக்கப்பட பாதுகாப்பு அச்சம் காரணமாக மத்திய அரசு போட்டிகளை பிற்போடுமாறு கேட்டது இந்தியாவுக்கு தாக்குதல் தொடர்பான அச்சம் இருக்கிறது என்பதை உலகத்துக்கு பகிரங்கபடுத்திவிட்டது. உலகின் பெரிய ராணுவங்களில் ஒன்றுக்கு தன்மீது இருந்த அவநம்பிக்கையையும் பகிரங்கபடுத்திவிட்டது,

இந்திய அரசுக்கு நியாயமான பல காரணங்கள் இருக்கத்தான் செய்தது. இலங்கை பாகிஸ்தான் அணி மீது இந்தியாவில் வளர்ந்து வரும் எதிர்ப்பு ஒரு முதன்மைக்காரணமாகும். இந்த அணி வீரர்கள் விலகிக்கொண்டால் IPL இன் நட்சத்திர அந்தஸ்த்து குறைந்து விடும் என்பதை இந்திய cricket board உம் IPL உம் இந்திய அரசும் உணர்ந்திருந்தன. வன்முறை என்பது வளர்ந்து வரும் இந்திய தேர்தல் களஙகளில் எதாவது அசம்பாவிதம் எற்பட்டால் இந்திய ஊடகங்கள் IPL காரணமாக இந்திய அரசு மக்களை கைவிட்டு விட்டது என்று கடித்து குதறக்கூடும்.

அதே வேளை IPL க்கும் போட்டிகளை பிற்போடுவதும் சாத்தியமானதல்ல.. உலக அணி வீரர்கள் பங்கு பற்றும் நிலையில் ஏற்கனவே போட்டிகளை அரங்கேற்றுவதை உறுதிப்படுத்தும் விதமாக உலக கிரிக்கட் அணிகள் பல விட்டு கொடுப்புகளை செய்துள்ளன. மேலும் ஒரு முறை இந்த ஆண்டு எல்லா அணிகளும் விட்டுகொடுப்பது மரியாதை இல்லை. எல்லவற்றுக்கும் ஒரு படி மேலாக இலங்கை அணி வீரர்கள் தன் Interim Cricket Board தலைவரைகூட அகற்றுவதற்கு அழுத்தம் கொடுத்து வெற்றிகண்டிருந்தார்கள். அதற்கு IPL உம் இந்திய கிரிக்கட்டும் முழு ஆதரவை வளங்கியிருந்தன.

இந்தியாவில் நடாத்தவேண்டும் என்று ஒற்றை காலில் நின்றால் போட்டிகள் நடக்காமல் இருக்கவே வாய்ப்பு அதிகம். எனவே இந்தியாவுக்கு வெளியே நகர்த்தபட்டது ஒரு புத்திசாலித்தனமான முடிவாகும். இது உபகண்டத்தில் cricket கோமா நிலைக்கு செல்வதை தவிர்க்கும் நிலையில் உலக cricket சமூகத்தில் உபகண்டத்தின் ஆதிக்கத்தையும் தக்கவைக்கும்..

நிகழ்வுகளை உற்று நோக்கும் போது உலக கிண்ணத்தை நடாத்த இலங்கையை தவிர உபகண்ட நாடு எதுவும் தயார் நிலையில் இல்லை.

ஏன் இலங்கை தவிர என்றா கேட்கிறீர்கள்? இலங்கைக்கு மட்டும் யுத்தத்தையும் தேர்தலையும் ஒன்றாக வெற்றிகரமாக நடாத்தி அனுபவம் இருக்கிறது. அவ்வாறு நடாத்தவும் விருப்பு உள்ளதும் இலங்கை மட்டுமேயாகும். எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா?!

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

3 comments:

எட்வின் said...

//இலங்கைக்கு மட்டும் யுத்தத்தையும் தேர்தலையும் ஒன்றாக வெற்றிகரமாக நடாத்தி அனுபவம் இருக்கிறது.//

சூப்பரு

ARV Loshan said...

உங்கள் பார்வை நன்று.. (சில விஷயங்கள் எனக்கு உடன்பாடில்லாவிட்டாலும்)

இலங்கையர் எல்லாவற்றையும் தாங்கிப் பழகி விட்டோம்..
குண்டுவீச்சுக்களுக்கு மத்தியில் வடக்கில் மக்கள் கிரிக்கெட் பார்த்தே ஆகிவிட்டது.. குண்டுவேடிப்புக்களுக்கிடையில் போட்டிகள் பார்த்தும் பழகி விடுவது பெரிய விஷயமா?

இன்னுமொன்று இங்கே அணிகளையோ,வெளிநாட்டு பிரஜைகளியோ குறிவைத்தும் கிடையாது.. வரலாறு சாட்சி

தர்ஷன் said...

வர வர வாழ்க்கையில் entertainment இல்லாமலே போய் விட்டது. எதிலும் ஒரு அரசியல்