Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

நிதி திரட்டும் முயற்சிகள் பற்றிய எனது பார்வை..


அண்மைக்காலமாக நான் அவதானித்த சில நிதி திரட்டும் முயற்சிகள் பற்றிய எனது பார்வை..

ஆதவன் திரைப்படம்; வெளியாவதற்கு முதல் நாளிரவு ஒரு அரச பாடசாலை சார்பான அமைப்பொன்றுக்கும் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றுக்குமாக நிதி திரட்டுமுகமாக வெவ்வேறு திரையரங்குகளில் விஷேட காட்சியாக காண்பிக்கப்பட்டது.

இதற்கான டிக்கட் ரூபா 500/- க்கு விற்கப்பட்டது. இதன் மூலம் கிடைக்கும் வருமானம் இவ்வமைப்புகளின் ஏதாவது ஒரு தேவைக்கு பயன்படும். அது ஒரு முக்கியமான தேவையாகவும் இருக்க முடியும். இருந்தாலும் இது தொடர்பாக எனது கருத்தை எழுதுவது அவசியமாகிறது.

என்னுடைய பார்வையில் இவை

பண விரயம்
ஒவ்வொருவரினதும் பொருளாதாரம் சிரிப்பா சிரிக்கும் இக்காலத்தில் விலை அதிகம் கொடுத்து திரைப்படம் பார்க்கவேண்டியதன் அவசியம் என்ன?

விலை அதிகமான இந்த டிக்கட்டை விற்க ஏமாற்றுதல் -
திரைப்படத்தின் முதற் காட்சியை காண்பது ஏதோ முக்தி பேறு போல் காண்பிக்கப்படுகிறது. விளம்பரம் செய்யப்படுகிறது. இதன் மூலம் இந்தியப்பாணியிலான மூளைச்சலவை செய்யப்பட்ட ரசிகர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

இக்காட்சிகள் Late night show ஆகவே இருக்கின்றன. பிள்ளைகள் அடம்பிடித்து படம் பார்க்கச்செல்கிறார்கள். இரவு 1 மணிக்கு வருகிறார்கள். அதுவரை வீட்டில் அம்மா அப்பா நிம்மதியாக உறங்க முடியுமா? வயது வந்த பிள்ளைகள்தான் என்று எந்த அம்மா அப்பாவாவது நிம்மதியாக இருப்பார்களா?

டிக்கட்டுகளை விற்பதற்கு மாணவர்களை பயன்படுத்தல்

நேற்று காலையில் ஒரு வானொலி விளம்பரம். மேலே குறிப்பிட்ட தனியார் கல்வி நிறுவனம் இரவுக்களியாட்டத்திற்காக வானொலியில் விளம்பரம் செய்து அழைக்கிறது.

பெண்களுக்கு அனுமதி இலவசமாம்!

ஏன் பெண்களுக்கு அனுமதி இலவசம்? பெண்கள் வந்தால்தான் ஒரு கவர்ச்சி. பெண்கள் வருவார்கள் என்றால்தான் ஆண்களும் வருவார்கள். வந்து என்ன செய்வார்கள்? விளக்கமாக சொல்லவேண்டிய அவசியம் இல்லை.

இதை ஒரு ஒன்றுகூடல் நிகழ்வாக கூறக்கூடும். குறிப்பிட்ட நிறுவனத்தின் ஒன்று கூடலாயின் எதற்கு வானொலியில் விளம்பரம்?

எங்கள் நிறுவனத்தில் படிக்கும் fashionஆன குட்டிகள் வருவார்கள். நீங்களும் வாருங்கோ என்ற அழைப்புத்தானே இது? அல்லது ஒன்றுகூடல் நிகழ்ச்சியென்றால் எல்லாரும் அம்மா அப்பா மற்றும் மனைவி பிள்ளைகளோடு வரலாமே?

யாராவது இவர்கள் அனைவரும் வயது வந்தவர்கள் என்று வாதிடக்கூடும். ஆம் வயது வந்தவர்கள்தான். அவர்கள் விரும்பினால் எதையும் செய்யலாம். ஆனால் எதற்காக ஒரு கல்வி நிறுவனம் ஒழுங்குசெய்கிறது? மாமா வேலை!

இவ்வாறான கேவலமான சமூக விழுமியங்களை சிதைக்கும் உத்திகளை விடுத்து பணத்தேவையை வேறொரு வழியில் தீர்த்துக்கொள்ளலாமல்லவா?

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

0 comments: