Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

வட இந்திய குஜராத் மாநிலத்தைச் சார்ந்த


அறிவிப்பாளர் லோஷனுக்கு சாகித்திய விருது கிடைப்பது பற்றிய செய்தியை நேற்று வந்தியத்தேவனின் உளறல்கள் மூலம் அறிந்தேன்.

அத்துடன் இலங்கையின் மூத்த படைப்பாளியான மேமன் கவிக்கும் சாகித்திய விருது கிடைக்கிறது.

உளறல்களில் இந்த மேமன் கவியை அறிமுகப்படுத்தும்போது பயன்படுத்திய "வட இந்திய குஜராத் மாநிலத்தைச் சார்ந்த" என்ற சொற்றொடர் எனக்கு பிடிக்கவில்லை.

இலங்கையை சேர்ந்த படைப்பாளியை வெறுமனே இலங்கையின் மேமன் சமூகத்தை சேர்ந்தவர் என்று அறிமுகப்படுத்தியிருக்கலாம். ஆனால் இந்திய என்ற சொற்றொடர் அவரை பிரித்து வைக்கிறது என்பது என் கருத்து.

குறிப்பிட்ட் பதிவிற்கு நான் இட்ட பின்னூட்டத்தில் லோஷன் அண்ணாவுக்கு வாழ்த்து தெரிவித்தும் இச்சொற்றொடரை எதிர்த்தும் பின்னூட்டமிட்டிருந்தேன்.

இருந்தும் 24 மணித்தியாலம் கழிந்தபின்னும் அப்பின்னூட்டம் இதுவரை பிரசுரிக்கப்படவில்லை.

அத்துடன் "வட இந்திய குஜராத் மாநிலத்தைச் சார்ந்த" என்ற சொற்றொடரும் இதுவரை நீக்கப்படவில்லை. அல்லது இன்னமும் நியாயப்படுத்தப்படவில்லை.

தன்னால் எழுதப்படுத்தப்பட்ட ஒரு கருத்தை நியாயப்படுத்த முடியாத பதிவர்களுக்கும் சாகித்திய விருதுபெறும் லோஷனின் எழுத்துக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்..

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

15 comments:

கனககோபி said...

சகோதரா...
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவகையான எண்ணங்கள் உண்டு.
உங்கள் பார்வையில் பிழையாகத் தெரியலாம். அது உங்களைப் பொறுத்தது.

ஆனால் விக்கிபீடியாவே அவரை அவ்வாறே சொல்கிறது.
அந்த ஆக்த்திற்காக அந்த வாக்கியத்தை அவர் விக்கிபீடீயாவிலிருந்து தான் பெற்றிருக்கிறார்.
http://ta.wikipedia.org/wiki/மேமன்கவி

வேறு ஒரு பிரதேசத்தைச் சார்ந்த சமூகத்தைச் சார்ந்த ஒருவர் தன்னை ஈழத்தைச் சார்ந்த படைப்பாளியாக மாற்றிக் கொண்டார் என்ற ஒருவகைப் பெருமையே அது.

அன்னை தெரேசா வேறு ஒரு நாட்டிலிருந்து வந்து இந்தியாவில் பணிபுரிந்தார் என்று சொல்வதில்லையா?
அப்படிச் சொல்வதால் அன்னை தெரேசாவைப் பிரித்துப் பார்க்கிறார்கள் என்று அர்த்தமாகுமா?
அங்கு அன்னை தெரேசாவைப் புகழ்வதாக எடுப்பதில்லையா?

பின்னூட்டத்தை வெளியிடாமைக்கு சிலவேளை உங்கள் அந்தக் கருத்து வேறுசிலரை உங்கள் பாதையில் பிழையாக யோசிக்கச் செய்யலாம் என்ற காரணம் இருக்கலாம்.
எனினும் நீங்கள் அதை அவரிடம் மின்னஞ்சல் மூலம் கோரியிருக்கலாம்.
தனியே பதிவு எழுதுதல் என்பது கொஞ்சம் அதிகமாக இருக்கிறது.

அனைவரையும் நண்பர்களாகக் கருதுங்கள் சகோதரா.
உங்கள் மாற்றுக் கருத்துக்களை ஒரு மனிதனாக வரவேற்கிறேன்.
ஆனால் சிலவிடயங்களில் நீங்கள் மென்போக்கைக் கடைப்பிடிப்பது சிறந்ததென்று நான் நம்புகிறேன்.

நன்றிகள்.

வந்தியத்தேவன் said...

உங்கள் காழ்ப்புணர்ச்சிக்கு நன்றிகள்

மேமன் அங்கிள் என் குடும்ப நண்பர் எத்தனையோ வருடங்களாக அவரைத் தெரியும், வீணாக சிண்டு முடியவேண்டாம். அவரின் புத்தகங்களில் கூட அவரை அப்படித்தான் சொல்கின்றார்கள். அத்துடன் அவர் தனது கவியரங்க கவிதைகளில் தன்னை குஜராத்தின் மேமன் புத்திரன் எனத்தான் சொல்வார்,

பிரபலமாக இதுவும் ஒருவழியா? இனிமேல் என்னுடைய வலைப்பக்கம் வரவேண்டாம்?
ஒரு வாழ்த்துச் செய்தியையே உங்களால் தாங்கமுடியவில்லை என்றால்? என்ன கொடுமை சார்

வந்தியத்தேவன் said...

என்னுடைய பதிவு போடப்பட்ட நேரம் நேற்று மதியம் 2.43 நிமிடம் இன்னும் 24 மணி நேரம் ஆகவில்லை. முதலில் நேரத்தை சரியாக கணிக்கப் பழகிக்கொள்ளுங்கள்.

என்ன கொடும சார் said...

நன்றி கனககோபி வருகைக்கு,

பின்னூட்டங்கள் வெளியிடப்படாமை நெடுநாளாக தொடர்கிறது.

//பின்னூட்டத்தை வெளியிடாமைக்கு சிலவேளை உங்கள் அந்தக் கருத்து வேறுசிலரை உங்கள் பாதையில் பிழையாக யோசிக்கச் செய்யலாம் என்ற காரணம் இருக்கலாம்.//

அப்படியிருந்தால் அதற்கு மறுமொழி சொல்ல அவருக்கு வாய்ப்பிருந்தது தானே..

நீங்கள் அன்னை திரேசாவை உதாரணம் காட்டியிருக்கிறீர்கள். அதே இந்தியாவில் "இத்தாலிய சோனியா" என்ற பதம் சொல்லவருவது என்ன? அது புகழா உள்குத்தா?

மேமன் சமூகம் தொடர்பாக நான் விக்கியில் தேடியபோது கிடைத்தது..
The Memon, originally from Sindh (in modern Pakistan), first arrived in Sri Lanka during the 1870s as traders. Initially the Memon traders resided in Sri Lanka temporarily for business purposes, however after independence of India and Pakistan in 1947, many settled in Sri Lanka along with their families. In the 1980s they numbered to the tune of 3,000.

http://en.wikipedia.org/wiki/Memon

வந்தியத்தேவனுக்கு, உங்கள் பின்னூட்டம் உங்களை வெளிப்படுத்தியிருக்கிறது.

நீங்கள் எல்லாவற்றையும் Copy paste செய்கிறீர்களா? அவரை இலங்கையர் என்ற சொல்லாமல் இந்தியாவுடன் தொடர்புபடுத்திய காரணம் சொல்லமுடியுமா?

அதாவது உங்கள் பின்னூட்டப்பெட்டி "ஆஹா அற்புதம்" என்று சொல்பவர்களுக்கு மட்டுமா?

இனி அதை வழிமொழிதலுக்கான பெட்டி என நாமகரணம் சூட்டுங்கள். பின்னூட்டம் என்பது சரியாக உங்கள் எதிர்பார்ப்பை பிரதிபலிக்கவில்லை..

கனககோபி said...

தமிழில் பாருங்கள்... தமிழ் விக்கிபீடியா இருக்கிறது....

சோனியா காந்தி அரசியல்வாதி...
அரசியல்வாதிக்கு எதிர்ப்புகள் இருப்பது சாதாரணமானது.
ஏன் அன்னை தெரேசாவிற்குக் கூட எதிர்ப்பு இருந்தது.
ஆனால் இன்னோரு பிரதேசத்திலிருந்து வந்து இன்னொரு பிரதேசத்தில் சேவைசெய்யும்போது (கவனிக்க... சேவை... அரசியல் அல்ல) அதைப் பெருமையாகக் கூறுவது வழக்கம்.

கனககோபி said...

//கனககோபி said...
ஆகா.... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....

லோஷன் அண்ணாவிற்கும் மேமன்கவி ஐயாவிற்கும் வாழ்த்துக்கள்...

தொடர்ந்து உங்கள் இருவரின் பணிகளும் தொடரட்டும்....

அதுசரி,
செய்தி இப்போது தான் கிடைத்ததா அல்லது இறுதியில் வெளியிடவேண்டும் என்று நினைத்தீர்களா? :) //

இதுதான் என் பின்னூட்டம்.
நான் வந்தி அண்ணாவை எங்கே புகழ்ந்திருக்கிறேன்?
பதிவர்கள் இருவர் விருது பெறும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறேன்.

ஏனய்யா வீணாக மற்றவர்கள் உங்களை வெறுக்கும்படியாக நடந்துகொள்கிறீர்கள்?

மறுமொழி சொல்ல அவருக்கு வாய்ப்பிருப்பது உண்மைதான்.
எனினும் ஓர் பிழையான விடயம் என்று அவர் கருதுவதை, மற்றவர்களை பிழையாக வழிநடத்தும் என்று அவர் கருதுகின்ற, அவர் சிண்டுமுடியும் கருத்து எனக் கருதுகின்ற ஒரு கருத்தை தன் வலைப்பதிவில் பிரசுரித்துவிட்டு அதற்கு விளக்கம் கொடுப்பதைவிட அதைப் பிரசுரிக்காமல் விடுவது இலகுவானதே?

அத்தோடு உங்கள் கருத்து ஆரம்பத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது சகோதரா. பின்னர் தான் எடுக்கப்பட்டது.

மற்றவதர்கள் யாருமே உங்களுக்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கமாட்டார்கள்.
ஆனால் நான் உங்கள் சில நடத்தைகளை நீங்கள் குறைத்துக் கொண்டால் மிகச்சிறந்த, சமூகத்துக்கு பயனுள்ள பதிவராக வரலாம் என்ற அக்கறையில் சொல்கிறேன்.

சந்ரு அண்ணாவின் பதிவில் நீங்கள் இட்டிருந்த பின்னூட்த்தையும் பார்த்தேன்.
இவற்றைத் தான் குறைக்கச் சொன்னேன்.
ஒருவரை புகழ்வதும் விடுவதும் அவர் விருப்பம்.

என்னுடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்வதும், விடுவதும் உங்கள் விருப்பம்.
நன்றி.

என்ன கொடும சார் said...

கனககோபி,
"வந்தியத்தேவனுக்கு," என்று தொடங்கும் பதில் வந்தியத்தேவனுக்கு எழுதியதாகும். உங்களுக்கு சொன்னதல்ல.. அதற்கு மேலே உள்ளவை மட்டுமே
உங்களுக்கானவை.

எனவே அது தொடர்பான பின்னூட்டத்திற்கு
விளக்கமளிக்கத்தேவையில்லை என கருதுகிறேன்.

எனவே மீண்டும் ஒருமுறை உங்களுக்கு எழுதிய பின்னூட்டத்தை மட்டும் படித்து பார்க்கவும். உங்களை எங்காவது
தாக்கியிருக்கிறேனா?

//இன்னோரு பிரதேசத்திலிருந்து வந்து//
இதைத்தான் நான் எதிர்க்கிறேன். வந்து என்ற பதம் உங்கள் மனதிலும் வந்துவிட்டது. அவர் இலங்கையர். எனவே அவருக்கு வந்து என்று சொல் பாவிக்கமுடியாது என்பதே என்கருத்து.. அக்கருத்தை தருவதால்தான் வந்தியத்தேவனின் "வட இந்திய குஜராத் மாநிலத்தைச் சார்ந்த" என்ற சொற்றொடரையும் எதிர்க்கிறேன்.

தமிழ் விக்கியை பார்த்தேன். அதைவிட ஆங்கிலப்பதிப்பில் நிறைய விடயங்கள் இருகின்றது.

என்மேல் அக்கறையுடன் கூறிய கருத்துக்களுக்கு மிக்க நன்றி. நான் வீணாக பிரச்சினைக்கு போகவில்லை. இருந்தும் பிழையான கருத்தாக நான் கருதுவதை எதிர்ப்பதும் எனது தார்மீக கடமையாக கருதுகிறேன். இல்லாவிட்டால் பிழைகள் snow bowling effect க்கு வித்திடும்..

என்ன கொடும சார் said...

கோபி,
சந்ரு பற்றியும் உங்களுக்கு விளக்கவேண்டும். அவர் நான் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என குற்றஞ்சாட்டி (நான் அதில் கலந்துகொண்டிருந்தேன், ஆனால் அடையாளம் காட்டிக்கொள்ளவில்லை) மொத்த பதிவர்களையும் என்னை வம்பிழுக்க செய்தவர். அவரின் தேவையற்ற சீண்டல்களை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

இப்பதிவை நீங்களும் வாசித்தீர்கள். ஏதாவது பிழை கண்டீர்களா? இல்லையே.. அவருக்கும் அவர் சார்ந்தவர்களுக்கும் மட்டுமே மாலைக்கண்.

என்ன கொடும சார் said...

http://eksaar.blogspot.com/2009/08/blog-post_26.html

சந்ரு said...

//என்ன கொடும சார் said...
கோபி,
சந்ரு பற்றியும் உங்களுக்கு விளக்கவேண்டும். அவர் நான் பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என குற்றஞ்சாட்டி (நான் அதில் கலந்துகொண்டிருந்தேன், ஆனால் அடையாளம் காட்டிக்கொள்ளவில்லை) மொத்த பதிவர்களையும் என்னை வம்பிழுக்க செய்தவர். அவரின் தேவையற்ற சீண்டல்களை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்க முடியாது.

இப்பதிவை நீங்களும் வாசித்தீர்கள். ஏதாவது பிழை கண்டீர்களா? இல்லையே.. அவருக்கும் அவர் சார்ந்தவர்களுக்கும் மட்டுமே மாலைக்கண்.//

முதலில் தமிழை புரிந்து கொள்ள பழகுங்கள். எங்கே நீங்கள் பதிவர் சந்திப்புக்கு வரவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறேன். நீங்கள் பதிவர் சந்திப்பை கேலி செய்து பதிவிட்டதனால்தான் உங்களுக்கு கருத்துரையிட்டேன்.


///சந்ரு said...


இது ஒரு நாகரிகமான செயல் இல்லை. உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்ய வேண்டாம். நீங்கள் ஒரு வலைப்பதிவர் எனறு உங்களை இனங்காட்டிக்க


கொள்ள வேண்டாம். இது பதிவர்களுக்கு அழகில்லை. எங்கள் நாட்டிலே நடந்த ஒரு பதிவர் சந்திப்பை இப்படி எல்லாம் கிண்டல் செய்ய உமக்கு. வெட்கம் இல்லையா.


நான் ஒரு இலங்கைப் பதிவர் எனறு சொல்வதை நிறுத்திக்கொள்ளும். இலங்கைப் பதிவர்கள் இப்படி செய்ய மாட்டார்கள். உங்கள் பிரட்சனைதான் என்ன?


திருந்தப் பாருங்கள்...///


இதுதான்

என்னால் இடப்பட்ட கருத்துரை இதனையே விளங்கிக் கொள்ள முடியாத நீங்கள் ஒரு பதிவர். கண்ணை கசக்கிவிட்டு வாசித்து பாருங்கள் நான் என்ன சொல்லி இருக்கிறேன் என்பது புரியும். அப்போது யாருக்கு மாலைக் கண் என்பதும் புரியும்.

சந்ரு said...

//என்ன கொடும சார் கூறியது...
சந்ரு உங்களுக்கு வெற்றியில் வேலை நிச்சயம்? இதெல்லாம் ஒரு பிழைப்பு....//

எனக்கு வேலை கிடைப்பதைப் பற்றி நீங்கள் சொல்லவேண்டிய அவசியமில்லை. ஒருவரை நாங்கள் வாழ்த்துகிறோம் என்றால். அவரிடம் எதனையும் எதிர் பார்த்துத்தான் வாழ்த்த வேண்டும் என்பதில்லை. வேண்டுமானால் நீங்கள் யாரிடமாவது எதனையும் எதிர் பார்த்துத்தான் வாழ்த்துவிர்களோ தெரியாது.

எனக்கு வெற்றியில் வேலை கிடைக்கவேண்டும் என்ற அவசியமில்லை பலதடவை நான் குறிப்பிட்டிருக்கின்றேன். ஒருவரை பின்பற்றுவது அவரிடம் இருந்து எதனையும் எதிர் பார்த்து அல்ல.

ஒருவரை வாழ்த்தத்தான் பிடிக்கவில்லை பொறாமை என்றாலும் வாழ்த்துவோரையாவது வாழ்த்த விடுங்கள். பொறாமையா விலகி விடுங்கள்.

உங்கள் பிரஷ்சினைதான் என்ன பதிவர்களுக்கு இப்படி பின்னுட்டமிடுவதுதான் உங்கள் வேலையா? உங்கள் பிரஷ்சினைகளை சொல்லுங்கள். இப்படிப்பட்ட நாகரிகமற்ற வேலைகளை செய்யாதீர்கள்.

உங்களிடம் நேரடியாக சொல்கிறேன் எனது வலைப்பதிவு பக்கம் நீங்கள் வரவேண்டாம். நான்கு பேராவது நல்லவர்கள் வரட்டும்.

என்ன கொடும சார் said...

//சந்ரு உங்களுக்கு வெற்றியில் வேலை நிச்சயம்? இதெல்லாம் ஒரு பிழைப்பு....//இது வேறுயாரோ என்னுடைய பெயரைப்பாவித்து இட்டுள்ள பின்னூட்டம். உங்க்ளால் proof பண்ணமுடியுமா?

என்னுடைய பெயரைப்பாவித்து யாரோ சொல்வதெற்கெல்லாம் நான் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை..

என்ன கொடும சார் said...

//என்னால் இடப்பட்ட கருத்துரை இதனையே விளங்கிக் கொள்ள முடியாத நீங்கள் ஒரு பதிவர்.//

நான் பதிவர் சந்திப்புக்கு வரவில்லை என்று
உங்களது பதிவுகளில் பலதடவை குறிப்பிட்டுள்ள்ர்ர்கள். உங்கள் பதிவுகளை வாசித்தவர்களுக்கு
தெரியும். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கமுடியாது.

உங்களால் எழுதப்பட்ட பதிவுகளை விளங்கிக்கொண்ட எல்லாருக்கும் இது தெரியும். எல்லாவற்றையும் எழுத்தில் ஆவணபடுத்தியபின் எதற்கு பொய் சொல்கிறீர்கள். இதை வாசிக்கும் எல்லாருக்கும் எது மெய் என்று தெரியும்.

இது என்ன சின்ன்புள்ளத்தனமா இருக்கு?

நான்குபேர் நல்லவர்கள் என்றால் முத்லில் உங்களாலேயே உங்கள் பதிவுக்கு போகமுடியாது... :

ஒரு விமரிசனத்தை எதிர்கொள்ள முடியாத வங்குரோத்து நிலமையில் நான் இல்லை. உங்களைப்போல் சில கெட்ட்வர்களும் வந்து பின்னூட்டம் இடலாம். கருத்துக்களை கருத்துக்களால் வெல்வதற்கு எனக்கு துணிவிருக்கிறது.

சந்ரு said...

மற்றவர்கள் உங்களைப் பற்றி நீங்கள் பதிவர் சந்திப்புக்கு வரவில்லை என்று சொல்வதற்கும் எனக்கும் எந்த பொறுப்பும் இல்லை நான் எங்கேயாவது எனது பதிவுகளிலே நீங்கள் சந்திப்புக்கு வரவில்லை என்று குறிப்பிட்டு இருக்கின்றேனா? அப்பாடியானால் சுட்டிக்காட்டுங்கள். யாரோ நீங்கள் சந்திப்புக்கு வரவில்லை என்று குற்றம் சாட்டியதட்காக, பதிவிட்டதுக்காக என்னை பழி வாங்க நினைப்பது நியாயமா?



நான் விமர்சனங்களை ஏற்றுக்கொள்பவன் அது சரியான விமர்சனங்களாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே. தேவையற்ற சீண்டல்களையும், நாகரிகமற்ற விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய தேவை எனக்கில்லை. ஒருவரது நல்ல விடயங்களை பாராட்டுவது ஒரு நல்ல மனிதனின் இயல்பு அதனை தவறான கண்ணோட்டத்தில் நோக்குவது அவர்களின் அறியாமைதான்.



நான் என்னை ஒருபோதும் நல்லவனென்று சொல்லவில்லை என்னை சமுகம் சொல்லவேண்டும். நல்லவனாக வாழ முயற்சிக்கின்றேன். தேவையற்ற, நாகரிகமற்ற கருத்துரைகளை இடுபவன் நல்ல மனிதனா என்று சமுகம் சொல்லவேண்டும். இன்று எல்லோரும் உணர்ந்துவிட்டார்கள் யார் நல்ல மனிதன், யார் கேட்ட மனிதன் என்பதனை.



நல்ல விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள தயங்கவும் மாட்டேன். வேண்டுமென்று சீண்ட நினைப்போரின் கருத்துக்களுக்கு செவி சாய்க்கவும் மாட்டேன்.

என்ன கொடும சார் said...

நீங்கள் ஓகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் எழுதிய பதிவர்சந்திப்பு தொடர்பான பதிவுகளை மீண்டும் வாசியுங்கள். நீங்கள் எழுத சிலர் இருட்டடி விழுதெண்டு சிரிக்க பெரிய கூத்தே நடந்ததே.. இதுதொடர்பாக நீங்கள் சொல்வது உண்மையா பொய்யா என அதை வாசித்த அனைவரும் அறிவார்கள். உங்கள் மனச்சாட்சி கூட உங்கள் வாதத்தின் பக்கம் இல்லையே..

என்னை யாரும் நல்லவன் என்று சொல்லவேண்டியதில்லை. ஏதாவது ஒரு விடயத்திற்கு இன்னொரு கோணமும் இருப்பதாக நான் நினைப்பவை பற்றிய பகிர்வே எனது பதிவு..