Free Downloads

MP3 , Film

meet new friends

find your partner

love, romance, medicines

earn money, inter net earning

online job

முஸாமில் லஞ்சக்குற்றச்சாட்டும் கந்தசாமி பட பாதிப்பும்

நேற்றிய தினம் இலங்கை அரசியலில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உச்சத்தை அடைந்தன எனலாம்.

இதில் முதன்மையானது, விமல் வீரவன்சவின் கட்சியை சேர்ந்த முஸாமில்; பொன்சேக்கா அணியில் இணைய ரூபா 30 மில்லியன் வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டாகும். இதில் advance ஆக ஒரு மில்லியன் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்மூலம்; ஒரு பாரளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும் நேற்றுவரை பெரும்பாலான மக்கள் அறியாதிருந்த முஸாமில் தனக்கு தேவையான பிரபல்யத்தை பெற்றுக்கொண்டார்.

இலங்கையில் ஆயிரம் ரூபா நோட்டுக்களும் இரண்டாயிரம் ரூபா நோட்டுக்களும் புழக்கத்தில் இருக்கின்றன. வழங்கப்பட்டதாக் கூறப்படும் லஞ்சம் புதிதாய் அச்சடிக்கப்பட்ட (ஜனாதிபதி தேர்தல் சுவரொட்டி என்று கிண்டலடிக்கப்படும்) ஆயிரம் ரூபா தாள்களாக இருப்பதை பட்ங்களில் காணக்கூடியதாக இருக்கிறது.


ஒரு மில்லியன் ரூபா என்பது 1,000 ஆயிரம் ரூபா தாள்களாகும். எப்போதும் 100 நோட்டுக்கள் ஒன்றாக Bundle செய்யப்படும். எனவே மொத்தம் 10 கட்டுக்கள் மாத்திரமே...(10 மிலியன் என்றால் 100 கட்டுக்கள்) பத்திரிகையாளர் சந்திப்பில் எத்தனை கட்டுக்கள் காட்டப்பட்டன என சரியாக தெரியவில்லை. இருந்தும் அவை 10க்கும் மேற்பட்டவை என்று தெரிகிறது. சிலவேளை 500 நோட்டுக்களும் இருந்தனவோ தெரியாது... :D :D




முஸாமிலுக்கு கொடுக்கப்பட்ட பணம் இதைவிட கூடுதல் தொகையாயிருந்து, அதில் ஒரு மில்லியனை மாத்திரம் அவர் வெளியிட்டிருந்தால், மிகுதிப்பணத்தை அவர் யாருக்கும் தெரியாமல் அனுபவிக்கலாம். (கந்தசாமி பட பாதிப்பு). சரியான பெறுமதியை கொடுத்தவர் ஒருபோதும் (கொடுத்திருந்தால்) சொல்லப்போவதில்லை.

10 மில்லியன் என இணையத்தில் வந்த செய்தி
http://www.colombopage.com/archive_10/Jan1263574120CH.html
http://www.news.lk//index.php?option=com_content&task=view&id=13269&Itemid=44

ஒரு மில்லியன் என அரச பத்திரிகையின் இணைய தளத்தில் வந்த செய்தி
http://www.dailynews.lk/2010/01/16/pol01.asp

பத்திரிகையாளர் மாநாட்டில் கொண்டுவரப்பட்டிருந்த traveling bagஐ பார்க்கும் எந்தவொரு சாமானியன் மனதிலும் இந்த பெட்டி நிறையவா பணம் கொடுத்தார்கள் என்ற பிரமிப்பை உண்டுபண்ணும்.




இதேவேளை கிரிக்கட்டில் அரசு சார்பாக ஊழல் நடபப்தாக முன்னால் கிரிக்கட் வீரர்கள் ஹஷான் திலகரட்ன (ஐதேக அமைப்பாலர்) அர்ஜுன ரனதுங்க (பா.உ.) ஆகியோர் குற்றஞ்சாட்டியிருதனர். அதன்போது ஓய்வுபெறாத கிரிக்கட் வீரர் அரசியலில் ஈடுபடுவது ஒழுக்கமற்றது என ரணதுங்க கூறினார்.

EKSaar can be reached at eksaar1@facebook.com Creative Commons License
EKSaar by EKSaar is licensed under a Creative Commons Attribution-Noncommercial-No Derivative Works 3.0 Unported License.
Based on a work at eksaar.blogspot.com.

பூச்சரம்

0 comments: